Tuesday, January 07, 2025

எக்ஸ்ட்ரீம் (2025) - XTREME -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

             

 எதேச்சையாக  நடந்ததா?அல்லது திட் டமிட்டு செய்ததா என்பது தெரியவில்லை அறிமுக இயக்குனர் ஆன    ராஜவேல்  கிருஷ்ணா  இயக்கிய முதல்  படம் ஆன  பிழை  வெளியான நாள்  3/1/2020 . மூன்றாவது  படம் ஆன 

 எக்ஸ்ட்ரீம் வெளியான நாள்  3/1/2025. தமிழ்  சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் செய்யாத செயல் இது . இவரது இரண்டாவது படம் ஆன தூவல் 22/11/2024   அன்று  வெளியானது . இவரது  முதல்  இரண்டு படங்களுமே  மாறுபட்ட  கதைக்களம் ,மெலோ டிராமா  வகை தான் என்றாலும்  கமர்ஷியலாகப்போகவில்லை .அதனால் இந்த முறை  கமர்ஷியலாக , விறு விறுப்பாக  ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தைக்கொடுத்திருக்கிறார்              


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியோட அம்மா ஒரு பணிப்பெண் . அபார்ட்மென்ட்டில் இருக்கும் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வருபவர் . அவருக்கு  உடல் நலம் சரி இல்லை எனில் தனது 18 வயதான மகளை , அதாவது  நாயகியை ஆல்ட்டர்னேட்டிவாக அனுப்பி விடுவார் .அப்படி ஒரு நாள்  வேலைக்குப்போன  நாயகி  கொலை  செய்யப்படுகிறார் .அவரைக்கோலை செய்தது யார்?என்பதை போலீஸ் துப்பறிந்து கண்டு பிடிப்பதே கதை 



இந்தக்கேஸை  துப்பறியும்  போலீஸ்  ஆபீசர் ,அவருக்கு உதவியாக ஒரு பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர்  இருவரும் காலத்தில் இறங்கினாலும்  அவர்கள்  குடும்பத்தில்  நிகழும்  சில சம்பவங்கள்  அவங்க  ட்யூட்டியை எப்படி பாதிக்கிறது என்பதையம்  போகிற  போக்கில்  திரைக்கதையில்   சொல்லி இருக்கிறார்கள் 



 நாயகன் ஆக ராஜ்குமார்  நாகராஜ் கச்சிதமாக நடித்துள்ளார் இவர் தான்  படத்தின்  தயாரிப்பாளரும் கூட . பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர் ஆக  பிக் பாஸ் புகழ்  ரக்ஷிதா  மகாலட்சுமி  நடித்துள்ளார் .. சரவணன்  மீனாட் சி  சீரியலில்  பார்த்த  நடிப்புக்கும் இந்த போலீஸ் நடிப்புக்கும் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறார் 


 கொலை செய்யப்படும்  நாயகி ஆக அபி நட்சத்திரா   அருமையாக  நடித்துள்ளார் .அவரது அப்பாவித்தனமான முகமும், வெள்ளந்தியான சிரிப்பும் அவருக்கு பெரிய பிளஸ் 


நாயகிக்கு  குழந்தை முகம் ,பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர் கிளாமர்  காட்டிட  முடியாது . புத்திசாலி இயக்குனர்  ஒரு ஐடியா  செய்து  கிளாமருக்காகவே  ஒரு கேரக்ட்டரை உருவாக்கி  அவர் வீட்டில் நாயகி வேலை செய்வது போல  காட்டி விட் டார் .அந்த  கேரக்ட்டருக்கு  அம்ரிதா ஹோல் டர்  அசால்ட்  ஆக நடித்து   தன கிளாமர் கடமையை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் . அம்ரிதாவின் காதலர் ஆக  அனந்த நாக்  நடித்திருக்கிறார் 

ஒளிப்பதிவு  டி ஜெ  பாலா . மூன்று  முக்கியப்பெண் கதாபாத்திரங்களை  க்ளோசப் ஷாட்  , லாங்க் ஷாட்  என அழகாகவே  படம்  பிடித்துள்ளார் .இசை  ராஜ் பிரதாப் . சுமார் ரகம் .பின்னணி  இசையில் இன்னும் கவனம்  செலுத்தி இருக்கலாம் 


எடிட்டிங்க்  குட் .122  நிமிடங்கள்  படம் ஓடுகிறது . திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  ராஜவேல் கிருஷ்ணா 

சபாஷ்  டைரக்டர்

1  முதல் காட் சியில் இருந்து  இறுதிக்காட் சி  வரை  எங்குமே  தொய்வு  இல்லாமல் பரபரப்பாகக்காடசிகளை நகர்த்திய விதம் 


2   துப்பறியும்  போலீஸ்  ஆபீசர் ,அவருக்கு உதவியாக ஒரு பெண்  சப் இன்ஸ்பெக்ட்டர்  இருவருக்கும்  உள்ள  உறவு  முறையை  சஸ்பென்சாகக்கொண்டு போனது 


3  யூயூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் 


4  மாடர்ன்  பெண்களின்  அரை குறை ஆடை  பற்றி  விழிப்புணர்வ் ஊட்டும்  விதத்தில் வசனங்கள் ,காட் சிகள்  வைத்தது 

ரசித்த  வசனங்கள் 


1   என்  உடம்பு என்னும் ஆயதத்தை நான் மட்டும் தான் யூஸ் செய்வேன் 


2    நான் நிர்வாணமாக  வந்தாலும் நீ கட்டுப்பாட்டுடன் இருக்கணும் .பெண்ணின்  ஆடை அவளது  விருப்பம்,அதைக்காரணமாக சொல்லக்கூடாது 


3 லிப்ஸ்டிக்  , ஓவர் மேக்கப்  போடணும்னா அந்த பொண்ணுங்க புரொபஸனலா இருக்கணும் அல்லது பிராஸ்ட்டியூட்டா  இருக்கணும் 


4  இந்த  போன் மாடல்  நான் கேட்ட  மாடல் ஆச்சே ?


 உன்னை இம்ப்ரஸ்  பண்ண  வாங்குனதுதான் 


 இப்போ  அவளை  இம்ப்ரஸ்  பண்ண முடிவு   பண்ணிட் டியாக்கும் ? 


5   லவ் பண்றப்போ பிளஸ்  மட்டும்தான் தெரியும், பிரேக்கப் ஆகிட் டா மைனஸ் மட்டும் தான் தெரியும் 

 6  ஆண்களுக்கு    அனுபவத்தால் கிடைக்கும் அறிவு , நாலெட்ஜ்  இவை எல்லாம் ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே கிடைத்து விடும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

  1   சைபர்  க்ரைம்  போலீஸ் செய்ய வேண்டிய வேலையை  குற்றவாளி  என சந்தேக பட்டியலில் உள்ள ஒரு நபரே நாயகனுக்கு செய்து தருவது எப்படி ?


2    மெயின் கதைக்கும், நாயகனின்  பர்சனல்  லைப் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ? 


3  படிக்க  எனக்கு ஆன்ட் றாயிடு  போன் வேண்டும்  என நாயகி  கேட்பதாக  ஒரு  சீன் .ஆனால்  அதற்கு   முன்பாகவே   நாயகியிடம் அந்த  மாடல்  போன் இருக்கு .நாயகியின் அம்மா  எடுக்கிறாள் .


4  நாயகி  18 வயது ஆன பெண் .அவளை  இரவு 8 மணி  வரை தனிமையில்  அபார்ட்மென்ட்டில் இருக்க அம்மா அனுமதிப்பது எப்படி ? 


5   ஒரு பார்ட்டி நடக்குது .அதில் நாயகி டான்ஸ் ஆடுகிறாள் .அதைப்பாராட்டி  ஒருவன் அவளை  கட்டி அனைத்துத்தூக்கி பாராட்டுகிறான் .நாயகியின் அம்மா வேடிக்கை பார்க்கிறாள் 


6  மாதம்  3000  ரூபாய்க்கு  வீட்டு வேலை செய்யும் பெண்ணின்  18 வயது  மக்களுக்கு ரூ  30,000   செலவில்  ஒரு செல்போன் பரிசு வாங்கித்தரும்  ஆள் , அதை அனுமதிக்கும் அம்மா ..எல்லாம் ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -      விறுவிறுப்பாக  செல்லும் , கண்ணியமான  க்ரைம் த்ரில்லர்  படம் இது .  பார்க்கலாம் . விகடன் மார்க்  41 , குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே  . ரேட்டிங்  2.75 / 5 

0 comments: