Wednesday, December 11, 2024

FAMILY படம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி காமெடி டிராமா )

         

               சமீபத்தில்  சாய் வித் சித்ரா   நிகழ்ச்சியில்  இயக்குனர்  விக்ரமன்  "இனி குடும்பப்பாங்கான படங்கள் வெளிவருவதோ  ,ஹிட் ஆவதோ சிரமம் , ஏன் எனில்  இப்போது  படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் டீன் ஏஜ்  காரர்கள் தான் . அவர்கள்  பேமிலி சப்ஜெக்ட் டை  கிரிஞ்ச்  என ஒதுக்கி விடுவார்கள்"   என்றார் .அவரது  கூற்றைப் பொய்யாக்க  வந்திருக்கும்  கண்ணியமான  குடும்பக்கதை இது 

.இந்தியன் 2 , கங்குவா  போன்ற  பிரம்மாண்டமான  குப்பைப்படங்களுக்கு  மத்தியில் , புஷ்பா 2 மாதிரி  கேவலமான ரசனை கொண்ட  படத்துக்கு நடுவில்  இது  போல அழகான  , குடும்பப்பாங்கான  படங்கள்  வருவது  வரவேற்க வைக்கிறது .6/12/2024   அன்று  திரை அரங்குகளில்  வெளியாகி    இருக்கிறது இப்படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அம்மா , அப்பா , தாத்தா , இரண்டு அண்ணன்களுடன்  கூட்டுக்குடித்தனம் நடத்தி வருபவர் நாயகன் ,இவரது  லடசியமே சினிமாவில் ஒரு டைரக்டர் ஆவதுதான் . அதற்காக  கடுமையான முயற்சிகளில் இருக்கும்போது  ஒரு தயாரிப்பாளர்  இவரது  கதையை  ஓகே  சொல்லி விடுகிறார் .அக்ரிமெண்ட்  சைன் ஆகிறது .


ஆனால்  தயாரிப்பாளரின் தம்பி தான் படத்தின் ஹீரோ . அவர் மசாலாக்குப்பைப்படங்களில் நடிப்பவர் . கதையில் சில  மாற்றங்கள்  சொல்கிறார் . இது இயக்குனர் ஆன நாயகனுக்குப்பிடிக்கவில்லை . . இருவருக்கும் ஒர்க் அவுட் ஆகவில்லை .நாயகனின்  நிலை கண்டு  நாயகனின் குடும்பத்தினரே   படம்  எடுக்க தயாரிப்பாளர்கள் ஆவது என முடிவு செய்கிறார்கள் . அவர்கள்  முடிவு  வெற்றி  பெற்றதா?? என்பதை  சிரிக்க , சிரிக்க, உணர்வுப்பூர்வமாக , சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன் ஆக உதய்  கார்த்திக்  கச்சிதமாக நடித்திருக்கிறார் .கோபம்,  சோகம்,  ,  காதல்  என  அனைத்து உணர்வுகளும் அவரது முகத்துக்கு அழகு சேர்க்கின்றன .அவரது  முதல் அண்ணனாக  விவேக்  பிரசன்னா  வக்கீல் ஆக காமெடி , குணச்சித்திரம்  கலந்து கட்டி நடித்திருக்கிறார் .இரண்டாவது  அண்ணனாக  பார்த்திபன் குமார்  அருமையாக நடித்திருக்கிறார் . நாயகனின்  அம்மாவாக ஸ்ரீ ஜா ரவி  சரண்யா பொன்வண்ணனுக்கு சரியான  போட்டி ஆக இருப்பார் , அருமையான நடிப்பு . நாயகனின்  காதலி ஆக  வரும் சுபிக்சா  குடும்பப்பாங்கான  முகம் , கண்ணியமான  உடையுடன்  வருகிறார் , இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில்  நாயகிகள் கண்ணியமான உடையில்  வருவதே அரிது 


 நாயகனின் அப்பாவாக அர்விந்த் ஜானகிராமன்  , தாத்தாவாக மோகனசுந்தரம்  ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு  மெய்யேந்திரன் . கண்களைக்கவரும்  காடசிகள் . சுதர்சனின்  எடிட்டிங்கில்  படம் 130 நிமிடங்கள் ஓடுகிறது . அணிவி  யின்  இசையில்  2 பாடல்கள்   ஓகே  ரகம், பின்னணி இசை  படத்துக்கு பலம்  

 திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  செல்வகுமார்  திருமாறன் . இவரது  சினிமா  வாழ்வில்  நிஜமாகவே இவரது கதையை  திருடி  விட்டார்களாம் . அவரது சொந்த அனுபவத்தையே  படமாக்கி உள்ளார் . அதனால் தான் உயிரோட் டமாக இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்

1   இந்த மாதிரி  அண்ண்ன்கள்  நமக்கு  இல்லையே? என ஏங்க  வைக்கும் கதாப்பாத்திர வடிவமைப்பு பெரிய பலம் .மூவரின் நடிப்பும் அட்டகாசம் 


2  லூஸ்  தனமான,  சினிமாத்தனமான  கதாநாயகிகளுக்கு நடுவில்  யதார்த்தமான  , ஒப்பனை இல்லாமல் அழகாக இருக்கும் நாயகி .கண்ணியமான  உடைகள் 


3    கருத்தான , முத்தான   வசனங்கள்  ( மூன்று பேர்  டயலாக்ஸ்  எழுதிய இந்தியன் 2  வில்  5 வசனங்கள் கூட உருப்படி இல்லை . இதில் 20 +வசனங்கள்  அருமை ) 


4   நாயகன்  கதை சொல்லும்போது  அதில்  திருத்தங்கள்  சொல்லும்  லூஸ்  ஹீரோ  பண்ணும்  அலப்பறைகள் செம காமெடி 


5  நாயகனின்  இரண்டாவது அண்ணனுக்கு  நிச்சயிக்கப்பட் ட   பெண் பர்சனலாகப்பேசும்போது  ஸ்பீக்கரில் போட்டு குடும்பமே கேட்கும் காட்சி கல கல 


  ரசித்த  வசனங்கள் 


1  உலகத்தில்  உள்ள எல்லாருக்குமான ஆசை எது தெரியுமா?அவமானப்பட்ட இடத்தில  ஜெயிச்சுக்காட்டனும் 


2  பசங்க  தேவைளுக்கு  உதவாத நம் சொத்து நாம செத்த பின் அவன்களுக்குக்கிடைச்சு என்ன பிரயோஜனம் ?


3  நீங்க  ஜெயிக்கறீங்களோ , தோற்கறீங்களோ , உங்களுக்குப்பிடிச்சதை செய்யுங்க  


4  சினிமா , ஐ டி  துறைல மட்டுமில்லை , எல்லா இடங்களிலும்  நமக்கு மேலே  இருக்கறவங்க நம்மை  அடிச்சுக்கீழே தள்ளத்தான் பார்ப்பாங்க 


5  பசி வேற , பிரச்சனை வேற 


6  சில வாய்ப்புக்களை நம்ம கை  விட்டுப்போகும் முன் அதை யூஸ் பண்ணிக்கணும் 


7   எல்லாமே  கை  வசம் இருந்து சவால் விடறது  பெரிய விஷயம் இல்லை , எதுவுமே இல்லாம சவாலில் ஜெயிப்பதுதான் கெத்து 


8 பிரச்சனை பண்றவன்னு முத்திரை  குததி  மூலைல உக்கார வெச்சிருவான் 


9   சினிமாவில் பிரச்சனைகளை சந்திக்காத டைரக்டர்களே இல்லை , எல்லாத்தையும் தாண்டி தான்  அவங்க ஜெயிக்கறாங்க 


10   வாய்க்கு  வந்ததை எல்லாம் பேசறான் . டயலாக்காம்.. அடேய் 


11  வக்கீல் சார், என் புருசன்  அம்மாகூட இருக்காரு 


 அதுல என்னம்மா பிரச்சனை ? மகன் கூட அம்மா இருந்தா தப்பா? 


 ஐயோ, சார் , என் புருஷன் என் அம்மா கூட இருக்காரு 


12   ஜிம்  பத்தி எனக்கு சொல்றியா? மேனுவல் பிட்னஸ்,  மாடர்ன் பிட்னெஸ் இரண்டும்   வேற வேற 


13   எங்க  வீட்டில் யார் முதல்ல  காலைல  எந்திரிக்கறாங்களோ அவங்க தான் டீ  போடணும், இதுதான் எங்க வீட்டு ரூல் 

14    டேய் , நீ  எல்லாம் என் பிரண்டா? கல்யாணத்துக்குக்கூட வரலை 


 நான்  உன் கல்யாணத்துக்கு  வராததால் நீ  தாலி கடடலை யா? முதல் இரவு தான் நடத்தலையா?


15 டேய் .கவுண்ட்ட்ரா பேசறேன்னு கம்பி எண்ண விட்டுடாத 


16   இங்கே பாதிப்பேருக்கு  வாழ்க்கைல செட்டில் ஆகறதுன்னா என்ன?என்பது தெரியாமாயே  இருக்காங்க . எனக்கும் தெரியாது 


17  ஒரு மனுஷன்  ஆறடி ல  கீழே செட்டில் ஆகும் வரை  எதுவும் செட்டில் இல்லை 


18   நாம  என்னவா  ஆகப்போறோம்னு நமக்கே  தெரியாம இருந்தாதான் பிராப்ளம் 


19    குறிப்பிட் ட   வயசுக்குப்பின்  வீட்டில் கை நீட்டி காசு வாங்கக்கூடாது 


20   நானும்  எல்லாருக்கும்  சோறு  போடணும் . அதுக்கு  என்ன செய்ய ?


 அதுக்கு நீ  கேப்டன்  விஜயகாந்த் ஆகணும் 

21  நாம நினைச்சதை அடைய பணம்     முக்கியம் 


22   எல்லாப்பசங்களும்  ஐ டி  வேலை தான் வேணும்னு போயிட்டா  மத்த வேலைகளை யார் பார்ப்பாங்க ? 


23   அவ்கிட் டே   என்னடா  பேச்சு ? 

சும்மா தான் 

சும்மா சும்மா பேச அவ என்ன கஸ்டமர் கேரா? 


24  நல்ல  டைரக்ட்டர்ஸ் எல்லாம் அய்டடம் சாங்க்  எடுக்க மாட்டாங்க 

 அப்போ  மணிரத்னம் சார்    நல்ல  டைரக்ட்டர் இல்லையா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

`1  க்ளைமாக்சில்  போலீஸ் ஸ் டேஷனில்  வரும் காடசியில்  நாடகத்தனம் . குறிப்பாக  பெண்  எஸ் ஐ  ஆக வருபவரின் நடிப்பு 

2  நாயகன்  பைக் டாக்சி  ஓட்டும்போது    130ரூபாய்   தராததற்காக  ரவுடி கூட்டத்துடன்  நடத்தும் தகராறு  வலியத்திணிக்கப்பட்ட காட் சி 

3  இயக்குனருக்குக்காமெடி  சீக்வன்ஸ் , டயலாக்ஸ்     நல்லா வருது . ஆனா   மோகனசுந்தரம்   மாதிரி  காமெடி  பேச்சாளரை  புக் செய்து  அவரை சரியாக  யூஸ்   செய்யாதது ஏனோ? 

4   குடும்பப்படம்  என தமிழிலேயே டைட்டில் வைத்தருக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கலகலப்பான , குடும்பப் படம்  பார்க்க  விரும்பும்  அனைவரும்  குடும்பத்துடன் பார்க்கலாம் . இந்தமாதிரி  கண்ணியமான  காட் சி  அமைப்புகள்  வருவது  அரிதிலும் அரிது . விகடன் மார்க்  44 , குமுதம்  ரேட்டிங்  நன்று .மை  ரேட்டிங்  3/ 5 

0 comments: