500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே 1085 கோடி பிஸ்னஸ் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது . முதல் நாள் டிக்கெட் புக்கிங்க் மட்டும் 285 கோடி ரூபாய் நெட்பிளிக்ஸ் க்கு உரிமம் விற்ற தொகை 275 கோடி ரூபாய்
புஷ்பா படத்தின் முதல் பாகம் ஓடியதே ஊ சொல்றியா மாமா ஓ சொல்றியா மாமா பாட்டு ஹிட் ஆன ஒரே காரணத்துக்காகத்தான் என்று சொல்வோர் உண்டு , காரணம் படத்தின் கதைக்கரு 1994ல் முரளி நடித்து வெளியான அதர்மம் படத்தின் கதை தான் .ஆனால் முதல் பாகம் அதிரி புதிரி ஹிட் ஆனாலும் , வசூலில் கலக்கி இருந்தாலும் தரத்தில் சுமார் ரகமே
செம்மரக்கடத்தலில் ஈடுபடும் நாயகன் அதில் எப்படிப்பெரிய ஆள் ஆகிறான் என்பதும் போலீஸ் ஆபீஸருக்கும், நாயகனுக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட் டமும் தான் முதல் பாகத்தின் கதை
ஸ்பாய்லர் அலெர்ட்
செம்மரக்கடத்தல் நாயகன் ஆன படத்தின் நாயகன் அரசியல் செல்வாக்கு மிக்கவன் . முதல்வரை சந்திக்கப்போகும்போது அவன் மனைவி முதல்வருடன் நாயகன் சேர்ந்தாற்போல ஒரு போட்டோ எடுக்க ஆசைபப்டுகிறாள் . ஆனால் முதல்வரோ எல்லார் முன்னும் நாயகனை அவமானப்படுத்தி விடுகிறார் . நீ ஒரு கடத்தல்காரன் .. உன்னுடன் இணைந்து நிற்பது போல மீடியாக்களில் போட்டா வந்தால் என் இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்கிறார்
இதனால் செம காண்ட் ஆன நாயகன் தன அடியாள் ஒருவரை முதல் அமைச்சர் ஆக்குவதாக சவால் விடுகிறான். அவனது சவால் /சபதம் நிறைவேறியதா என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக அல்லு அர்ஜுன் கலக்கி இருக்கிறார் . ஆனால் ஹீரோயிசம் ஓவரோ ஓவர் . மாற்றுத்திறனாளி மாதிரி உடலை சாய்த்தபடி அவர் நடப்பதை அவரது ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடுகிறார்கள் . ஆனால் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது . இவர் அணிந்து வரும் கலர் கலர் பூக்கள் போட் ட டிசைன் சர்ட் எல்லாம் நம்ம ஊரு பூவாத்தா , தங்கமான ராசா வில் ராமராஜன் அணிந்தவைதான் . பிச்சைக்காரன் மாதிரி தாடி , வாயில் பாண் பராக் , துப்பாமல் எச்சிலோடு பேசுவது குமட்டுகிறது
நாயகி ஆக , மனைவி ஆக ராஷ்மிகா மந்தனா ஓவர் கிளாமர் . என்னதான் மனைவி என்றாலும் கொஞ்சமாவது குடும்பப்பாங்காக இருக்க முயற்சிக்கக்கூடாதா? தியேட்டரில் அப்ளாஸ் வாங்க இதெல்லாம் ஒரு பொழப்பா? என முகம் சுளிக்க வைக்கிறார்
போலீஸ் ஆபீசர் ஆக பகத் பாசில் மொட்டை தலையுடன் வருகிறார் .இவர் கொஞ்சம் பரவாயில்லை
இசை தேவி ஸ்ரீ பிரசாத் . முதல் பாகம் அளவு பாடல்கள் ஹிட் ஆகாவிடடாலும் பரவாயில்லை ரகம் .ஒளிப்பதிவு மிரோஸ்லா செமயான உழைப்பு .பிரமாண்டமான காடசிகளை அருமையாகப்படம் பிடித்து இருக்கிறார் . எடிட்டிங்க் நவீன் நூலி . 195 நிமிடங்கள் ஓடுகின்றன . பெரிய டிரா பேக் படத்தின் நீளம்
ஜெகபதி பாபு,சுனில் , ஆடுகளம் நரேன் ,மைம் கோபி உட்பட பலரும் வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள்
ஸ்ரீகாந்த் விசா உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகுமார் . கமர்ஷியல் அய்ட்டங்களை ஓவர் டோஸாக திணித்து வைத்திருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் ஸ்டேஷனில் எல்லா போலீஸ்களுக்கும் ஆயுள் கால சம்பளம் ,கிம்பளம் எல்லாம் சேர்த்து செட்டில் செய்யும் காட் சி மடத்தனமானது என்றாலும் மாஸ் சீன்
2 கண்டபடி பிரமோஷன் செய்து வியாபாரம் செய்த சாமார்த்தியம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 வந்துச்சே பீலிங்கு
2 எடுடா எடுடா போட்டோ எடுடா
ரசித்த வசனங்கள்
1 செருப்பு காலுக்கு சுகமா இருக்குதுன்னு கைக்கு எடுத்து மாட்டிக்க முடியுமா?
2 பொண்டாட்டி பேச்சைக்கேட்டு முன்னேறுன மனுஷன் யாரும் இல்லை
3 புஷ்பா பேரு சின்னது , ஆனா சவுண்ட் பெருசு .ஓ ஓ
4 சி எம் ஆக எவ்ளோ செலவு ஆகும் ?
100 கோடி
நான் 1000 கோடி தர்றேன்
5 புஷ்பா-ன்னா நேஷனல் என நினைத்தாயா? இண்ட்டர் நேஷனல்-டா
6 அங்கெல்லாம் தொடக்கூடாது , சார்ஜ் ஏறிடும்
ஏறுனா நல்லதுதானே?
7 டேய் ... உன் அக்காவுக்கு நான் போட்டிருக்கும் சொக்கா பிடிக்கலையாம், மாத்திட்டு வந்துடறேன்
புரியுதுண்ணா , அரை மணி நேரம் ஆகும் ? வெயிட் பண்றேன்
8 தமாஷ் பண்ணாதிங்கண்ணா
புஷ்பா-ன்னா மாஸ் டா , தமாஷ் இல்லை
9 அவனை பயமுறுத்துனா , அவனுக்கு மட்டும் தான் பயம் வரும் , ஆனா அவனைக்கொன்னுட் டா , மொத்த சிண்டிகேட்டுக்கும் பயம் வரும்
10 இவன் டி சீனி , அவன் பி சீனி . ஆள் மாறாட்டம் பண்ண முடியாது
டி க்குக்கீழே இன்னொரு டி போட்டா அது பி ஆகிடாது ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோ ஓப்பனிங் சீனில் தலைகீழாய்க்காலில் கயிறு கட்டி தலை கீழ் விருக்சாசனம் செய்து சீன் காட்டுவது 1983ல் மலையூர் மம்பட்டியான்ல நாம பார்த்தாச்சு
2 இண்ட்டெர்வெல் பிளாக் சீன் மகா மட்டம் . போலீஸ் ஆபீசரிடம் வேறு வழி இல்லாமல் சாரி கேட்கும் நாயகன் அதற்குப்பழி வாங்க ரிட்டர்ன் வந்து போலீஸ் ஆபீசரை ஸ்விம்மிங்க் பூலில் தள்ளி விட்டு அவரை அவமானப்படுத்த யூரின் போகும் காட் சி கேவலம் .கற்பனை வறட்சி
3 போலீஸ் ஆபீசர் ,நாயகன் இருவரும் விசில் அடித்துக்கொண்டே பேசும் காட்சியில் கேவலமான டபுள் மீனிங் டயலாக் . கோமாளித்தனத்தின் உச்சம்
4 போலீசை ஏமாற்றி நாயகன் செம்மரக்கடடைகளைக்கடத்தும் ஐடியாக்கள் எல்லாம் படு திராபை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆந்திராவில் இந்தப்படம் ஹிட் ஆகலாம் .ஆனால் தமிழர்கள் தரமான ரசனை கொண்டவர்கள் . இந்த மாதிரி குப்பையை ரசிக்க மாட்டார்கள் என நம்பிக்கை இருக்கிறது .
புஷ்பா 2 (தெலுங்கு /தமிழ் ) - இந்தியன் 2 , தங்கலான் , கங்குவா வரிசையில் இதுவும் ஒரு குப்பைப்படம் தான் . 800 ரூபாய் டிக்கெட் ரேட் ஓவரோ ஓவர் .திரைக்கதை எழுத டைம் இல்லை போல .கே ஜி எப் 2 + காந்தாரா அட்லி ஒர்க் .குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம் , மட்டமான ரசனை . ரேட்டிங் 1.5 / 5
Pushpa 2: The Rule | |
---|---|
Directed by | Sukumar |
Written by | Sukumar Srikanth Vissa (dialogues) |
Produced by |
|
Starring | |
Cinematography | Miroslaw Kuba Brozek |
Edited by | Naveen Nooli |
Music by | Devi Sri Prasad |
Production companies | |
Distributed by | see below |
Release date |
|
Running time | 200 minutes[1][2] |
Country | India |
Language | Telugu |
Budget | ₹400–500 crore[3][4] |
0 comments:
Post a Comment