11 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடிகை ஜோதிர்மயி க்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்துள்ளது .2019ஆம் ஆண்டு ஜோஸ் எழுதிய ருத்திண்டே லோகம் என்ற நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது . 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஸ்துதி என்ற ஒரு பிரமோ சாங்குக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .கிறித்துவ மதத்தினரைப்புண்படுத்ததும் விதமாக உள்ளது எனக் கேஸ் பைல் செய்யப்பட்டுள்ளது .17/10/2024 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் 14/11/2024 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் ரிலீஸ் ஆக உள்ளது
பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த வரதன்(2018) டிரான்ஸ் (2020) ஆகிய இரு படங்களின் இயக்குனர் ஆகவும் , மம்முட்டி நடிப்பில் வெளிவந்த பீஸ்மா பர்வம் (2022) இயக்குனர் ஆகவும் தமிழ் ஆடியன்ஸுக்கு அறியப்பட்டாலும் இயக்குனர் அமல் நீரத் தின் முதல் படம் மம்முட்டி நடிப்பில் பிக் பி என்ற படம் தான் .பெரும்பாலும் ஆக்சன் த்ரில்லர் ,கிரைம் திரில்லர் தான் இவரது சாய்ஸ் . பட ரிலீஸ் டைமில் இது வரதன் படத்தின் பாகம் 2 ஆக இருக்கலாம் என ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு டாக்டர் . ஓப்பனிங்க் ஷாட்டிலேயே ஒரு கார் விபத்தில் நாயகனும் , அவர் மனைவியும் மாட்டிக்கொள்கிறார்கள் , மனைவிக்கு தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகள் அவ்வப்போது தான் நினைவு வரும் .அது போக தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாக கற்பனை உலகில் அவர் வாழ்ந்து வருபவர் . தன மனைவியைப்பார்த்துக்கொள்ள நாயகன் ஒரு பெண்ணை நியமித்து இருக்கிறார் . ஹாஸ்பிடல் டியூட்டி முடிந்ததும் இவரும் மனைவியை கவனித்துக்கொள்கிறார்
நாயகியைப்பார்க்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார் . கேரளாவில் பல டூர் ஸ்பாட்களில் பெண்கள் காணாமல் போன கேஸ்களில் நாயகிக்கு எதோ ஒரு தொடர்பு உண்டு என அவர் சந்தேகிக்கிறார் . சில சி சி டிவி புட்டேஜ்களில் காணாமல் போன பெண் நாயகியுடன் இருப்பது தெரியவருகிறது ,ஆனால் நாயகிக்கு நினைவு வரவில்லை
உடல் நிலை , மற்றும் மனநிலை சரி இல்லாத நிலையில் நாயகி இருந்தும் போலீஸ் தொந்தரவு செய்வது நாயகனுக்குப்பிடிக்கவில்லை , இருந்தும் வேறு வழி இல்லாமல் ஒத்துழைக்கிறார்
இந்த கேஸ் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக குஞ்சாக்க போபன் கச்சிதமாக நடித்திருக்கிறார் . பொறுமை யாக அவர் தன மனைவியை , போலீசை டீல் செய்வது செம . நாயகி ஆக ஜோதிர்மயி அருமையான கேரக்டர் . நாயகனை விட அதிக காட்சிகள் இவருக்குத்தான் , நடிக்க அதிக முக்கியத்துவமும் இவருக்குத்தான், உணர்ந்து நடித்திருக்கிறார் . இவர் அஜித் ரசிகையோ என தெரியவில்லை . சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் வருகிறார்
போலீஸ் ஆபீசர் ஆக பகத் பாசில் அதிக காட்சிகள் இல்லை .கொலையாளியை இவர் துப்பறிந்து கண்டுபிடிப்பது போல காட்சிகள் இல்லாதது பலவீனம் .
கிரிமனாலஜிஸ்ட் ஆக வரும் வீணா நந்தகுமார் செம நடிப்பு ., க்ளைமாக்சில் இவரது ஆக்சன் ஸீக்வன்ஸ் அருமை
சுசின் ஷியாமின் இசை கச்சிதம் .பின்னணி இசை பெரிய பிளஸ் . விவேக் ஹாசன் எடிட்டிங்கில் படம் 144 நிமிடங்கள் ஓடுகிறது . சி சந்திரன் ஒளிப்பதிவில் சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் படத்துக்கான கலர் டோன் செட் செய்த விதம் அருமை
மூலக்கதை ஆன நாவல் ஆசிரியர் ஜோஸ் உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் அமல் நீரத்
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் ஷாட்டில் இருந்து நாயகியா? வில்லியா? என்ற சந்தேகத்தைக்கிளப்பும் நாயகியின் உடல் மொழி , அபாரமான நடிப்பு
2 இடைவேளை முடிந்து கொஞ்ச நேரத்தில் கொலைகாரன் யார் என்பது தெரிந்தாலும் க்ளைமாக்ஸ் வரை நீடிக்கும் சஸ்பென்ஸ் அருமை
3 வில்லனின் பிளாஸ்பேக் காட் சிகளில் நடுநிசி நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள் போலஅடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகள் வைக்காமல் கண்ணியமான காட்ச்சிகளைக்காட்டிய விதம் குட்
ரசித்த வசனங்கள்
1 டியர் , உங்களுக்கு வயசாகிடுச்சு , தாடில நரை
அப்டியா? வயசாகலைனு நிரூபிக்கவா?
2 இந்த வீட்டுக்குக்குடி வந்து எத்தனை வருஷங்கள் ஆகுது ?
அஞ்சாறு வருஷங்கள் இருக்கலாம் சார்
அஞ்சா? ஆறா ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நிஜ வாழ்வில் 47 வயதான நாயகன் குஞ்சாக்கா போபன் படத்தில் மேக்கப் போட்டு ஹேர் டை அடித்து 30 வயது ஆள் போல உள்ளார் , நிஜ வாழ்வில் 41 வயதான நாயகி ஜோதிர்மயி நரைத்த தலைமுடியுடன் 48 வயசு ஆள் போல இருக்கிறார் . கணவன் , மனைவி போலவே இல்லை . . நாயகனின் பெரியம்மா மகள் போல நாயகி இருக்கிறார்
2 ஓப்பனிங் ஷாட்டில் வரும் கார் விபத்து காட்சி 2012ல் ரிலீஸ் ஆன தலாஸ் ஹிந்திப்படத்தில் வந்த அதே காட் சி
3 வில்லனின் பிளாஸ் பேக் காட்சிகள் , க்ளைமாக்ஸ் செட்டப் , ஆர்ட் டைரக்ஸன் எல்லாம் நடுநிசி நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள் போலவே இருக்கிறது
4 கத்தியால் ஒருவரை த்தாக்குபோது கொலைகாரனை கைப்பிடி காப்பாற்றும் ,ஆனால் உடைந்த கண்ணாடித்துண்டால் ஒருவரைத்தாக்கும்போது கொலைகாரனுக்கும் கையில் காயம் உண்டாகும் , எனவே தாக்க அது சிறந்த ஆயுதம் அல்ல ,கிளைமாக்சில் கொலைகாரன் கிரிமினாலஜிஸ்டை உடைந்த கண்ணாடித்துண்டால் தாக்கி காயப்படுத்துவது போல ஒரு காட்சி இருக்கு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - படம் மிக மெதுவாகத்தான் நகர்கிறது , பொறுமையாகப்பார்க்கும் க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் , ரேட்டிங்க் 2.75 / 5
THANX -ANICHAM DIWALI SPL
Bougainvillea | |
---|---|
Directed by | Amal Neerad |
Written by | Lajo Jose Amal Neerad |
Based on | Ruthinte Lokam by Lajo Jose |
Produced by | Jyothirmayi Kunchacko Boban |
Starring |
|
Cinematography | Anend C. Chandran |
Edited by | Vivek Harshan |
Music by | Sushin Shyam |
Production companies | |
Distributed by | A & A Release |
Release date |
|
Running time | 144 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹20 crore[2] |
Box office | ₹33 crore[3] |
0 comments:
Post a Comment