Friday, November 01, 2024

LUCKY BASKHAR (2024) -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( பைனான்சியல் க்ரைம் த்ரில்லர் )

               


       மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ்  எனக் கணக்கில்  ஒரு பார்முலா உண்டு .   THOLI PREMA (2018) என்ற  தெலுங்குப்படத்தை இயக்கிப்புகழ் பெற்ற  வெஙகி அத்லரி  தனுஷை  வைத்து  வாத்தி (2023) என்ற  சுமார் ரகப்படம்  தந்தார் . துல்கர் சல்மான் கிங்க் ஆப் கோத்தா(2023)  என்ற டப்பாப்படம் தந்தார்.இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ஹிட் படம் தந்தது ஆச்சரியம் 


சதுரங்க வேட்டை (2014) , ஸ்கேம்  1992 த ஹர்சத் மேத்தா ஸ்டோரி(2020)  , ஸ்கேம் 2003 த டெல்கி  ஸ்டோரி (2023) , முகுந்தன்  உன்னி அசோசியேட்ஸ் (2022),கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் (2020),மங்காத்தா  (2011)  இவை ஆறுமே  சக்கை போடு போட்ட படங்கள் / வெப் சீரிஸ் .. அதே மாதிரி ஒரு கான்செப்டில்  வந்திருக்கும் படம் தான் இது . தீபாவளி ரேஸில்  நம்பர்  ஒன் வசூல் /தரம்   இதுவாகத்தான் இருக்கும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   பேங்க்கில் கேஷியர் .ஒரு மனைவி , ஒரு மகன்  உள்ள  மிடில் கிளாஸ் பேமிலி நாயகனுக்கு  திருமண  வயதில்  ஒரு தங்கை , காலேஜ் படிக்கும் வயதில்  ஒரு தம்பி  இருப்பதால்  அனைவரையும்  தான் வாங்கும் 6000   ரூபாய் சம்பளத்தில்  கரை சேர்க்க முடியவில்லை .கடன் காரன் நெருக்குகிறான் .பேங்க்கில்  அவர் தனக்கான பிரமோஷனை எதிர்பார்த்து இருக்கிறார் . ஆனால்  திறமை  இருந்தும்  அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது .இதனால் மனம் உடைந்த   நாயகன் பேங்க் பணத்தை  முறைகேடாக  ரொட்டேஷன் பண்ணி  பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் 


அவர்  என்னென்ன  தில்லுமுல்லுகள்  செய்தார் , எப்படி  தப்பித்தார் ? என்பது மீதி  திரைக்கதை 

நாயகன் ஆக துல்கர் சல்மான் மொத்தப்படத்தையும்  தன ஒத்தைத்தோளில் சுமக்கிறார் , பிரமாதமான நடிப்பு . நாயகி  ஆக மீனாட்சி சவுத்ரி  கச்சிதமான அமைதியான  நடிப்பு 


நாயகனை முதன் முதலாக  தப்பு செய்யத்தூண்டும்  நபர் ஆக ராம்கி  சிறப்பான  நடிப்பு . மற்ற  அனைவருமே  கொடுத்த பாத்திரத்தை நிறைவாகசெய்திருக்கிறார்கள் 


 ஜி வி பிரகாஷ் குமாரின் இசையில்  இரண்டு பாடல்கள் செம ஹிட் .அதே சமயம்  பின்னணி இசை யில் கலக்கி இருக்கிறார்  .பல கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் களை  தியேட்டரில்  கை தட்டல்களாக மாறியதில் பிஜி எம் க்குப்பெரும் பங்கு உண்டு 


நவீன் நூலின் எடிட்டிங்கில்  படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி செம விறு விறுப்பு  பின்  பாதி   கொஞ்சம்  ஸ்லோ  ஷேர்  மார்க்கட்டில்  டிரேடிங்க்  செய்ப்பவர்களுக்கு நல்லா கனெக்ட் ஆகும் 

நிமிஷ்  ரவியின் ஒளிப்பதிவு அருமை 


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர் வெஙகி அத்லரி

சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் , நாயகி இருவருக்குமானகெமிஸ்ட்ரி  குட் . குறிப்பாக ஒப்பனை அதீதம் இல்லாமல் இயல்பான கனகாம்பரப்பூ  அழகில் நாயகியின் உதடு அமர்க்களம் 


2  டி வி யாக  இறக்குமதி செய்தால் வரி கட்டணும் , ஸ்பேர் பார்ட்சாகக்கொண்டு  வந்து கோல்மால் செய்தால்  லாபம் என்ற  ஐடியா  அருமை 

3     பாரீன்  கார்களை கோவா கொண்டு செல்வதும் , செக் போஸ்டில் மாட்டும்போது  தப்பிக்கும் கிரிமினல் ஐடியாவும் செம 

4  நாயகன் வாழும்  வீடு , பணி  செய்யும்  வங்கி ,துணிக்கடை ,நகைக்கடை என எல்லாமே செட்  தான். ஆனால் ஆர்ட் டைரக்ஸன் , புரோடக்சன் டீம் ஒர்க் அனைத்தும் பிரமாதம் 


5  இண்ட்டர்வெல்  பிளாக் சீன கூஸ்பம்ப்  மொமெண்ட்  எனில் கிளைமாக்ஸ்  டிவிஸ்ட்  செம 


6  பேங்க்கில்  நாயகன்  50 லட்சம்  ரூபாய் திருப்பிக்கொண்டு வந்து வைக்கும் காட்சியில்  வரும் ட்விஸ்ட்   எடிட்டர் , இசை அமைப்பாளர்  , டைரக்டர்  மூவரும் கலக்கிய தருணம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1 கொல்லாமல்  கொல்லாதே கோபக்காரி


2   லக்கி பாஸ்கர் 

சித்த  வசனங்கள் 

1  கனவு காணவே  பயப்பட்ட  கண்களுக்கு கனவை நனவாக்குவது எப்படி?என கற்றுத்தந்தவர்  ஹர்சத் மேத்தா 


2  பணம்  இருந்தாதான் பாசம், மரியாதை எல்லாமே  கிடைக்கும்,சம்பாதிக்கணும்,சம்பாதிச்சுக்காட்டனும் 


3  இதை எல்லாம் எப்படிடா  தாங்கிக்கறே? 


ஒரு நாள் ஒரு அரை மணி நேரம் எனக்குப்பிடிச்ச  மாதிரி  நடக்கலை ,அதுக்காக  வாழ்க்கை பூரா உக்காந்து அழுதுட்டு  இருக்க முடியாதுல்ல ?


4  நேர்மையான  ஆபீசர்களை விட விலை போகக்கூடிய ஆபீசர்கள் தான் அதிகம் 

5  உனக்கு நம்பிக்கை அதிகம்,  எனக்கு முன் எச்சரிக்கை அதிகம்

6    எப்பவும் பணத்தால் மட்டும்  வேலை நடந்துடாது , அப்பப்ப இப்படி பார்ட்டியும்கொடுக்கணும் 


7 நான் பொய் சொல்லலை , உண்மையைக்கொஞ்சசம் திரிச்சு சொல்லி  இருக்கேன் 


8 லாபம் வரும்போது  மட்டும் இல்லை   , கஷ்டம் வரும்போதும்  கை  கோர்த்து நிற்கணும் 


9 பிச்சைக்காரங்களை  அரசியல்வாதிகள்  எனக்கெட்டப்  மாத்திக்கூட்டிட்டு ப்போனா  அவங்க  நம்புவாங்களா? 


அவங்கஓட்டுக்கேட்டு  கேட்டு  அப்படி ஆகிட்டாங்க 


10  ஒரு பேங்க் இன்னொரு பேங்க்கிற்குக்கொடுத்த  கடனை   ஷேர்  மார்க்கட் ல  இன்வெஸ்ட பண்றது தப்பு ,இல்லீகல் 


11   நான் விலை  போகணும்னு முடிவு பண்ணிட்டா என்  ரேட் என்ன? என நான் தான் சொல்வேன் 


12   ஒரு டீலில் இறங்கும்போது அப்பர் ஹேண்ட் நம்மடையதா  இருக்கனும் இதுல மாட்டிக்கிட்டா  எனக்கு என் வேலை மட்டும் தான் போகும்,ஆனா உங்களுக்கு மொத்த கேரியரே போயிடும் 


13   இது மிடில் கிளாஸ் மெண்ட்டாலிட்டி . கஷ்டப்பட்டு சேமிச்சு வைப்போம் , ஆனா போட்டின்னு வந்துட்டா 

 ஒத்தைப் பைசா மிச்சம் வைக்காம செலவு செய்வோம் 


14   இதுதான் இந்தியா .பொருள் வேணும்னா பணம் கொடுத்து வாங்கணும் .மரியாதை   வேணும்னா பணம்  நம்ம உடம்பு மேல  தெரியனும் 


15  பணம் இருக்கறவனை இந்த உலகம் கெட்டவனாத்தான் பார்க்கும் 


16 தலை கனத்தால மனிதன் ஆடும்போதெல்லாம் ஆண்டவன் அவன் தலைலை ஓங்கி ஒரு  அடி அடிப்பான் 


17  சிகரெட் , ஆல்ஹகால்  , ட்ரக்ஸ்  கொடுக்கும் கிக்கை விடப்பணம் கொடுக்கும் கிக் பெருசு 


18   ஷேர்  மார்க்கெட்டில் சம்பாதிப்பது போல வேறு எதிலும்  சம்பாதிக்கமுடியாது 


19  குடும்பத்துக்காகத்தான் முதல்ல பணம் சம்பாதிக்க ஆரம்பிப்போம் ,ஆனாபோகப்போக அது தரும் போதைல குடும்பத்தினயே மறக்க ஆரம்பிப்போம் 


20  பணம் சம்பாதிப்பது கொஞ்ச  காலத்துக்கு முன்னே உனக்கு அவசியம், ஆனா இப்போ நீ  அதுக்கு அடிமை 


21   வேகமா ஓட்டும்  வண்டி , வேகமா  வரும் பணம் ரெண்டும் ஒரு நாள் நம்மைக் கீழே தள்ளியே தீரும் 


22   சூதாட்டத்தில்  எப்பவும் நீ  எவ்ளோவ் நல்லா ஆடுனே  என்பது முக்கியம் இல்லை , எப்போ நீ ஆட்டத்தை நிறுத்துனே என்பதுதான் முக்கியம் 


23    பழைய நாட்களை என்னால திருப்பித்தரமுடியாது , ஆனா பழைய  பாஸ்கரை என்னால திருப்பித்தரமுடியும், இந்தநிமிசம் முதல் 


24     அம்மா கிட்டே பொய் சொல்றதே தப்பு , அப்படி இருக்கும்போது ஏமாத்த நினைப்பது பாவம் 

25   அவனோட  லாபத்துல  ஷேர் பண்ணிக்கத்தயார் ,ஆனா ரிஸ்க் ல ஷேர் பண்ணிக்கத்தயார்   இல்லை 


26   நீ சின்சியரா  மாறணும்னு  உடனடியா நீ மட்டும் முடிவு எடுத்தா போதுமா? உன் கூட  வேலை செஞ்சவங்களும் முடிவு எடுக்க வேணாமா ?


27    சூதாட்டத்தில் சில சமயம்  ஜெயிப்போம் , சில சமயம் கத்துக்குவோம் 


28   இந்தமாதிரி நிலைமை வரும்போது அழுது புலம்புவதை விட சிரித்துக்கொண்டே விலகி விடுவது நல்லது 

29    இந்த ஸ்கேம்  வெளில வந்தா அவன் மாட்டிக்குவான் , ஆனால் அவனே அதை வெளில கொண்டு வந்தா நீங்க மாட்டிக்குவீங்க 


30   நான் எதோ  தப்பு பண்ணி  இருக்கேன்னு அவளுக்குத்தெரியும், ஆனா அது என்ன?னு தெரிஞ்சுக்கும்  தைரியம் அவளுக்கு இல்லை 


31    எவ்ளோ  நாட்களா ஆடுனோம் என்பது முக்கியம் இல்லை , எப்போ நிறுத்தினோம் என்பதுதான் முக்கியம் 


32  என்னை மாற்றியது  என் மனைவியோட  அழுகை ,அப்பா சொன்ன வார்த்தை , ஒரு மனிதனோட மரணம் 


33    ஜெயிச்சுட்டு  பின் தோற்றுப்போனா அந்த தோல்வி தான் நினைவு வரும் , ஆனா  தோற்ற பின் ஜெயித்தா  அந்த  வெற்றி சரித்திரத்தில்    நிற்கும் 

34    ஹிஸ்ட்ரி ஆல்வேஸ் ரிமெம்பர் ஹவ் யூ பினிஷ்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மாத வருமானம் ரூ 6000 மட்டுமே கொண்ட நாயகனின்  வீடு பங்களா டைப்பில் பிரம்மாண்டமாக  மும்பையில்  இருக்கு . அப்பா கட்டிய சொந்தவீடு என சமாளித்தாலும் 10 கோடி ரூ பெறுமானமுள்ள  அந்தவீட்டின் பேரில்  கடன் வாங்கி பிஸ்னஸ் பண்ணாமல்  நாயகன்  வேலைக்குப்போவது எதனால் ? லோயர் மிடில் கிளாஸ்  என கதையில்  சொல்லப்படும்  நாயகன் அப்பர் ஹையர் கிளாஸ்  வாழ்க்கை  வாழ்வது எப்படி ? 


2  நாயகன்  ராம்கிக்கு  வங்கிப்பணம் ரூ 2 லட்சம் ரூபாய்  அன் - அபிஷியலாக  கை  மாத்தாகத்தரும்போது எந்த அடிப்படையில் தருகிறார்? செக்  லீப் வாங்கவில்லை .ராம்கி  அல்வா கொடுத்து விட்டால் ? 


3  ராம்கி  தான் வாங்கிய கடன் ரூ 2 லட்சம் + கமிஷன்  ரூ 50,000  என  பணம் திருப்பித்தரும்போது நாயகன் வீட்டுக்கு வெளியே  வாசலில் நின்று தருகிறார் . இது அபாயம் . பலரும் பார்க்கிறார்களே? 


4   செக்போஸ்டில் போலீஸ் பிடிக்கும்போது நாயகன் செட்டப்  செய்த ஸ்பைசி கேர்ள்  காரை விட்டு  இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்து போலீசிடம் பேசுகிறார் . அடுத்த  ஷாட்டில் அந்தப்பெண்  அருகே  கார் நிற்கிறது .கண்ட்டினியுட்டி மிஸ்ஸிங்க் 


5 நாயகன்  முறைகேடாக தான் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணத்தை அவர் பேங்க் அக்கவுண்ட்டிலேயே  வைத்திருப்பது  எப்படி ?ரிஸ்க் ஆச்சே? சம்சாரம் , மச்சினி  , தம்பி  இப்படி பலர் அக்கவுண்ட் களில்  ஸ்பிலிட்  செய்து  டெபாசிட் செய்திருக்கலாமே? 


6  ஷேர்  மார்க்கெட்டில் சம்பாதித்த பணத்தை நாயகன்  பேங்க் பெண் ஸ்டெனோவிடம்  சொல்லி டெபாசிட் செய்ய சொல்கிறார் .இந்தவிஷயம்  யாருக்கும்  தெரிய வேண்டாம் என்கிறார் .அதுக்கு அவரே அதை செய்திருக்கலாம்.  ஒரு பெண் கிட்டே  ரகசியம் தங்குமா? ரிஸ்க்   

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான , விறுவிறுப்பான  கமர்ஷியல்  த்ரில்லர்  படம் ,அனைவர்க்கும் பிடிக்கும் .விகடன்  மார்க்  45 ,  குட் . மை  ரேட்டிங்  3.5 /5 


Lucky Baskhar
Theatrical release poster
Directed byVenky Atluri
Written byVenky Atluri
Produced bySuryadevara Naga Vamsi
Sai Soujanya
StarringDulquer Salmaan
Meenakshi Chaudhary
CinematographyNimish Ravi
Edited byNaveen Nooli
Music byG. V. Prakash Kumar
Production
companies
Sithara Entertainments
Fortune Four Cinemas
Release date
  • 31 October 2024
Running time
150 minutes
CountryIndia
LanguageTelugu