இது குடிகாரர்களைத்திருத்தும் படம் தானே? குடிப்பழக்கம் இல்லாத நாம எதுக்காகப்பார்க்கணும்? என யாரும் நினைக்க வேண்டியதில்லை . அதே போல இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்த படமா? ஐயோ , ஆளை விடுங்க என அலறி ஓட வேண்டிய தேவையும் இல்லை .இது ஜாதி ரீதியிலான படம் இல்லை . டாக்குமெண்டரி டிராமா வும் இல்லை . ஜனரஞ்சசகமான படம் தான் . எனவே பயப்படாமல் , தயக்கம் இல்லாமல் பார்க்கலாம்
ஒரு கே பாலச்சந்தரோ , பாரதிராஜாவோ எடுத்திருக்க வேண்டிய படம் . காமெடி கலந்து அனைத்து மக்களும் பார்க்கும்படி சோசியல் டிராமாவாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் 24.1/2025 அன்று திரை அரங்குகளில் வெளியானாலும் 4/11/2023 அன்றே தர்மஷாலா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட் ட படம் இது . மத்திய அரசால் வரி விலக்கு கொடுத்து கவுரவிக்க வேண்டிய படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு குடிகாரன் . மனைவி , இரு குழந்தைகள் உண்டு . கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தாலும் அதெல்லாம் சைடு தான் .அண்ணனுக்கு மெயின் ஜாப் சரக்கு அடிப்பதுதான் . குடிகாரர்கள் மறு வாழ்வு மையத்தில் நாயகனை அவனது மனைவி அனுப்பி வைக்கிறார் .அங்கே நாயகன் படும் அவஸ்தைகள் காமெடியாக முதல் பாதியில் சொல்லி இருக்கிறார்கள் . அங்கே இருந்து வெளி வந்தபின் நாயகன் திருந்தினாரா? குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு என மாறினாரா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக அச்சு அசல் குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார் குரு சோமசுந்தரம் .பிரமாதமான நடிப்பு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. குடிகாரனுக்குகை நடுங்கும் .அதை இயல்பாகக்காட்டி இருக்கிறார் , அவரது மனைவியாக சஞ்சனா நடராஜன் பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் நடிப்பு .
லொள்ளு சபா மாறன் சீரியஸ் ஆன கதையில் ஆங்காங்கே காமெடி ஒன் லைனர்களை தட்டி விடுகிறார் . வழக்கமாக வில்லனாக வரும் ஜான் விஜய் இதில் மாறுபட் ட வேடத்தில் கலக்கி இருக்கிறார் ,மற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
சீ ன் ரோல்டன் இசையில் 5 பாடல்கள் .பரவாயில்லை ரகம் , பின்னணி இசையும் ஒக்கே ரகம் .ரூபேஷ் ஷா வின் ஒளிப்பதிவு அருமை .சங்கத்தமிழனின் எடிட்டிங்கில் படம் 146 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி ஸ்பீடு , பின் பாதி ரொம்ப ஸ்லோ
சபாஷ் டைரக்டர்
1 குடி காரர்கள் மறு வாழ்வு மையத்தை விலாவாரியாகக்கட்டி அதில் சுவராஸ்யமான சம்பவங்களை இணைத்த விதம் அருமை
2 ஜெயிலில் இருந்து கைதிகள் தப்பிப்பது போல குடி காரர்கள் மறு வாழ்வு மையத்தில் இருந்து நாயகன் உட்பட 3 பேர் தப்பிக்கும் சீன் விறுவிறுப்பு
3 குடிகாரன் மனைவி என்பதால் சமூகத்தில் தான் சந்திக்கும் பிரச்சனைகளை நாயகி எடுத்துச்சொல்லும் சீன அருமை
4 நாயகன் குடிகாரனாக இருந்தாலும் தனது குழந்தைகள் மீது வைத்திருக்கும் பாசம் .அவர்களும் அப்பா அப்பா உருகுவது ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும் விதத்தில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு
ரசித்த வசனங்கள்
1 உன்பேர் ராதாவா? அப்போ இவன் பேரு அம்பிகாவா?
2 ஐசுக்குக்காசா? அதுவும் ஹிந்தில கேட்கறே ?
3 சரி , நீ எதனால குடிகாரன் ஆனே ?
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசு எல்லாம் இப்படிக்குடிச்சுக்குடிச்சே வீணாப்போகுதே என்ற கவலையில் ரெகுலராக்குடிக்க ஆரம்பித்தேன்
4 ஊரில் , உலகத்தில் 100க்கு 80 பே ரு குடிக்கறான் , அவங்க எல்லாரும் குடி நோயாளியா?
5 குடிகாரனுங்க தான் நேர்மையானவங்க, வஞ்சகமே இல்லாதவங்க
6 டெய்லி விடிகாலைல அஞ்சரை மணிக்கு எழுப்பி விடறீங்களே? நான் என்ன பப்ளிக் எக்ஸ்சாம்க்கா படிக்கப்போறேன் ?
7 நாம சம்பாதித்து நம்ம சொந்தக்காசில் குடிக்கறோம், இதைத்தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
8 குடிச்சுட்டு வீடடைக்கொளு த்தி விட்டுடட்டு நாடு வீடு என டயலாக் பேசறி யா?
9 வெறி நாய கார்ப்பரேஷனுக்குப்பிடிச்சுக்கொடுப்பது போல என்னை இங்கே பிடிச்சுக்கொடுத்திருக்கே?
10 கோக் குடிபப்து அவ்ளோ பெரிய தப்பா?
அது பெப்சி கோக் இல்லை . கொக்கைன், போதைப்பொருள் கஞ்சா போல பல மடங்கு போதை தருவது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
அனைவரும் பார்க்க வேண்டிய படம் .அதனால் இதை நொட்டை சொல்ல விருப்பம் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான , மாறுபட் ட முதல் பாதி , கொஞ்சம் மெதுவான , யூகிக்கக்கூடிய பின் பாதி . விகடன் மார்க் 44. ரேட்டிங் 2.75 / 5
Bottle Radha | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Dhinakaran Sivalingam |
Written by | Dhinakaran Sivalingam |
Produced by | Pa. Ranjith T. N. Arunbalaji |
Starring | |
Cinematography | Roopesh Shaji |
Edited by | E. Sangathamizhan |
Music by | Sean Roldan |
Production companies |
|
Distributed by | Generous Entertainments |
Release dates |
|
Running time | 146 minutes[1] |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment