22/11/2024 அன்று கேரளா திரை அரங்குகளில் வெளியாகி இந்த ஆண்டின் சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்று பொதுமக்களின் பாராட்டுதல்களைப்பெற்று கமர்ஷியலாக சக்ஸஸ் ஆன படம் .நஸ்ரியா வுக்கு இது ஒரு கம்பேக் படம் .காமெடி ரோல்களில் பெயர் வாங்கிய பஸீல் ஜோசப் நெகடிவ் ஷேடில் கலக்கி இருக்கும் படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி எம் ஏ மைக்ரோபயாலஜி படித்திருக்கும் ஒரு குடும்பப்பெண் , திருமணம் ஆனவர் . கணவர் , குழந்தையுடன் வசித்து வருகிறார் .இவர் துப்பறியும் சாம்பு போல சூட்சுமமான , கூர்மையான புத்தி கொண்டவர் .இயல்பிலேயே இவருக்கு துப்பறியும் மனப்பான்மை உண்டு
நாயகியின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒரு குடும்பம் குடியேறுகிறது . வில்லன் தன வயதான அம்மாவுடன் வசித்து வருகிறான் . அவனது அம்மாவுக்கு அல்சைமர் என்ற நோய் இருப்பதாக சொல்கிறான் . அது ஒரு விதமான மறதி நோய்
அம்மா அடிக்கடி காணாமல் போவதும் பின் மீண்டும் போலீஸ் அவரைக்கண்டுபிடித்து மீட்டு வருவதும் சகஜமாக நடக்கும் செயல் ஆக இருக்கிறது . பக்கத்து வீட்டில் குடி இருக்கும் நாயகி அவர்களை நோட்டம் இடுகிறார் . வில்லன் எதையோ மறைக்கிறார் அல்லது நம்மிடம் போய் சொல்கிறார் என்று அவர் சந்தேகப்படுகிறார்
காரணம் மறதி வியாதி இருப்பதாக சொல்லப்படும் வில்லனின் அம்மா குக்கரில் 3 விசில் வந்ததும் சரியாக அடுப்பை அணைக்கிறார் . வீட்டுக்குள் போகும்போது ஞாபகமாக செருப்பைக்கழட்டி வைக்கிறார் . காயப்போடட துணிகளை மழை வரும்போது நினைவாக எடுத்து உள்ளே வைக்கிறார்
நாயகி இதன் மர்மத்தைக்கண்டறிய பக்கத்து வீட்டுக்குப்போய் வில்லனின் அம்மாவோடு பேச முற்படுகையில் அவர் சரியாக நாயகியுடன் பேச வில்லை
இப்படி இருக்கும்போது வில்லனின் அம்மா திடீர் என மீண்டும் காணாமல் போகிறார் .வில்லன் தான் அவனது அம்மாவைக்கொலை செய்து இருக்க வேண்டும் என நாயகி சந்தேகப்படுகிறார் . இதற்குப்பின் அவர் செய்த துப்பறியும் வேலைகள் தான் மீதிக்கதை
நாயகியாக நஸ்ரியா நஸீம் கலக்கி இருக்கிறார் .அவரது கேரக்ட்டர் டிசைன் சந்தோஷ் சுப்ரமணியம்(2008) ராஜா ராணி (2013) , ஓம் சாந்தி ஓசானா (2014) ஆகிய படங்களின் நாயகி சாயலில் கலந்த கட்டி இருக்கிறது .இவர் திருமணத்துக்குப்பின் சரியாக நடிப்பதில்லை . கடைசியாக இவர் நடித்த டிரான்ஸ் (2020) மலையாளப்படத்தில் கெஸ்ட் ரோல் தான் .இதில் வட்டியும் , முதலுமாக வெளுத்து வாங்கி இருக்கிறார்
வில்லன் ஆக பஸீல் ஜோசப் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார் இதுவரை இவர் நடித்த அனைத்து கேரக்ட்டர்களும் காமெடி கலந்தவை தான் . வில்லனிச நடிப்பில் இதுதான் முதல் படம் . அருமையாக செய்திருக்கிறார்
அகிலா பார்கவன் ,, பூஜா மோகன் ராஜ் , தீபக் பரம்போல் , சித்தார்த் பரதன் என அனைவரது நடிப்பும் கச்சிதம்
சமன் சாக்கோ வின் எடிட்டிங்க்கில் படம் 134 நிமிடங்கள் ஓடுகின்றன .முதல் பாதியில் என்ன பார்த்தோமோ அதற்கு நேர்மாறான காட்சிகள் பின் பாதியில்
சரண் வேலாயுதம் தான் ஒளிப்பதிவு .சிறப்பு .கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை கூடுதல் பலம் .
விஷ்ணு கோவிந்தின் சவுண்ட் டிசைனிங்க் ,வினோத் ரவீந்திரனின் ஆர்ட் டைரக்ஸன் அனைத்தும் கலக்கல் ரகம்
லிபின் , அதுல் ராமசந்திரன் ஆகிய இருவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எம் சி ஜித்தின்
சபாஷ் டைரக்டர்
1 நாயகி , வில்லன் இருவரது கேரக்ட்டர் டிசைன்கள் கச்சிதம் , இரு நடிகர்களின் பாத்திர தேர்வும் அவர்கள் நடிப்பும் அருமை
2 சீரியஸான கதையில் தேவையான இடங்களில் பிளாக் ஹியூமரைப்புகுத்தியது
3 யூகிக்கமுடியாத க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
4 ரத்தம் , வன்முறை இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் தந்த விதம்
ரசித்த வசனங்கள்
1 உங்க பேஸ்புக் புரோபைல் செக் பண்ண உங்க பேஸ்புக் பிரண்டா இருக்கனுமுனு அவசியம் இல்லை
2 சிங்கிள் மதரா இருப்பதால் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்க வேண்டிய அவசியம் வந்துடுது
3 DONT ASk sorry for being a STRONG WOMAN
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆல்பிரட் ஹிட்சாக் படமான ரியர் விண்டோ (1954) + கொரியன் மூவியாக சமீப த்தில் வந்த ஹோம் பார் ரெண்ட் (2023) ஆகிய இரு படங்களில் இருந்தும் இன்ஸ்பியர் ஆகித்தான் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது
2 உனக்கு எதுக்கு இந்தவேண்டாத வேலை ?என நாயகியிடம் கணவர் கடிந்து கொள்ளவே இல்லை .அவர் பாட்டுக்கு இருக்கிறார்
3 இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு சுவர் ஏறிக்குதிப்பது எல்லாம் ஓவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - - மாறுபட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் குடும்பத்துடன் காணலாம் ., ரேட்டிங்க் 3 / 5
THANX - அனிச்சம் மின்னிதம் 1/12/2024 டிசம்பர் மாதம் இதழ்
0 comments:
Post a Comment