Tuesday, December 10, 2024

LA VIRGEN ROJA (2024) -THE RED VIRGIN - ஸ்பானிஷ் /ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

           

           சிறந்த  நடிகை , சிறந்த துணை  நடிகை  , சிறந்த  திரைக்கதை , சிறந்த இயக்குனர் ,சிறந்த  ட்ரெய்லர்  என  திரைப்பட விழாக்களில் 5 விருதுகளை வென்ற படம் .22/9/2024  அன்று  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட இப்படம்  27/9/2024  அன்று  திரை அரங்குகளில்  வெளியானது . இப்போது அமேசான்  பிரைம்   ஓ  டி டி  யில்  காணக்கிடைக்கிறது  


16  வயதில்  எழுத்தாளர் ஆகி  2 வருடங்களில்  15 கட்டுரைப்புத்தகங்கள்   எழுதி  18 வயதில்  அகால  மரணம் அடைந்த  பெண் எழுத்தாளர் -ன்     சுய சரிதை  தான்  இந்தப்படம் . . கதை  நடக்கும் கால கட்டம் 1931 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகியின்  அம்மா  டீன் ஏஜ்  வயதில் கர்ப்பம் ஆகி ஒரு பெண் குழந்தை பெறுகிறார் . அவருக்கு ஆண்கள் மீது  வெறுப்பு உண்டு . காரணம்  அவர்  வாழ்வில்  நடந்த சில  சோகமான  சம்பவங்கள் . அதனால்  தன்  மகளை  ஆண்  வாசமே  படாமல்  வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் 


 மகளுக்கு   இப்போது  16 வயது .அவரை  ஒரு ரைட்டர்  ஆக்க பயிற்சி  தருகிறார் .எல்லா நுணுக்கங்களையும்  கற்றுத்தருகிறார் . கூடவே  ஆண்கள் பற்றிய  எச்சரிக்கைகளையும் ..


நாயகி எழுதிய  முதல் புத்தகம்  வெளியாகி  நல்ல  வரவேற்பைப்பெறுகிறது . ஒரு அரசியல்  மீட்டிங்கில்  நாயகி பேச  அழைக்கப்படுகிறார் . கார்டியன் ஆக எப்போதும்  நாயகியின் அம்மா  நாயகியின் கூடவே வருவார்  

நாயகிக்கு  ஒருவர் மீது  காதல் பிறக்கிறது . இது  நாயகியின் அம்மாவுக்குத்தெரிய வர  144 போடுகிறாள் .கிட்டததட்ட  அம்மாவின்   மேற்பார்வையில்  ஹவுஸ்  அரெஸ்ட்டில்  இருக்கும்  நாயகி  எப்படி  டிமிக்கி கொடுத்து  தன காதலனை சந்திக்கிறாள் , அதன் விளைவாக  நாயகியின் அம்மா எடுக்கும் முடிவு என்ன என்பது மீதி திரைக்கதை 

நாயகியின் அம்மாவாக  நஜ்வா  நிம்ரி  கிட்டததட்ட  வில்லி  ரோலில்  கலக்கி இருக்கிறார் .இவரது  பார்வை , உடல் மொழி  எல்லாம் பிரமாதம் . நாயகி  ஆக டி வி  நடிகையான  அல்பா பிளானஸ்  அப்பாவித்தனமான  முகத்துடன்  சிக்ஸர்  அடிக்கிறார் . நாயகியின்  காதலன் ஆக பேட்ரிக்  கச்சிதமான தோற்றம் . நடிப்பு . 

ஜான்மா  , கூலி என இருவர் இசை அமைத்திருக்கிறார்கள் . பின்னணி  இசை  குட் . எடிட்டிங்  பாபிலோ . 124  நிமிடங்கள்  ஓடுகிறது . ஒளிப்பதிவு மார்க்கஸ் . துல்லியமான  படமாக்கம் .

எட்வார்டு , கிளாரா , ஆகிய  இருவரும் திரைக்கதை  எழுத  இயக்கி இருப்பவர் பாலா  ஆர்ட்டிஸ் 

சபாஷ்  டைரக்டர்


 1   ஒரே  ஒரு பங்களா , நாயகி , நாயகியின் அம்மா, பணிப்பெண் , காதலன்  என  நான்கே  முக்கியக் கேரக்ட்டர்களை வைத்து சுவராஸ்யமான திரைக்கதை அமைத்த விதம் 


2   1980 களில்  அம்பிகா , ராதா  போன்ற நடிகைகளை , அம்மா எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்திருப்பார்  என்ற  ரெப்ரண்ஸ்  படம் முழுக்க  உண்டு 


3 மனதை கலங்கடிக்கும்  க்ளைமாக்ஸ் 


4  அம்மா, மகள்   இருவரது அட்டகாசமான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  அம்மா , என் அப்பா எங்கே? 


 உனக்கு அப்பாவே  கிடையாது , அதனாலதான் நாம சுதந்திரமா இருக்கோம் 


2  நல்ல  படிப்புள்ள   பெண்  ஒரு பேயை விட பலமானவள் 


3  எல்லாரும்  போட்டிருக்கற மாதிரி டிரஸ் நாம என் போடலை ? 


ஒரு பொண்ணு  தனக்குப்பிடிச்ச மாதிரி  தான் நடந்துக்கணும்,  அடுத்தவங்க  கமெண்ட்டைக்கண்டுக்கக்கூடாது 


4  ஆபர்  என்பது    இரு தரப்புக்கும்  நன்மை பயக்கனும் .ஆனா  அவன் நம்மை யூஸ் பண்ணிக்கப்பார்க்கிறான் 


5  காதல் , புரட்சி  இரண்டுமே  முழுப்பூர்த்தி அடையாதவை 


6  அதிகமான மக்களைப்போய் அடையனும், அதுதான் புத்தகத்தின் இலக்கு 


7  ஒருவரின் பலவீனம் ஒரு பிராஜெக்ட்டை பாதிக்க நான் விட மாட்டேன் 


8  ஆண்கள்  எல்லாருமே  ஏமாற்றுப்பேர்வழிகள் தான் 


9   ஒரு வாய்ப்பு  கரைல இருக்கு , இன்னொரு வாய்ப்பு கடலில் இருக்கு , நாம எதை தேர்ந்தெடுக்கணும் ? 


10  பணம்  இல்லாம நீ சுதந்திரமா இருக்க முடியாது 


11  தியாகம்  இல்லாம எந்த பிராஜெக்ட்டும் வெற்றி பெறாது 


12  நீ அம்மாவாக இருந்தாலும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காதலில்  மகள் விழுந்து விட்டாள் , தனிமையில்  விட்டால்  ஆபத்து  என்பது தெரிந்தும்  நாயகியின் அம்மா  மாலை நேரத்தில் மகளையும் , பணிப்பெண்ணையும்  விட்டு விட்டு  வெளியே போகும்போது  வெளிப்பக்கம் பூட்டாமல் செல்வது எதனால் ? 


2  அம்மா  கண்காணிக்கிறாள்  என்பது  தெரிந்தும்  காதல் கடிதங்களை  அவ்வளவு  சுலபமாகக்கண்டு பிடிப்பது மாதிரியா வைப்பார்கள் ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 

எச்சரிக்கை  - க்ளைமாக்சில்  ஒரு அதிர்ச்சி சம்பவம்  உண்டு .மனோபலம்  மிக்கவர்கள் மட்டும்  அந்தக்காட்சியைப்பார்க்கலாம் .மென்மையான மனம் கொண்டவர்கள்  கடைசி  6 நிமிடங்களை ஸ்கிப் செய்யலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  திரைக்கதை  இல்லை ,   வேகமான காட்சிகள்  இல்லை ., ஆனாலும் இது நல்ல படம் .ஏ செண்டர்  ஆடியன்ஸுக்கானது . ரேட்டிங்க்  3 / 5 



The Red Virgin
Theatrical release poster
SpanishLa virgen roja
Directed byPaula Ortiz
Screenplay by
Produced by
Starring
CinematographyPedro J. Márquez
Edited byPablo Gómez-Pan
Music byJuanma Latorre
Guille Galván
Production
companies
Distributed byElastica (es)
Release dates
  • 22 September 2024 (Zinemaldia)
  • 27 September 2024 (Spain)
Countries
  • United States
  • Spain
LanguageSpanish

0 comments: