போஸ்ட்டர் டிசைன்ஸ் எல்லாம் பார்க்கும்போது இது சைலன்ஸ ஆப் த லேம்ப்ஸ் (1991) ,செவன் (1995) , ஜோடியாக் (2007) ஆகிய படங்களை நினைவுபடுத்துவதாக பலர் கருத்துக்கூறி இருந்தனர்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு சீரியல் கில்லர் 10 குடும்பங்களை 30 வருடங்களில் ஒரு ஏரியாவில் போட்டுத்தள்ளி இருக்கான் .கொலை செய்யப்பட குடும்பத்தில் ஒற்றுமையான விஷயம் அந்தக்குடும்பங்களிலே யாரோ ஒரு குழந்தை க்கு 14ம் தேதி பிறந்த நாளாக இருந்ததுதான் . இந்த கேஸை விசாரிக்கும் பொறுப்பு நாயகிக்கு தரப்படுது
அம்மா , அப்பா ,குழந்தை ஆகிய 3 பேர் இருக்கும் குடும்பம் ,அதில் அப்பா தான் தன மனைவியை , குழந்தையைக்கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தக்குடும்பத்தில் மட்டுமல்ல , கொலை செய்யப்பட அனைத்துக்குடும்பங்களிலும் இதே கதை தான் . கொலைகாரன் எப்படியோ தூண்டி விட்டு இந்தக்கொலைகளை செய்ய வைக்கிறான் என்பது தெரிய வருகிறது
எப் பி ஐ ஏஜென்ட் ஆக இருக்கும் நாயகிக்கு இ எஸ் பி பவர் இருக்கிறது . யாராலும் தீர்க்க முடியாத இந்தக்கேஸை நாயகியிடம் ஒப்படைக்கிறார்கள்
கேஸை எடுத்த சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் .அப்போது நாயகியின் ஹையர் ஆபீஸருக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன .
சீரியல் கில்லருக்கும் , நாயகிக்கும் ,நாயகியின் அம்மாவுக்கும் எதோ ஒரு தொடர்பு இருப்பதாக சந்தே கிக்கிறார் .
நாயகி 8 வயது சிறுமியாக இருந்தபோது கொலைகாரன் நாயகியைக்கொலை செய்ய முயற்சித்தது தெரிய வருகிறது . நாயகியின் பிறந்த தேதியும் 14 தான் .நாயகி யை கொலை செய்யாமல் கொலைகாரன் தப்பிக்க விட்டது எதனால்? நாயகியின் அம்மாவுக்கும் , கொலைகாரனுக்கும் என்ன டீல் என்பதை மீதி திரைக்கதை சொல்கிறது
நாயகி ஆக மைக்கா மொன்றோ பிரமாதமாக நடித்திருக்கிறார் . இவரது முகத்தில் இருக்கும் அமைதியான மர்மம் ஒரு பிளஸ் .நாயகியின் அம்மாவாக அலிசியா விட் கச்சிதமாக நடித்திருக்கிறார் .சீரியல் கில்லர் ஆக வில்லன் ஆக நிக்கோலஸ் கேஜ் நடித்திருக்கிறார்.ஆள் அடையாளமே தெரியவில்லை . ஆனால் சிட்டிசன் அஜித் போல , இரு முகன் லேடி கெட்டப் விக்ரம் போல இதுவும் பொருந்தவில்லை
. படத்தின் தயாரிப்பாளர் களில் நிக்கோலஸ் கேஜ்-ம் ஒருவர் .கிரேக் நிக்கின் எடிட்டிங்கில் படம் 101 நிமிடங்கள் ஓடுகின்றன .பொறுமை மிகத்தேவை .முதல் பாதி ரொம்ப ஸ்லோ . இசை ஜில்கி ஒளிப்பதிவு ஆன்டீ ரிஸ் இருவரும் இணைந்து திகிலான மூடு செட் செய்வதில் வெற்றி பெறு கிறார்கள்
சபாஷ் டைரக்டர்
1 ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லரை ஹாரர் திரில்லர் மாதிரி பேய்ப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்த விதம்
2 நாயகி தன வீட்டில் இருந்தே வில்லனின் போட்டோவைக்கொண்டு வந்து தரும் சீன் , வில்லனின் இருப்பிடத்துக்குப்போகும்போது நாயகியின் கொலீக் சுடப்படும் சீன் நல்ல திரில்லிங்க்
3 வில்லனுக்கும் , நாயகியின் அம்மாவுக்குமான பிளாஸ்பேக் காட்சிகள் குட்
ரசித்த வசனங்கள்
1 சஸ்பெக்ட்க்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதுதான் ரொம்பப்பிடிக்கும்
2 சில விஷயங்களை தொடர்ந்து ரொம்ப நேரம் பார்த்துட்டு இருக்கக்கூடாது
3 நீங்க சின்னக்குழந்தையா இருந்தப்போ போலீஸ் ஆகணும்னு நினைச்சிங்களா?
இல்லை ,நடிகை ஆகணும்னு நினைச்சேன்
எல்லாருமே அப்படித்தான் ஆக ஆசைப்படறாங்க
4 எட்டு வருஷம் நர்சா வேலை பார்த்தால பார்க்கக்கூடாத பல மோசமான விஷயங்களைப்பார்த்திருக்கேன்
5 பிரேயர் பண்றதை நிறுத்தாத.சாத்தான் கிட்டே இருந்து அது உன்னைக்காப்பாத்தும்
6 இருட்டைக்கண்டு உனக்குக்கொஞ்சம் கூட பயம் இல்லை , ஏஞ்சல், ஏன்னா நீ தான் அந்த இருட்டே
7 நான் இங்கே மட்டுமில்ல .எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமா இருப்பேன் . யாரும் எதிர்பார்க்காத இடத்தில் காத்துக்கிட்டு இருப்பேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 த்ரில்லர் மூவி என்றால் அடுத்து என்ன ஆகும் ? யாருக்கு ஆபத்து வரும் ? அதை எப்படி தடுப்பார்கள்?என்ற பரபரப்பு இருக்கணும் .ஆனால் எல்லாம் இதில் மிஸ்ஸிங்க்
2 நாயகியும் , கொலீக்கும், ஹையர் ஆபிசரும் எங்கே போனாலும் பகலில் போகாமல் இரவில் போவது எதனால் ?
3 இன்வெஸ்டிகேஷன் போர்சன் சரி இல்லை
4 வில்லனின் போட்டோ வைத்தான் நாயகி தருகிறார் .கூகுள் லொக்கேஷனையே ஷேர் செய்த மாதிரி அடுத்த சீனிலேயே வில்லனை பிடிப்பது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - clean u
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பில்டப் கொடுத்த அளவுக்கோ , இவ்ளோ பெரிய ஹிட்படம் என்ற தகுதிக்கோ உள்ளே சரக்கு இல்லை . சுமார் ரகம் தான் . ஆனால் பார்க்கலாம் . ரேட்டிங்க் 2.5 / 5
Longlegs | |
---|---|
Directed by | Osgood Perkins |
Written by | Osgood Perkins |
Produced by |
|
Starring |
|
Cinematography | Andrés Arochi Tinajero |
Edited by |
|
Music by | Zilgi |
Production companies |
|
Distributed by | Neon |
Release date |
|
Running time | 101 minutes[1] |
Country | United States |
Language | English |
Budget | <$10 million[2] |
Box office | $119 million[3][4] |
0 comments:
Post a Comment