Tuesday, December 24, 2024

GIRLS WIL BE GIRLS (2024) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )@ அமேசான் பிரைம்

                         பெண் இயக்குனர் ஆன சாச்சி தலாத்தி  இந்தப் படத்துக்கான  ஆடியன்ஸ்  அவார்டை டிராமாடிக் வோர்ல்டு சினிமா பிரிவில் சன்டான்ஸ்  திரைப்பட  விழாவில்  பெற்றார் .இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது 2024 ஜனவரியில் திரைப்பட  விழாவில் கலந்து கொண்டாலும் அமேசான்  பிரைம்  ல வெளி யானது  16/12/2024  முதல்  தான் . 


படத்தில்  நடித்த ப்ரீத்தி  பணிகிரஹி  ஸ்பெஷல் ஜுரி  விருதை சன்டான்ஸ்  திரைப்பட  விழாவில் பெற்றார். மும்பை  பட விழாவில்  கலந்து கொண்டு  பல விருதுகளை இப்படம்  குவி த்துள்ளது . டீன் ஏஜ் மாணவிகளின் மனப்பாங்கை சித்தரித்த விதத்துக்காக உலகம் முழுக்க  பாராட்டுக்களைக்குவித்த வண்ணம் உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  12 வதுபடிக்கும்   மாணவி .வகுப்பிலேயே  அவர்தான் முதல்  மதிப்பெண் எடுப்பவர் .க்ளாஸ் லீடரும் கூட .இவருக்கு எப்போதும்  ரூல்ஸ்  ராமானுஜம் ஆக  இருப்பதுதான்  பிடிக்கும் .பள்ளியில்  உள்ள  அனைத்து  டீச்சர்களுக்கும்  இவர்  செல்லம் .நல்ல  பெயர்  எடுத்திருப்பவர் . ஆனால் சக  மாணவர்களுக்கு  இவரைப்பிடிக்காது . காரணம்   அவர்கள் ஏதாவது  தப்பு செய்தாலோ , ஓழுங்கீனமாக  நடந்து கொண்டாலோ  டீச்சர்களிடம்  மாட்டி வைத்து  விடுவார் 



நாயகியின்  அம்மா  நாயகியின் மீது  அன்பு , பாசம் , கண்டிப்பு  அதிகம் வைத்தருப்பவர் . மகளை நன்றாகக்கண்காணிப்பவர் .அப்பா  அதிகம் கண்டு கொள்வதில்லை .  ஆல்  இன் ஆல்  அம்மாதான் 


பள்ளியில்  லவ் லெட்டர்  கொடுக்க  முயற்சிக்கும்  மாணவர்களை  லெப்ட்  ஹேண்டில்  டீல் செய்பவர் 


இப்படிப்பட் ட  நாயகி க்கு  தன்  வகுப்புத்தோழன்  ஆன நாயகனுடன்  நெருக்கம்  உருவாகிறது . நாயகனை  வீட்டுக்கே  அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறாள் . நாயகியின்  அம்மாவிடமும்  நாயகன்  நல்ல பெயர்  எடுக்கிறான் . கம்பைன் ஸ்டடி  என்ற  பெயரில்  நாயகன் அடிக்கடி  நாயகி  வீட்டுக்கு வருகிறான் 


நாயகன்  பாரினில் படித்தபோது  ஆல்ரெடி  ஒரு கேர்ள்பிரண்ட்  உண்டு   அவளுடன்  நாயகன்  நெருக்கமான உறவில் இருந்தவன் , ஆனால் நாயகிக்கு நாயகன் தான் முதல் பாய் பிரண்ட் 


நாயகனுக்கு 19 வது பிறந்தநாள்  பார்ட்டி  நாயகி வீட்டில்  நடக்கிறது .அன்று  இரவு நாயகன்  அங்கேயே  தங்குகிறான் .வீட்டில்  நாயகி , நாயகியின் அம்மா,  நாயகன்  மூவர் மட்டுமே . இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி  திரைக்கதை 


ப்ரீத்தி  பணிகிரஹி  நாயகி  ஆக  பிரமாதமாக  நடித்திருக்கிறார் .மொத்தப்படத்தையும்  தாங்குபவர்  அவர் தான் . ரவுடித்தனம் செய்யும்  மாணவர்களை  டீல் செய்வது , அம்மாவுடன்  சில சமயம் அன்பாகவும் , பல சமயம் வேண்டா வெறுப்பாகவும் நடப்பது , நாயகனுடன் காட்டும் நெருக்கம்  என அந்த கேரக்ட்டராகவே  வாழ்ந்து இருக்கிறார் 


 நாயகியின் அம்மாவாக கனி குஸ்ருதி பாந்தமாக  நடித்திருக்கிறார் .2009 ஆம் ஆண்டு  வெளிவந்த  கேரளா கபே என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்  இவர் 


நாயகன் ஆக கேசவ் பினாய் கிரண்   கச்சிதமாக  நடித்திருக்கிறார் .ஆனால் இவருக்கு அதிக காட் சிகள் இல்லை . நாயகி தான் மெயின் 

இது போன்ற  லவ் சப்ஜெக்ட்டுக்கு  ஒளிப்பதிவு , இசை   ரொம்ப முக்கியம் .  இரண்டும்  தரம் . டூயட் எல்லாம்  இல்லை . ஆனால் பின்னணி இசை   கவிதை .ஒளிப்பதிவு  நாயகி , நாயகியின் அம்மா  இருவரையும்  பல   கோணங்களில் அழகாகக் காட் டி இருக்கிறது . அம்ரிதா  டேவிட்டின் எடிட்டிங்கில்  படம் 118 நிமிடங்கள்  ஓடுகின்றது 


சபாஷ்  டைரக்டர்


1   ஒரு வீடு , ஒரு ஸ்கூல் , மூன்று  முக்கியக்கேரக்ட்டர்கள்  என  திட் டமிடப்பட்ட    லோ பட்ஜெட்  படம் 



2  மலையாளப்படமான ஜூன் (2019)  படத்தை  சில இடங்களில்  நினைவுப டுத்தினாலும்  காட்சிகள்  கவிதை 


3   த்ரிஷா - விஜய் சேதுபதி  நடித்த  96 படத்தில்  நாயகன் - நாயகி  இருவருக்கும்   க்ளைமாக்சில்   உறவு  நேருமா? என்ற எதிர்பார்ப்பில்  படத்தைக்கொண்டு போன மாதிரி  இதில்  நாயகனுக்கும்,  நாயகியின் அம்மாவுக்கும்  உறவு   இருந்திருக்குமோ?  என்ற  சந்தேகத்தைக்கடைசி   வரை எழுப்பிய விதம்


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரே  லட்சியம் , ஒரே கொள்கை  கொண்டவருடன் தான்  நம் நட்பு , சிநேகிதம் இருக்க வேண்டும்,அப்போதுதான் நம்ம கோல் ரீச் ஆகும் 


2  எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங்க் ஹோல் உண்டு  ( இது  கமல் நடித்த  குருதிப்புனலில்  வந்த  டயலாக்கின் உல் டா வெர்சன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரூல்ஸ்  ராமானுஜம் ஆக  இருப்பதுதான்  பிடிக்கும்   என்பதுதான்  நாயகியின் கேரக்ட்டர்  டிசைன் . ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கிறார் . அதற்குப்பின்  சராசரி ஆகி  விடுகிறார் 


2  நாயகன்  தனக்கு  ஒரு கேர்ள்  பிரெண்ட்  உண்டு என சொன்னபோது  நாயகி  அவனிடம்  முக்கியமான கேள்வி ஆன அவளு டன்  உனக்கு  உறவு  இருந்ததா?  என்பதைக்கேட்கவே  இல்லை 


3  நாயகியின் அப்பா   என்ன வேலை ? என்பதை சரியாக விளக்கவில்லை . பெரும்பாலும் அவர் வீட்டில் இருப்பதில்லை 


4  நாயகி  ஸ்கூலின்  டாப்பர் .முதல் மார்க் எடுப்பவர் .ஆனால்   நாயகன் சராசரி மார்க் தான் . இருவரும் கம்பைன் ஸ் டடி   செய்வதை  நாயகியின்  அம்மா அனுமதிப்பது   எப்படி ? பொதுவாக  

பெற்றோர்  முதல்  ரேங்க்  வாங்குபவர்  இரண்டாம்  ரேங்க் வாங்குபவர்   உடன்  தான்  பழக   வேண்டும்   என நினைப்பார்கள் 


5   மாணவிகள்  சிலரை   தவறான  கோணத்தில்  செல் போனில்  படம்  எடுக்கும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய  நாயகி வற்புறுத்தும்போது டீச்சர் அது முடியாது என்பது அதிர்ச்சி அளிக்கிறது 

6  ஸ்கூலில்  செல்போன்  அலோ  செய்கிறார்களா? 


7  இண்ட்டர்நெட் சென்ட்டர்  போய் மாணவர்கள்  நீலப்படம்  பார்ப்பது  இப்போது  வழக்கொழிந்து  விட்ட்து . அதான்   செல் போன்  இருக்கே ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - துள்ளுவதோ இளமை (2002)  ஸ்டைலில்  ஒரு படம் . மாணவர்களைத்தவறாக  வழி நடத்தும் அபாயம்  உள்ளதால்  மாணவர்கள் தவிரக்கவும் . ரேட்டிங்  2.5 / 5 

0 comments: