கன்னட நடிகர் ஆன ராஜ் பி ஷெட்டி நம்ம ஊரு கே பாக்யராஜ் , டி ஆர் போல திரைக்கதை ஆசிரியர் கம் டயலாக் ரைட் டர் கம் டைரக்டர் . சுவாதி முத்தின மலே ஹனியே என்ற மாறுபட்ட மெலோ டிராமாவிலும் ஷைன் செய்தார் .டோபி என்ற அதகள ஆக்சன் டிராமாவிலும் பின்னிப் பெடல் எடுத்தார் .கன்னட ப்பட உலகின் சிறந்த படங்களுள் ஒன்றான கருட காமனா விருஷப வாகனா செம கமர்ஷியல் ஹிட் மூவி . இவர் நடிப்பில் லேட் டஸ்ட் ஆக வந்திருக்கும் மலையாளப் படம் தான் இது
ஒரு ரெண்டாம் வகுப்பு யாத்ரா (2015) என்னும் மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆன அபர்ணா பாலா முரளி மகேஷிண்டே பிரதிகாரம் (2016) மூலம் செம ஹிட் ஆனார் . தமிழில் எட்டு தோட் டாக்கள் ( 2017) சர்வம் தாள மயம் (2019) , சூரரைப்போற்று (2020) , நித்தம் ஒரு வானம் (2022) , ராயன் ( 2023) உட்பட பல
படங்களில்நடித்தவர் . இவரது லேடடஸ்ட் ஹிட் கிஷ்கிந்தா காண்டம் .சூரரைப்போற்று ப படத்தில் நடித்ததற்கு தேசிய விருது பெற்றார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் .ஓல்டு பாய் (2003) கொரியன் மூவி யில் வருவது போல வில்லன் நாயகியை வேண்டுமென்றே அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறான் . நாயகியைத்தொடக்கூட இல்லை . ஆனால் மனோ ரீதியாக சித்ரவதை செய்கிறான் வில்லன் . நாயகி இதற்கு முன் வில்லனைப் பார்த்தது கூட இல்லை .. நாயகிக்கு இப்போது வில்லனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் , என்ன காரணத்துக்காக தன்னை அடைத்து வைத்திருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க வேண்டும் .
நாயகன் ஒரு டாக் டர் . இனிமையான சுபாவம் கொண்டவர் . தன்னிடம் வரும் பேஷண்ட்களைக்கனிவாகக்கவனித்துக்கொள்கிறார் .
நாயகியை அடைத்து வைத்திருக்கும் அதே வீட்டில் வேறு ஒரு அறையில் வில்லன் இன்னொரு ஆணை அடைத்து வைத்திருக்கிறான் .அவனையும் சித்திரவதை செய்கிறான்
நாயகன் , நாயகி , வில்லன் , இன்னொரு ஆள் இந்த நால்வருக்கும் என்ன தொடர்பு ? க்ளைமாக்சில் என்ன ஆனது ? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக ராஜ் பி ஷெட்டி தனது நடிப்பால் பார்ப்பவர் மனதைக்கவர்கிறார் . நாயகி ஆக அபர்ணா பாலமுரளி விஜய சாந்தி மாதிரி ஆக்சன் அவதாரம் எடுத்து இருக்கிறார் , செமயான நடிப்பு .இவரது துணிவும், தைரியமும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்
ஜோசப் கிரன் ஜார்ஜ் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார் ஜிஷோ லான் ஆண்டனி ஜோமன் கே ஜோசப் , கிருஷ் தாமஸ் மேவலி ,ஜிஷோ லான் ஆண்டனி ஆகிய மூவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள்
ஒலிப்பகிவு ,ஒளிப்பகிவு , ஆர்ட் டைரக்ஷன் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம் .பின்னணி இசை அருமை . எடிட்டிங்க் கச்சிதம் . 122 நிமிடங்கள் டைம் ட்யுயூரேஷன்
சபாஷ் டைரக்டர்
1 குமுதம் இதழில் ஒரு பக்கக்கதையாக வெளியிட் டால் கூட பாதி பக்கம் தான் வரும் . அத்துளியூண்டு கதையை 2 மணி நேரபபடமாகக்கொடுத்த சாமார்த்தியம்
2 வில்லன் நாயகியை கடத்தியதற்கான காரணத்தை படத்தின் கடைசி 5 நிமிடத்தில் ஓப்பன் செய்த விதம்
3 வில்லனுக்கும் , போலீஸ் ஆபீஸருக்கும் நிகழும் தத்ரூபமான சண்டைக்காட் சி யைப்படமாக்கிய விதம்
4 நாயகி அந்த அறையில் இருந்து தப்பிக்க எலியை யூஸ் பண்ணும் ஐடியா
ரசித்த வசனங்கள்
1 நம்ம உணர்ச்சிகளை நம்ம கட்டுப்பாட்டில் வைக்கணும் . இல்லைன்னா காலம் முழுக்க தனிமையில் கழிக்க நேரிடும்
2 உன்னை எதற்காகககடத்தினேன் என்பது இவனுக்குத்தெரியும், ஆனா நீ கேடடாலும் அவன் சொல்ல மாடடான் .சொல்லமுடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மிஸ்ஸிங்க் கேஸ் பற்றி விசாரிக்க வில்லன் வீட்டுக்கு வரும் போலீஸ் ஆபிசர் துப்பாக்கி இல்லாமல் , கூட ஆட்கள் இல்லாமல் தனியாக வந்து மாட்டுவது நம்பும்படி இல்லை
2 ஒருவரை ரூமில் அ டைத்து வைத்தால் கதவைத்திறக்கும்போது அவர் கதவுக்குப்பின்னால் மறைந்திருந்து தாக்குவார் என்பது வில்லனுக்குத்தெரியாதா?2 முறை இரூவரிடமும் ஏமாறுகிறார்
3 வில்லன் தனுஷுக்குத்தம்பி மாதிரி இருக்கிறார் . நாயகி ஆஜானுபாவகமாக நமீதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் . இதனால் இருவருக்கும் இடையில் நிகழும் ஆக்சன் ஸீக்வன்ஸ் சுவராஸ் யமாய் இல்லை . வில்லனின் உடல் எடை அதிகபட்சம் 45 கிலோ இருக்கும் . நாயகியின் உ டல் எடை 85 கிலோ இருக்கும் . நாயகி தான் ஜெயிப்பார் என்பது ஈஸியா தெரிந்து விடுது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .மிக சாதாரண கதை , நல்ல திரைக்கதை . ரேட்டிங் 2.75 / 5
டிஸ்கி
இந்தப்படம் பார்க்க மொழி அவசியம் இல்லை .எனவே சப் டைட்டில் இருக்கா? தமிழ் டப்பிங்கில் இருக்கா? என யாரும் கேட்க வேண்டாம் .மணிரத்னம் இயக்கிய படங்களில் மிகக்குறைவான வசனங்கள் கொண்ட படம் அஞ்சலி . அதன் வசனத்தில் பாதி கூட இல்லை ஓ டி டி யில் இருக்கா? எனக்கேட்க வேண்டாம் , படமே இப்போதான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கு. ஓ டி டி யில் வர 25 நாட்கள் ஆகும்
0 comments:
Post a Comment