ஓவர் பில்டப்புக்கும் , சூர்யாவுக்கும் ராசி இருந்ததில்லை . கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஒத்தப்படத்துல இறக்கி இருக்கேன் என்று பில்ட கொடுத்த என் லிங்குசாமியின் அஞ்சான் டப்பா ஆகிடுச்சு ( ஆனால் படம் ஓரளவு ஓகே தான் ) . நோக்கு வர்மம் , போதிதர்மர் என சிலாகிக்கப்பட்ட முருகதாஸின் ஏழாம் அறிவு ஏழரை ஆகிடுச்சு . 2000 கோடி வசூல் லட்சியம் 1000 கோடி வசூல் நிச்சயம் என்று விசுவாசம் சிவாவால் பில்டப் கொடுக்கப்பட்ட இப்படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் காலகட்டம் 1070 ம் ஆண்டு
நாயகன் ஒரு இளவரசன் . அவர்கள் கூட்டத்தில் ஒரு துரோகியை அடையாளம் கண்டு அவனை தீக்கு இரை ஆக்குகிறார் . அந்த துரோகியின் குடும்பத்தையும் கொல்ல வேண்டும் என மற்றவர்கள் ஆசைப்படுகிறார்கள் . துரோகியின் மனைவி தன் மகனை நாயகன் கையில் ஒப்படைத்து அவனைக்காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டு அதே தீயில் விழுந்து இறக்கிறாள் . இப்போது நாயகன் நினைத்தாலும் அந்த துரோகியின் மகனைக்காப்பாற்ற முடியவில்லை.உடன் இருப்பவர்கள் அந்த சிறுவனைக்கொன்றே ஆக வேண்டும் என்கின்றனர் .நாயகன் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு கானகம் போகிறார் . அந்த சிறுவனைக்காப்பாற்ற அவர் என்ன எல்லாம் பாடுபட்டார் ,பார்க்கும் நம்மை எப்படி பாடாய்ப்படுத்துகிறார் என்பது மீதிக்கதை
நாயகன் ஆக சூர்யா .உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார் . ஆனால் நம் உயிரை எதனால் வாங்க வேண்டும் ? தெரியவில்லை
நாயகி ஆக 10 நிமிடங்கள் வருகிறார் திஷா பட்டா ணியோ சுண்டலோ. சகிக்கவில்லை
யோகிபாபு இன்னும் தனக்குக்காமெடி வரும் என நம்பிக்கொண்டிருக்கிறார் . ஸ்க்ரிப்ட் ல காமெடி எழுதனும்
சும்மா காமெடியனை திரையில் காட்டினால் சிரிப்பு வராது ,ரெடின் கிங்க்ஸ்லி இன்னொரு தண்டக்கடன் . இவர் 7 நிமிடங்கள் வருகிறார்
வில்லன் ஆக பாபிதியோல் வேஸ்ட் .கேமியோ ரோலில் க்ளைமாக்சில் கார்த்தி வரும்போது ஒரு பயல் கூட கை தட்டவில்லை
தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை . காது வலிக்கும் அளவு பிஜிஎம் போட்டுத்தாக்குகிறார் . படம் முழுக்க இரைச்சல் . வசனம் எப்படி புரியும் ?
ஒளிப்பதிவு வெற்றி பழனிச்சாமி . சில இடங்களில் சபாஷ் போடவைக்கும் காட்சிகள் . நிஷாத் யூஸுபி ன் எடிட்டிங்கில் படம் 154 நிமிடங்கள் ஓடுகின்றன .20 நிமிடங்கள் பார்க்கும்படி இருக்கின்றது
சபாஷ் டைரக்டர்
1 இதெல்லாம் ஒரு கதை என சொல்லி தயாரிப்பாளர் மனதை நம்பவைத்த சாமர்த்தியம்
2 படத்துல உங்களுக்கு ரெண்டு கெட்டப் என சூர்யாவிடம் சொல்லி நீங்க தான் அடுத்த கமல் , அடுத்த விக்ரம் என ஏமாற்றி கால்ஷீட் வாங்கியது
3 டெக்னிக்கல் அம்சங்களான சி ஜி ஒர்க் , வி எப் எக்ஸ் ஒர்க் நன்றாக வேலை வாங்கியது
ரசித்த வசனங்கள் (மதன் கார்க்கி )
1 இந்த உலகத்துலயே யாராலும் தீர்க்க முடியாத மர்மம் மனிதர்களோட வாழ்க்கை
2 நீங்க எல்லாம் பண்றது பவர் பாத் , இவர் பண்றது ஷவர் பாத்
3 டென்சன் ,பயம் ,பதடடம் எதையும் என் கிட்ட நான் வெச்சுக்கறதில்லை , அடுத்தவங்களுக்கு வாரி வழ ங்கிடுவேன்
4 நமக்கெல்லாம் குளிருதுன்னா போர்வை போர்த்தி க்குவோம் , அவன் என்னடான்னா பொண்ணுங்களை போர்த்திக்கிறான்
5 நம்ம காரை எதனால் பஞ்ச்சர் பண்றே?
பஞ்ச்சர் பண்ணு என சொன்னே .எந்தக்காரை என சொல்லவில்லையே?
6 எதிர் கொள்வோம் , எதிரியைக்கொல்வோம்
4 காமெடியன் கமிஷனரை கமீஸ் என அழைப்பது கடுப்பை வர வைக்குது .காமெடின்னு நினைச்சுட்டாங்க
5 நாயகன் அசால்ட் ஆக 500 பேரை சமாளிப்பது எல்லாம் கொடுமை
6 யானைத்தந்தங்கள் இரண்டை நாயகன் என்னமோ கிளவுஸ் போல சொருகிக்கொண்டு சண்டை போடுகிறார் . வாய்ப்பே இல்லை .இயக்குனர் யானைத்தந்தத்தை பார்த்தே இருக்க மாட்டார் போல
7 வானத்தில் மழை கொட்டிட்டு இருக்கு .ஆனா பல வாள்கள் தீயில் பழுக்க காய்ச்சிட்டு இருக்கு . எப்படி ?
8 நாயகன் ஒரு சீனில் தன உள்ளங்கையை தானே கட் பண்ணிக்கறார் எதுக்கு ?
9 ஒரு பாடல் கடைசியில் நாயகன் தன நாக்கை வெளியே நீட்டி நீட்டி பே பெ என கத்துகிறார் எதுக்கு ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் மட்டும் அல்ல , யாருமே பார்க்க தகுதி இல்லாத படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தங்கலான் , இந்தியன் 2 ஆகிய டப்பாப்படங்களையாவது அந்த படங்களின் நாயகனின் ரசிகர்கள் , ரசிகைகள் பார்த்தார்கள் .இதை யாருமே பார்க்க முடியாது .விகடன் மார்க் 35 .குமுதம் = சுமார் . ரேட்டிங்க் 1.5 /5
கங்குவா | |
---|---|
இயக்கியவர் | சிவா |
எழுதியவர் | சிவா ஆதி நாராயண மதன் கார்க்கி (உரையாடல்கள்) |
தயாரித்தது |
|
நடிக்கிறார்கள் | |
ஒளிப்பதிவு | வெற்றி பழனிசாமி |
திருத்தியது | நிஷாத் யூசுப் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
உற்பத்தி நிறுவனங்கள் |
|
மூலம் விநியோகிக்கப்பட்டது | கீழே பார்க்கவும் |
வெளியீட்டு தேதி |
|
இயங்கும் நேரம் | 154 நிமிடங்கள் [ 1 ] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்ஜெட் | மதிப்பீடு ₹300–350 கோடி [ 2 ] [ |
0 comments:
Post a Comment