நயன் தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா (2018) , சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (2021) ,, ரஜினி நடிப்பில் ஜெயிலர்( 2023) ஆகிய 3 வெற்றிப்படங்களையும் , விஜய் நடிப்பில் பீஸ்ட் (2022) என்ற டப்பாப்படத்தையும் கொடுத்த இயக்குநர் நெல்சன் ஒரு வித்தியாசமான இயக்குநர். பிளாக் ஹ்யூமர் படங்களை இயக்குவது அவர் பாணி , அவரது தயாரிப்பில் , அவரது அசிஸ்ட்ண்ட் டைரக்டர் ஆன சிவபாலன் முத்துக்குமாரை அறீமுக இயக்குனர் ஆக அறிமுகப்படுத்தி இருக்கும் படம் தான் இது
ஒரே ஒரு பங்களாவில் 90% படத்தைமுடித்து புதுமுகங்களை வைத்தே காசை மிச்சம் பண்ணீயதற்காக பாராட்டலாம் . தீபாவளி ரேசில் நெம்பர் 3 இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சிறுவனாக இருக்கும்போதே பிச்சைக்காரனாக வளர்கிறார் . இவர் ஒரு அனாதை . இவருக்கு ஒரு காதலி . அவரை மணம் முடிக்கிறார். இருவருக்கும் ஒரு மகன் பிறக்கிறான் . ஒரு கார் விபத்தில் மனைவி பலி ஆக நாயகன் தன் மகனுடன் இப்போது பிச்சை எடுத்து வருகிறார் . மகனுக்கு இவர் தான் தன் அப்பா என்பது தெரியாது
ஒரு மிகப்பெரிய செல்வந்தர் இறக்கிறார். தன் கடைசி ஆசையாக 25 பிச்சைக்காரர்களுக்கு ஒரு வேளை விருந்து படைக்க வேண்டும் என தெரியப்படுத்தியதால் 24 பேரைப்பிடித்து விட்ட அவரது குடும்பம் 25 வது நபர் ஆக நாயகனை அழைத்துச்செல்கிறார்கள் . நாயகன் அங்கே போய் விருந்து சாப்பிட்டு விட்டு திருட்டுத்தனமாக மாளிகைக்குள் புகுந்து விடுகிறார் . அங்கே 2 நாட்கள் ஜாலியாக இருக்கலாம் என்பது நாயகனின் திட்டம்
ஆனால் ஆட்டோமேட்டிக் லாக் என்பதால் மாளிகை உள் பக்கமாக பூட்டிக்கொள்கிறது . நாயகன் உள்ளே மாட்டிக்கொள்கிறான் . மாளிகைக்கு உள்ளே இறந்த செல்வந்தனின் உறவினர்கள் சொத்தை அபகரிக்க சதித்திட்டம் போடுகிறார்கள் .
பிச்சைக்காரன் ஆன நாயகனை வாரிசு போல் நடிக்கச்சொல்கிறார்கள் . ஒரு கட்டத்தில் சொத்துக்காக நாயகனைக்கொலை செய்ய அனைவரும் துரத்துகிறார்கள் . நாயகன் தப்பித்தானா? இல்லையா? என்பது மீதிக்கதை
நாயகன் ஆக கவின் கெட்டப்பில் கச்சிதம் , நடிப்பில் மெச்சும் விதம் என பாராட்டுப்பெறுகிறார் . ரெடின் கிங்க்ஸ்லி காமெடி என்ற பெயரில் படம் முழுக்கக்கத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு சீனில் கூட சிரிப்பு வரவில்லை
மற்ற அனைவரும் புதுமுகங்கள் . அவர்களில் புருவங்களை வளைத்தே வில்லி ஆக மிரட்டும் பெண் கவனிக்க வைக்கிறார். மற்ற அனைவரும் அனுபவம் இல்லாத நாடக நடிகர்கள் போல சொதப்பி இருக்கிறார்கள் . ராதாரவிக்கு கெஸ்ட் ரோல்
நாயகனின் மனைவியாக வரும் மெரின் பிலிப் அதிக வாய்ப்பில்லை , வந்தவரை ஓக்கே
ஃபிளாஸ்பேக்கில் வில்லி ஆக வருபவரும் , இன்னொரு நாயகி ஆக வருபவரும் சுமார் ரகம் .
ஜென் மார்ட்டின் தான் இசை. காது வலிக்கும் அளவு பிஜிஎம்மைப்போட்டுத்தாக்கி இருக்கிறார் .ஆர் நிர்மல் எடிட்டிங்கில் படம் 139 நிமிடங்கள் ஓடுகிறது
சுஜித் சாரங்க் தான் ஒளிப்பதிவு . ஒரே பங்களாவில் கதை நடப்பதால் சவாலான பணி தான் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சிவபாலன் முத்துக்குமார்
சபாஷ் டைரக்டர்
1 2019 ஆம் ஆண்டு வெளியான ரெடி ஆர் நாட் என்ற ஹாலிவுட் படத்தை சத்தம் இல்லாமல் அட்லீ ஒர்க் செய்து ஒரு கதை ரெடி செய்தது
2 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் . ரெடின் கிங்க்ஸ்லி கேரக்டர் இருந்தாலும் படம் நெடுக அவரை உலவவிட்டது
3 ஒரே பங்களாவில் முழுப்படத்தையும் முடித்தது
ரசித்த வசனங்கள்
1 இந்த சொசைட்டிக்கு பிச்சைக்காரனும் தேவை தான். யாராவது ஒழுக்கமா இல்லைன்னா அவனைத்திட்ட” நீ ஒழுங்கா இல்லைன்னா கடைசில பிச்சைதான் எடுக்கனும் என சொல்லவாவது பிச்சைக்காரன் யூஸ் ஆகிறான்
2 கதாபாத்திரமா வாழனும், நடிக்கக்கூடாது
3 வாழ்க்கைல நம்ம கர்மாவுக்கு நாம பதில் சொல்லியே ஆகனும்
4 என்னாலயே அந்த முகத்தைப்பார்க்க முடியலை . , நிமிசத்துக்கு மூணு தடவை ஐ லவ் யூ சொல்லனுமே , உன்னை நினைச்சா.. எவ்ளோ சிரமம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் மனைவியை காரில் மோதிய பெண் நாயகனை ஃபிளாஸ்பேக் சீனில் பார்க்கும்போது நாயகன் தாடியுடன் இருப்பதால் அடையாளம் தெரியாதது ஓக்கே . ஆனால் தன் மனைவியை கார் மோதி இடித்த பெண்ணை க்ளோசப்பில் பார்த்த நாயகன் பிறகு அதே பெண்ணை சந்திக்கும்போது அவருக்கும் அடையாளம் தெரியவில்லையே ? அது எப்படி ? அந்தப்பெண் தாடி வைத்திருக்கிறாரா? மேக்கப்பில்லாமல் இருந்தாரா| ஏன் அடையாளம் தெரியவில்லை ?
2 காமெடியன் ஆக வரும் ஒரு கேரக்டர் இறந்து போன ஆத்மா . ஆவி . அவர் மற்ற யார் கண்களுக்கும் தெரியாமல் நாயகன் கண்களுக்கு மட்டும் தெரிவது எப்படி ?
3 ஒரு பெரிய செல்வந்தனின் உயிலைப்படிக்கும்போது வக்கீல் உரிய பாதுகாப்பில்லாமல் தனியே வருவாரா?
4 திரைச்சீலையின் மறைவில் ஒளிந்திருக்கும் நபரை முகத்தைப்பார்க்காமல் ஈட்டி எறிந்து கொல்வது அபத்தம் . பூட்ஸ் காலைவைத்து அது தன் மகன் தான் என்பது தெரியாதா?
5 ரெடின் கிங்க்ஸ்லியின் இரிட்டேட்டிங்கான மொக்கை நடிப்பு சகிக்கவில்லை
6 நாயகன் ஆன கவின் பிச்சைக்காரன் ஆக வரும்போது ஓக்கே , ஆனால் க்ளீன் ஷேவ் செய்து கெட்டப் மாற்றிய பின் கமல் , சிவாஜி போல பல இடங்களில் ஓவர் ஆக்டிங் ( முதல் மரியாதை தவிர பெரும்பாலான படங்களில் சிவாஜி ஓவர் ஆக்டிங். நாயகன் வரை இயல்பான நடிப்பில் பரிமளித்த கமல் அதற்குப்பின் ஒவ்வொரு படத்திலும் தன் தனித்தன்மை தெரிய வேண்டும் என ஓவர் ஆக்டிங் )
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிளடி பெக்கர்(2024)-தமிழ் - பட்டி டிங்கரிங் அட்லி வெர்சன் ஆப் Ready or not (2019)@அமேசான் பிரைம்.விகடன் மார்க் 40.ரேட்டிங் 2.25 /5.முதல் பாதி சுமார்.பின் பாதி வெகு சுமார்.காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.புதுமுகங்கள் நடிப்பு எடுபடவில்லை.கவின் மட்டும் ஓக்கே.தீபாவளி ரேசில் நெம்பர் 3
Bloody Beggar | |
---|---|
Directed by | Sivabalan Muthukumar |
Written by | Sivabalan Muthukumar |
Produced by | Nelson Dilipkumar |
Starring | |
Cinematography | Sujith Sarang |
Edited by | R. Nirmal |
Music by | Jen Martin |
Production company | Filament Pictures |
Distributed by | Five Star K. Senthil |
Release date |
|
Running time | 139 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Box office | est. ₹6.25 crore[2] |
0 comments:
Post a Comment