Sunday, November 24, 2024

நிறங்கள் மூன்று ( 2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (த்ரில்லர் )

           

              ஹைப்பர் லிங்க்டு  ஸ்டோரி  என்ற வடிவத்தை தமிழில் முதன் முறையாக  வெற்றிகரமாக அரங்கேற்றியவர்  க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்  தான் என நினைக்கிறேன் . முதல் மூன்று  அத்தியாயங்களில்  வெவ்வேறு  கதைகள் , கதை மாந்தர்கள் வருவார்கள் .கடைசியில்  அவர்களை  இணைக்கும்  முடிச்சு  ஒன்றை க்ளைமாக்சில்  சாமார்த்தியமாக  அவிழ்ப்பார் .அந்த பாணியில்  திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது 


துருவங்கள் 16 (2016)  என்ற  வித்தியாசமான  க்ரைம் திரில்லர் படத்தை  இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக  அருண் விஜய் நடிப்பில்  மாபியா சேப்டர்  1 (2020) என்ற ஆக்சன் திரில்லர் படத்தைக்கொடுத்தார், எடுபடவில்லை . 


நெட் பிளிக்ஸ்  ரிலீஸ் ஆக 2020 ல் வந்த "நவரசா" வெப் சீரிஸில் "பிராஜெக்ட் அக்னி " ஓகே ரகம் .டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்  நேரடியாக  ரிலீஸ் ஆன தனுஷ் நடித்த மாறன் (2022)  எடுபடவில்லை .இவை போக  நரகாசுரன்  என்ற படம்  முடிந்தும்  சில சிக்கல்களால்  வெளியாகவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - வில்லன்  ஒரு போலீஸ் ஆபிஸர் . பணம்  வாங்கிக்கொண்டு  எதையும் செய்யும் கெட்டவர் . ஒரு நாள் மந்திரியின் மகன் ஹிட் அண்ட்  ரன் கேசில்  மாட்டிக்கொள்ள அவனை லாக்கப்பில்  அடைக் கிறார் . மந்திரியின் மகன் ஓவராக சவுண்ட்  விட  அவனை லாக்கப்பில் அடி  வெளுக்கிறார்  ஆனால் மந்திரியிடம் பணமும் வாங்கிக்கொள்கிறார் .. இவருக்கும், மந்திரிக்கும்   பகை ஏற்படுகிறது 


சம்பவம் 2 -    நாயகன்  +2 படிக்கும் மாணவன் .சக மாணவியான  நாயகியைக்காதலிக்கிறார் . நாயகியின்  அப்பா  பள்ளி ஆசிரியர் .ஒரு நாள்  நாயகி திடீர்  எனக்காணாமல்  போகிறார் .அவரைத்தேடும் படலத்தில்  நாயகனும் , நாயகியின் அப்பாவும் தனித்தனியே கிளம்புகிறார்கள் 


சம்பவம் 3 - வில்லனின்  மகன்   சினிமாவில்  டைரக்டர்  ஆகவேண்டும்  என்ற  லட்சியத்தில்  இருப்பவர் .அவரது  கதையைத்திருடி  ஒரு பிரபல  இயக்குனர்  படம் எடுக்க  இருக்கிறார் .அதைத்தடுக்க  வில்லனின்  மகன் முயற்சிக்கிறார் 

 மேலே  சொன்ன  3  சம்பவங்களை  இறுதியில்  எப்படி  இணைக்கிறார்கள்  என்பது மீதி திரைக்கதை 

வில்லன் ஆக சரத்குமார்  அனுபவம்  மிக்க நடிப்பை   வெளிப்படுத்தி  இருக்கிறார் .படம்  முழுக்க அத்தனை கேரக்ட்டர்கள் இருந்தும்   இவர்  மட்டும் தான்  ஆடியன்ஸூட ன்    கனெக்ட்  ஆகிறார் 


நாயகன் ஆக  துஷ்யந்த் , நாயகி ஆக அம்மு அபிராமி இருவரும்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் , ஆனால் அதிக ஸ்பேஸ் இல்லை 


வில்லனின் மகனாக  அதர்வா  நடித்திருக்கிறார் . இவரது கேரக்டரை போதைக்கு  அடிமை ஆனவர் போல சித்தரித்தது எதுக்கு ? மெயின் கதைக்கும்  இவருக்கும்  அதிக சம்பந்தம் இல்லை 

 நாயகியின் அப்பாவாக ரகுமான் . பரவாயில்லை  ரகம் 


ஜேம்ஸ் பிஜோய்  தான் இசை .பாடல்கள்  சுமார் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் .ஒளிப்பதிவு டிஜோ  டோமி . குட்  ஒன் .எடிட்டிங்க் ஸ்ரீஜித் சாரங்க் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1 முழுக்க முழுக்க நல்லவன் , முழுக்க முழுக்க   கெட்டவன் , கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன்  என மனிதர்களில்  மூன்று விதமானவர்கள் உண்டு  என்று சொல்ல வந்த விதம்  நன்று 


2  வில்லனின்  கேரக்ட்டர்  டிசைன் , வில்லனின் நடிப்பு  அருமை 


3  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்  நன்று 


  ரசித்த  வசனங்கள் 


1 ஆறு மாசமாப் பழகுன பிரண்ட்ஸை  நம்பறீங்க,ஆனா  பிறந்ததுல  இருந்து  கூடவே  இருக்கும்  அம்மா, அப்பாவை நம்ப மாறீங்க,என்ன  லாஜிக்கோ? 


2   வாழ்க்கைல நாம நினைச்சபடி  எதுவும் நடக்கலைன்னா டென்சன் ஆகக்கூடாது ,  வேற  எதோ  நல்லது  நடக்கப்போகுதுனு நினைக்கணும் 


3  ஹீரோ  வெக்ஸ் ஆகி இருக்கும்போதுதான் அவன் லைஃபே  சேஞ்ச்  ஆகப்போகும் கேரக்ட்டர் இன்ட்ரோ  ஆகும் 


4  நான்   கெட்ட போலீஸ் தான் ஆனா  கெட்ட  அப்பா இல்லை 


5 கதையை  மூளைல இருந்து  எடுக்கக்கூடாது , இதயத்தில் இருந்து எடுக்கணும் 


6  சினிமா ஒன்னும் நீ  நினைக்கறமாதிரி ஈஸி  இல்லை ., அதுக்கு பிராப்பர் பேக் கிரவுண்ட் வேணும் 


7  ஸ் கூல்  பொண்ணு மிஸ்  ஆனா  அது பாய்ஸ்  மேட்டர்  தான் 


8 மனசுல  இருப்பதை சொல்றதெல்லாம் க்ரைம் கிடையாது 


9   போலீஸோட மகன் போலீஸாதான் ஆக்கனுமுனு  சட்டம் இல்லை , அவனை அவன் போக்கில் விடு 


10   நீங்க ஒரு நல்ல டீச்சர்னு நிரூபிச்சுட் டீங்க ,நம்பிக்கை துரோகம் , ஏமாற்றுதல் எல்லாத்தை யும் கத்துக்கொடுத்துட்டீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போதைக்கு  அடிமை ஆனவர் போல சித்தரித்த கமலின் சூரசம்ஹாரம் , போதைக்கு  அடிமை ஆனவர்களை  திருத்தும்  ரஜினியின் ராஜா சின்ன ரோஜா  ,சூர்யாவின்  வாரணம் ஆயிரம்  இவை மூன்றும் சரியாகபோகவில்லை . இதை மீறி  எதற்காக அதர்வாவின் கேரக்ட்டர்  டிசைன் அப்படி சித்தரிக்கணும் ? அவர்  வரும் காடசிகள்  செம போர் 


2  ஒரு மினிஸ்ட்ரை  லஞ்சம்  வாங்கும்  சாதா  இன்ஸ்பெக்ட்டர்  எதிர்ப்பது  நம்பும்படி  இல்லை 


.அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -U /A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இந்தப்படம்  சில வருடங்களுக்கு முன்பே  எடுக்கப்பட்டு  இப்போ  ரிலீஸ் ஆகுது .அதனால் அப்டேட்  ஆகாத  படம் என கொள்ளலாம் . டி வி ல போட்டா பார்க்கலாம் .விகடன் மார்க்  39 , குமுதம் - சுமார் .  ரேட்டிங்க் - 2.25 / 5 

0 comments: