4 கதைகளும் தலா 30 நிமிடங்கள் , ஆக மொத்தம் 2 மணி நேரம் தான் . மினி வெப் சிரிஸ் என சொல்லலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
1 காமத்துப்பால் - நாயகி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியை .அறிவியல் டீச்சர் ஆன அவரை பள்ளியில் பாலியல் கல்வி கற்பிக்க அனுப்பப்படுகிறார் .ஆனால் அவருக்கு ஒரு தயக்கம் .ஒரு பெண் ஆன நாம் எப்படி பசங்களுக்கு சொல்லிக்கொடுப்பது ? என தயங்குகிறார் .
அதே பள்ளியில் ஒரு மாணவன் ஒரு மாணவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து விடுகிறான் .முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்து விடும் என்ற அளவில் தான் அவர்கள் அறிவு இருக்கிறது . டீச்சர் , மாணவன், மாணவி பிரச்சனை எப்படித்தீர்ந்தது என்பது மீதி திரைக்கதை
இதில் டீச்சராக வரும் நாயகி ஐஸ்வர்யா தத்தா ஓவர் ஆக்டிங் . மாணவர்கள் இருவரும் கச்சிதம் , அந்த மாணவியும் ஓவர் ஆக்டிங் தான் .மனோ பாலா அனுபவம் மிக்க நடிப்பு
2 ரீ லோடு - நாயகன் , நாயகி இருவரும் முன்னாள் காதலர்கள் . நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கிறார்கள் . இருவருக்கும் வேறு வேறு நபருடன் திருமணம் ஆகி விட்டது . இருவருக்குமே திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை . இருவரும் பரஸ்பரம் அதைப்பற்றிப்பேசும்போது இருவரும் இரண்டறக் கலக்கிறார்கள் . ஆனால் க்ளைமாக்ஸ்சில் ஒரு டிவிஸ்ட் இருக்கு . அந்த டிவிஸ்ட் ஆல்ரெடி 2018ல் வந்த பல குறும்படங்களின் பாதிப்பாக இருப்பது மைனஸ்
ஏப்ரல் மாதத்தில் , ரோஜாக்கூட்டம் மாதிரி தரமான காதல் படங்களின் நாயகன் ஸ்ரீகாந்த் தான் நாயகன் இதில் . நடிப்பு குட்
3 வான்மதி - நாயகி ஒரு மிலிட்ரி வீரரின் மனைவி . திருமணம் ஆகி 3 மாதங்களில் கணவர் காணாமல் போகிறார் .மிலிடரி கேம்ப்பில் கேடடால் சரியான பதில் இல்லை . பல வருடங்களாக கணவன் பற்றிய தகவல் இல்லாததால் நாயகிக்கு என்ன செய்வது என தெரியவில்லை .உடல் வேட்கைக்கு பதில் சொல்லணும் . நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளித்தோழனை சந்திக்கிறாள் . பள்ளி காலத்தில் அவன் அவளை ஒருதலையாகக்காதலித்தவன் . அவனுடன் இவளாக உறவில் ஈடுபடுகிறாள் .
உறவு முடிந்து வீட்டுக்கு வந்தால் திருப்பம், காணாமல் போன கணவன் வந்து விட்டான் .விஜய்காந்த் , சுதா சந்திரன் , ரகுமான் நடித்த ஒரு வசந்த ராகம் கதை
நாயகி ஆக சோனியா அகர்வால் .நடிப்பு ஓகே ரகம்
4 இனி எல்லாம் - நாயகன் ஐ ஏ எஸ் எக்ஸாம்க்குப்படித்துக்கொண்டு இருப்பவன் மிகப்பெரும் படிப்பாளி . அவனுக்கு சமையல் செய்ய ஒரு பெண் வருகிறாள் . அவள் திருமணம் ஆனவள் . இளம் வயதில் படிக்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போனதால் இப்போது படிக்கும் ஆர்வம் உள்ள நாயகன் மீது ஆசை .அவனுக்கும் அவள் மீது காதல் . க்ளைமாக்சில் என்னநடக்கும் என்று ஊருக்கே தெரியும் SAPIOSEXUAL என்ற வார்த்தைக்கு இப்பதான் அர்த்தம் கண்டு பிடித்தேன் . தன்னை விட இண்ட்டலிஜெண்ட் ஆன நபருடன் காதல் வசப்படுவது
நாயகன் , நாயகி இருவர் நடிப்பும் கச்சிதம் , நாயகிக்குக்கண்கள் அழகு . ஆனால் கேமரா எப்போதும் அவரது இடையை க்ளோ சப்பில் மொய்க்கிறது
சபாஷ் டைரக்டர்
1 விஜய் சேதுபதி + த்ரிஷா நடித்த 96 க்ளைமாக்ஸ் , 7 ஜி ரெயின்போ காலணி க்ளைமாக்ஸ் இந்த ரெண்டையும் மிக்ஸ் பண்ணி மூன்று கதைகள் ரெடி பண்ணிய சாமார்த்தியம்
2 மூன்று கதைகளும் ஒரு மார்க்கமே இருக்கே என விமர்சனம் வந்து விடாமல் இருக்க நல்ல பிள்ளை போல முதல் படத்தைப்பிரச்சாரபடமாக எடுத்தது ( சின்னப்பையனா நாமிருந்தப்ப அம்மா,அப்பா ஊருக்குப்போயிடடா நண்பர்களை அழைத்து வந்து கொட்டம் அடிச்சுட்டு ஊரில் இருந்து திரும்பி வரும்போது நல்ல பிள்ளை போல பாடப்புத்தகம் படிப்பது போல )
ரசித்த வசனங்கள்
1 இந்த ஆம்பளைங்களுக்கு ஒரு புத்தி இருக்கு , ஒரு பெண்ணை அவனுக்குப்பிடிச்சுட்டுதுன்னா தனது பார்வையாலேயே அவளுக்கு
அதைப்புரிய வெச்சிடுவான்
2 குந்தி தேவி சூரியனைப்பார்த்த உடனேயே குழந்தை பிறந்ததாமே?
3 பொண்ணுங்க செக்ஸ் சம்பந்தமா பேசக்கூடாதுன்னு சட்டம் இருக்கா?
4 வாய் உனக்கு திருவையாறு வரை போகுது
5 உன்னைச்சுற்றி இருக்கறவங்களுக்காக வாழ்வதை முதல்ல நிறுத்து
============================
6 உன் சிரிப்பு முன்னே மாதிரி அப்படியே இருக்கு
நீ கூடத்தான் அப்படியே இருக்க, ஆனா தொப்பை இருக்கு
7 நீ ரொம்ப அழகாயிருக்க
நிஜமாவா? தாங்க்ஸ்
சும்மா, விளையாட்டுக்கு சொன்னேன், சீரியஸா எடுத்துக்காத
8 பிறரிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு துயரம் இருக்கு
9 சம்பாத்தியம் மட்டும் புருஷ லட்ஷணம் இல்லை
10 உறவில் சிக்கல் எனில் பிரச்சனை ரெண்டு சைடுலயும் இருக்கலாம்
11 சாரி , நான் ஏன் அப்படிப்பண்ணுனேன்னு எனக்கே தெரியல
பரவால்ல விடு , நீ பண்ணலைன்னா நான் பண்ணி இருப்பேன்
=============================
====================\\
12 காலம் போனாக்கிடைக்காது
13 வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தில் வாழ்வது
14 நம் உள்ளுணர்வு என்ன சொல்லுதோ அதைப்புரிஞ்ச்சு நடக்கணும்
15 நிழலைத்துரத்தினாலும் நிகழ்காலத்தைத்துரத்தமுடியாது
16 பொண்ணுங்க சொன்னா மழை வரும்னு சொல்வாங்க
17 லவ் ,செக்ஸ் ரண்டும் பூ மாதிரி மலரனும்
==================
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1, என்னதான் ஹாலில் ஒரு பிரச்சனை நடந்தாலும் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு டீச்சர் அப்படியே துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஹாலுக்கு வருவாரா?
2 மாணவன் பலான சி டி யை தன ரெக்கார்டு நோட்டில் வைக்கிறான் . ஆனால் திரும்ப எடுக்கும்போது டேபிளில் இருப்பதை எடுக்கிறான் . சி டி மாறுவதுதான் இங்கே டிவிஸ்ட் , ஆனால் அது நம்பும்படி சொல்லப்பட வில்லை
3 மாறின சி டி யை முதலில் போட்டுப்பார்த்து செக் பண்ணிய பிறகுதான் அனைவர் முன்னும் ஓட்டிப்பார்ப்பார்கள் .பலான சி டி யை அனைவர் முன்னும் ஓட்டிப்பார்க்கும் காடசியும் நம்பும்படி சொல்லப்பட வில்லை
=========================================
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நான்கு கதைகளும் போர் அடிக்கவில்லை . ஆனால் பல இடங்களில் பார்த்துப்பழகிய கதைகள் தான் . ஆண்களுக்கான காலைக்காட்சிப்படம் . ரேட்டிங் 1.75 / 5
0 comments:
Post a Comment