பெண் இயக்குனர் ஆன ஹரிதா கோகினேனி இயக்கிய இந்தப்படம் அமரிக்கன் கோல்டு பிக்சர் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது .ஜூலை 2024 அன்று திரைப்பட விழா வில் கலந்து கொண்டாலும் தியேட் டர்களில் ரிலீஸ் ஆனது 14/12/2024 அன்று தான் . ஓடிடி யில் வர 25 நாட்கள் ஆகும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு மனநலக்காப்பகத்தில் மனநோயாளியாக அட்மிட் ஆகி இருக்கிறார் .அவ்வப்போது அவரைக்காண அவரது பெற்றோர் வந்து செல்கிறார்கள் . நான்- லீனியர் கட்டில் அவர் சிறுமி ஆக இருக்கும்போது நடந்த சில சம்பவங்கள் , டீன் ஏஜில் இருந்த போது நடந்த சில சம்பவங்கள், இப்போது நிகழ்காலத்தில் நடக்கும் சில சம்பவங்கள் மாற்றி மாற்றிக்காட்டப்படுகின்றன .
நாயகிக்கு ஒரு ட்வின்ஸ் சிஸ்டர் உண்டு . ஒரு பாய் பிரண்ட் உண்டு .தனது பாய் பிரண்டுடன் தான் மட்டுமே பழகவேண்டும் ,பேச வேண்டும் என்ற பொஸசிவ்னெஸ் உள்ள குணம் கொண்டவராக நாயகி இருக்கிறார் .இது போக அடிக்கடி எதையாவது , யாரையாவது பார்த்து பயப்படுபவராகவும் இருக்கிறார் .
இந்தப்பிரச்சனை எல்லாம் அவருக்கு எதனால் உண்டானது ?அவர் குணம் ஆனாரா? கடைசி வரை குணா ஆகவே தொடர்ந்தாரா? என்பது க்ளைமாக்ஸ்
வேதிகா இந்து சிந்து என இரு வேடங்களில் நடித்திருக்கிறார் .அவரைப்பொறுத்தவரை தனக்குக்கொடுத்த வேலையை சரியாக செய்து விட் டார் .அர்விந்த் கிருஷ்ணா என்பவர் நாயகன் ஆக வருகிறார் .ஆனால் அவர் வரும் காட்சிகள் 10 நிமிடங்கள்தான் . ஜெயப்பிரகாஷ் , சாயாஜி ஷிண்டே போன்ற வீணடிக்கப் பட் ட கலைஞர்கள் பாவம் .
அனுப் ரூபன் தான் இசை .சுமார் தான் ஒளிப்பதிவு ஆண்ட் ரூ.வேதிகாவை அழகாகக்கட்டி இருக்கிறார் .இயக்குனர் தான் எடிட்ட்ரும் .2 மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 ப்ரியாமணி நடிப்பில் வெளியான சாருலதா (2012) படத்தில் இருந்து ஒன்லைன் எடுத்துக்கொண்டு அந்த அட்லீ ஒர்க் தெரியக்கூடாது என ட்ரீட்மெண்ட்டில் தனுஷ் நடித்த 3 , மயக்கம் என்ன? ஆகிய படங்களில் இருந்து பை போலார் டிஸ் ஆர்டர் கான்செப்ட்டை சாமார்த்தியமாகப்புகுத்தி படம் எடுத்தது
2 பத்துப்பைசாவிற்குப்பிரயோஜனம் இல்லாத இந்தக்கதையை வேதிகாவிடம் சொல்லி உங்களுக்கு டபுள் ரோல், ஆனால் சிங்கிள் பேமண்ட் தான் என எதையாவது சொல்லி கால்ஷீட் வாங்கியது
3 பொது மக்களால் கொஞ்சம் கூட ரசிக்க முடியாத , சகிக்க முடியாத இந்தக்குப்பை யை அவார்டு பெற்ற படம் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இன்ஸ் டா பக்கத்தில் பிரமோ செய்தது
4 பணம் கொடுத்தோ , அல்லது குறுக்கு வழியிலோ திரைப்பட விழாவில் விருது வாங்கியது
ரசித்த வசனங்கள்
ஒரு சீன் கூட நல்ல டயலாக்கே இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படம் முழுக்க என்ன என்னமோ கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்லிட்டு க்ளைமாக்சில் இவை அனைத்தும் நாயகியின் மனப்பிராந்தி என சொல்லும்போது செம கடுப்பாக இருக்கிறது
2 படம் முழுக்க நாயகி செய்வது இரண்டே வேலைகள் 1 யாரையாவது பார்த்து பயந்து கத்துவது 2 என் காதலன் சம்பத் கூட நீ சேராத .பேசாத என டயலாக் பேசுவது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - படத்துல கண்டென்ட்டும் இல்லை ,அடல்ட் கண்ட்டெண்ட்டு ம் இல்லை .18 வயது மட்டுமல்ல ,எந்த வயது ஆடியன்ஸும் பார்க்கக்கூடாத குப்பைப்படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சினிமா பிரபலங்கள் பலரும் சூரி நடித்த கொட்டுக்காளி படத்தைக்கொண்டாடினார்கள் . ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா என்றார்கள் . ஆனந்த விகடன் 57 மார்க் கொடுத்துப்படம் அட் டகாசம் என்றது .அதை நம்பிப்போய் வெறுத்தவர்கள் ஏராளம் . அதை விட மோசமான டப்பாப்படம் இது . யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தில் விமர்சனம் போடறேன் .எஸ்கேப் ஆகிக்குங்க
ரேட்டிங் - ஜீரோ / 5
Fear | |
---|---|
Directed by | Haritha Gogineni |
Written by | Haritha Gogineni |
Produced by |
|
Starring | |
Cinematography | I. Andrew |
Edited by | Haritha Gogineni |
Music by | Anup Rubens |
Production company | Dattatreya Media |
Release date |
|
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment