Wednesday, November 13, 2024

GUMASTHAN (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம்

         

               ஒரு மம்முட்டியோ , மோகன்லாலோ  நடித்திருந்தால்  த்ரிஷ்யம் மாதிரி மெகாஹிட் ஆகி இருக்க வேண்டிய படம்  இது , ஸ்டார்  வேல்யூ இல்லாததால் இது போன்ற நல்ல படங்களுக்குக்கிடைக்கும் நன்மை  ஒரு டைரக்டரின் படமாக,திரைக்கதை  வேல்யூ உள்ள படமாக அடையாளம் அறியப்படுதலே 


27/9/2024 முதல்  திரை அரங்குகளில்   வெளியான  இப்படம்  இப்போது அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கில் இல்லை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு புகழ் பெற்ற  கிரிமினல்  லாயரிடம் பல  வருடங்கள்    குமாஸ்தாவாகப்பணி  ஆற்றி ஓய்வு பெற்றவர் .மிகச்சிறந்த கிரிமினல் மூளை கொண்டவர் .தனது அறிவை, அனுபவத்தைப்பயன்படுத்தி  பலரைப்பல கிரிமினல் கேஸ்களிலிருந்து காப்பாற்றி வருபவர் . அதற்கான சன்மானத்தைப்பெற்றுக்கொள்வார்  


 இவருக்கு  ஒரு மனைவி , 25 வயதில்  ஒரு மகன்  உண்டு .இவர்கள்  வீட்டில்  ஒரு பணிப்பெண்  இருக்கிறார் 


ஒரு நாள்  மாலை  பணிப்பெண்  வேலை முடிந்து தன வீட்டுக்குக்கிளம்பும்போது  நாயகனும் , அவரது மனைவியும்  வாக்குவாதம் செய்வதையும் , நாயகன்  மனைவியை பளார்  பளார்  என இரு  முறை கன்னத்தில்   அறைவதையும்  பார்க்கிறார் .இந்த மாதிரி  எதிர்த்துப் பேசினா உன்னைக்கொலை பண்ணிடுவேன் என நாயகன் மனைவியை மிரட்டுகிறார் 


 அடுத்த நாள் காலை பணிப்பெண்  வேலைக்கு வரும்போது  நாயகன்  ஒரு குழியில்  எதையோ புதைத்துக்கொண்டிருப்பதைப்பார்க்கிறார் .அவரது சடடையில் ரத்தக்கறை .மனைவியைக்காணவில்லை  


அவர்  உடனே அக்கம் ,பக்கம் சொல்ல  விபரம் போலீஸ்  வரை செல்கிறது .அந்த ஊர்  போலீஸ்  ஸ்டேசனில்  எஸ் ஐ க்கு நாயகனுடன் ஆல்ரெடி பல தகராறு  நடந்திருக்கிறது .இதுதான் நாயகனை மடக்க அருமையான வாய்ப்பு  என நினைத்து  போலீஸ்  நாயகனின் வீட்டுக்குப் போகிறது 


போலீஸ் விசாரணையில்  நாயகன் பிடி கொடுக்காமல் எகத்தாளமாகப்பேசுகிறார் . ஆத்திரம்  அடைந்த போலீஸ்  நாயகனை  அடித்துபோலீஸ்  ஜீப்பில் ஏற்ற முயலும்போது  ஒரு திருப்பம் . நாயகனின் மனைவி  அங்கேயே வருகிறார்  


 போலீசும் , ஊராரும் அதிர்ச்சி அடைகின்றனர் .நாயகன்  விடுவிக்கப்படுகிறார் . ஆனாலும் போலீசுக்கு நாயகன் மீது இன்னமும் சந்தேகம் .மனைவியைக்கொல்லவில்லை என்றாலும்  நாயகன் வேறு யாரையோ கொலை செய்து  விட்டு  நம்மை எல்லாம் திருக்கலில்  விடத்திட்டமிட்டு  ஒரு நாடகத்தை நடத்திக்காட்டி இருக்கிறார்  என சந்தே கிக்கின்றனர்.நாயகன்  உண்மையாகவே கொலை செய்தது  யாரை ?  எதற்காக ?   என்பதை மீதி  திரைக்கதையில் விளக்கி  இருக்கிறார்கள்  


நாயகன் ஆக ஜெய்ஷ்  ஜோஸ் பிரமாதமாக நடித்து இருக்கிறார் ,முதல்  பாதி வில்லன் போலவும் , பின் பாதியில்  நாயகன்  போலவும்   ஆடியன்ஸைக்கவர வேண்டிய  கேரக்ட்டர் , அருமையாகசெய்து இருக்கிறார் 


எஸ்  ஐ ஆக ஷாஜு  ஸ்ரீதர் கம்பீரமான  போலீஸ்  நடிப்பை வழங்கி இருக்கிறார் . நாயகனின்  மகனாக பிபின் ஜார்ஜ்  கச்சிதம் . நாயகனின்  நண்பனாக  வரும் திலீஷ் போத்தன் ,பணிப்பெண்ணாக  வருபவர்  இருவரின்  குணச்சித்திர நடிப்பு அருமை  


குஞ்ஞுண்ணி குமாரின்  எடிட்டிங்கில்  படம்  147 நிமிடங்கள்  ஓடுகின்றன , முதல் பாதி செம ஸ்பீடு .ஐயூப்கானின்  ஒளிப்பதிவு குட் .ஸ்டிபன்  தேவசியின்  இசையில்  பாடல்கள்  சுமார்   ரகம் தான் , ஆனால் பின்னணி இசையில்  கலக்கி இருக்கிறார் 

ரியாஸ் இஸ்மாத்தின்  திரைக்கதைக்கு  உயிர் ஊட்டி  இயக்கி இருப்பவர்  அமல்  கே  ஜோபி 

சபாஷ்  டைரக்டர்

1   ஒரு சாதாரண  ரிவஞ்ச்  த்ரில்லர்  கதையை  பிரமாதமான  முன் பாதி  திரைக்கதை  மூலம்  சுவராஸ்யமாக  சொன்ன விதம் அடடகாசம் 


2 நாயகனின்  கிரிமினல் மூளையைக்காட்டிட  அவர் டீல்  செய்யும்  முதல் கேஸை  மனைவியைக்கொலை செய்த நபரின் கேஸை எடுத்து ஜெயிப்பது  கதைக்கு பிளஸ் 


3  பல  இடங்களில் பிஜிஎம்  பட்டாஸைக்கிளப்புகிறது 


  ரசித்த  வசனங்கள் 

1  காலில் முள் குத்தினா  அதை  வேரோடு  நீக்கணும் .பள்ளிப்பாடன் கேஸ் கூட அந்தமுள்  மாதிரி தான் 


2    தப்பு செஞ்சது போலீசோ ,மிலிட்ரியோ  அதைத்தட்டிக்கேட்க எனக்கு தயக்கம் எதுவும் இல்லை 


3  மகன்  சம்பாதித்தக்காசு மகனிடம்  இருப்பதுதான் பெற்றோருக்கு சந்தோசம் 


4  புலியைப்பிடிக்க  பூனையையா வேட்டைக்கு அனுப்புவது ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகன்  வீட்டில் பணிப்பெண்ணாக  இருக்கும்  நபர்  மற்றவர்களிடம்  நாயகன்  எதையோ புதைப்பதைப்பார்த்தேன்  என்கிறார் .அப்போது  ஒரு  ஆள் என் நாயைக்காணவில்லை  என்கிறார் .போலீசிடம்  இருவரும்  அது  பற்றிக்கூறவில்லையே?  அது எதனால் ? 


2  நாயகன் ரத்தக்கறை  படிந்த  தன கையை  வாஷ் பேஷனில் கழுவினால் மேட்டர் ஓவர் . அவர் எதற்காக வெள்ளைக்கர்ச்சிப்பில்  துடைத்து அதை  எரிக்க வேண்டும் ?


3   வண்டியில் லைட் இல்லையா? என்று போலீஸ் கேட்டதுக்கு வேண்  டிரைவர்  வழியில்  ஒரு ஆக்சிடென்ட்   என்று  வான்ட் டடாக  போய் சிக்குவது ஏனோ? 


