Tuesday, December 03, 2024

சொர்க்க வாசல் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( வயலன்ஸ் ட்ராமா )@ நெட்ஃபிளிக்ஸ்

                         


தமிழ்  சினிமாவில் ஜெயிலுக்குள் கதை நடப்பது மாதிரி  திரைக்கதை  அமைக்கப்பட்ட படங்கள் என ஒரு லிஸ்ட்  எடுத்தால் மகாநதி (1994) , விருமாண்டி(2004) , வடசென்னை(2018) , மிஷன் சாப்டர் 1 (2024)  என எல்லாமே  மாறுபட்ட வெற்றிப்படங்கள் என்பது ஒரு ஆச்சரியம் . அறிமுக இயக்குனர் ஆன  சித்தார்த்  விஸ்வநாத் அதே  போல  ஒரு ஜெயில் கதையைத்தான்  தந்திருக்கிறார் . மாறுபட்ட திரைக்கதைதான்  என்றாலும்  இது அனைத்துத்தரப்பினருக்கான படம் இல்லை . வன்முறைக்காக  ஏ சர்ட்டிஃபிகெட் பெற்ற படம் 


29/11/2024   அன்று திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  விரைவில்  நெட்  ஃபிளிக்ஸில்  வெளி வர இருக்கிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தள்ளுவண்டிக்கடை யில் டிஃபன் ஐட்டங்கள்  விற்பவர் .அம்மா, மனைவியுடன்  வசித்து வருகிறார். அந்த ஏரியாவில் நடந்த ஒரு கொலை பற்றி விசாரிக்க போலீசால் அழைத்துச்செல்லப்படும்  அவர் அந்தக்குற்றத்தையே செய்ததாக ஜெயிலில் அடைக்கப்படுகிறார் . 


 ஜெயிலில்  தாதா  ஆன  வில்லன் இருக்கிறான் . அவன் ஜெயிலில் இருந்து கொண்டே  வெளியே  எல்லோரையும் ஆட்டிப்படைப்பவன் . புதிதாக  ஜெயிலுக்கு  இன்சார்ஜ் ஆக  வரும் ஆஃபீசர் வில்லனைப்போட்டுத்தள்ள  முடிவெடுக்கிறார் . ஜெயிலில் சமையல் செக்சனில் வேலை பார்க்கும்  நாயகன் இடம்  பேதி மருந்தைக்கொடுத்து  அதை வில்லன் சாப்பிடும் உணவில் கலக்கச்சொல்கிறார் .


 ஆனால்  நாயகன்  அதைக்கலக்கும் முன்னரே  வில்லன்  மர்மமான  முறையில் இறக்கிறான் . வில்லனைக்கொலை செய்தது  நாயகன் தான் என எண்ணும் வில்லனின் நண்பர்கள்  ஜெயிலில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் . இதற்குப்பின்  நடந்தது என்ன?  வில்லனைக்கொன்றது யார்?   என்பதை  மீதி திரைக்கதை  விவரிக்கிறது 


1999 ஆம் ஆண்டு மத்திய சிறையில் நடந்த உண்மையான ஜெயில் கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை .


நாயகன் ஆக ஆர் ஜே  பாலாஜி  நன்றாக நடித்திருக்கிறார். வழக்கமாக  லொட லொட என பேசும் கேரக்டர்களில்  நடித்தவர்   இதில்  மாறுபட்ட  கேரக்டரில் அமைதியாக  நடித்திருக்கிறார். தாடி  வைத்திருப்பதாலோ என்னவோ  தனுஷின் நடிப்பு சாயல்  தொற்றிக்கொண்டுள்ளது 


நாயகி ஆக  சானியா  ஐய்யப்பன்  கச்சிதம்,. அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை  ஓக்கே  . 


 வில்லன்  ஆக  இயக்குனர்  செல்வராகவன்  தெனாவெட்டான  நடிப்பு . சிறைக்கண்காணிப்பாளராக    ஷராப் யுதின்  , சிறைத்துணைக்கண்காணிப்பாளராக  கருணாஷ்  மாறுபட்ட  நடிப்பு . நட்டி என்கிற  நடராஜூம்  ஒருமுக்கிய ரோலில் விசாரணை கமிஷன்  ஜட்ஜ் ஆக வருகிறார் 


ஆர்ட் டைரக்சன்  ஜெயச்சந்திரன் . அருமையான ஜெயில் செட்டிங்க் ஒர்க் . ஒளிப்பதிவு  பிரின்ஸ் ஆண்டர்சன் . ஜெயில் கலவரக்காட்சிகள்  உட்பட பல காட்சிகளில் அவரது கேமரா  முக்கியப்பங்கு வகிக்கிறது . இசை கிறிஸ்டோ சேவியர் .3  பாடல்களில் 2  தேறுகின்றன  சண்டக்காட்சிகள்  தினேஷ்  சுப்பராயன் . அருமையான ஒர்க் 

ஆர் கே  செல்வாவின் எடிட்டிங்கில் படம் 126  நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின்  முதல் பிளஸ்  அபாரமான  வசனங்கள் . எழுதியவர்கள் மூவர் .வசனங்கள்  ( தமிழ் பிரபா + அஸ்வின் ரவிச்சந்திரன் + சித்தார்த்  விஸ்வனாத் )


 2   திரைக்கதை  அமைத்திருக்கும் பாணி   விருமாண்டியை நினைவு படுத்தினாலும் குட் 



  ரசித்த  வசனங்கள்  ( தமிழ் பிரபா + அஸ்வின் ரவிச்சந்திரன் + சித்தார்த்  விஸ்வனாத் )



1  புதுக்கடவுள்  கிட்டப்போனா மட்டும் பழைய பாவங்கள் எல்லாம் தொலைஞ்சா போயிடும் ? 


2   அளவு ஜாக்கெட்  இல்லாமயே  கரெக்ட்டா ஜாக்கெட் வாங்கிட்டு வந்திருக்கியே? அது எப்படி ? 


3  வருசமா  உன்  கூடவே  இருக்கேன் . சைஸ்  கூடத்தெரியலைன்னா எப்படி? 


3    தினமும்  ருசியா நல்ல சாப்பாடு ஜெயில்ல போட்டா  என்ன ஆகும்? இது நல்ல இடம்னு பழகிப்போயிடும் , எவனும் நகர மாட்டான் 


4   கதையை யார் முடிக்கறாங்களோ அவன் தான்  அடுத்த கதையை ஆரம்பிக்கனும் , முடிச்சு விட்டுடுங்க 

5  ஒருத்தர் மேல இருக்கற கோபம்  நம்ம கண்களை மறைச்சிடும், நம்மை யோசிக்க விடாம பண்ணிடும் 


6    வன்முறை தான்  உலகின் மிகப்பெரிய கோழைத்தனம் 


7  எதுவுமே  பண்ணாத  என்னை எல்லாமே  பண்ண வெச்சுட்டீங்க 


8 வாழ்க்கைல ரெண்டே  பாதைகள் தான் 

 1  சொர்க்கத்தில் முட்டி போடலாம் 2  நரகத்தில் ராஜாவா  இருக்கலாம் 

இந்த ரெண்டுல எது வேணும்னு நீ தான்  முடிவு  பண்ணனும் 


9  நுனி  நாக்கில் இங்க்லீஷ் பேசற  ஆஃபீசர்களைத்தான் இவங்களுக்குப்பிடிக்குது ,. எங்களை மாதிரி ஆட்கள் சொல்வதை இவங்க கேட்க மாட்டாங்க 


10 கடவுளா  இருப்பது  எளிது , மனிதனா இருப்பதுதான் கஷ்டம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கதை  நகரும்  பாணி  கொஞ்சம்  குழப்புகிறது . முதல்  பாதி  ரொம்ப ஸ்லோ 


2  நாயகனின் மீது பரிதாபமே  வரவில்லை . வந்தால்தான் அந்த கேரக்டருக்குக்கிடைத்த வெற்றி 

3  ஓவர்  வயலன்ஸ் 


4  ஒரே  கத்தல் , இரைச்ச;ல் . வசனமே  புரியலை . சவுண்ட்  டிசைனிங்க்  அமைப்பவர்  கவனித்திருக்க வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  18+  கர்ப்பிணிப்பெண்கள் , குடும்பப்பெண்கள் , பயந்த சுபாவம் கொண்ட  பெண்கள் . மன அழுத்தம்  கொண்ட  ஆண்கள் , பெண்கள் , அமைதியான  வாழ்க்கை  வாழ ஆசைப்படும் நபர்கள்  பார்க்க  வேண்டாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட ஒரு ஜெயில் கதை . ஆண்கள்  பார்க்கலாம் . விகடன்  மார்க் 41   குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே 

. மை  ரேட்டிங் 2.25 / 5 


சொர்கவாசல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்சித்தார்த் விஸ்வநாத்
எழுதியவர்
  • கிருஷ்ணகுமார்
தயாரித்தது
  • சித்தார்த் ராவ்
  • பல்லவி சிங்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஇளவரசர் ஆண்டர்சன்
திருத்தியதுசெல்வா ஆர்.கே
இசைகிறிஸ்டோ சேவியர்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • வலது ஸ்டுடியோவை ஸ்வைப் செய்யவும்
  • திங்க் ஸ்டுடியோஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுட்ரீம் வாரியர் படங்கள்
வெளியீட்டு தேதி
  • 29 நவம்பர் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: