Friday, December 06, 2024

AGNI (2024) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

         

     6/12/2024 ஆகிய  இன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இந்தப்படம்  அமேசான் பிரைம்  ஓ  டி டியிலும்  இன்றே  காணக்கிடைக்கிறது .போலீஸ் , மிலிட்டரி  சப்ஜெக்ட்டுகள்  தமிழில்  பல படங்கள்  வந்திருக்கின்றன .ஆனால் பயர்  சர்வீஸ் ஆட்களின்  தியாகம் , வீரம் பற்றி  டீட்டெயில்  ஆன ஒரு முழுப்படம்  வந்ததில்லை ( மைக்கேல்  மதன காமராஜன்  ல  கமல்  தீ அணைப்புப்படை வீரராக வந்தாலும்  அது காமெடிப்படம் தான் )


JWALA MEI  JO JETHA HAI VO AMAR HO JAATHA HAI           -ஜ்வாலா  மே  ஜோ ஜீத்தா  ஹை வோ  அமர் ஹோ ஜாத்தா ஹை = தீப்பிழம்பின்  உக்கிரத்தைத்தாண்டி  யார்  உயிர்  வாழ்கிறார்களோ அவர்கள் அழியாப்புகழ்  அடைகிறார்கள் என்ற  அறிமுகத்துடன்  படம்  துவங்குகிறது .


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தீ அணைப்புத்துறையில்  ஹையர் ஆபீசர் . மனைவி , மகன் என்று குடும்பத்துடன்  இனிய  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான் நாயகனின்  மச்சினன்   ஒரு போலீஸ் ஆபீசர் . இருவருக்கும் ஈகோ கிளாஸ்  உண்டு . நாயகனின் மகன்  நாயகனை மதிப்பதில்லை .நாயகனின் மகன்  நாயகனின் மச்சினன் அதாவது  தாய்மாமா மேல்  மதிப்பும், மரியாதையும்  வைத்திருக்கிறான் .


 இது நாயகனுக்கு ஒரு மனக்குறையாக இருந்து வருகிறது . மக்கள்  போலீசை  மதிப்பது போல பையர் சர்வீஸ்மேனை   மதிப்பது இல்லை  என்பது  ஒரு குறையாக  இருக்கிறது 


நகரில்  அடிக்கடி  கட்டிடங்கள்  தீ விபத்தை சந்திக்கின்றன .இவை எதேச்சையானவை இல்லை , திட்டமிட் ட  சதி  என்பது தெரியவருகிறது . நாயகன்  அந்தக்கேஸை  ஆராய்ந்து கொண்டிருக்கும்போது 


போலீஸ் ஆபீசர்  ஆன  நாயகனின் மச்சினன்  அந்தக்கேஸை  அவசர கதியில்  விசாரித்து   தவறான  ஆளை  குற்றவாளி   என  கோர்ட்டில்  நிறுத்துகிறான் .


 அதாவது  கட்டிடங்களுக்கு    தீ  விபத்தை ஏற்படுத்தி  பிறகு லேண்ட்  வேல்யூ குறைந்ததும்  அதை  மலிவான விலையில்  ஒருவன் வாங்கி வருகிறான் .அவன் தான்  குற்றவாளி  என தவறாக  முடிவு எடுக்கிறான் . உண்மையான  குற்றவாளியை  நாயகன்  எப்படிக்கண்டுபிடிக்கிறான் என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆகப்பிரதீக் காந்தி அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார் .நாயகனின்  மச்சினன்  ஆக திவ்வியண்டு சர்மா  வில்லத்தனமான  ரோலில்  அசத்தி  இருக்கிறார் இவர்கள்  இருவரின் மனைவிகள் ஆக ஷய மி கேர் , சாய் தமாங்கர்  ஆகியோர்  குடும்பப்பாங்கான நடிப்பை வழங்கி உள்ளனர் 

விஜய மயூரியா  உடன் இணைந்து  திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார் ராகுல் டோலக்கியா . ஒளிப்பதிவு .இசை , எடிட்டிங்க்  போன்ற  டெக்கினிக்கல் அம்சங்கள்  குட் . 2மணி நேரம்  டியூரேஷன் 


சபாஷ்  டைரக்டர்


1  பையர் சர்வீஸ் மேன்களின்  தியாகம்  எப்படிப்பட்ட்து ?என்பதை டாக்குமெண்டரி  டிராமா  போல  சுவராஸ்யமாக  சொன்ன விதம் , இருவருக்கு இடையில்  ஆன  ஈகோ கிளாஸ் ஸை  பேமிலி  டிராமாவாக சொன்ன விதம், குற்றவாளியைக்கண்டுபிடிக்கும்  திரில்லிங்க்  என  3  விதமாக  திரைக்கதையை அமைத்த விதம் 


2  தீ விபத்து  நடந்த  இடங்களில்  வீரர்கள்  செயல்படும்  விதத்தை  போர் அடிக்காமல் ஆக்சன் சீக்வன்ஸ்  போல்  காட்டிய விதம்


3  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  


  ரசித்த  வசனங்கள் 


1  இன்னைக்கு பிரமாதமா ஒர்க் பண்ணிப் பலரை காப்பாத்தீட்டீங்க  சார்  


அப்போ  மத்த நாட்கள் எல்லாம் காப்பாத்தலையா? எல்லா நாளும் ஒரே மாதிரி தான் வேலை செய்யறோம் 


2  ஊரெல்லாம்  என்னைப்புகழறாங்க ,பாராட்டு மழை ல நனைக்கிறாங்க , ஆனா என் பையனைப்பாரு , கண்டுக்கவே மாட்டே ங்கறான் , இவன் என் பையன் தானா?னு சந்தேகமா இருக்கு 


அப்படி எல்லாம் பேசாதீங்க , என்னைக்காவது ஒரு சாக்லேட் வாங்கிக்கொடுத்திருப்பீங்களா? . எப்படி  உங்களோட மிங்கில் ஆவான் ? 


3 என் அண்ணன்  சொந்தமா  புது வீடு  வாங்கிட்டான் . ஆனா நீங்க ? 


உன் அண்ணனுக்கு இன்ஸ்பெக்டர்  பிஸ்னஸ்  நல்லா  செட் ஆகிடுச்சு போல 


என்னது ? பிஸ்னெசா? 


4     நீ ஓடிப்போய் திருடனைப்பிடிச்சயா? உன் தொப்பையைப்பார்த்தா   அபப்டித்தெரியலையே?


5  ஸ்டேமினோ  நல்லாருந்தா  உன் பேமிலிக்கும்  நல்லது , உனக்கும் நல்லது 


6   ப்ளூ பிலிம்  பார்த்தீங்களா? 


யோவ் ,அது  ப்ளூ பிலிம்  இல்லை ,  ப்ளூ பிலேம் ( BLUE FLAME)


7   ஒரு பயர் சர்வீஸ் மேனோட   பேவரைட்  டயலாக்  எது தெரியுமா? பாகல் - பாணி (தண்ணீர் ) , கேஸ் , லைட்  


8 உன் லங்க்ஸ்  ரொம்ப  வீக்காயிருக்கு  உன்னை நீ  கவனிக்கலைன்னா  உனக்கான மெடலை உன் சம்சாரம்தான் வாங்குவா, நீ வாங்க மாடட. வாங்க, உயிரோடிருக்கமாடட


9  நம் நாட்டோட  பிரச்சனை  என்ன  தெரியுமா? யாருக்கும்  வாழ்க்கையின் மதிப்பு தெரியறதில்லை . தெரிய வரும்போது அவங்க வாழ்க்கையே முடிஞ்சிருக்கும் 


10   என்     நெற்றில  இளிச்சவாயன்னு  எழுதி  இருக்கா? 


 இல்லை , அந்தவிஷயம்தான்  எங்க எல்லாருக்கும் தெரியுமே? எதுக்காக எழுதி  வைக்கணும் ? 


11   நெருப்புக்கு  இரை ஆகக்கூடிய அபாயம் உள்ள கட்டிடங்களின்   எண்ணிக்கை   வருடா  வருடம்  அதிகரித்துக்கொண்டே  இருக்கு . யாரும் ரூல்ஸை  பாலோ பண்றதில்லை 


12   விபத்தில் இறந்த குடும்பத்துக்கு  காம்ப்பெட்டிஸன்  அறிவிக்கப்போறேன் 


 இவரெல்லாம்  ஒரு சி எம் . சார் .அது காம்ப்பன்சேசன் 


13  மெடலுக்காக  வேலை செய்யாதே , அது உன் மெடிக்கல் பில்லைக்கட்  டாது 


14  என் அப்பாவும் , என் அண்ணனும்  20 உயிர்களைக்காப்பாற்றி இருக்காங்க . ஆனா  டியூட்டில  அவங்கஉயிரை விட்டப்போ அந்த 20 பேர் கூட வந்து பார்க்கலை .அவரால் காப்பாற்றப்பட்ட  20 பேரும் கை   தட்டி அவரோட தியாகத்துக்கு  மரியாதை செலுத்துவாங்கனு நினைச்சேன்  

15  பொதுமக்கள் யாருக்காவது ஒரு பையர் சர்வீஸ்மேன்  பேராவது தெரியுமா? 


 16  தெருக்களுக்கு , அரசியல்வாதிகள் பெயரை வைக்கறாங்க , ஒரு பையர் சர்வீஸ்மேன்  பேராவது   வெச்சிருக்காங்களா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன்  மேல்  பரிதாபம்  வருவது  போலக்காட்சிகள் வைக்கக்கூடாது 


2  போலீஸ் ,மிலிட் டரி  உட்பட  பல துறைகளில்  மெடிக்கல்  பிட்னஸ்  அவ்வப்போது செக் செய்வார்கள் .அதை நாயகன் குறை சொல்வது ,மனம் நோவது எடுபடவில்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -குடும்பத்துடன்   பார்க்கத்தக்க  கண்ணியமான திரில்லர்  படம் . ரேட்டிங்  3 / 5 


Agni
Official release poster
Directed byRahul Dholakia
Written byRahul Dholakia
Vijay Maurya
Produced byRitesh Sidhwani
Farhan Akhtar
Starring

Jitendra Joshi

Kabir Shah
Production
companies
Distributed byAmazon Prime Video
Release date
  • 6 December 2024
CountryIndia
LanguageHindi

0 comments: