ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் பெற்றோர் மிகவும் வசதி படைத்த செல்வந்தர்கள் , ஆனாலும் மகளை அருகில் இருந்து கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை .பிஸ்னஸ் விஷயமாக ரவுண்டிங்க்கிலேயே இருக்கிறார்கள் .நாயகி தன் பெற்றோரைப்பார்த்தே நான்கு வருடங்கள் ஆகின்றன .இதனால் நாயகி தன் பெற்றோர் மீது மன வருத்தத்தில் இருக்கிறார்
நாயகியின் அம்மா ஒரு நாள் நாயகிக்கு போன் பண்ணி டாக்டருக்குப்படிக்க ஒரு வாய்ப்பு வந்திருக்கு , நீ உடனடியாக டொராண்டோ செல் என்கிறார் . அங்கே போய் அங்கேயே தங்கிப்படிக்க வேண்டும் . தங்குமிடம் எல்லாம் செட் செய்ய கால அவகாசம் தேவை .அதனால் நாயகி அந்த ஊருக்கு அருகில் இருக்கும் தன அத்தையின் ஊருக்கு சம்மர் வெகேஷன் மாதிரி போகிறாள் . அங்கே இருந்து கொண்டே டொரெண்ட்டோ வில் தங்குமிடம் ரெடி பண்ணி விட்டுப்போக ஐடியா
அங்கே நாயகனை சந்திக்கிறாள் . பார்த்த உடனேயே நாயகிக்கு நாயகனைப்பிடித்து விடுகிறது .நாயகனுக்கு அம்மா, அப்பா இல்லை . ஆனால் ஒரு தங்கை இருக்கிறாள் . அப்பா ஸ்தானத்தில் இருந்து தனது தங்கையைப்பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நாயகனுக்கு இருக்கிறது . ஆனால் நாயகனின் தங்கைக்கு நாயகனைக்கண்டாலே பிடிக்காது . ஹிட்லர் பட மம்முட்டி மாதிரி எப்போதும் கண்டிஷன் போடும் அண்ணனாக நாயகன் இருப்பதால் சுதந்திரப்பறவை ஆக விரும்புகிறாள்
நாயகன் ஒரு இடத்தில் ஸ்விம்மிங்க் கோச் ஆக வேலை செய்கிறான் . நாயகனுடன் நேரம் செலவழிக்கும் ஆசையில் நாயகி நீச்சல் கற்றுக்கொள்ள அங்கே போகிறார் . இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது .திருமணத்துக்கு முன்பே உடல் உறவு நடக்கிறது
ஆனால் திருமணம் பற்றிப்பேச்சு எடுத்தபோது நாயகன் சரியாகப்பிடி கொடுத்துப்பேசவில்லை . சம்மர் வெகேஷனுக்காகத்தானே? இங்கே வந்தே? என நாயகி மனம் வருந்தும்படி நாயகன் பேசி விடுகிறான் . ஜாலிக்காகப்பழகியதாக நாயகன் தன்னைக்குற்றம் சாட்டியது நாயகிக்குப்பிடிக்கவில்லை .மேற் கொண்டு நாயகனிடம் இது பற்றி விவாதிக்கவில்லை
இதற்குப்பின் இந்தக்கதையில் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகி வேவர் லீ ஆக ஆண்ட்ரியா பேங்க் நடித்திருக்கிறார் .படம் முழுக்க மற்றவர்கள் இவர் பெயர் சொல்லிக்கூப்பிடும்போது நம் காதுக்கு பேர் அண்ட் லவ்லி என்று கூப்பிடுவதாகத்தோன்றுகிறது .இவர் கனடா நடிகை மட்டுமல்ல. ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட . குடும்பப்பாங்கான முகம் .இளமையான தோற்றம் . வசீகரமான சிரிப்பு இவரது பிளஸ் . படத்தைத்தாங்கி நிற்பதே இவர் தான்
நாயகன் ஆக ராபி அமல் .இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட .அளவாக நடித்திருக்கிறார் . இயல்பான தோற்றம் , உடல்மொழி பிளஸ்
நாயகியின் அத்தை , நாயகனின் தங்கை ஆக வரும் நடிகைகளும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்
அல்பன்சா சின் தான் ஒளிப்பதிவு .மனிதர் இயற்கை விரும்பி போல . பல காடசிகளில் கடல் அழகு , மரங்களின் அழகியலை க்காட்டுகிறார்
பின்னணி இசை இருவர் .மெலோடி விரும்பிகள் போல . குட்
எடிட்டிங்க் கச்சிதம் .100 நிமிடங்கள் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 தெளிவான திரைக்கதை . சிறுகதை அல்லது நாவல் படிப்பது போல இருக்கிறது
2 நாயகன் - நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி
3 கண்ணைக்கவரும் ஒளிப்பதிவு .காதுகளைப்பதம் பார்க்காத மெல்லிய இசை
ரசித்த வசனங்கள்
1 நீ சரியான பிற்போக்குவாதி .800 வயசு இருக்குமா? உனக்கு ?
1000 வயசுன்னு சொல்லேன்
2 என்னைப்பற்றி என் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியாது அதே மாதிரி தான் அவங்களுக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது
3 நம்ம கூட இருக்க ரத்த சம்பந்தமான உறவுகள் தான் வேணும் என இல்லை
4 என்ன திடீர்னு சைலன்ட் ஆகிட் டே?
பகல் கனவு காண்பவர்கள் அப்படித்தான் இருப்பாங்க
5 நீ கரெக்ட்டா கத்துக்கிட் டே
சும்மா புகழாத. சின்னக்குழந்தை கூட இதைக்கத்துக்கும்
6 பசங்கன்னா அவங்களுக்கு வேண்டியதை அவங்களே பார்த்துக்குவாங்க .ஆனா பெண் குழந்தைகள்னா சிரமம்
7 என் திருமணம் வாழ்க்கை ஒர்க் அவுட் ஆகலை .ஆனாலும் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்
8 அப்பா , எதனால எனக்கு நீங்க போன் கூட பண்ணலை?
அதான் அம்மா பன்றாளே ?
நீங்க எதனால பண்ணலை ?
பொண்ணுங்களுக்கு அம்மா கிட் ட பேசத்தான் பிடிக்கும் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் முகத்தில் காதல் கொப்புளிக்கிறது . ஆனால் நாயகன் முகத்தில் நாயகி அளவுக்கு காதல் உணர்வு வரவில்லை
2 நாயகியின் பெற்றோர் கேரக்ட்டர் டிசைன் புரிந்தகொள்ள முடியவில்லை . ஒருவேளை பாரினில் அப்படித்தா னோ?
3 நாயகனின் தங்கைக்கும் , நாயகனுக்கும் நல்ல நட் பு உண்டாக நாயகி தான் காரணம் என நாயகன் நாயகியைப்பாராட்டுவதாக ஒரு காட் சி வருது .ஆனால் அந்த மாதிரி நாயகி பெரிதாக எதுவும் செய்யவில்லை
4 திரைக்கதை மிகவும் பிளாட்டாக இருக்கு . திருப்பம் , சுவராஸ்யம் எதுவும் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 +
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆஹா , ஒஹோ என்றெல்லாம் சொல்லமுடியாது .சராசரி தரத்தில் ஒரு காதல் கதை .ரேட்டிங்க் 2. 5 /5
Float | |
---|---|
Directed by | Sherren Lee |
Written by | Jesse LaVercombe Sherren Lee |
Based on | Float by Kate Marchant |
Produced by | Robbie Amell Aaron Au Jeff Chan Jamie D. Greenberg Matthew Kariatsumari Aron Levitz Chris Paré Shawn Williamson |
Starring | Andrea Bang Robbie Amell |
Cinematography | Alfonso Chin |
Edited by | Simone Smith |
Music by | Dan Mangan Jesse Zubot |
Production companies | |
Distributed by | Elevation Pictures Lionsgate |
Release date |
|
Running time | 100 minutes |
Country | Canada |
Language | English |