Saturday, November 02, 2024

அமரன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பயோ பிக்சர் ஆக்சன் டிராமா )

                     

  மிலிட்டரி ஆபீசராக  நாயகன்  நடிக்க தமிழில்  வந்த மெகா ஹிட் படம் விஜய் நடித்த துப்பாக்கி (2012) .அஜித் நடித்த உன்னைக்கொடு என்னைத்தருவேன் (2000) அட்டர் பிளாப் . கே பாக்யராஜ் நடித்த  பவுனு பவுனு தான் (1991)தொடர் கதையாக பாக்யா வார இதழில் வந்த போது வரவேற்பைப் பெற்றாலும் படமாக  ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .ஆனால் இதில் நாயகன் மிலிட்டரி ஆள் கிடையாது  மிலிட்டரி ஆள் போல ஆள் மாறாட்டம்  செய்யும் கேரெக்டர் ,ஜீவா + மோகன்லால்  காம்போ வில்  வெளிவந்த அரண் மலையாள  டப்பிங்க்  படம் ஓடவில்லை .கீர்த்தி  சக்ரா(2000) என்ற  மலையாள ஒரிஜினல் ஓடிய படம் .ரஜினி நடித்த  ராணுவ வீரன் (1981) சுமார் ரகம் தான் .விஜயகாந்த்  கேப்டன் ஆக நடித்த செந்தூரப்பூவே (1988) இண்டஸ்ட்ரி  ஹிட் கமல்  நடிப்பில்    வெளிவந்த  விஸ்வரூபம் பாகம் 1 (2013) ஹிட் ,விஸ்வரூபம் பாகம் (2018) சுமார் .காஸி ( தெலுங்கு டப்பிங்க் ( ghazi attack) சுமார் 


இந்திய நாட்டுக்காக தன்னுயிரையே தந்த ராணுவ வீரர்  மேஜர் முகுந்தின்    பயோ பிக்ஸர் தான்  இந்த அமரன் .சினிமா வுக்காக  சில காட்சிகள்  புனையப்பட்டவை .நவரச  நாயகன்  கார்த்திக் நடித்த அமரன் (1992) படத்தின்  கதைக்கும்  ,இதற்கும்  சம்பந்தம் இல்லை .பாடல்கள் எல்லாம் மெகா ஹிட் ஆகி  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆனஅந்த  பழைய அமரன் அட்டர் பிளாப் ஆனாலும்  சென்ட்டிமென்ட் ஆக பயப்படாமல் இந்தக்கதைக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என வைத்திருக்கிறார்கள்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிறுவனாக இருந்த போது  ஒரு மிலிட்டரி பேரேடைக்காண்கிறான்  அப்போதே அவன் மனதில்  தான் ஒரு மிலிட்ரிமேனாக ஆகவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது . ஆனால்  வீட்டில் பெற்றோருக்கு சம்மதம் இல்லை . அவர்களைக்கன்வின்ஸ்  செய்து மிலிட்ரிமேன் ஆக முயற்சி செய்கிறான் 


நாயகன்  கல்லூரியில்  படிக்கும்போது  ஒரு மலையாள இன பெண்ணை சந்தித்துக்காதல் வசப்படுகிறான் .நாயகியின் அப்பா மிலிட்டரி கேம்பஸில் டாக்டர்  ஆகப்பணியாற்றுவதால்  தினசரி கண் முன் மிலிட்டரி ஆட்கள் மரணத்தைக்காண்பதால்  தன மகளுக்கு ஒரு மிலிட்ரிக்கார மாப்பிள்ளை வேண்டாம் என மறுக்கிறார் .அவரை கன்வின்ஸ்  செய்து தான் மணமுடிக்கிறார்  நாயகன் . திருமண  வாழ்க்கையில்  அவர்களுக்கு  ஒரு மகள் பிறக்கிறாள் 


 மிலிட்ரி  ஆபீசர் ஆக  அவர் அடைந்த  பிரமோஷன்கள் ,தீவிரவாதிகளைப்பிடிக்க  நடத்திய ஆபரேஷன்கள் , அவரது வீர மரணம்  பற்றிப்பேசிய படம் தான் இது  


நாயகன்  ஆக சிவா கார்த்திகேயன்  அட்டகாசமான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்திருக்கிறார் .கேரக் டருக்காக  தன உடலை வருத்தி கெட்டப் சேஞ்ச்  செய்யும் கமல் ,விக்ரம் , சூர்யா  வரிசையில்  இவரும்  இணைந்திருக்கிறார் . ரஜினி முருகன் மாதிரி கமர்சியல் ஹீரோவாகப்பார்த்த நமக்கு இம்மாதிரி ரோல் புதுசு 


நாயகி ஆக  சாய் பல்லவி  உயிரோட்டமான  நடிப்பை வழங்கி இருக்கிறார் . இந்த வருடத்தின்  சிறந்த நடிகைக்கான தேசிய விருது நிச்சயம் . பல  காட்சிகளில்  இவரது நடிப்பு  நம்  புருவங்களை  உயர்த்த செய்கிறது 


 நாயகனின்  அம்மாவாக நடித்தவரும்  அருமை .மற்ற  அனைத்துகேரக்டர்களும் குட் 


ஜி வி பிரகாஷ் குமாரின் இசை அட்டகாசம் .எல்லாமே மெலோடி சாங்க்ஸ் .பின்னணி இசையும் கலக்கல் ரகம் . சாய்   தான் ஒளிப்பதிவு . சாய் பல்லவியின்  கன்னக்கதுப்புகளை , பருக்களைக்கூட  ரசிக்கும் வண்ணம்  படம் பிடித்து இருக்கிறார் 


 ஆர் கலைவாணன்  எடிட்டிங்கில்  படம் 169  நிமிடங்கள்  ஓடுகிறது .பின் பாதியில்  20 நிமிடங்கள் இன்னும் ட்ரிம் பண்ணி  இருக்கலாம் . நாயகி  வரும் 53  நிமிடங்கள்  மிகவும்  ரசிக்க முடிகிறது 


சிவ அரூர் எழுதிய இந்தியாவின் மாடர்ன் மிலிட்டரி ஹீரோஸ்  புத்தகத்தை  தழுவி திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  ராஜ் குமார் பெரிய சாமி , இவர் ஏற்கனவே  ரங்கூன்  (2017) என்ற கிரைம்  திரில்லர்  படத்தை  இயக்கியவர் 

 மேஜர் முகுந்த்  தனது மகளுடன் இணைந்து பாடி வெளியிட்ட அச்சம்  இல்லை  பாட்டு வீடியோ  பார்த்து  இன்ஸ்பயர்  ஆகி  அவர்  வாழ்க்கையைப்படம் ஆக்க துணிந்தார் 


 தயாரிப்பு  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்  + சோனி 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகனுடன்  நாயகி போனில் பேசும்போது பாத்ரூம் கதவை தாழ் போட்டுக்கொண்டு பேசுகிறார் .அப்போது குடும்பத்த்தினர் கதவைத்தட்டி  கதவைத்திற     என சத்தம் போட தொடர்ந்து பேசும் சீனில்  டெம்ப்போ  ஏற்றும்  சீன் . நாயகியின் நடிப்பு அசால்ட் ஆக நாயகனை ஓவர் டேக் செய்யும் காட்ச்சி 


2  நாயகி  நாயகனுடன்  போனில் பேசிக்கொண்டிருக்கும்போது  நடக்கும் அட்டாக்கில்  சத்தத்தை வைத்தே  சூழலை உணர்ந்து பதறும் காட்சி 


3  நாம்  வாழ்கின்ற  இந்த சராசரி வாழ்க்கை   எவ்வளவு  பெரிய  வரம் என்பதை உணர்த்தும் மிலிட்டரி வீரர்களின் குடும்ப வாழ்க்கை உணர்த்தும்   விதம்  


  ரசித்த  வசனங்கள் 


 1   நான்  திரிச்சி  போகட்டே?


புரோகிராம் பாண்டிச்சேரில , திருச்சி போய் என்ன பண்ணப்போறீங்க? 


2  2  உன் பேரென்ன? 


 இந்து 


 பேரு தான் இந்து , ஆனா கிறிஸ்டியன் பொண்ணு  அதானே? 


3   மலையாளப்பொண்ணு மரியாதை தந்து பேசாதா ? 


அம்மா, கேரளாவில்  அதெல்லாம் இல்லை 


 அப்போ மரியாதை தமிழ் நாட்டில் மட்டும் தான், இப்பவாவது  தெரிஞ்சுக்கோ 


4  ஒரு வாரத்துல எவ்ளோ   இளைச்சுட்டே ,  ரொம்ப கருத்துட்டே , நிழல்ல நின்னு விளையாடலாமில்ல? 


விளையாட்டா? இது மிலிட்டரி டிரெய்னிங்க்மா 


5  ஆர்மில  என்னை மாதிரி 11,000,00   பேரு  இருக்காங்க, அவங்க அம்மாக்களை நினைச்சுப்பாரு 


 டெய்லி காலைல ஆபீஸுக்குப்போய்ட்டு மாலையில் வீட்டுக்கு வரும் கோடிக்கணக்கணக்கான பசங்களின்  அம்மாவா இருக்க விரும்பறேன் 


6   பைபிளிலும் , பகவத் கீதைலயும்  ஒரே விஷயம் தான் சொல்லி இருக்கு .இந்த உலகத்துல பிறந்த எல்லாரும் அவங்கவங்க வேலை முடிஞ்சதும்  இந்த உலகத்தை விட்டு கிளம்பி தான் ஆகணும், ஆனா அவங்க வேலை முடியும் வரை அவங்க உயிரோட தான் இருப்பாங்க 


7   சஸ்பெக்ட் ஆல் ,பட் ரெஸ்பெக்ட் ஆல் 


8  இங்கே  மன்மோகன் சிங்க் பி எம் ஆக  இருக்கலாம் , ஆனா எங்க ஊருல  சி எம் சினிமா வில்  இருந்து தான் வரணும் 


9   என்ன சாப்பிடணும் ? 


 உன்னை தான்  சாப்பிடணும்


10         எங்களை விட்டு தூரமா  இருந்தாலும்   ஷேமமா  இருக்கணும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிலிட்டரி  ஆபீசருக்கான  இண்ட்டர்வியூவில்  நாயகன்  கவுன்ட்டர் கொடுக்க எதுவாக செஸ் போர்டு  காயின்ஸ்   எல்லாம்  முறையா  அடுக்கி வெச்சு இருக்கு .இது எங்காவது நடக்குமா?  


2   ஒரு  பெண்  தன காதலைப்பற்றி  தன அம்மாவிடமோ ,     அப்பாவிடமோ தனிமையில்  ஓப்பன்  செய்வதுதானே  வழக்கம் ? நாயகி முழுக்குடும்பத்தின்  முன் ஓப்பன் செய்கிறார் 


3  நாயகியின் பார்வையில் தான் முழுக்கதையும் சொல்லப்படுகிறது , ஆனால்  நாயகன் மிலிட்டரி கேம்ப்பில்  ,காஷ்மீரில் செய்யும் ஆக்சன் அதகளங்கள் எல்லாம் சீன்  பை  சீன்  அவரால்  எப்படி  சொல்ல முடிகிறது ?இதைத்தவிர்க்க  நாயகன்  கதை சொல்வது போலக்காட்டி இருக்கலாம் . க்ளைமாக்சில் மட்டும்  நாயகி சொல்வது போல் அமைத்து இருக்கலாம் 


4   முதல்  50 நிமிடங்கள்  கமர்ஷியலாக , ரொமான்ஸ் , பேமிலி  டிராமா  போல சுவராஸ்யமாக நகர்கிறது . அதற்குப்பின் வரும்  காஷ்மீர் ஆக்சன் சீக்வன்ஸ்  போர்  அடிக்கிறது 


5   தீவிரவாதியின் இறப்பு , இறுதிச்சடங்கு  இவை எல்லாம் இவ்ளோ  டீட்டெயிலா  காட்டக்கூடாது , பரிதாபம்  தான்  வருகிறது . பொதுவாக  வில்லன்களின் மேல்  இரக்கம்  வருவது போல காட் சிகள்  வைக்கக்கூடாது 


6   நாயகன் உட்பட  பலரும்  தாடி ,பரட்டைதலையோடு  மிலிட்டரியில் சுற்றுகிறார்கள் .அதுக்கு ஒரு சால்ஜாப்பு வேற 


7 மிலிட்டரி , அல்லது போலீஸ் டிபார்ட்மெண்ட்டில்  ஹையர் ஆபிசரிடம் குரலை உயர்த்திப்பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்

8   ஒரு மிலிட்ரி  ஆபீசர்  தர லோக்கல்  ரௌடி போல " அவனைப்போட்டுத்தள்ளறோம் "  என டயலாக் பேசுவாரா? 

9   பொங்கல் , தீபாவளி  மாதிரி விழாக்காலங்களில்  ரிலீஸ் ஆகும் படங்கள் ஹேப்பி எண்டிங்க் கொண்டவையாக இருக்க வேண்டும் . கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் சோக முடிவு கொண்ட படங்களைக்காண  தயங்கலாம் 


10 காஷ்மீர்  தீவிரவாதிகள்  சம்பந்தப்பட்ட காட்சிகளைஇன்னமும்  சுவராஸ்யமாகக்காட்டி இருக்கலாம் .ஆல்ரெடி ரோஜா , குருதிபுனலில்  நாம் சுவாரஸ்யமாக  ரசித்தவை தான் .அந்த அளவு இன்ட்ரஸ்ட் இதில் இல்லை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பிரமாதம் .பின் பாதி கொஞ்சம்  இழுவை , க்ளைமாக்ஸ்  கண் கலங்க  வைக்கும்  சோகம் .விகடன்  மார்க் 44 .குமுதம் - நன்று ,

மை ரேட்டிங்க்  3 /5 


Amaran
Theatrical release poster
Directed byRajkumar Periasamy
Screenplay byRajkumar Periasamy
Stefan Ritcher
Based onIndia's Most Fearless: True Stories of Modern Military Heroes
by 
Produced by
Starring
CinematographyCH Sai
Edited byR. Kalaivanan
Music byG. V. Prakash Kumar
Production
companies
Distributed bysee below
Release date
  • 31 October 2024
Running time
169 minutes[2]
CountryIndia
LanguageTamil
Budget130–200 crore[3][4][5]
Box officeest. ₹42.03 crore[6]

0 comments: