ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் .அவருக்கும்,அந்த ஏரியா கவுன்சிலருக்கும் ஆல்ரெடி ஒரு பஞ்சாயத்து இருக்கு .பதவி கெத்தைக்காட்டும்போது நாயகன் பளார் என அறைந்து விடுகிறார் . அந்த கவுன்சிலரோட அடியாள் ஒருத்தன் தன மனைவி காணாம போயிடுச்சி என போலீஸில் புகார் கொடுக்கிறான் .அதே சமயம் அருகில் வேறு ஒரு ஏரியாவில் முகம் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்கும் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது . மிஸ் ஆன அந்த மிஸஸ் இது தானா?எனக்கேட்க அவன் இல்லை என்கிறான் . நாயகன் அந்தக்கேஸை விசாரிக்கிறார் .பல மர்மங்கள் வெளிப்படுகின்றன
நாயகன் தான் பட த்தின் தயாரிப்பாளர் .கார்த்திகேசன் . சங்கர்லால் துப்பறியும் கதைகளில் வருவது போல இவரும் சீனுக்கு சீன் டீ குடிக்கிறார் . பொதுவாக ஆக்சன் மசாலாப்படங்களில் நாயகன் தம் அடிப்பார், சரக்கு அடிப்பார் . அது மாதிரி இல்லாமல் இவர் டீ அடிக்கிறார்.. ஆறுதல்
லாரா கேரக்ட்டரில் வரும் அனுஸ்ரேயா ராஜன் கச்சிதம் .எம் எல் ஏ கேரக்ட்டரில் வரும் மேத்யூவு வர்கீஸ் நல்ல தெனாவெட்டு .பெரும்பலானவர்கள் புது முகங்கள் .ஆனால் நடிப்பு குட்
ஆர் ஜெ ரவீனின் ஒளிப்பதிவு பிரமாதம் . இசை ராகு சரவண குமார் .பாடல்கள் சுமார் ரகம் . பின்னணி இசை அருமை . வளர் பாண்டியின் எடிட்டிங்கில் 117 நிமிடங்கள் படம் ஓடுகிறது . திரைக்கதை வ்ழுதி இயக்கி இருப்பவர் மணி மூர்த்தி
சபாஷ் டைரக்டர்
1 கதைக்களம் நிரவி , காரைக்கால் ., பாண்டிச்சேரி ஏரியாவில் போலீஸ் யூனிபார்ம் எப்படி மாறுபட்டு இருக்கும் என்பதை கச்சிதமாக காண்பித்த விதம்
2 போஸ்ட் மார்ட் டம் ரிப்போர்ட்டில் இறந்து கிடக்கும் பெண்ணின் மரண காரணம் கொலையா? தற் கொலையா? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கூடுதல் சுவராஸ்யம்
3 மெயின் கதையுடன் ஹவாலா குற்றங்கள் , வெளி நாடு வாழ்க்கை மேல் கொள்ளும் மோகம் ,பெண்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சாடிஸ்ட்டின் கிளைக்கதை , ஒரு காதல் கதை , காரைக்கால் ஏரியாவின் திருவிழாக்கள் என டாக்குமெண்டரி படம் தரும் சுவராஸ்யத்தையும் கமர்ஷியலாகத்தந்த விதம்
4 படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்ட்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த விதம்,அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் நல்ல நடிப்பை வாங்கிய விதம்
5 ஆக்சன் மசாலா ஹீரோவுக்கு ஓப்பனிங்க் சீனில் ஒரு பைட் வைப்பது போல இது மாதிரி துப்பறியும் கதாபாத்திரத்துக்கு ஓப்பனிங் சீனாக ஒரு இன்வெஸ்டிகேஷன் கேஸை தீர்ப்பது போல வைப்பார்கள் .அந்த சீனும் குட்
6 காமெடி டிராக் இல்லை ,ஆனால் கதையோடு சேர்ந்து வரும் காமெடி உண்டு .உதா - ஒரு சீனில் போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் ஒரு ரவுடியோடு ஓரு பெண்ணை சந்திக்க பலான ஏரியாவில் நிற்பார் .அப்போது ஒரு ஹோமோ கேஸ் ரவுடியிடம் நீ வா , அந்த ஆளு வேண்டாம் என சொல்ல போலீஸ் கடுப்பாகும் காட்சி செம காமெடி ரகளை
7 லாரா- எம் எல்ஏ மகன் இருவரின் காதல் கதை , கவுன்சிலரின் அடியாள் மனைவியின் சோகக்கதை , சிவப்பு விளக்குப்பெண்ணின் பரிதாபக்கதை இந்தமூன்று கதைகளையும் இணைத்து ஒரு கதை சொன்ன விதம் .இந்தமூன்று பெண்களுமே ஒரே நிற உடையை அணிந்து இருந்ததால் நிகழும் குழப்பம் சுவாரஸ்யம்
ரசித்த வசனங்கள்
1 எந்த எலியா இருந்தாலும் பொறி ல மாட்டி தான் ஆகணும்
2 கொத்து புரோட்டாவை தண்ணீர்ல ஊறவெச்சு கொண்டு வந்த மாதிரி டெட் பாடியைக்கொண்டு வந்தா எப்படி ?
3 எதுக்காக அவனைத்தேடறீங்க? ஏதாவது தப்பு பண்ணிட் டானா?
ஜனாதிபதி அவார்டு தரலாம்னு இருக்கோம்
நிஜமாவா? அந்த அளவு அவன் என்ன செஞ்சான் ?
4 எங்களை மாதிரி பெண்கள் சுயநினைவில் இருக்கும் வரை தான் எங்களுக்குப்பாதுகாப்பு
5 நீ வாழனும்னாலும் என் ஆசைப்படிதான் வாழனும் , நீ சாகணும்னாலும் என் ஆசைப்படிதான் சாகனும்
6 நியாயதுக்காகக்கோபப்படக்கூடாதுன்னா எப்படி ?
7 எவன் திருப்பி அடிக்க மாட்டானோ அவனை திருப்பித்திருப்பி அடிப்பதுதானே உங்க வீரம் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இன்ஸ்பெக்ட்டர் தொப்பையுடன் இருக்கார் .சப் இன்ஸ்பெக்ட்டர் சிக்ஸ் பேக் ஜிம் பாடியுடன் பக்கா பிட்னசுடன் இருக்கார்
2 ஒரு சீனில் போலீஸ் கான்ஸடபிள் பைக்கின் சைடு ஸ் டே ண்டை காலால் போடாமல் கையால் குனிந்து போடுகிறார்
3 கவுன்சிலரின் அடியாள் தன் மனைவியை தெருவில் அனைவரும் பார்க்கும்படி வாசல் திண்ணையில்
கட் டி வைப்பது எந்த தைரியத்தில் ?
4 கவுன்சிலரின் லட்சக்கணக்கான ஹவாலாப்பணத்தை பீரோவில் வைக்காமல் , பூட் டாமல் அசால்ட் ஆக வைப்பது எப்படி ?
5ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படும் லாரா அடிக்கடி இன்ஹேலர் இல்லாமல் சிரமப்படுவது போல
காட்சிகள் வருது .ஒரு முறை எனில் ஓகே ,ஒவ்வொரு முறையும் அப்படியா? ஒரு இன்ஹேலர் எக்ஸ்ட்ரா ஸ் டாக் வைத்டுக்கொள்ளமாட் டாரா ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U / A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் , க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம் .ஸ்டார் வேல்யூ இல்லையே? என்ற தயக்கம் வேண்டாம் . தெரிந்த பேயை விட தெரியாத பிசாசே மேல் . விகடன் மார்க் - 42 ,குமுதம் ரேங்க்கிங்க் ஓகே , ரேட்டிங் 2.75/ 5
0 comments:
Post a Comment