Friday, October 04, 2024

VISHESHAM (2024) - ( மலையாளம் ) - விசேஷம் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

                       


19/7/24  முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  ரசிகர்களின்  வரவேற்பைப்பெற்ற  இப்படம்  இப்போது  அமேசான் பிரைம்   ஓ  டிடி  யில்  15/9/24  முதல்  காணக்கிடைக்கிறது . இப்படத்தில்  நாயகன்  ஆக  நடித்தவர்தான்  இப்படத்தின்  திரைக்கதை  ஆசிரியர் . முதல்  பாதி காமெடி டிராமாவாகவும்   பின்  பாதி எமோஷனல்  டிராமாவாகவும் இருக்கும். பெண்களுக்கு  மிகவும் பிடிக்கும் . பொறுமைசாலிகளாக இருந்தால் ஆண்களுக்கும் பிடிக்கும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனுக்கு  40+ வயசு ஆகி விட்டது . ஒரு  பெண்ணைத்திருமணம்  செய்கிறார். அவர்  தாலி கட்டும்போதே  பெண்  யாரையோ தேடிக்கொண்டு  இருக்கிறார். மணப்பெண்ணின்  காதலன்  வந்ததும்  அவனுடன்  போய்  விடுகிறார்  . இதனால்    நாயகனுக்கு பெரும்  மன  உளைச்சல் + அவமானம் . தாலி கட்டிய  பெண்  மணமேடையிலேயே  ஓடி விட்டார்  என  அவப்பெயர் 


இதற்குப்பின்  நாயகனுக்கு பல இடங்களில்  பெண்  பார்த்தாலும்  எதுவும் சரியாக  அமையவில்லை . அப்போதுதான் தரகர்  ஒரு  ஐடியா  சொல்கிறார் . உனக்கும்  வயசு  ஆகிடுச்சு . . ஆல்ரெடி  மேரேஜ்  ஆனவன் . அதனால் ஆல்ரெடி மேரேஜ்  ஆகி டைவர்ஸ்  ஆன  பெண்ணை  மணம்  புரிய  சம்மதம்  எனில்  சுலபமாக  பெண்    கிடைக்கும்  என்கிறார்


  வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  அதற்கு ஓக்கே  சொல்ல நாயகியை  சந்திக்கிறார். நாயகி  ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் . கணவனால்  துன்புறுத்தப்பட்டு   டொமெஸ்டிக்  வயலன்ஸ்  கேஸ்  போட்டு  டைவர்ஸ்  பெற்றவர் 


 நாயகன் - நாயகி   பெண்  பார்க்கும் படலங்கள் , சந்திப்பு  ,அறிமுகம், காதல்  என  ஜாலியாக  காமெடியாக  முதல்  பாதி  கதை  நகர்கிறது 


இருவருக்கும்  திருமணம்  ஆன  பின் இரண்டு  வருடங்கள்  ஆகியும் குழந்தை  பாக்கியம்  இல்லை . எதிர்ப்படும் உறவினர்களின் முதல் கேள்வி .. வீட்ல  விசேஷம்  இல்லையா?   என்பதுதான் 


 பல  டாக்டர்களை சந்திக்கின்றனர் . நாயகன்  மீது  குறை இல்லை . நாயகிக்கு பிசிஓடி  பிரச்சனை இருக்கிறது . பல சிகிச்சிகளுக்குப்பின்  நாயகிக்குக்குழந்தை  பிறந்ததா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  ஆனந்த   மதுசூதனன் அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார். நீங்கள்  வழக்கமாகப்பார்க்கும்  நாயக  பிம்பம்  எதுவும் இல்லாத  40+ வயசான  வழுக்கைத்தலையர் . ஆனால்  படம்  போட்டு  20  நிமிடங்களிலேயே  ஆடியன்சின்  மனதைக்கவர்கிறார்


  நாயகி ஆக   சின்னு  சாந்தினி . இவர்  நம்ம  முந்தானை முடிச்சு  ஊர்வசியின்  அக்கா கல்பனாவின்  உடல் வாகு கொண்டவர். நடிப்பில்  பிரமாதபப்டுத்தி இருக்கிறார் 


படத்தில்  நடித்த  அனைவரும்  அவரவர்  கேரக்டரை  உள்வாங்கி  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்கள் 


வி என்  மாளவிகாவின்  எடிட்டிங்கில்  படம் இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது . சாகர்  அய்யப்பனின்  ஒளிப்பதிவில்  உயிரோட்டமான  காட்சிகள்  கண் முன்  விரிகின்றன 


நாயகன்  ஆன  ஆனந்த  மதுசூதனன்  திரைக்கதை  எழுத  சூரஜ்  டாம்  இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1  போலீஸ்  ஆன  நாயகி  மாப்பிள்ளையின்  ஃபோட்டோவை ஸ்டேஷனில்  இருக்கும்  அனைவருக்கும் காட்டி மகிழ  லாக்கப் கைதியும்  விரும்பிப்பார்க்கும்  காட்சி கல கல 


2    மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்  ஆன  நாயகனின்  தன்னம்பிக்கை  வகுப்பில் பாடம் படித்த  மாணவி  நாயகன் - நாயகி இருவரும் கவுன்சிலிங்கிற்காக வந்த  ஹாஸ்பிடலில் பணிபுரிவதும்  அவர்  நாயகனைக்கண்டு சிலாகிப்பதும்   காமெடிக்கலக்கல் 


3    நாயகனின்  மாமியார்  ஹாஸ்பிடலில்  செக்கப்க்கு  வந்த  நாயகனிடம்  சம்பவம்  கிட்டியோ எனக்கேட்கும் காட்சி நகைச்சுவை சரவெடி 


4  தன்னை  துன்புறுத்திய  முதல்  கணவன்  லாக்கப்பில்  தன்னிடம்  மாட்டும்போது நாயகி பிளந்து கட்டும் காட்சி  காமெடி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  குழந்தை  பிறக்க  இருக்கும்  தருணம்  லாட்டரியில்  முதல்  பரிசு  அடிக்கும் காட்சி  எல்லாம்  நாடகத்தனம் 


2   நாயகி  கர்ப்பம்  ஆக இருக்கும் செய்தி தெரிய  வரும்போது அவருக்கு பிரமோஷன்  கிடைப்பதும்  அவர்  பதவியை ஏற்பாரா? கருவைக்கலைப்பாரா? என ட்விஸ்ட்  வைப்பதும் தேவை இல்லாதது 


3  முதல்  பாதி முழுக்கக்காமெடியாக  லைட்  டாக  செல்லும் படம் பின் பாதியில்  ஓவர்  சோகக்காட்சிகளுடன் நகர்வது  எதுக்கு ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+ காட்சிகள்  இல்லை , ஆனால்  மைனர்களூக்கு இப்படம் தேவை இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கே  பாக்யராஜ் தனமான  காமெடியான  முன் பாதி  + சேரன் படங்கள்  போல கனமான  பின்  பாதி  இரண்டும்  கலந்த கலவை . ரேட்டிங்  2.75 / 5 


Vishesham
Directed bySooraj Tom
Written byAnand Madhusoodanan
Produced byAni Sooraj
StarringAnand Madhusoodanan
Chinnu Chandni
Baiju Johnson
Althaf Salim
CinematographySagar Ayyappan
Edited byMalavika VN
Production
company
Step2Films
Distributed byStep2Films Through Sree Priya Combines
Release date
  • 19 July 2024
CountryIndia
LanguageMalayalam

0 comments: