Tuesday, December 17, 2024

ONCE UPON A TIME IN MADRAS (2024) -ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹைப்பர் லிங்க் த்ரில்லர் )

   


   ஹைப்பர்  லிங்க் ஸ்டோரி நாவல்  படிக்க  புத்திசாலித்தனம் , பொறுமை , ஞாபக சக்தி  இவை மூன்றும் 

 வேண்டும் ,இவை மூன்றுமே  எனக்கு  இல்லாததால்  அந்த மாதிரி  நாவல்  படிக்கும்போது ஒரு குறுக்கு வழியைக் கையாண்டேன் .1,2,3,4  ஆகிய  முதல்  நான்கு அத்தியாயங்களை  நெம்பர்  போட்டுக்கொள்வேன் 5,6,7,8  பின் 9,10,11,12  பிறகு 1,5,9      , 2,6,10  ,  3,7,11  , 4,8,12 இப்படி  ஜோடி சேர்த்துப்படிக்கும்போது சுலபமாகக்கதை புரியும் .நினைவாற்றல்  தேவை இல்லை . ஆனால்  சினிமாவில்  அப்படி வந்தால்  புரிந்து கொள்ள மிக சிரமம் . நான்கு  வெவ்வேறு சிறுகதைகள் நான்கு  தனித்தனி கதைகளாக சொல்லாமல்  முதல்  காட் சி  முதல்  சிறுகதை , அடுத்த  காட்சி  இரண்டாம் சிறுகதை , மூன்றாம்   காட் சி  மூன்றாம் சிறுகதை, நான்காம் காட்சி  நான்காவது சிறுகதை  என  அடுக்கிக்கொண்டே  சென்றால்  எப்படி  சாமான்யன் அதைப்புரிந்துகொள்வான் ? ஆனாலும்  இது ஒரு நல்ல படம்    

25 மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  135 மில்லியன்  டாலர்  வசூல் சாதனை செய்த படமான  BABEL பாபேல் (2006) சைக்கலாஜிக்கல்  டிராமாவாக  வந்த படத்தில்  இருந்து இன்ஸ்பயர் ஆகி இதை எடுத்திருக்கிறார்கள்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை 1 -  நாயகன்  ஒரு முன்னாள்  ரவுடி . அவரது  மனைவிக்கு  கிட்னி  பிராப்ளம் .15 லட்சம்  ரூபாய்  பணம்  தேவை .அந்தப்பணத்துக்காக என்ன  வேண்டுமானாலும் செய்யத்தயாராய் இருக்கிறார் . ஒரு கொலை  செய்ய  அசைன்மெண்ட்  தரப்படுகிறது .செய்கிறார் .  கடைசியில்  பார்த்தால்  அவரது மனைவிக்கு கிட்னி தானம் செய்யத்தயாராய் இருந்தவர் அவர் . இதற்குப்பின்  நாயகன் என்ன செய்தற்? என்பது மீதிக்கதை 


 கதை 2  -  நாயகி  ஒரு துப்புரவுத்தொழிலாளர் . அவருக்கு ஒரு மகன் உண்டு .அவன் இப்போது  திருநங்கை ஆகி விடுகிறான் . அவனை  டாக்டருக்குப்படிக்க வைக்க வேண்டும் என்பது நாயகியின் லடசியம் . ஆனால் 50,00 ரூபாய் கடன் இருக்கிறது ,கடன் கொடுத்தவன்  மிரட்டுகிறான் . நாயகி வீட்டில்  இல்லாதபோது  மகளை /மகனை  பாலியல்  வன்கொடுமை  செய்து  விடுகிறான்  வில்லன் . நாயகி என்ன செய்தாள்  என்பது மீதிக்கதை 


 கதை 3    நாயகி  புதிதாகத்திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வருகிறாள் .கணவன்  ஒரு ஹோமோ   என்பதும் . நாயகிக்கு  மயக்க மருந்து கொடுத்து  மாமனார்  பாலியல்  வன்கொடுமை செய்து விடுகிறார்  என்பதும் . நாயகிக்குததெரியாது .கர்ப்பம் ஆகிறார் .உண்மை   தெரிந்த  பின் அவர்  என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ் 


 கதை 4  - வில்லன் ஒரு ஜாதி வெறியர் . அவரது  மகள் காதல்  திருமணம்  செய்ய  இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்து  காரில் போகிறார் .  வழியில்  மகளின்    காதலன் என  தவறாக நினைத்து வேறு ஒரு ஆளைக்கொலை செய்து விடுகிறார் . உண்மை  தெரிந்த  பின் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ் 

நான்கு  கதைகளிலும் தலா  ஒரு கொலை நடக்கிறது . அனைத்துக்கொலைகளும் ஒரே  துப்பாக்கியால்  தான் நடக்கிறது .அது எப்படி ? என்பதுதான் சுவாரஸ்யமான முடிச்சு 


முதல்  கதையில் ரவுடியாக  பரத்  , இரண்டாவது  கதையில் நாயகி ஆக அபிராமி ,மூன்றாவது  கதையில் நாயகி ஆக  அஞ்சலிநாயர் ,நான்காவது  கதையில் வில்லனாக தலை வாசல் விஜய் , அவரது மகளாக பவித்ரா  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்,அனைவர் நடிப்பும் சிறப்பு 

இயக்கம்      பிரசாத்    முருகன் 

சபாஷ்  டைரக்டர்


1  நான்கு  கதைகளிலும்  வரும்  ஒவ்வொரு  டிவிஸ்ட்டும்   அருமை . நான்கையும்  இணைக்கும்  விதமும்  அழகு 


2   இது  ஒரு லோ பட்ஜெட்  படம் என்றாலும்  அது திரையில்  தெரியாமல் பார்த்துக்கொண்ட விதம் 


3   பரத் , அபிராமி  உட்பட  அனைவரின் நடிப்பும் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  எல்லா  வயசுலயும் பெண்ணுக்குப் பால் சுரந்தா  இந்த உலகத்துல நோயே இருக்காது  ( தாய்ப்பாலுக்கு நிகரான   மருந்து இல்லை ) 


2  என் பொண்ணுன்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும், ஆனா என் பொண்ணு செய்யும்  எல்லா செயல்களும் எனக்குப்பிடிக்கணும்னு அவசியம் இல்லை 


3   அன்பா  இருக்கீங்க ன்னு சொல்லுங்க, ஆனா நேர்மையா இருக்கறதா சொல்லாதீங்க , ஜாதி தான் உங்க நேர்மையா? 


4  கொஞ்ச்ம  டைம்  கொடு , கடனைத்தீர்த்துடறேன்


ஒரு மணி நேரம் டைம் போதுமா? 


5   சிறுநீரக  நோய்  வந்துட் டா  தண்ணீர்  கூட அளந்து  அளந்து  தான் குடிக்கணும் . இந்த நோய்  யாருக்கும் வந்துடக்கூடாது 


6  போலீஸ்  என்னைக்கு  இல்லாதவனுக்கு உதவி பண்ணி  இருக்கு ? 


7    அது  வீடில்லை , சிங்கிள்  பெட் ரூம் ஜெயில் 


8  தேவைகள் தான்  அறத்தைத்தீர்மானிக்கும் 


9   இந்த உலகத்துலயே  கடவுளா  இருப்பதுதான் ரொம்பக்கொடுமையானது , சிலர் திட்டுவாங்க, சிலர் துதி பாடுவாங்க 


10  அதிகாரத்துக்கு எதிரான ஆயுதமே நமது அழுத்தமான  பேச்சும் எழுத்தும் தான் 



11   நம்மைப்புனிதப்படுத்தும் எதுவும் நமக்குத்தேவை இல்லை 



12   வாழ்க்கை  என்பது நிலையானது அல்ல, கடந்து போயிடனும் , கர்வம் இல்லாம வழனும் 


13  படித்து விட்டோம் என்பது கர்வம் இல்ல.கவ்ரவம் 


14  தம்  அடிச்சு எனக்குப்பழக்கம் இல்லை 


ஓஹோ , ஆளுங்களை  அடிச்சுத்தான் பழக்கமோ? 


15  செய்யற  வேலையை விட செய்ய வைக்கும் மூளை தான் தேவை 


16   வாழ்க்கை  என்னும்  ரேஸ் ல ஜெயிச்சுட் டா  பாடமா  இருக்கும் . கஷ்டப்பட்டு ஜெயிச்சுட் டா  பாலமா  இருக்கும் 



17   தமிழில்  ஜாதி என்ற  வார்த்தையே கிடையாது . ஜாதி பார்ப்பவன்  தமிழனே கிடையாது 


18 சனிதோஷம் ,   சுயம்  இந்த  ரெண்டையும்  உன் கிட் டே  இருந்து  யார்   பறிக்கவும்  விடாதே 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரு ரவுடி  , வேலை  வெட்டி  இல்லாதவன்  15 லடசம்  ரூபாய்  கடன் கேட்பது  எப்படி ?அதுவும்  போனில் ? நேரில்  போய்க்  கேட் டா லே மதிக்க மாடடாங்க 


2   அபிராமி  கதையில்  மகள்   என்றே  காட்டி  இருக்கலாம் /. திருநங்கை  என்பது  திணிப்பு . ரயில்களில்  அவர்கள் செய்யும்  அட்டூழியங்களைப்பார்த்து கோபம் தான் வரும் , பரிதாபம் வராது 


3   அஞ்சலிநாயர் கதையில்  நாயகிக்கு  தாம்பத்யமே  நடக்கலை  என்ற போதே   சந்தேகம் வராதது எதனால்? தன அப்பாவுக்கு     தகவல்  சொல்லாதது   எதனால்?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்  பார்க்கலாம் . ஒரு முழுக்கதை  தான்  புல்  மீல்ஸ்  சாப்பி ட் டது போல்  எனநினைப்பவர்கள் தவிர்க்கவும் . விகடன்  மார்க் - 41 குமுதம்  ரேங்க்கிங்க்  - ஓகே , ரேட்டிங்  2.5 /5 


Once Upon A Time in Madras
Theatrical release poster
Directed byPrasadh Murugan
Written byPrasadh Murugan
Produced by
  • Captain MP Anand
Starring
Cinematography
  • K S Kalidoss
  • R Kannan
Edited bySan Lokesh
Music byJose Franklin
Production
company
  • Friday Film Factory
Release date
  • 13 December 2024
Running time
120 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: