Sunday, December 08, 2024

HER STORY (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி டிராமா ) @ மனோரமா மேக்ஸ்

             


            பெண்களை மையப்படுத்தி  5 வெவ்வேறு சிறுகதைகள் .ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாதவை .பொதுவாக  குறும்படங்களின்  தொகுப்பு என்றாலே  ஐந்தில்  3 சூப்பர் , 1 சுமார் , 1 ஓக்கே  ரகம் என்ற  விகிதத்தில் தான்  இருக்கும் . இது கொஞ்சம்  வித்தியாசமாக  ஐந்துமே  சுமாரு  தான் குமாரு என்ற தரத்தில் இருக்கிறது .

சிறுகதைகளுக்கு / குறும்படங்களுக்கு டைட்டில் கூட டைரக் டர்  வைக்கலை . பொதுவாக கண்ட்டென்ட்  சரி இல்லைன்னா பே ரூ வெச்சியே  சோறு  வெச்சியா? என கலாய்ப்பாங்க . இதுல  இயக்குனர்  பேரும் வைக்கலை , சோறும்  வைக்கலை 


1  ஸ்பாய்லர்  அலெர்ட்


1 ஐஸ்வர்யா ராஜேஷ் - இயற்கை அழைப்பு 


நாயகி  வீடடை விட்டு  வெளியே போகிறார் . ஆட்டோ வில் போகும்போது  அவருக்கு  நெம்பர் ஒன்  பாத்ரூம் அவசரமாக  வருகிறது . பப்ளிக் டாய்லெட் , பொதுஜனம்  இருக்கும் வீடு  என அவரும் பல முயற்சிகள்  எடுக்கிறார் .அவர் படும் வேதனைகள்  தான் மெயின் கதை ..ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பு கனகச்சிதம் .2019ல்  வெளியான மிக மிக அவசரம்  எனும்  படத்தில் இக்கதைக்கரு  ஆல்ரெடி அலசி ஆராயப்பட்டு விட்டதால் புதுசா எதுவும் இல்லை .பெட்ரோல்   பங்க்குகளில்  லேடீஸ் டாய்லெட்  இருக்கும் ,அதை நாயகி ட்ரை பண்ணவே இல்லை 


2 ரம்யா நம்பீசன் - சோஷியல் மீடியா சோனியா 


சமூக வலைத்தளங்களில்  சமூக சேவகிகளாக  வலம் வரும் பில்டப்  பகவதிகளின் முகத்திரையைக்கிழிக்கிறது இந்தப்படம் . நாயகி ; யாருக்கும் எந்த  உதவியும் செய்யாதவர் .அடுத்தவர் கஷ்டங்களைப்புரிந்து கொள்ளாதவர் . ஆனால்   சமூக வலைத்தளங்களில்  சமூக சேவகி ஆக தன்னைக்காட்டிக்கொள்ள  பொய்யான பிம்பத்தைக்கட்டமைக்கிறார் .


இது எல்லாம் 1990 கால கட்டத்திலேயே கவுண்டமணி  பல படங்களில்  நக்கல் அடித்து  விட்டார் 


3 ஊர்வசி =  அலெக்ஸ்சா 


உள்ளொழுக்கு  என்ற மலையாளப்படத்தின்  மெகா ஹிட்டுக்குப்பின்ஊர்வசி +பார்வதி திருவோத்து காம்ப்போவில்  ஒரு படம் . இதில் ஊர்வசி ,பிரதாப்  போத்தன்  இருவரும் மிடில் ஏஜ்டு   கப்பிள் . அமைதியான இவர்கள் வாழ்க்கையில் அலெக்ஸ்சா 

   என்ற  ரோபோ  அல்லது   கம்யூட்டர்  டிவைசால்  அன்னியோன்யம் குறைகிறது .இதை நாயகி எப்படி சமாளிக்கிறார்  என்பது  உப்பு சப்பு இல்லாத க்ளைமாக்ஸ் 


ஊர்வசி ,பிரதாப்  போத்தன்  இருவர்  நடிப்பும்  கச்சிதம் .ஆன்ட்ராயிடு குஞ்சப்பன்  5.25 (2019) மலையாளம் +அதன் ரீமேக்கான  கூகுள் குட் டப்பன் (2022) தமிழ்  ஆகிய படங்களில்  பார்த்த காட் சிகள் ரிப்பீட் ஆவது மைனஸ் 


4  லிஜோ மோல் ஜோஸ்  -திருப்தி 


 நாயகி  ஒருவரைக்காதலிக்கிறார் . அம்மா,அப்பாவுக்கும் தெரியும் . திடீர்  என அவர் காதலனைத்தவிர்க்கிறார் . விட்டத்தையே  வெறித்து  வெறித்து பார்க்கிறார் . ஏகப்பட்ட  பில்டப்களுக்குப்பின்  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  வெளிப்படுகிறது . திருமணத்துக்கு முன்பே  இருவரும்  உறவு கொள்கிறார்கள் அதில் காதலனால்  நாயகியைத்திருப்திப்படுத்த முடியவில்லை . இவன் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என நாயகி முடிவு எடுக்கிறார் .மடத்தனமான  கான்செப்ட் . பாலியல் கவுன்சிலிங்  அல்லது  மருத்துவரிடம்  அழைத்துசென்றிருந்தால்  மேட்டர்  ஓவர் .புரட்சிகரமாகபடம்  எடுக்கிறேன் என எதையாவது  போட்டு  உருட்ட வேண்டியது  


5  பார்வதி திருவோத்து - மறதி 


நாயகி ஐ டி கம்பெனியில்  பெரிய பதவியில்  இருப்பவர். வீட்டில்  சமைக்கும்போது  அடுப்பில்  குண்டாவை சூடாக்கிக்கொண்டு இருக்கிறார் . ஞாபக  மறதியாக  அடுப்பை அணைக்காமல்  கம்பெனிக்கு வந்து விடுகிறார் . மீட்டிங்கில்  பேசும்போது  .கான்செண்ட்ரேஷன் , டெடிகேஷன் பற்றி  எல்லாம்  பிரமாதமாப்பேசுகிறார் . திடீர்  என  அடுப்பு  நினைவு  வந்து ஓடுகிறார் .ஊருக்கு உபதேசம் , வீட்டில்  ஒண்ணுமில்ல  என்ற  கான்செப்ட் தான் 


சபாஷ்  டைரக்டர்

1  மலையாளப்படங்களுக்கு என ஒரு மார்க்கெட்  இருக்கு , என்ன கதை சொன்னாலும் எல்லாரும் ஹிட் ஆக்கிடுவாங்க என்ற தைரியம் 


2  பத்துப்பைசாவுக்கு  பிரயோஜனம்  இல்லாத  5 கதைகளில்  பிரபலமான  நாயகிகள் ஐவருக்கு கதை என எதையோ  சொல்லி புக் செய்த சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 

 இருப்பது  ஒரு வாழ்க்கை , அதை நம் இஷ்டப்படி  வாழனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  திரைக்கதை  என ஒண்ணு ரெடி பண்ணுனாத்தானே  அதில் குறைகள் கண்டுபிடிக்க முடியும் ? 


2  டப்பாப்படமான  இந்தியன் 2 , குப்பைப்படமான  கங்குவா  போன்றவற்றில்  கூட   ரசித்த  வசனங்கள்  10 தேறியது . இதில்  ரெண்டு கூடத்தேறலை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U

 ( அடல்ட்  கண்ட்டெண்ட்டும் இல்லை , கண்ட்டெண்ட்டும்  இல்லை ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அழகான , பிரபலமான  நாயகிகள்  முகம் பார்த்து  யாரும் ஏமாற வேண்டாம் . வேஸ்ட் . ரேட்டிங் - 1/ 5 

0 comments: