மெட்ராஸ்காரன்(2025)-தமிழ் - சினிமா விமர்சனம்( ஆக்சன் ட்ராமா)
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ,நாயகி இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பவர்கள்.விடிந்தால் அவர்களுக்குத்திருமணம்.
வில்லன் ஒரு முன் கோபி.நண்பரின் மகளை யாரோ ஒருவன் ரெகுலராக பஸ்சில் தகறாரு செய்கிறான் என்பதை அறிந்ததும் அதே பஸ்சில் அவன் கையை வெட்டி ஜெயிலுக்குப்போனவர்.வில்லனின் மனைவி நிறை மாத கர்ப்பிணி.
நாயகி நாயகனுக்கு போன் செய்து விடிந்தால் நமக்குத்திருமணம்.கணவன் ,மனைவி ஆகி விடுவோம்.கடைசி சந்திப்பாக நாம் காதலர்களாக சந்திக்க வேண்டும்.உடனே கிளம்பி வா என அழைக்கிறாள்.நாயகனும் ஒரு ஆர்வத்துடன் காரை எடுத்துக்கொண்டு மணமகள் ஆன நாயகி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு செல்கிறான்.வழியில் எதிர்பாராத விதமாக வில்லனின் மனைவி மீது நாயகனின் கார் மோதி விடுகிறது
பெரிய கலவரம் ஆகி விடுகிறது.வில்லனின் ஆட்கள் நாயகனைப்பிடித்து வைத்துகொள்கிறார்கள்.போலீஸ் கேஸ் பைல் ஆகிறது.திருமணம் நின்று போகிறது
இதற்குப்பின் நிகழும். திருப்பங்கள் தான். மீதி திரைக்கதை
நாயகன் ஆக கும்பாளிங்கி நைட்ஸ் பட நாயகன் ஷான் நிஹாம் அருமையாக நடித்துள்ளார்.அனுதாபம் ஏற்படுத்தும் நல்ல கேரக்டர்.நடிக்க பல இடஙகளில் நல்ல வாய்ப்பு.சரியாகப்பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகி ஆக. நிஹாரிகா அழகு.ஆனால் அதிக வாய்ப்பில்லை.ஒரே ஒரு பாடல் காட்சி ,சில வசனங்கள் மட்டுமே.
வில்லன் ஆக கலையரசன்.பின்னி இருக்கிறார் நடிப்பில்.அவரது மனைவி ஆக ஐஸ்வர்யா தத்தா .நல்ல நடிப்பு.நாயகியை விட இவருக்குத்தான் அதிகக்காட்சிகள்
நாயகனின் தாய் மாமா ஆக கருணாஸ் நல்ல குணச்சித்திர நடிப்பு. கீதா கைலாசம் ,தீபா இருவரும் ஜோதிகாவுக்கே டப் பைட் கொடுக்கும் ஓவர் ஆக்டிஙக் ஓமனாக்கள்
சாம் சி எஸ் இசையில் 3 பாடல்கள் குட்.பின்னணி இசை ஓக்கே ரகம்.ஆர் வசந்த குமாரின் எடிட்டிங் கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது.ஒளிப்பதிவு பிரசன்னா. எஸ் குமார்.திருமண மண்டபத்தில் நிகழும் ஜாலி கலாட்டாக்களை தத்.ரூபமாகப்படம் பிடித்துள்ளார்.
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வாலி மோகன் தாஸ்
சபாஷ் டைரக்டர்
1. முதல் பாதி திரைக்கதை. ஆடியன்சுடன் நன்றாகவே. கனெக்ட் ஆகி ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது
2 நாயகன்,வில்லன் உட்பட அனைவரின் நடிப்புமே பாராட்டத்தக்கவை
3. மூன்று பாடல்களைப்படமாக்கிய விதம் .முதல் பாடல் ஓபனிங்கில் வரும் திருமணக்கொண்டாட்டப்பாடல்.இரண்டாவது இழவு வீட்டுப்பாடல்.இரண்டுக்குமான முரணை நன்கு வெளிப்படுத்திய விதம்
ஹிட் சாங்க்ஸ்
1. தைத்தக்கான் கல்யாணம் தகிடதத்தான் கல்யாணம்
2. ஏன் சாமி ஏன் சாமி உனக்குக்கண் இல்லையா?
3. கண்ணாடி நெஞ்சில் ஏண்டி கல் எறிஞ்சே?
ரசித்த வசனங்கள்
1 தான் கஷ்டப்பட்ட ஊரில் ஜாம் ஜாம்னு வாழ்ந்து காட்ட ஆசை அவருக்கு
2. திருமணம் ஆன புதுசுல எல்லாத்தம்பதிகளும் இணக்கமாத்தான் இருப்பாஙக .ஒரு ஆறு மாசம் போனா. எலியும்,பூனையுமா ஆகிடுவாஙக
3. நான் அதிகமா ஏமாறுவது அவ சிரிக்கும்போதுதான்
4 வலி என்னோடது.
5. என் வாழ்க்கை எங்கே தொலைந்ததோ அங்கே போய்த்தேடறேன்
6. கடவுளாப்பார்த்து உன்னை அனுப்பி இருக்கார்.கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கோ.உன்னை. அந்தக்கடவுள் கிட்டேயே அனுப்பி வைக்கிறேன்
7. எனக்குத்தோல்வியில் கவலை இல்லை.அந்த ஜாதிக்காரன்கிட்டே தோத்ததுதான் கவலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இடைவேளைக்ஜ்ய்ப்பின்னான 50 நிமிடக்காட்சிகளை வெட்டி விட்டுக் க்ளைமாக்ஸ் 10 நிமிசக்காட்சி மட்டும் இருந்தாலே போதும்.பின் பாதி தேவை இல்லாத தலை சுற்றல்
2. நாயகனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை.வாழ்விடம் சென்னை.ஆனால் மலையாளம் கலந்த தமிழில் பேசுகிறார்
3 டைட்டிலுக்கும். படத்துக்கும் சம்பந்தம். இல்லை
4. ஒரு காட்சியில் நாயகனிடம் கிராமத்து ஆட்கள் நீ எந்த ஊர்? எனக்கேட்கும்போது. நாயகன் புதுக்கோட்டை என சொல்லாமல் மெட்ராஸ்காரன் என்கிறார்
5. முக்கியமான பல காட்சிகளில் யாருமே மொபைல்ப்போன் யூஸ் பண்ணவே இல்லை
6. ஹாஸ்பிடலில் நடக்கும் ரகளையில் ஆளாளுக்கு ஏய் ஓய் எனக்கத்த நமக்குக்காநமக்குக்காது வலிக்குது
7 வில்லனும் ,அவன் மனைவியும் டூ வீலரில் போகும்போது நடக்கும் சண்டைக்காட்சி நிகழ்காலமா?பிளாச்பேக்கா? என்ற குழப்பம்
8 வில்லனின் மச்சினனை இன்னொரு வில்லனாக பில்டப் காட்டி விட்டு அந்த கேரக்டரை அம்போ என விட்டு விட்டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யு/ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி நல்லாருக்கு.பின் பாதி சொதப்பல்.விகடன் மார்க் 40.குமுதம் ரேங்க்கிங். சுமார்.ரேட்டிங் 2./5
0 comments:
Post a Comment