4    நாயகனின்  வீட்டில் பணிப்பெண்ணாக  இருப்பவரிடம்  போலீஸ்  நைட் டைம் போலீஸ் ஜீப்பில் போய்  யூனிபார்முடன்  அவரிடம்  உதவி கேட் கின்றனர்.  வேற  யாருக்கும் நீங்க உதவி செய்வது தெரியாம பார்த்துக்கறோம் என்கின்றனர்  . அதுக்கு மப்டிலே வந்திருக்க வேண்டும் 


5   நாயகன்  மீது கொலைப்பழி சுமத்தி போலீசில் புகார்  கொடுத்த  நாயகன்  வீட்டுப்பணிப்பெண்ணை  மீண்டும்  நாயகன்   வேலைக்கு  வர சொல்வது  ரிஸ்க் .கிரிமினல் லாயரிடம் பணி  புரிந்த புத்திசாலி ஆன நாயகன்  மடத்தனமாக முடிவு எடுப்பது எப்படி ? 

6 ஒரு போலீஸ் ஆபீசர்  போர்டுல /பேப்பர்ல  வரைந்து விளக்காம  தரலோக்கல்  டிக்கெட் மாதிரி  சுவர்ல கரித்துண்டால படம் வரைந்து பாகங்களைக்குறிச்சுட்டு இருக்காரு ? 

7நாயகன்   வில்லனை டக்னு  கொல்லாம அவனை சேர்ல கட்டி வெச்சு  கொலைக்குப்பின்  தான் எப்படி தப்பிக்கப்போறேன்  என  கிளாஸ்  எடுத்துட்டு இருக்காரு 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  க்ரைம்  திரில்லர்  ரசிகர்கள்   அவசியம்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Gumasthan
Theatrical release poster
Directed byAmal K. Joby
Written byRiyaz Ismat
Produced byMuzafir Abdulla
StarringBindhu Sanjeev
Nibin Navas
Aathira Rajeev
Bibin George
Dileesh Pothan
CinematographyAyub Khan
Edited byKunjunni S. Kumar
Music byStephen Devassy
Release date
  • 27 September 2024
CountryIndia
LanguageMalayalam

Tuesday, November 12, 2024

LONG LEGS (2024) - அமெரிக்கன் மூவி - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( மிஸ்டரி ஹாரர் திரில்லர்) @ அமேசான் பிரைம்

               

  10 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 119  மில்லியன் டாலர் வசூல் செய்து அபார வெற்றி பெற்ற படம் .12/7/2024 அன்று அமெரிக்காவில்  ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம்  ஒடி டி யில்  தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது 


போஸ்ட்டர்  டிசைன்ஸ்  எல்லாம் பார்க்கும்போது  இது சைலன்ஸ ஆப் த லேம்ப்ஸ் (1991) ,செவன் (1995) , ஜோடியாக் (2007)  ஆகிய படங்களை நினைவுபடுத்துவதாக பலர் கருத்துக்கூறி இருந்தனர்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு சீரியல் கில்லர்  10 குடும்பங்களை 30 வருடங்களில்   ஒரு ஏரியாவில் போட்டுத்தள்ளி இருக்கான் .கொலை செய்யப்பட குடும்பத்தில்  ஒற்றுமையான விஷயம் அந்தக்குடும்பங்களிலே யாரோ ஒரு குழந்தை க்கு 14ம் தேதி பிறந்த நாளாக இருந்ததுதான் . இந்த கேஸை  விசாரிக்கும் பொறுப்பு  நாயகிக்கு  தரப்படுது 


அம்மா , அப்பா ,குழந்தை   ஆகிய 3 பேர்  இருக்கும் குடும்பம் ,அதில் அப்பா தான்  தன மனைவியை , குழந்தையைக்கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து  கொள்கிறார். இந்தக்குடும்பத்தில் மட்டுமல்ல , கொலை செய்யப்பட அனைத்துக்குடும்பங்களிலும் இதே   கதை தான் . கொலைகாரன்  எப்படியோ  தூண்டி விட்டு இந்தக்கொலைகளை செய்ய வைக்கிறான்   என்பது தெரிய வருகிறது 

எப் பி ஐ  ஏஜென்ட் ஆக இருக்கும் நாயகிக்கு இ எஸ் பி  பவர் இருக்கிறது . யாராலும் தீர்க்க முடியாத இந்தக்கேஸை  நாயகியிடம்  ஒப்படைக்கிறார்கள் 

கேஸை எடுத்த சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் .அப்போது  நாயகியின் ஹையர் ஆபீஸருக்கு சில சந்தேகங்கள்  எழுகின்றன .

சீரியல்  கில்லருக்கும்  , நாயகிக்கும் ,நாயகியின் அம்மாவுக்கும் எதோ ஒரு தொடர்பு இருப்பதாக சந்தே கிக்கிறார் .


 நாயகி 8 வயது சிறுமியாக  இருந்தபோது கொலைகாரன்  நாயகியைக்கொலை  செய்ய முயற்சித்தது  தெரிய வருகிறது . நாயகியின்  பிறந்த தேதியும் 14  தான் .நாயகி யை கொலை செய்யாமல் கொலைகாரன் தப்பிக்க விட்டது எதனால்? நாயகியின் அம்மாவுக்கும் , கொலைகாரனுக்கும் என்ன டீல் என்பதை  மீதி திரைக்கதை சொல்கிறது  



நாயகி ஆக மைக்கா மொன்றோ  பிரமாதமாக நடித்திருக்கிறார் . இவரது முகத்தில்   இருக்கும் அமைதியான மர்மம் ஒரு பிளஸ் .நாயகியின் அம்மாவாக அலிசியா விட்  கச்சிதமாக நடித்திருக்கிறார் .சீரியல் கில்லர் ஆக  வில்லன் ஆக நிக்கோலஸ் கேஜ் நடித்திருக்கிறார்.ஆள் அடையாளமே  தெரியவில்லை . ஆனால் சிட்டிசன்  அஜித் போல , இரு முகன்  லேடி கெட்டப்  விக்ரம் போல  இதுவும் பொருந்தவில்லை 


. படத்தின்  தயாரிப்பாளர் களில் நிக்கோலஸ் கேஜ்-ம் ஒருவர் .கிரேக் நிக்கின்  எடிட்டிங்கில் படம் 101 நிமிடங்கள் ஓடுகின்றன .பொறுமை மிகத்தேவை .முதல் பாதி ரொம்ப ஸ்லோ . இசை ஜில்கி  ஒளிப்பதிவு  ஆன்டீ ரிஸ்  இருவரும் இணைந்து திகிலான மூடு செட் செய்வதில் வெற்றி பெறு கிறார்கள்  

சபாஷ்  டைரக்டர்


1  ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன்  திரில்லரை  ஹாரர்  திரில்லர் மாதிரி  பேய்ப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்த விதம் 


2 நாயகி  தன வீட்டில் இருந்தே வில்லனின்  போட்டோவைக்கொண்டு வந்து தரும் சீன் , வில்லனின்  இருப்பிடத்துக்குப்போகும்போது நாயகியின்  கொலீக்  சுடப்படும் சீன்  நல்ல  திரில்லிங்க் 


3  வில்லனுக்கும் , நாயகியின் அம்மாவுக்குமான  பிளாஸ்பேக் காட்சிகள் குட்  


ரசித்த  வசனங்கள் 

1  சஸ்பெக்ட்க்கு  ஒரு குறிப்பிட்ட இடத்தில்  இருப்பதுதான் ரொம்பப்பிடிக்கும் 


2  சில விஷயங்களை தொடர்ந்து ரொம்ப நேரம் பார்த்துட்டு இருக்கக்கூடாது 


3  நீங்க சின்னக்குழந்தையா  இருந்தப்போ  போலீஸ்  ஆகணும்னு நினைச்சிங்களா? 


இல்லை ,நடிகை ஆகணும்னு நினைச்சேன் 


எல்லாருமே  அப்படித்தான் ஆக ஆசைப்படறாங்க 


4 எட்டு  வருஷம்  நர்சா வேலை பார்த்தால பார்க்கக்கூடாத பல மோசமான விஷயங்களைப்பார்த்திருக்கேன் 


5  பிரேயர் பண்றதை நிறுத்தாத.சாத்தான் கிட்டே இருந்து அது உன்னைக்காப்பாத்தும் 


6   இருட்டைக்கண்டு உனக்குக்கொஞ்சம் கூட பயம் இல்லை , ஏஞ்சல்,       ஏன்னா   நீ தான்  அந்த இருட்டே 


7   நான் இங்கே மட்டுமில்ல .எல்லா இடங்களிலும் கொஞ்சம்  கொஞ்சமா  இருப்பேன் . யாரும் எதிர்பார்க்காத இடத்தில் காத்துக்கிட்டு இருப்பேன்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  த்ரில்லர்  மூவி என்றால்  அடுத்து என்ன ஆகும் ? யாருக்கு ஆபத்து வரும் ? அதை எப்படி தடுப்பார்கள்?என்ற பரபரப்பு இருக்கணும் .ஆனால் எல்லாம் இதில் மிஸ்ஸிங்க் 


2  நாயகியும் , கொலீக்கும், ஹையர் ஆபிசரும்  எங்கே போனாலும்  பகலில் போகாமல் இரவில் போவது எதனால் ? 


3  இன்வெஸ்டிகேஷன்  போர்சன்  சரி இல்லை 


4  வில்லனின்  போட்டோ வைத்தான்  நாயகி  தருகிறார் .கூகுள் லொக்கேஷனையே  ஷேர்  செய்த மாதிரி   அடுத்த சீனிலேயே வில்லனை பிடிப்பது எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பில்டப் கொடுத்த அளவுக்கோ , இவ்ளோ பெரிய ஹிட்படம்    என்ற  தகுதிக்கோ  உள்ளே சரக்கு  இல்லை . சுமார் ரகம் தான் . ஆனால் பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.5 / 5 


Longlegs
Theatrical release poster
Directed byOsgood Perkins
Written byOsgood Perkins
Produced by
  • Dan Kagan
  • Brian Kavanaugh-Jones
  • Nicolas Cage
  • Dave Caplan
  • Chris Ferguson
Starring
CinematographyAndrés Arochi Tinajero
Edited by
  • Greg Ng
  • Graham Fortin
Music byZilgi
Production
companies
Distributed byNeon
Release date
  • July 12, 2024
Running time
101 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget<$10 million[2]
Box office$119 million[3][4]

Monday, November 11, 2024

VIVEKANANDAN VIRALANU(2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம் ,சைனா பிளே

             

  1986ல் மிழிநீர்ப்பூவுகள் என்ற தன் முதல் இடத்தை இயக்கிய மலையாளப்பட  இயக்குனர் கமல் இதுவரை 40  படங்கள் இயக்கி இருக்கிறார் . பிரணய மீனுகளோட காதல் (2019) படத்துக்குப்பின்  5 வருட இடைவெளி எடுத்துக்கொண்டு  இப்படத்தை இயக்கி இருக்கிறார், வில்லன் நடிகர்   குணச்சித்திர  நடிகர் ஷைன் டாம் சாக்கோ  வின் 100 வது  படம்  இது . 


நம்ம  ஊர்  ஜெமினிகணேசன் நடித்த  நான் அவன் இல்லை (1974) ஜீவன்   நடித்த நான் அவன் இல்லை(2007) நான் அவன் இல்லை  2  (2009)  கதை போல  ஒரே ஆள் பல பெண்களை  காதலிக்கும் , ஏமாற்றும் கதை    தான்  படத்தின்  முதல் பாதி . அருவி (2017) படத்தின் முதல் பாதி யின்  சாயலில்  படத்தின் பின் பாதி    


19/1/2024  அன்று திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம் இப்போது  ஓ  டி டி யில் காணக்கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கில் இல்லை .ஆங்கில  சப் டைட்டில்  உண்டு விவேகானந்தன்  வைரல் ஆகிறான் என்பதுதான் டைட்டிலுக்கான அர்த்தம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  என்று  சொல்ல முடியாது , அதனால்  வில்லனுக்கு  மேரேஜ்  ஆகி விட்டது . ஒரு மகள்  உண்டு . அம்மா , அப்பா ,மனைவி , மகள்  உடன்  கூட்டுக்குடும்பம் நடத்தி  வருகிறான் 


வில்லன்  ஒரு சாடிஸ்ட் , சைக்கோ . பெண்ணைத்  துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன். இதனால்  வில்லனின்  மனைவியின் உடம்பில் பல காயங்கள் உண்டு 


 வில்லன்  ஒரு அரசுப்பணியாளன் . வாரத்திற்கு 5 நாட்கள்  வெளியூரில் பணி .சனி , ஞாயிறு  மட்டும்  வீட்டில் இருப்பான்   


சேலம்  சித்த  வைத்தியர்  மாதிரி  ஒரு டுபாக்கூர்   வைத்தியர்  சொன்னபடி  சில லேகியங்களை  சாப்பிட்டு  வருபவன் .வாரத்தில்  இரு நாட்கள்  மனைவியைக்கொடுமைப்படுத்துவது   போதாது என்று  மீதி 5  நாட்கள்  வெளியூரில்  இருக்கும்போது  ஒரு பெண்ணை  ஆசை  நாயகி ஆக்கி அவளையும் கொடுமைப்படுத்துகிறான் 


வில்லனின்  மனைவி , ஆசை நாயகி  இருவரும் சேர்ந்து  வில்லனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்கி றார்கள் .அவர்கள்  திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை 


வில்லன் ஆக  ஷைன் டாம் சாக்கோ  இதில் சைன்  பண்ண  அதிக  வாய்ப்பில்லை . முதல் பாதி  ரொமாண்டிக்  பாய் ஆக அவர் செய்யும்  லீலைகள்  சுமார் ரகம்  தான் . பின் பாதியில்  இவரது கேரக்டர்  டம்மி ஆகி விடுகிறது .அய்யோ  பாவம் 


 வில்லனின்  மனைவியாக  சுவாசிகா  பரிதாபம ஏற்படுத்தும் கேரக்ட்டர் . நடிப்பு பரவாயில்லை 


வில்லனின் ஆசை நாயகி ஆக  கிரேஸ்  ஆண்டனி  பாராட்ட வைக்கும்  நடிப்பு + அதிக காட்சிகள் + ஸ் கோப் எல்லாம்  இவருக்குத்தான் . பிரித்து மேய்ந்து இருக்கிறார் 


,யு ட்யூபராக  மெரீனா ஸ்டைலிஷான   நடிப்பு  வில்லனின் அப்பாவாக  ஜானி ஆண்டனி , அம்மாவாக  மாலா பார்வதி  சிறப்பான  நடிப்பு 

பிஜிபாலின்  இசையில்  இரு பாடல்கள்  சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் . பிரகாஷ்   வேலாயுதத்தை ஒளிப்பதிவில்  படத்தில்  வரும் ஐந்து பெண்  கதாபாத்திரங்களும்  அழகாக  தெரிகிறார்கள் .ரஞ்சசன் ஆப்ரஹாம் எடிட்டிங்கில்  படம்  2 மணி  நேரம்   ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


 1  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும்  வில்லனின்  அப்பா , அம்மா  இருவருக்குமான பிணக்குகள் ,ஊடல்கள்  அருமை .க்ளைமாக்சில்  வரும்  அப்பா வின்  முன்னாள்  காதலி  டிவிஸ்ட்  அழகு


2   நேர் கொண்ட  பார்வை , பிங்க் படத்தின்    மையக்கருவான நோ மீன்ஸ் நோ   என்பதை அழுத்தமாக  சொல்லி பெண்களின்  கவனத்தை  ஈர்த்தது 


3  மெரீனா,கிரேஸ்  ஆண்டனி  இருவரின்  அருமையான நடிப்பு  



  ரசித்த  வசனங்கள் 

  1 இந்த  லேகியத்தை  தேன்ல கலந்து சாப்பிடணும் 


டாக்டர் . எனக்கு தேன்  அலர்ஜி 

 அப்ப  ரம்ல  கலந்து சாப்பிடு 

நான் டி  டோட்டலர் ஆச்சே ? 

எப்பவாவது  ஒரு டைம்  குடிச்சா  தப்பில்லை . பொண்ணுங்களுக்கு  சரக்கடிக்கும் ஆண்களைப்பிடிக்கும்      


2     நீங்க சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? 


மருந்தா  யூஸ் பண்ணிக்கலாம்னு டாகடர் சொன்னாரு 


 எல்லாருக்குமே  இது மருந்துதான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன் இன்சூரன்ஸ்  சம்பந்தப்பட்ட ஒரு சான்றிதழை இறந்தவரின்  மகள்   வீட்டுக்கு தானே  நேரில் போய் தருகிறார் .அப்படி எல்லாம் செய்ய முடியாது .ரெஜிஸ்டரில் சைன் வாங்க வேண்டும் 


2  டொமெஸ்டிக்  வயலன்ஸ்  என்ற சொல்  இப்போது  புகழ் பெற்று விட்டது . மனைவியை கை  நீட்டி  அடித்தாலே  ஜெயில் என்ற பயம் ஆண்களுக்கு உண்டு , வில்லன் அந்த பயம் எல்லாம் இல்லாமல் தெனாவெட்டாக இருப்பது எப்படி ?


3  வில்லனால் பாதிக்கப்பட்ட  4 பெண்களுமே  போலீசில் புகார் கொடுக்காதது எதனால் ? 


4  வில்லனின் அப்பா க்ளைமாக்சில் மட்டும்   வில்லனைக்கண்டிக்கிறார் 


5 கூட்டுக்குடும்பமாக  இருக்கும்போது  மாமியாரிடம் தன காயங்களை மருமகள் காட்டாதது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி சுமாராக  இருக்கு , பின் பாதி நம்பகத்தன்மை இல்லை . சொல்ல வந்த கருத்து குட் . ரேட்டிங்க் 2.25 / 5 


Vivekanandan Viralanu
Directed byKamal
Written byKamal
Produced by
  • Nediyath Naseeb
  • P.S.Shelliraj
  • Kamaludheen Saleem
  • (Co-producer)
  • Suresh Sak (Co-producer)
Starring
CinematographyPrakash Velayudhan
Edited byRanjan Abraham
Music byBijibal
Production
company
Nediyath Productions
Distributed byMagic Frames
Release date
  • 19 January 2024[1]
CountryIndia
LanguageMalayalam

Wednesday, November 06, 2024

BROTHER (2024) - பிரதர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஜவ்வு சீரியல் மெலோஓஓ டிராமா )

               


       தமிழ்  சினிமாவில் ஒரு செண்ட்டிமெண்ட்  உண்டு . நாயகர்கள்  திருமண வாழ்வில்  டைவர்ஸ்  நடந்து விட்டால் அவர்கள்  மார்க்கெட் அவுட் ஆகி விடும் . உதா  ராமராஜன் , பிரசாந்த்  ( கமல்  இந்த லிஸ்ட்டில் இடம் பெறாததற்குக்காரணம்  அவர்  புத்திசாலித்தனமாக  உடனடியாக ரெடி ஸ்டாக்  ஜோடி வைத்திருப்பதால் )  அந்த  லிஸ்ட்டில்  புதிதாக  இடம்  பிடித்திருப்பவர்  ஜெயம்  ரவி . அவரது லேட்டஸ்ட்  படங்கள்  தொடர்ச்சியாக  அட்டர்  ஃபிளாப்  ஆகி வருகின்றன ( விதிவிலக்கு  பொன்னியின்  செல்வன் ) 


எம் ராஜேஷ்  இயக்குநர்  ஆக   அவதாரம்  எடுத்த  முதல் படமான சிவா மனசுல சக்தி ( 2009) , பாஸ் என்கிற  பாஸ்கரன் ( 2010)  இரண்டும்  மெகா  ஹிட் . ஒரு கல்  ஒரு  கண்ணாடி (2012) ஹிட் ,  ஆல் இன்  ஆல்  அழகு ராஜா (2013) அட்டர் ஃபிளாப்  , வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க (2015)  சுமார் , கடவுள் இருக்கான்  குமாரு (2016) சுமார் ,  மிஸ்டர் லோக்கல் (2019)  டப்பாப்டம் , வணக்கம்டா மாப்ளை ( 2021)  சுமார் . இவரது  கடைசி  3  படங்களில்  சந்தானம்  இல்லை , அதனால் சரக்கில்லை என பேசப்ட்டது . இவரது  மைனஸ்  எல்லாப்டங்களிலும்  ஒரே  மாதிரி  திரைக்கதை  அமைப்பு ,  போர்  அடிப்பதுதான் . தீபாவளி  ரேசில்  லாஸ்ட் ப்ளேஸ் + ஒர்ஸ்ட் மூவி  இதுதான் . ஆனால் டி வி   சீரியல்கள்  பார்க்கும்  பெண்களைக்கவரும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  ஒரு  வெட்டாஃபீஸ் . அம்மா, அப்பாவுக்குப்பாரமாக  இருக்கிறான் . இவன்  தினசரி  கூட்டும்  பஞ்சாயத்துகளால்  அவனது அப்பாவுக்கு பி பி  ஏறி   ஹார்ட்  அட்டாக்கே  வருகிறது . அப்பாவைப்பார்க்க  ஹாஸ்பிடல் வரும்  நாயகனின்  அக்கா  தம்பியை  என்  கூடவே  கூட்டிட்டுப்போறேன்  என  தன்  புகுந்த  வீட்டுக்கு அழைத்து  செல்கிறாள் 


 நாயகனின்  அக்காவின்  கணவர்  ஒரு  ஃபாரஸ்ட்  ஆஃபீசர் , மாமனார்  ஐ ஏ  எஸ்  கலெக்டர் , மாமியார்  ஒரு  அரசு தரப்பு வக்கீல்  எல்லாரும்  அரசாங்க  அலுவலர்களாக  இருப்பதால்  வீட்டில்  எல்லாம்  சிஸ்டமேடிக்காக  நடக்கும்  ஆனால்  நாயகனால்  அங்கு  ஃபிட்  ஆக  முடியவில்லை .  ஒரு  கட்டத்தில்  நாயகனால்  அக்காவின்  வீட்டில்  சண்டை  வருகிறது . நாயகனும், அக்காவும்  வீட்டை  விட்டு வெளியே  துரத்தப்படுகிறார்கள் . அவர்கள்  மீண்டும்  கூட்டுக்குடும்பமாக  இணைந்தார்களா? இல்லையா? என்பது  மீ9தித்திரைக்கதை 


மேலோட்டமாகப்பார்த்தால்  நல்ல  குடும்பப்பாங்கான  கதைதான் , ஆனால்  திரைக்கதை  சொதப்பலும்  , கேரக்டர்  டிசைன் போதாமையும்,  மோசமான  நடிப்பும்  சுமார் படத்தை  டப்பாப்படம் ஆக்கி விட்டது 


 நாயகன்  ஆக  ஜெயம்  ரவி . இவரது  நடிப்பு  மட்டும்  தான்  படத்தின்  ஒரே  ஆறுதல் . நாயகி  ஆக  பிரியங்கா  மோகன் . ஆள்  மைதா  மாவு  மாதிரி அழகாக  இருக்கிறார். ஆனால் அவர்  முகத்தில்  நடிப்பே  வர மாட்டேன்  என்கிறது . மிக  முக்கியமான  இடமான  காதலை  வெளீப்படுத்தும்  இடத்தில்  கூட  இன்னைக்கு சனிக்கிழமை  என்று  சொல்வது  மாதிரி  டயலாக்கை  ஒப்பிக்கிறார். இவர்  தேறுவது  ரொம்பக்கஷ்டம் 


நாயகனின்  அக்காவக  பூமிகா   சுமாரான  நடிப்பு .  ரோஜாக்கூட்டம்  படத்தில்  எல்லாம் இவருக்காக சில்லறையை சிதறவிட்டது நினைவு வருகிறது  ( லைட்ஸ் போட்டதும் இடைவேளை டைமில் சிதறிய சில்லறையைப்பொறுக்கியது தனி ) 


சதுரங்க வேட்டை  புகழ்  நட்டி  தான்  அக்காவின்  கணவர் . இவரது  நடிப்பு  தேவலாம்  ரகம் .  அக்காவின்  மாமனாராக  ராவ்  ரமேஷ்   கடுப்பேத்தறார்  மை லார்ட்  ரகம்  என்றால் மாமியாராக  வரும்  சரண்யா  பொன்  வண்ணன் நடிப்பு கொடுமையிலும்  கொடுமை 


நாயகனின்  அம்மாவாக  வரும்  சீதா  அக்மார்க்  சீரியல்  நடிகை  தான் . விடி வி  கணேஷ்  வில்லன் ஆக  மாறுவது  எல்லாம் சித்ரவதை யின்  உச்சம் 


 இசை  ஹாரிஷ்  ஜெயராஜ்  என்பதை  அவரது  சொந்த சம்சாரம்  கூட  நம்பாது . படு திராபையான  இசை . விவேகானந்த்  சந்தோஷம் தான்  ஒளிப்பதிவு . பால்கோவா  மாதிரி  அழகாக  இருக்கும் பிரியங்கா  மோகன்  க்ளோசப்  ஷாட்  ஒன்றைக்கூட  ரசனையாக எடுக்க முடியவில்லை என்றால் இவருக்கு எதுக்காக  இந்தத்தொழில்?  ஆஷிஃப்  ஜோசஃபின்  எடிட்டிங்கில்  இந்த  சீரியல்  140  நிமிடங்கள்  ஓடுகின்றது 


 திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  எம்  ராஜேஷ் . இவருக்கு  அடுத்த  படம் வாய்ப்புக்கிடைப்பது  மிகவும்  சிரமம் 



சபாஷ்  டைரக்டர்


1   இந்தப்படத்தை  சாதா  நாளில்  ரிலீஸ்  பண்ணி  இருந்தால்  ஒரு  காட்சியோடு  தூக்கி இருப்பார்கள், அதனால் புத்திசாலித்தனமாக   தீபாவளி  ரேசில் ஓட  விட்டு  ஒரு  வாரம்  ஓட்டி  விடும்  சாதுர்யம் 


2   டி வி  சீரியல்  மாதிரி  ஸ்கிரிப்ட்  ரெடி  பண்ணி  அதை  சினிமா  திரைக்கதை  என  தயாரிப்பாளரை  நம்ப வைத்த சாமார்த்தியம்


  ரசித்த  வசனங்கள் 


1    என் பர்த்டேக்கு  ஊரையே  கூட்டி வெச்சு  சாப்பாடு  போட்டாங்க , கடைசியா  என்னையே  கூட்ட  வெச்சாங்க 


2  அந்த  வீட்டு உப்பைத் தின்னு  பல  வருசம்  வாழ்ந்தவன் 


 யூரியாவையே  தின்னா  பி பி  வருமே? 


3  பல  வருசமா  இந்த  ஹாஸ்பிடல்  பிஸ்னெஸ்ல  இருக்கேன்... 


 உங்க  வாயால  இந்த  ஹாஸ்பிடல் சர்வீஸ்ல  இருக்கேன்னு  சொல்லாம  ஹாஸ்பிடல்  பிஸ்னெஸ்ல  இருக்கேன்...  என  உண்மையை  உளறிட்டீங்களே? சபாஷ் 


4  இப்போ  சின்ன  வயசுக்கு  ட்ராவல்  பண்ணப்போறீங்க 


 டைம்  டிராவல் ? 


 நோ , மைண்ட்  டிராவல் 


5  பிடிச்சவங்களூக்கு  ஹெல்ப் பண்ண பணம்  தேவை இல்லை , செய்யனும்கற  மனசு  இருந்தா  போதும் 


6  தனிமையில்  இருப்பது  ஒரு சாபம், அதை  நீ அனுபவிப்பே


7    திருப்பி  அடிக்க  முடியாத  இடத்தில்  ஒருத்தன்  இருக்கும்போது  அவனை   ஓங்கி அடிப்பதுதான்  அதிகார  வர்க்கத்தின்  குணம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   டின்னர்  டெய்லி  மாலை  6.30  க்கு  சாப்பிடனும் 7.30 க்கு  தூங்கிடனும்னு ஸ்ட்ரிக்ட்டா  சொல்லும்  மாமனார்க்குத்தெரியாதா?  டின்னர் முடித்து   3  மணி நேரம்  கழித்துத்தான்  தூங்க  வேண்டும்  என்பது ? 


2   நாயகன்  ஹோட்டலில்   நடத்திய  அடிதடி  ரகளையால்   உடைந்த  பொருட்களின்  பில்  8 லட்ச  ரூபாய்  வருகிறது . மாதம்  70,000  சம்பளம்  வாங்குவதை  கட்  பண்ணி  ஒரு  வருசம்  சம்பளம்  இல்லாமல்  வேலை  செய்யனும்னு  சொல்றாங்க ., நாயகனே  ஒரு  வெட்டித்தணடம் . அவருக்கு எதுக்கு வெட்டியா  அவ்ளோ சம்பளம் ? 


3   மேத்ஸ்  மிஸ்  - பி டி மாஸ்டர்  இருவருக்கும்,  விவாதம்  நடக்கும்போது  ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ்  கிளாப்ஸ்  பண்றாங்க , இதுகு அனுமதி  உண்டா?  அது  ஸ்கூலா? சினிமா தியேட்டரா? 


4   கார்    டேங்க் ஃபுல்லா  பெட்ரோல்  ஃபில்  பண்ணீட்டேன்னு  ஒரு  டயலாக்  வருது . அடுத்த  நிமிசமே  5  லிட்டர்  தானம்  பண்ணீனேன்.  டிரை  ஆகிடுச்சுனு  ஒரு  டயலாக் .ல் ஒரு  காரின்  ஃபுல்  டேங்க்    கெபாசிட்டி 5  லிட்டர் தானா? 


5  ஓப்பனிங்  சீன்ல  நாயகன்  செய்த  சின்ன  தப்புக்கே  அப்பாவுக்கு பிபி  எகிறி  180 /100   ஆகுது . ஆனா  இடைவேளை  அப்போ  அவ்ளோ  பெரிய  அதிர்ச்சி  தந்தும்  அப்பாவுக்கு எதுவும்  ஆகல


6   பூமிகா  ஒரு  சீனில்  சிந்தாமணி  கலர்ல  சூப்பரா  ஒரு  ஜாக்கெட்  போட்டு  வர்றாங்க , ஆனா  சேலை  கொஞ்சம் கூட  மேட்சா  இல்லை  ( நாட்டுக்கு  ரொம்ப  முக்கியம் )  


7    ஊட்டில  கதை  நடக்குது  என  சொல்லி விட்டதால்  படத்தில் இரண்டே  இரண்டு  பெண்  கேரக்டர்கள்  மட்டும் ஸ்வெட்டர்  போட்டுட்டு  வர்றாங்க . மீதி  எல்லாரும்  இயல்பா  வர்றாங்க 


8    நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்  ஆகவில்லை 

9   ஹோட்டல்ல  நாயகனும்,  அக்கா  மாமனாரும்  உக்கார்ந்து  சாப்பிடுவது  போல ஒரு  சீன். கெட்  அவுட்  ஃப்ரம்  மை ஹவுஸ்  என்கிறார் 


10   நாயகனின்  அப்பா  ஒரு கட்டத்தில்  நீ என் மகனே  இல்லை , அனாதை  என  ஃபிளாஸ்பேக்கில்  குண்டு  போடுவது  ஓவரோ ஒவர் 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆண்களுக்கு  இந்தப்படத்தில்  வேலையே  இல்லை ,. டி வி  சீரியல்  பார்க்கும்  பெண்கள்  பார்க்கலாம்.  விகடன்  மார்க் 30  ரேட்டிங்  1.75 / 5 


Brother
Theatrical release poster
Directed byM. Rajesh
Written byM. Rajesh
Produced bySundar Arumugam
Starring
CinematographyVivekanand Santhosham
Edited byAshish Joseph
Music byHarris Jayaraj
Production
company
Screen Scene Media Entertainment Pvt. Ltd.
Distributed byAyngaran International
Release date
  • 31 October 2024
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box officeest. 8.20 crore[2]

Tuesday, November 05, 2024

பிளடி பெக்கர் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹியூமர் ஹாரர் திரில்லர்)

             


  நயன்  தாரா  நடிப்பில்  கோலமாவு  கோகிலா (2018) ,   சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (2021)      ,, ரஜினி நடிப்பில்  ஜெயிலர்( 2023)   ஆகிய  3  வெற்றிப்படங்களையும்   , விஜய் நடிப்பில்  பீஸ்ட்  (2022)   என்ற  டப்பாப்படத்தையும்  கொடுத்த இயக்குநர்  நெல்சன்  ஒரு  வித்தியாசமான  இயக்குநர். பிளாக்  ஹ்யூமர் படங்களை  இயக்குவது  அவர்  பாணி , அவரது  தயாரிப்பில் , அவரது  அசிஸ்ட்ண்ட்  டைரக்டர்  ஆன   சிவபாலன்  முத்துக்குமாரை  அறீமுக  இயக்குனர்  ஆக   அறிமுகப்படுத்தி  இருக்கும்  படம்  தான்  இது 


ஒரே  ஒரு  பங்களாவில் 90%  படத்தைமுடித்து  புதுமுகங்களை  வைத்தே   காசை  மிச்சம்  பண்ணீயதற்காக  பாராட்டலாம் . தீபாவளி  ரேசில்  நெம்பர் 3  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  சிறுவனாக  இருக்கும்போதே   பிச்சைக்காரனாக  வளர்கிறார் . இவர்  ஒரு  அனாதை . இவருக்கு  ஒரு  காதலி . அவரை  மணம்  முடிக்கிறார். இருவருக்கும்  ஒரு  மகன்  பிறக்கிறான் . ஒரு  கார்  விபத்தில்  மனைவி  பலி  ஆக  நாயகன்  தன்  மகனுடன்  இப்போது  பிச்சை  எடுத்து  வருகிறார் . மகனுக்கு  இவர்  தான்  தன்  அப்பா  என்பது  தெரியாது 


ஒரு  மிகப்பெரிய    செல்வந்தர்  இறக்கிறார்.  தன்  கடைசி  ஆசையாக  25  பிச்சைக்காரர்களுக்கு  ஒரு  வேளை  விருந்து படைக்க  வேண்டும்  என  தெரியப்படுத்தியதால்  24  பேரைப்பிடித்து  விட்ட  அவரது  குடும்பம்  25  வது  நபர்  ஆக   நாயகனை  அழைத்துச்செல்கிறார்கள்  . நாயகன்  அங்கே  போய்  விருந்து  சாப்பிட்டு  விட்டு  திருட்டுத்தனமாக  மாளிகைக்குள்  புகுந்து  விடுகிறார் . அங்கே  2  நாட்கள்  ஜாலியாக  இருக்கலாம்  என்பது  நாயகனின்  திட்டம்


 ஆனால்  ஆட்டோமேட்டிக்  லாக்  என்பதால்  மாளிகை  உள் பக்கமாக  பூட்டிக்கொள்கிறது . நாயகன்  உள்ளே  மாட்டிக்கொள்கிறான் . மாளிகைக்கு  உள்ளே  இறந்த   செல்வந்தனின்  உறவினர்கள்   சொத்தை  அபகரிக்க  சதித்திட்டம்  போடுகிறார்கள் .


 பிச்சைக்காரன்  ஆன  நாயகனை  வாரிசு  போல்  நடிக்கச்சொல்கிறார்கள் . ஒரு  கட்டத்தில்   சொத்துக்காக  நாயகனைக்கொலை செய்ய  அனைவரும்  துரத்துகிறார்கள் . நாயகன்  தப்பித்தானா? இல்லையா?   என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக   கவின்  கெட்டப்பில்  கச்சிதம் , நடிப்பில்  மெச்சும் விதம்  என  பாராட்டுப்பெறுகிறார் . ரெடின்  கிங்க்ஸ்லி  காமெடி  என்ற  பெயரில்  படம்  முழுக்கக்கத்திக்கொண்டே  இருக்கிறார். ஒரு  சீனில்  கூட  சிரிப்பு வரவில்லை 


மற்ற  அனைவரும்  புதுமுகங்கள் . அவர்களில்   புருவங்களை  வளைத்தே  வில்லி  ஆக  மிரட்டும் பெண்  கவனிக்க  வைக்கிறார். மற்ற  அனைவரும்  அனுபவம்  இல்லாத  நாடக  நடிகர்கள்  போல  சொதப்பி  இருக்கிறார்கள் . ராதாரவிக்கு கெஸ்ட்  ரோல் 


நாயகனின்  மனைவியாக  வரும்    மெரின்  பிலிப்  அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே 


 ஃபிளாஸ்பேக்கில் வில்லி  ஆக  வருபவரும் , இன்னொரு  நாயகி  ஆக  வருபவரும்  சுமார்  ரகம் .


 ஜென்  மார்ட்டின்  தான்  இசை. காது  வலிக்கும் அளவு  பிஜிஎம்மைப்போட்டுத்தாக்கி இருக்கிறார் .ஆர்  நிர்மல்  எடிட்டிங்கில்  படம்   139  நிமிடங்கள்  ஓடுகிறது


  சுஜித்  சாரங்க் தான்  ஒளிப்பதிவு . ஒரே  பங்களாவில்  கதை  நடப்பதால்  சவாலான பணி தான்   திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் சிவபாலன்  முத்துக்குமார்


சபாஷ்  டைரக்டர்


1      2019  ஆம்  ஆண்டு  வெளியான  ரெடி  ஆர்  நாட்  என்ற  ஹாலிவுட்  படத்தை  சத்தம்  இல்லாமல்  அட்லீ  ஒர்க்  செய்து ஒரு  கதை  ரெடி  செய்தது 


2    மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  . ரெடின்  கிங்க்ஸ்லி  கேரக்டர்  இருந்தாலும்  படம்  நெடுக  அவரை  உலவவிட்டது 


3   ஒரே  பங்களாவில்  முழுப்படத்தையும்  முடித்தது 



  ரசித்த  வசனங்கள் 


1   இந்த   சொசைட்டிக்கு  பிச்சைக்காரனும்  தேவை தான். யாராவது  ஒழுக்கமா  இல்லைன்னா    அவனைத்திட்ட”  நீ  ஒழுங்கா  இல்லைன்னா  கடைசில  பிச்சைதான்  எடுக்கனும்  என  சொல்லவாவது  பிச்சைக்காரன்  யூஸ்  ஆகிறான் 


2   கதாபாத்திரமா  வாழனும், நடிக்கக்கூடாது 


3   வாழ்க்கைல  நம்ம  கர்மாவுக்கு  நாம  பதில்  சொல்லியே  ஆகனும் 


4  என்னாலயே  அந்த  முகத்தைப்பார்க்க  முடியலை . , நிமிசத்துக்கு  மூணு  தடவை  ஐ லவ்  யூ  சொல்லனுமே , உன்னை நினைச்சா..    எவ்ளோ  சிரமம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகனின்  மனைவியை  காரில்  மோதிய  பெண்   நாயகனை  ஃபிளாஸ்பேக்  சீனில்  பார்க்கும்போது  நாயகன்  தாடியுடன்  இருப்பதால்  அடையாளம்  தெரியாதது  ஓக்கே . ஆனால்  தன்  மனைவியை  கார்  மோதி  இடித்த  பெண்ணை  க்ளோசப்பில்  பார்த்த  நாயகன்  பிறகு  அதே  பெண்ணை  சந்திக்கும்போது  அவருக்கும்  அடையாளம்  தெரியவில்லையே ? அது எப்படி ? அந்தப்பெண்  தாடி  வைத்திருக்கிறாரா? மேக்கப்பில்லாமல்  இருந்தாரா|  ஏன்  அடையாளம்  தெரியவில்லை ? 


2   காமெடியன்  ஆக  வரும்  ஒரு  கேரக்டர்  இறந்து  போன  ஆத்மா . ஆவி . அவர்  மற்ற  யார்  கண்களுக்கும்  தெரியாமல்  நாயகன்  கண்களுக்கு  மட்டும்  தெரிவது  எப்படி ? 


3   ஒரு  பெரிய  செல்வந்தனின்  உயிலைப்படிக்கும்போது  வக்கீல் உரிய  பாதுகாப்பில்லாமல்  தனியே  வருவாரா? 


4    திரைச்சீலையின்  மறைவில்  ஒளிந்திருக்கும்  நபரை  முகத்தைப்பார்க்காமல்   ஈட்டி  எறிந்து  கொல்வது  அபத்தம் .  பூட்ஸ்  காலைவைத்து  அது  தன்  மகன்  தான்  என்பது  தெரியாதா? 


5  ரெடின்  கிங்க்ஸ்லியின்  இரிட்டேட்டிங்கான  மொக்கை  நடிப்பு   சகிக்கவில்லை 


6     நாயகன்  ஆன  கவின் பிச்சைக்காரன்  ஆக  வரும்போது  ஓக்கே , ஆனால்  க்ளீன்  ஷேவ்  செய்து  கெட்டப்  மாற்றிய  பின்   கமல் , சிவாஜி  போல  பல  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் (  முதல்  மரியாதை  தவிர   பெரும்பாலான  படங்களில்  சிவாஜி  ஓவர்  ஆக்டிங்.  நாயகன்  வரை  இயல்பான  நடிப்பில்  பரிமளித்த  கமல்  அதற்குப்பின்   ஒவ்வொரு  படத்திலும்  தன்  தனித்தன்மை தெரிய  வேண்டும்  என  ஓவர்  ஆக்டிங்  ) 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிளடி பெக்கர்(2024)-தமிழ் - பட்டி டிங்கரிங் அட்லி வெர்சன் ஆப் Ready or not (2019)@அமேசான் பிரைம்.விகடன் மார்க் 40.ரேட்டிங் 2.25 /5.முதல் பாதி சுமார்.பின் பாதி வெகு சுமார்.காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.புதுமுகங்கள் நடிப்பு எடுபடவில்லை.கவின் மட்டும் ஓக்கே.தீபாவளி ரேசில் நெம்பர் 3


Bloody Beggar
Theatrical release poster
Directed bySivabalan Muthukumar
Written bySivabalan Muthukumar
Produced byNelson Dilipkumar
Starring
CinematographySujith Sarang
Edited byR. Nirmal
Music byJen Martin
Production
company
Filament Pictures
Distributed byFive Star K. Senthil
Release date
  • 31 October 2024
Running time
139 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box officeest. 6.25 crore[2]

Saturday, November 02, 2024

அமரன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பயோ பிக்சர் ஆக்சன் டிராமா )

                     

  மிலிட்டரி ஆபீசராக  நாயகன்  நடிக்க தமிழில்  வந்த மெகா ஹிட் படம் விஜய் நடித்த துப்பாக்கி (2012) .அஜித் நடித்த உன்னைக்கொடு என்னைத்தருவேன் (2000) அட்டர் பிளாப் . கே பாக்யராஜ் நடித்த  பவுனு பவுனு தான் (1991)தொடர் கதையாக பாக்யா வார இதழில் வந்த போது வரவேற்பைப் பெற்றாலும் படமாக  ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .ஆனால் இதில் நாயகன் மிலிட்டரி ஆள் கிடையாது  மிலிட்டரி ஆள் போல ஆள் மாறாட்டம்  செய்யும் கேரெக்டர் ,ஜீவா + மோகன்லால்  காம்போ வில்  வெளிவந்த அரண் மலையாள  டப்பிங்க்  படம் ஓடவில்லை .கீர்த்தி  சக்ரா(2000) என்ற  மலையாள ஒரிஜினல் ஓடிய படம் .ரஜினி நடித்த  ராணுவ வீரன் (1981) சுமார் ரகம் தான் .விஜயகாந்த்  கேப்டன் ஆக நடித்த செந்தூரப்பூவே (1988) இண்டஸ்ட்ரி  ஹிட் கமல்  நடிப்பில்    வெளிவந்த  விஸ்வரூபம் பாகம் 1 (2013) ஹிட் ,விஸ்வரூபம் பாகம் (2018) சுமார் .காஸி ( தெலுங்கு டப்பிங்க் ( ghazi attack) சுமார் 


இந்திய நாட்டுக்காக தன்னுயிரையே தந்த ராணுவ வீரர்  மேஜர் முகுந்தின்    பயோ பிக்ஸர் தான்  இந்த அமரன் .சினிமா வுக்காக  சில காட்சிகள்  புனையப்பட்டவை .நவரச  நாயகன்  கார்த்திக் நடித்த அமரன் (1992) படத்தின்  கதைக்கும்  ,இதற்கும்  சம்பந்தம் இல்லை .பாடல்கள் எல்லாம் மெகா ஹிட் ஆகி  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆனஅந்த  பழைய அமரன் அட்டர் பிளாப் ஆனாலும்  சென்ட்டிமென்ட் ஆக பயப்படாமல் இந்தக்கதைக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என வைத்திருக்கிறார்கள்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிறுவனாக இருந்த போது  ஒரு மிலிட்டரி பேரேடைக்காண்கிறான்  அப்போதே அவன் மனதில்  தான் ஒரு மிலிட்ரிமேனாக ஆகவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது . ஆனால்  வீட்டில் பெற்றோருக்கு சம்மதம் இல்லை . அவர்களைக்கன்வின்ஸ்  செய்து மிலிட்ரிமேன் ஆக முயற்சி செய்கிறான் 


நாயகன்  கல்லூரியில்  படிக்கும்போது  ஒரு மலையாள இன பெண்ணை சந்தித்துக்காதல் வசப்படுகிறான் .நாயகியின் அப்பா மிலிட்டரி கேம்பஸில் டாக்டர்  ஆகப்பணியாற்றுவதால்  தினசரி கண் முன் மிலிட்டரி ஆட்கள் மரணத்தைக்காண்பதால்  தன மகளுக்கு ஒரு மிலிட்ரிக்கார மாப்பிள்ளை வேண்டாம் என மறுக்கிறார் .அவரை கன்வின்ஸ்  செய்து தான் மணமுடிக்கிறார்  நாயகன் . திருமண  வாழ்க்கையில்  அவர்களுக்கு  ஒரு மகள் பிறக்கிறாள் 


 மிலிட்ரி  ஆபீசர் ஆக  அவர் அடைந்த  பிரமோஷன்கள் ,தீவிரவாதிகளைப்பிடிக்க  நடத்திய ஆபரேஷன்கள் , அவரது வீர மரணம்  பற்றிப்பேசிய படம் தான் இது  


நாயகன்  ஆக சிவா கார்த்திகேயன்  அட்டகாசமான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்திருக்கிறார் .கேரக் டருக்காக  தன உடலை வருத்தி கெட்டப் சேஞ்ச்  செய்யும் கமல் ,விக்ரம் , சூர்யா  வரிசையில்  இவரும்  இணைந்திருக்கிறார் . ரஜினி முருகன் மாதிரி கமர்சியல் ஹீரோவாகப்பார்த்த நமக்கு இம்மாதிரி ரோல் புதுசு 


நாயகி ஆக  சாய் பல்லவி  உயிரோட்டமான  நடிப்பை வழங்கி இருக்கிறார் . இந்த வருடத்தின்  சிறந்த நடிகைக்கான தேசிய விருது நிச்சயம் . பல  காட்சிகளில்  இவரது நடிப்பு  நம்  புருவங்களை  உயர்த்த செய்கிறது 


 நாயகனின்  அம்மாவாக நடித்தவரும்  அருமை .மற்ற  அனைத்துகேரக்டர்களும் குட் 


ஜி வி பிரகாஷ் குமாரின் இசை அட்டகாசம் .எல்லாமே மெலோடி சாங்க்ஸ் .பின்னணி இசையும் கலக்கல் ரகம் . சாய்   தான் ஒளிப்பதிவு . சாய் பல்லவியின்  கன்னக்கதுப்புகளை , பருக்களைக்கூட  ரசிக்கும் வண்ணம்  படம் பிடித்து இருக்கிறார் 


 ஆர் கலைவாணன்  எடிட்டிங்கில்  படம் 169  நிமிடங்கள்  ஓடுகிறது .பின் பாதியில்  20 நிமிடங்கள் இன்னும் ட்ரிம் பண்ணி  இருக்கலாம் . நாயகி  வரும் 53  நிமிடங்கள்  மிகவும்  ரசிக்க முடிகிறது 


சிவ அரூர் எழுதிய இந்தியாவின் மாடர்ன் மிலிட்டரி ஹீரோஸ்  புத்தகத்தை  தழுவி திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  ராஜ் குமார் பெரிய சாமி , இவர் ஏற்கனவே  ரங்கூன்  (2017) என்ற கிரைம்  திரில்லர்  படத்தை  இயக்கியவர் 

 மேஜர் முகுந்த்  தனது மகளுடன் இணைந்து பாடி வெளியிட்ட அச்சம்  இல்லை  பாட்டு வீடியோ  பார்த்து  இன்ஸ்பயர்  ஆகி  அவர்  வாழ்க்கையைப்படம் ஆக்க துணிந்தார் 


 தயாரிப்பு  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்  + சோனி 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகனுடன்  நாயகி போனில் பேசும்போது பாத்ரூம் கதவை தாழ் போட்டுக்கொண்டு பேசுகிறார் .அப்போது குடும்பத்த்தினர் கதவைத்தட்டி  கதவைத்திற     என சத்தம் போட தொடர்ந்து பேசும் சீனில்  டெம்ப்போ  ஏற்றும்  சீன் . நாயகியின் நடிப்பு அசால்ட் ஆக நாயகனை ஓவர் டேக் செய்யும் காட்ச்சி 


2  நாயகி  நாயகனுடன்  போனில் பேசிக்கொண்டிருக்கும்போது  நடக்கும் அட்டாக்கில்  சத்தத்தை வைத்தே  சூழலை உணர்ந்து பதறும் காட்சி 


3  நாம்  வாழ்கின்ற  இந்த சராசரி வாழ்க்கை   எவ்வளவு  பெரிய  வரம் என்பதை உணர்த்தும் மிலிட்டரி வீரர்களின் குடும்ப வாழ்க்கை உணர்த்தும்   விதம்  


  ரசித்த  வசனங்கள் 


 1   நான்  திரிச்சி  போகட்டே?


புரோகிராம் பாண்டிச்சேரில , திருச்சி போய் என்ன பண்ணப்போறீங்க? 


2  2  உன் பேரென்ன? 


 இந்து 


 பேரு தான் இந்து , ஆனா கிறிஸ்டியன் பொண்ணு  அதானே? 


3   மலையாளப்பொண்ணு மரியாதை தந்து பேசாதா ? 


அம்மா, கேரளாவில்  அதெல்லாம் இல்லை 


 அப்போ மரியாதை தமிழ் நாட்டில் மட்டும் தான், இப்பவாவது  தெரிஞ்சுக்கோ 


4  ஒரு வாரத்துல எவ்ளோ   இளைச்சுட்டே ,  ரொம்ப கருத்துட்டே , நிழல்ல நின்னு விளையாடலாமில்ல? 


விளையாட்டா? இது மிலிட்டரி டிரெய்னிங்க்மா 


5  ஆர்மில  என்னை மாதிரி 11,000,00   பேரு  இருக்காங்க, அவங்க அம்மாக்களை நினைச்சுப்பாரு 


 டெய்லி காலைல ஆபீஸுக்குப்போய்ட்டு மாலையில் வீட்டுக்கு வரும் கோடிக்கணக்கணக்கான பசங்களின்  அம்மாவா இருக்க விரும்பறேன் 


6   பைபிளிலும் , பகவத் கீதைலயும்  ஒரே விஷயம் தான் சொல்லி இருக்கு .இந்த உலகத்துல பிறந்த எல்லாரும் அவங்கவங்க வேலை முடிஞ்சதும்  இந்த உலகத்தை விட்டு கிளம்பி தான் ஆகணும், ஆனா அவங்க வேலை முடியும் வரை அவங்க உயிரோட தான் இருப்பாங்க 


7   சஸ்பெக்ட் ஆல் ,பட் ரெஸ்பெக்ட் ஆல் 


8  இங்கே  மன்மோகன் சிங்க் பி எம் ஆக  இருக்கலாம் , ஆனா எங்க ஊருல  சி எம் சினிமா வில்  இருந்து தான் வரணும் 


9   என்ன சாப்பிடணும் ? 


 உன்னை தான்  சாப்பிடணும்


10         எங்களை விட்டு தூரமா  இருந்தாலும்   ஷேமமா  இருக்கணும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிலிட்டரி  ஆபீசருக்கான  இண்ட்டர்வியூவில்  நாயகன்  கவுன்ட்டர் கொடுக்க எதுவாக செஸ் போர்டு  காயின்ஸ்   எல்லாம்  முறையா  அடுக்கி வெச்சு இருக்கு .இது எங்காவது நடக்குமா?  


2   ஒரு  பெண்  தன காதலைப்பற்றி  தன அம்மாவிடமோ ,     அப்பாவிடமோ தனிமையில்  ஓப்பன்  செய்வதுதானே  வழக்கம் ? நாயகி முழுக்குடும்பத்தின்  முன் ஓப்பன் செய்கிறார் 


3  நாயகியின் பார்வையில் தான் முழுக்கதையும் சொல்லப்படுகிறது , ஆனால்  நாயகன் மிலிட்டரி கேம்ப்பில்  ,காஷ்மீரில் செய்யும் ஆக்சன் அதகளங்கள் எல்லாம் சீன்  பை  சீன்  அவரால்  எப்படி  சொல்ல முடிகிறது ?இதைத்தவிர்க்க  நாயகன்  கதை சொல்வது போலக்காட்டி இருக்கலாம் . க்ளைமாக்சில் மட்டும்  நாயகி சொல்வது போல் அமைத்து இருக்கலாம் 


4   முதல்  50 நிமிடங்கள்  கமர்ஷியலாக , ரொமான்ஸ் , பேமிலி  டிராமா  போல சுவராஸ்யமாக நகர்கிறது . அதற்குப்பின் வரும்  காஷ்மீர் ஆக்சன் சீக்வன்ஸ்  போர்  அடிக்கிறது 


5   தீவிரவாதியின் இறப்பு , இறுதிச்சடங்கு  இவை எல்லாம் இவ்ளோ  டீட்டெயிலா  காட்டக்கூடாது , பரிதாபம்  தான்  வருகிறது . பொதுவாக  வில்லன்களின் மேல்  இரக்கம்  வருவது போல காட் சிகள்  வைக்கக்கூடாது 


6   நாயகன் உட்பட  பலரும்  தாடி ,பரட்டைதலையோடு  மிலிட்டரியில் சுற்றுகிறார்கள் .அதுக்கு ஒரு சால்ஜாப்பு வேற 


7 மிலிட்டரி , அல்லது போலீஸ் டிபார்ட்மெண்ட்டில்  ஹையர் ஆபிசரிடம் குரலை உயர்த்திப்பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்

8   ஒரு மிலிட்ரி  ஆபீசர்  தர லோக்கல்  ரௌடி போல " அவனைப்போட்டுத்தள்ளறோம் "  என டயலாக் பேசுவாரா? 

9   பொங்கல் , தீபாவளி  மாதிரி விழாக்காலங்களில்  ரிலீஸ் ஆகும் படங்கள் ஹேப்பி எண்டிங்க் கொண்டவையாக இருக்க வேண்டும் . கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் சோக முடிவு கொண்ட படங்களைக்காண  தயங்கலாம் 


10 காஷ்மீர்  தீவிரவாதிகள்  சம்பந்தப்பட்ட காட்சிகளைஇன்னமும்  சுவராஸ்யமாகக்காட்டி இருக்கலாம் .ஆல்ரெடி ரோஜா , குருதிபுனலில்  நாம் சுவாரஸ்யமாக  ரசித்தவை தான் .அந்த அளவு இன்ட்ரஸ்ட் இதில் இல்லை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பிரமாதம் .பின் பாதி கொஞ்சம்  இழுவை , க்ளைமாக்ஸ்  கண் கலங்க  வைக்கும்  சோகம் .விகடன்  மார்க் 44 .குமுதம் - நன்று ,

மை ரேட்டிங்க்  3 /5 


Amaran
Theatrical release poster
Directed byRajkumar Periasamy
Screenplay byRajkumar Periasamy
Stefan Ritcher
Based onIndia's Most Fearless: True Stories of Modern Military Heroes
by 
Produced by
Starring
CinematographyCH Sai
Edited byR. Kalaivanan
Music byG. V. Prakash Kumar
Production
companies
Distributed bysee below
Release date
  • 31 October 2024
Running time
169 minutes[2]
CountryIndia
LanguageTamil
Budget130–200 crore[3][4][5]
Box officeest. ₹42.03 crore[6]