Sunday, December 01, 2024

ZEBRA (2024) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( பைனான்சியல் க்ரைம் த்ரில்லர் )

         

               தீபாவளி  ரிலீஸ் வின்னராக பட்டையைக்கிளப்பிய  லக்கி பாஸ்கர்  போலவே இன்னமும் ஒரு  பைனான்சியல் க்ரைம்  ஆக்சன் த்ரில்லர் ஆக  பிரமாதமான திரைக்கதையுடன்  22/11/2024  அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட  வெற்றி பெற்ற  தரமான  படம் இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் வெவ்வேறு  தனியார்  வங்கிகளில் வேலை  செய்பவர்கள் , காதலர்கள் . ஒரு நாள்  நாயகி  ஒரு அக்கவுண்ட்டில் ஒருவருக்கு 4 லட்சம்  ரூபாயை டிரான்ஸ்பர் செய்யும்போது   தவறுதலாக  க்ளெரிக்கல்   மிஸ்ட்டேக் ஆக  வேறு  ஒருவர் அக்கவுண்ட்டில் டிரான்ஸ்பர்  செய்து  விடுகிறார் .


 நாயகியைக்காப்பாற்றக்களம் இறங்கும்  நாயகன்  பேங்க்  ரூல்ஸில் உள்ள  லூப்ஹோலைப்பயன்படுத்தி  அந்த  4 லட்சம்  ரூபாயை  சரி செய்து  விடுகிறார் 


 ஆனால் நாயகன்  இப்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் . 5 கோடி ரூபாய் பணம்  அதே பாணியில்  காணாமல் போக  நாயகன் மீது பழி  விழுகிறது . இதை நாயகன் எப்படி சரி செய்யறார்  என்பது பரபரப்பான , விறுவிறுப்பான  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக சத்யதேவ்  அசால்ட் ஆக நடித்திருக்கிறார் .மாஸ் ஹீரோக்களுக்கு உரிய கை தட்டல்  அவருக்குக்கிடைக்க முக்கியக்காரணம் அவரது கேரக்ட்டர் டிசைன் , திரைக்கதை யுக்தி , எடிட்டிங்க் கட் 


நாயகி ஆக ப்ரியா பவானிசங்கர் . அழகாக வந்து போகிறார் . நடிப்பும் குட்.ராசி இல்லாத நாயகி என்ற கோடம்பாக்கம் சென்ட்டிமெண்ட்டை இந்தப்படத்தின் பிரமாண்டவெற்றி உடைத்திருக்கிறது 


 பவர்புல்  வில்லன் ரோலில் தனஞ்செயன்  அருமையான நடிப்பு , ஆளுமையான உடல்மொழி . இவர்கள் போக  சத்யராஜ் , சுரேஷ் மேனன், சுனில் போன்ற  பிரபலங்களும்  உண்டு . அவரவர்க்குக்கொடுத்த வேலையைக்கச்சிதமாக் செய்திருக்கிறார்கள் 

அணில் கிருஷின் அபாரமான எடிட்டிங்கில்  படம் விறுவிறுப்பாகப்போகிறது .ஆனாலும் 162  நிமிடங்கள் நீளம் தான் .கொஞ்சம்  ட்ரிம் செய்து இருக்கலாம் .ரவி பாஸ்கர்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை . பின்னணி  இசை  கலக்கல்  கமர்ஷியல் .சத்யா பொன்மார்  ஒளிப்பதிவில் காடசிகளை பிரமாண்டமாகக் காட்டி உள்ளார் . கதை ,திரைக்கதை , இயக்கம் ஈஸ்வர்  கார்த்திக் .இணை  திரைக்கதை யுவா 


சபாஷ்  டைரக்டர்


1  படம் போட்டு 30 நிமிடங்கள் கழித்துத்தான்  டைட்டில் வருது .அது வரை  திரைக்கதை பறக்குது . செம ஸ்பீடு 


2  பேங்க்  மோசடிகள் சம்பந்தப்பட்ட  காட்சிகளை  சி சென்ட்டர்  ஆடியன்ஸுக்கு ம்  புரியும் வண்ணம் காட்சிப்படுத்திய விதம்  அருமை 


3   நாயகன்  செய்த மோசடியை மேனேஜர் கண்டுபிடிக்க முற்படும்போது  நாயகன் சுதாரித்து  அதை கரெக்ட் செய்யும் காட்சி   அப்ளாஸ்  அள்ளும் காட்சி 

4  சதுரங்க  வேட் டை ,  கேஜிஎப்  படங்களுக்குப்பின்  அதற்கு நிகரான கை  தட்டல்களை அள்ளும் அட்டகாசமான வசனங்கள் 


5 பேங்க்கை கொள்ளை அடிக்கப்போடும் பிளானை  காமெடியனை வைத்து விஷுவலாக  என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கற்பனையாக்காட்டிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பணம் ஒரே இடத்துல இருக்காது , சுத்திக்கிட்டே  இருக்கும், இதைத்தடுக்க நாம யாரு ?


2 பணம் புழங்கும் இடம்தான் குற்றங்கள் அதிகம் நிகழும் இடம் 


3 கில்லாடிடா நீ.  வீடடையும்,  வீட்டுக்கார அம்மாவையும் ஒன்னாவே காட்டிட்டே 


4 பணத்துக்கு இருக்கும் இன்னொரு நேச்சர்  ஜீரோ பேலன்ஸ் . அது ஒருவரிடம் இருந்து போனாதான் இன்னொருவருக்கு வரும்  

5  பணம் தான் நம்மை ஆட்டி வைக்குதுனு நினைக்கும் நான் அந்தப்பணத்தையே ஆட்டி வைக்கும் ஒருத்தனை சந்தித்தேன் 


6 பயம்  முத்திப்போனா  அது தைரியம் ஆக மாறும்,அந்த தைரியம்  முத்திப்போனா பிரளயமா  மாறும் . அதில்  இருந்து தப்பிக்க யாராலும் முடியாது 


7  எபிஷியன்சியால ஹெட்வெயிட் ஏறக்கூடாது 


8  குதிரையை ஓட விட்டா அது ஜெயிக்கும்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா ட்ரெய்னிங்க் கொடுக்கணும் 

9 உன்னை  வார்ன் பண்ற பொசிஷன்ல  இருக்கறவன் கிட்டே உன்னோட யோசனைகளை சொல்லாதே 


10 அதை விட சாகலாம்னு ஒரு முடிவு எடுப்பே .ஆனா அதுக்கும் நான் தான் பர்மிஷன் கொடுக்கணும் 


11   ONCE UPON A TIME ,TIME IS MONEY . BUT NOWADAYS   INFORMATION IS  MONEY 

ஒரு காலக்கட்டத்துல காலம் /நேரம்  தான் பணம்  ஆக  செல்வம் ஆக இருந்தது . ஆனா இப்போ  தகவல்கள்  தான் செல்வம்னு ஆகிடுச்சு 


12 சூதாட்டம் கொடுக்கற போதை அவருக்கு வேற எதுவும்  தராது 


13  DEAR  , யாரும்  கெஸ் பண்ண முடியாத படி பாஸ்வோர்டு  வை 


 நீ கூட  கெஸ் பண்ண முடியாத படி வெச்சிருக்கேன் ..........


 ச்சீய் 


வெட்கப்படாதடா 

14  நாமினி  பேரு கொடுக்காம செத்துப்போன அக்கவுண்ட்ஸ் ல இருக்கற பணம் எல்லாம் பேங்க்குக்குத்தான் சொந்தம் 


15 க்ரைம் சின்னதோ , பெருசோ யார் செஞ்சாலும்  வெளியே  உடனே  தெரிஞ்சிடும் , ஆனா பேங்க்ல நடக்கும் க்ரைம்  வெளில தெரிய எப்படியும் நான்கு நாட்கள் ஆகும் 

16  இருக்கறவன் கிட்டே  பணம்  வாங்கறது பெரிய  விஷயம் இல்லை , ஆனா இல்லாதவன் கிட்டே  பணம்  வசூல் பண்ணுவதுதான் கெத்து 


17  வாழ்வதற்கே பயந்த அந்த  யானை  பயம்னா என்ன? என அந்த காட்டுக்கே காட்டுச்சு 


18 வேணும்னு நினைச்ச டீலை என்னைக்கும் விட்டதில்லை .எந்த  டீலும் என்னை வேணாம்னு நினைச்சதில்லை 


19 பேங்க்கை கொள்ளை அடிக்க மூளையும் ,பிசிக்கல்  பிட்னெசும்  வேணும் , என் கிட் டே  அந்த ரெண்டுமே இல்லையே? 


 அதெல்லாம் வெளியாட்களுக்குத்தான் வேணும் . நாம தான் பேங்க்  உள்ளே  வேலை செய்யறவங்க ஆச்சே ? தேவை இல்லை 


20  பாபா  சொன்னபடி  5 கோடி ஏழரைக்கோடியா  ஷேர் மார்க்கெட்ல  மாத்தித்தருவார்னு என்ன கேரண்டி ?


ரிஸ்க் என்றாலே  அதுக்கு கேரண்டி  கிடையாது .அதனால தான் அது ரிஸ்க் 


21  பவரும் , வீரமும்  பர்மெனன்ட்  கிடையாது 


22   நமக்கு வேணும்னு நினைப்பதை  நம் எதிரில் இருப்பவன் மறுக்க முடியாத அளவுக்கு கொடுக்க வைக்கணும் 


23 LUCK FAVERS BRAVENESS   என எதனால சொல்றாங்கன்னா குற்றம்  பண்ணத்துணிந்தவனுக்குத்தான் அதிர்ஷ்டம் துணை நிற்கும் , ஏன்னா அந்த குற்றத்துக்காக அவன் எல்லா ரிஸ்க்கையும்  எடுப்பதால் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கொள்ளை அடித்த  பணத்தை  வைக்கப்போகும்   பேக்கை பிராண்ட் அயிட்டமாக  வாங்காமல்  அதன்  தாங்கு திறனை செக் பண்ணாமல் மட் ட  ரக பேக்  வாங்கி மாட்டும்  காட்சி  நம்ப முடியலை 


2  பேங்க்கில் அலாரம் அடிக்கும்போது நாயகன் கொள்ளை  அடிக்க உள்ளே போகிறான் . மேனேஜர்  உட்பட  யாருமே  நாயகன் இல்லாததை நோட்  பண்ணவே இல்லையே? 


3   காமெடியன்  , வில்லி  இருவரும்  பேங்க் உள்ளே  தவறிய பைல் காகிதங்களை கலெக்ட் பண்ணும்  காட்சி காமெடிக்கு ஓகே . ஆனா  ரியாலிட்டி இல்லை . அவ்ளோ பெரிய ஆபீசர்  அவராகக்குனிந்து பேபப்ரஸை கலெக்ட் பண்ணிட்டு  இருப்பாரா? 


4  கொள்ளை அடித்த பணத்தை குப்பைக்கூடையில் போட்டு டிஸ்போஸ் செய்யும் காட்சி  நம்பும்படி இல்லை 


5  ஷேர்  மார்க்கட்டில் அவ்ளோ பணம் சத்யராஜைப்போட வைத்து அதன் பின்  லாபத்தை  நாயகன்  வாங்குவது ரிஸ்க் .அதற்குப்பதிலாக எந்த ஷேரில் பணம் போடவேண்டும் ? அல்லது  என்ன ஆப்சன் டிரேடிங்க் சீக்ரெட்  என அவரிடமே  கேட்டு  நாயகனின் டி  மேட்  அக்கவுண்ட்  மூலம்  டீல்  செய்வதே பாதுகாப்பு 


6  ஷேர்  மார்க்கட்டில் பாதுகாப்பு  இல்லை  என்பது உண்மைதான் . ஏற்கனவே முதலீடு செய்து இருந்தால்  திடீர் என மார்க்கெட் கிராஸ் ஆகும்போது  லாஸ் ஆகும் . ஆனால் கிராஸ் ஆகப்போகும் நாள் அன்று கரெக்ட் ஆக இன்வெஸ்ட் பண்ணி  லாஸ்  ஒரே நாளில் ஆவது எப்படி ?  மார்க்கெட்  ஓப்பன் ஆகும்போதே  ரெட்டி ல் தானே காட்டும் ?அதுக்குப்பின்  ஏன் இன்வெஸ்ட்  செய்யணும் ?  

7 திடீர்  ட்விஸ்ட் வேண்டும் என ஷேர்  மார்க்கட் கிராஸ் ஆகும் முன்பே  பணத்தை எடுத்துடடேன் என சத்யராஜ் சொல்வதும்  நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பரபரப்பான பைனான்சியல் க்ரைம் த்ரில்லர். பின் பாதி    விறு விறுப்பான பேங்க்  ராபரி  த்ரில்லர் . அனைவரும் பார்க்கலாம் . ரேட்டிங்க்  3.5 / 5 

தெலுங்குப்படத்துக்கு  விகடன் மார்க் தராது . அப்படித்தருவதாக  இருந்தால்  விகடன் மார்க்  50 .குமுதம்  ரேட்டிங்  , நன்று . 


Zebra
Theatrical release poster
Directed byEashvar Karthic
Screenplay byEashvar Karthic
Yuva
Yuva is prolific screenplay writer and predominantly works in the Indian Film Industry
Dialogues byMeeraqh
Story byEashvar Karthic
Produced byS. N. Reddy
S. Padmaja
Bala Sundaram
Dinesh Sundaram
StarringSatyadev
Dhananjaya
Sathyaraj
Priya Bhavani Shankar
Amrutha Iyengar
CinematographySathya Ponmar
Edited byAnil Krish
Music byRavi Basrur
Production
companies
OldTown Production
Padmaja Films Private Limited
Release date
  • 22 November 2024
Running time
162 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹2.60 crore[2]

0 comments: