Wednesday, November 13, 2024

GUMASTHAN (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம்

         

               ஒரு மம்முட்டியோ , மோகன்லாலோ  நடித்திருந்தால்  த்ரிஷ்யம் மாதிரி மெகாஹிட் ஆகி இருக்க வேண்டிய படம்  இது , ஸ்டார்  வேல்யூ இல்லாததால் இது போன்ற நல்ல படங்களுக்குக்கிடைக்கும் நன்மை  ஒரு டைரக்டரின் படமாக,திரைக்கதை  வேல்யூ உள்ள படமாக அடையாளம் அறியப்படுதலே 


27/9/2024 முதல்  திரை அரங்குகளில்   வெளியான  இப்படம்  இப்போது அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கில் இல்லை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு புகழ் பெற்ற  கிரிமினல்  லாயரிடம் பல  வருடங்கள்    குமாஸ்தாவாகப்பணி  ஆற்றி ஓய்வு பெற்றவர் .மிகச்சிறந்த கிரிமினல் மூளை கொண்டவர் .தனது அறிவை, அனுபவத்தைப்பயன்படுத்தி  பலரைப்பல கிரிமினல் கேஸ்களிலிருந்து காப்பாற்றி வருபவர் . அதற்கான சன்மானத்தைப்பெற்றுக்கொள்வார்  


 இவருக்கு  ஒரு மனைவி , 25 வயதில்  ஒரு மகன்  உண்டு .இவர்கள்  வீட்டில்  ஒரு பணிப்பெண்  இருக்கிறார் 


ஒரு நாள்  மாலை  பணிப்பெண்  வேலை முடிந்து தன வீட்டுக்குக்கிளம்பும்போது  நாயகனும் , அவரது மனைவியும்  வாக்குவாதம் செய்வதையும் , நாயகன்  மனைவியை பளார்  பளார்  என இரு  முறை கன்னத்தில்   அறைவதையும்  பார்க்கிறார் .இந்த மாதிரி  எதிர்த்துப் பேசினா உன்னைக்கொலை பண்ணிடுவேன் என நாயகன் மனைவியை மிரட்டுகிறார் 


 அடுத்த நாள் காலை பணிப்பெண்  வேலைக்கு வரும்போது  நாயகன்  ஒரு குழியில்  எதையோ புதைத்துக்கொண்டிருப்பதைப்பார்க்கிறார் .அவரது சடடையில் ரத்தக்கறை .மனைவியைக்காணவில்லை  


அவர்  உடனே அக்கம் ,பக்கம் சொல்ல  விபரம் போலீஸ்  வரை செல்கிறது .அந்த ஊர்  போலீஸ்  ஸ்டேசனில்  எஸ் ஐ க்கு நாயகனுடன் ஆல்ரெடி பல தகராறு  நடந்திருக்கிறது .இதுதான் நாயகனை மடக்க அருமையான வாய்ப்பு  என நினைத்து  போலீஸ்  நாயகனின் வீட்டுக்குப் போகிறது 


போலீஸ் விசாரணையில்  நாயகன் பிடி கொடுக்காமல் எகத்தாளமாகப்பேசுகிறார் . ஆத்திரம்  அடைந்த போலீஸ்  நாயகனை  அடித்துபோலீஸ்  ஜீப்பில் ஏற்ற முயலும்போது  ஒரு திருப்பம் . நாயகனின் மனைவி  அங்கேயே வருகிறார்  


 போலீசும் , ஊராரும் அதிர்ச்சி அடைகின்றனர் .நாயகன்  விடுவிக்கப்படுகிறார் . ஆனாலும் போலீசுக்கு நாயகன் மீது இன்னமும் சந்தேகம் .மனைவியைக்கொல்லவில்லை என்றாலும்  நாயகன் வேறு யாரையோ கொலை செய்து  விட்டு  நம்மை எல்லாம் திருக்கலில்  விடத்திட்டமிட்டு  ஒரு நாடகத்தை நடத்திக்காட்டி இருக்கிறார்  என சந்தே கிக்கின்றனர்.நாயகன்  உண்மையாகவே கொலை செய்தது  யாரை ?  எதற்காக ?   என்பதை மீதி  திரைக்கதையில் விளக்கி  இருக்கிறார்கள்  


நாயகன் ஆக ஜெய்ஷ்  ஜோஸ் பிரமாதமாக நடித்து இருக்கிறார் ,முதல்  பாதி வில்லன் போலவும் , பின் பாதியில்  நாயகன்  போலவும்   ஆடியன்ஸைக்கவர வேண்டிய  கேரக்ட்டர் , அருமையாகசெய்து இருக்கிறார் 


எஸ்  ஐ ஆக ஷாஜு  ஸ்ரீதர் கம்பீரமான  போலீஸ்  நடிப்பை வழங்கி இருக்கிறார் . நாயகனின்  மகனாக பிபின் ஜார்ஜ்  கச்சிதம் . நாயகனின்  நண்பனாக  வரும் திலீஷ் போத்தன் ,பணிப்பெண்ணாக  வருபவர்  இருவரின்  குணச்சித்திர நடிப்பு அருமை  


குஞ்ஞுண்ணி குமாரின்  எடிட்டிங்கில்  படம்  147 நிமிடங்கள்  ஓடுகின்றன , முதல் பாதி செம ஸ்பீடு .ஐயூப்கானின்  ஒளிப்பதிவு குட் .ஸ்டிபன்  தேவசியின்  இசையில்  பாடல்கள்  சுமார்   ரகம் தான் , ஆனால் பின்னணி இசையில்  கலக்கி இருக்கிறார் 

ரியாஸ் இஸ்மாத்தின்  திரைக்கதைக்கு  உயிர் ஊட்டி  இயக்கி இருப்பவர்  அமல்  கே  ஜோபி 

சபாஷ்  டைரக்டர்

1   ஒரு சாதாரண  ரிவஞ்ச்  த்ரில்லர்  கதையை  பிரமாதமான  முன் பாதி  திரைக்கதை  மூலம்  சுவராஸ்யமாக  சொன்ன விதம் அடடகாசம் 


2 நாயகனின்  கிரிமினல் மூளையைக்காட்டிட  அவர் டீல்  செய்யும்  முதல் கேஸை  மனைவியைக்கொலை செய்த நபரின் கேஸை எடுத்து ஜெயிப்பது  கதைக்கு பிளஸ் 


3  பல  இடங்களில் பிஜிஎம்  பட்டாஸைக்கிளப்புகிறது 


  ரசித்த  வசனங்கள் 

1  காலில் முள் குத்தினா  அதை  வேரோடு  நீக்கணும் .பள்ளிப்பாடன் கேஸ் கூட அந்தமுள்  மாதிரி தான் 


2    தப்பு செஞ்சது போலீசோ ,மிலிட்ரியோ  அதைத்தட்டிக்கேட்க எனக்கு தயக்கம் எதுவும் இல்லை 


3  மகன்  சம்பாதித்தக்காசு மகனிடம்  இருப்பதுதான் பெற்றோருக்கு சந்தோசம் 


4  புலியைப்பிடிக்க  பூனையையா வேட்டைக்கு அனுப்புவது ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகன்  வீட்டில் பணிப்பெண்ணாக  இருக்கும்  நபர்  மற்றவர்களிடம்  நாயகன்  எதையோ புதைப்பதைப்பார்த்தேன்  என்கிறார் .அப்போது  ஒரு  ஆள் என் நாயைக்காணவில்லை  என்கிறார் .போலீசிடம்  இருவரும்  அது  பற்றிக்கூறவில்லையே?  அது எதனால் ? 


2  நாயகன் ரத்தக்கறை  படிந்த  தன கையை  வாஷ் பேஷனில் கழுவினால் மேட்டர் ஓவர் . அவர் எதற்காக வெள்ளைக்கர்ச்சிப்பில்  துடைத்து அதை  எரிக்க வேண்டும் ?


3   வண்டியில் லைட் இல்லையா? என்று போலீஸ் கேட்டதுக்கு வேண்  டிரைவர்  வழியில்  ஒரு ஆக்சிடென்ட்   என்று  வான்ட் டடாக  போய் சிக்குவது ஏனோ? 


4    நாயகனின்  வீட்டில் பணிப்பெண்ணாக  இருப்பவரிடம்  போலீஸ்  நைட் டைம் போலீஸ் ஜீப்பில் போய்  யூனிபார்முடன்  அவரிடம்  உதவி கேட் கின்றனர்.  வேற  யாருக்கும் நீங்க உதவி செய்வது தெரியாம பார்த்துக்கறோம் என்கின்றனர்  . அதுக்கு மப்டிலே வந்திருக்க வேண்டும் 


5   நாயகன்  மீது கொலைப்பழி சுமத்தி போலீசில் புகார்  கொடுத்த  நாயகன்  வீட்டுப்பணிப்பெண்ணை  மீண்டும்  நாயகன்   வேலைக்கு  வர சொல்வது  ரிஸ்க் .கிரிமினல் லாயரிடம் பணி  புரிந்த புத்திசாலி ஆன நாயகன்  மடத்தனமாக முடிவு எடுப்பது எப்படி ? 

6 ஒரு போலீஸ் ஆபீசர்  போர்டுல /பேப்பர்ல  வரைந்து விளக்காம  தரலோக்கல்  டிக்கெட் மாதிரி  சுவர்ல கரித்துண்டால படம் வரைந்து பாகங்களைக்குறிச்சுட்டு இருக்காரு ? 

7நாயகன்   வில்லனை டக்னு  கொல்லாம அவனை சேர்ல கட்டி வெச்சு  கொலைக்குப்பின்  தான் எப்படி தப்பிக்கப்போறேன்  என  கிளாஸ்  எடுத்துட்டு இருக்காரு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  க்ரைம்  திரில்லர்  ரசிகர்கள்   அவசியம்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Gumasthan
Theatrical release poster
Directed byAmal K. Joby
Written byRiyaz Ismat
Produced byMuzafir Abdulla
StarringBindhu Sanjeev
Nibin Navas
Aathira Rajeev
Bibin George
Dileesh Pothan
CinematographyAyub Khan
Edited byKunjunni S. Kumar
Music byStephen Devassy
Release date
  • 27 September 2024
CountryIndia
LanguageMalayalam

0 comments: