Thursday, October 31, 2024

DO PATTI (2024) -ஹிந்தி/தமிழ் . சினிமா விமர்சனம் ( திரில்லர்) @ நெட் பிளிக்ஸ்

     


                  DO PATTI  என்ற ஹிந்தி  வார்த்தைக்கு  டூ கார்ட்ஸ்  என்று பொருள் . டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றிப்பேசுகிறது .திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகாமல் நேரடியாக  நெட் பிளிக்ஸ்  ஓ டி டி  யில் 25/10/2024  முதல்  காணக்கிடைக்கிறது .போலீஸ் ஆபீசர் ,வக்கீல்  என இரு  பதவிகளில் கஜோல்  நடித்து இருக்கிறார் .அக்கா , தங்கை என ட்வின்ஸ்  ரோலில்  நாயகி க்ரித்தி  சனோன் நடித்து இருக்கிறார் தமிழ்  டப்பிங்கில்  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சவுமியா ,ஷைலி  இருவரும் இரட்டை சகோதரிகள் . அம்மா , அப்பா இல்லை .அத்தைதான்  வளர்க்கிறார் .இருவரும்  சிறுமிகளாக இருக்கும்போதே அம்மா  தற்கொலை செய்து இறந்து விடுகிறார் .அம்மாவின் மரணத்துக்கு  அப்பா தான் காரணம் .அடிக்கடி   அம்மாவை அடித்துக்கொடுமைப்படுத்தி வந்தவர் தான் அப்பா  . இந்த  சம்பவத்தால் சவுமியா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் 


சவுமியா ,ஷைலி  இருவருக்கும்  சின்ன வயதில் இருந்தே ஆகாது . அடித்துக்கொள்வார்கள் .சவுமியாவின்  உடைமைகளை  கபளீகரம் செய்வதில் ஷைலி க்கு  கொள்ளை  ஆனந்தம் 

அக்கா , தங்கை என ட்வின்ஸ்  ரோலில்  நாயகி க்ரித்தி  சனோன் பிரமாதமாக நடித்து இருக்கிறார் . சவுமியா  ரோலில் இவர் அமைதியான பெண்ணாக மனம் கவர்பவர் , ஷைலி ரோலில்  மாடர்ன் கேர்ள் ஆக கிளாமர் டிரஸில் கலக்குகிறார் .இவர்தானா அவர் ?அவர் தானா இவர்?என திகைக்க வைக்கிறார் 

நாயகன்  ஆளும் கட்சி அமைச்சரின் மகன் . சவுமியாவை  சந்திக்கிறார் . இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள் . அப்போது ஷைலி இருவருக்கும் இடையில்  நுழைகிறார் .  நாயகனுக்குக்குழப்பம் . இருவரில் யாரைத்தேர்வு செய்வது ?இறுதியில் சவுமியாவை   திருமணம் செய்து கொள்கிறார் 


  திருமணம் ஆகி  சில மாதங்களில்  நாயகனின் சுய ரூபம் வில்லன்  என்பது  தெரிய வருகிறது . அடிக்கடி சவுமியாவை அடிக்கிறான் .அவனைப்போலீஸில்  எப்படி மாட்ட  வைத்து  தண்டனை பெற்றுத்தருகிறார்  என்பது தான் மீதிக்கதை 


.போலீஸ் ஆபீசர் ,வக்கீல்  என இரு  பதவிகளில் கஜோல்  நடித்து இருக்கிறார். போலீஸ் ஆபீசர் ரோலில் இவரது உடல் மொழி , நடிப்பு  ரொம்ப செயற்கை . வக்கீல்  ரோலில் பரவாயில்லை 


நாயகன் ஆக  ஷஹீர் ஷேக் .டிரான்ஸ் பர்மேஷன்  காட்சியில்  வில்லன் அஜித் போல் கலக்கி இருக்க வேண்டாமா? கோட்டை விட்டிருக்கிறார் 


சச்சேத்  பரம்பரா , டானிஷ் பாக்சித்  இருவரும் பாடல்களுக்கான இசை .ஐந்து  பாடல்களில்  2  சுமார்  ரகம் .பின்னணி  இசை அனுராக் சவுக்கியா . கச்சிதம் 



மார்ட் ரட்டாசிப்  தான் ஒளிப்பதிவு . கிளாமர்  காட்சிகளை ஆர்வமாக ,ரசனையாகப்படம் பிடித்து இருக்கிறார் .நாமன் அரோரா , ஹேமல் கோத்தாரி  இருவரும்தான் எடிட்டர்கள் .127  நிமிடங்கள்  டைம் டியூரேஷன் 


கனிகா தீலியன் எழுதிய  கதை , திரைக்கதைக்கு  சஷாங்க் சதுர்வேதி  உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்

1  பிரியாமணி நடிப்பில் வெளிவந்த  சாருலதா (2012) , அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த  தடம்  (2019) சாமி இயக்கிய  உயிர் ( 2006) , அஜித் நடித்த   வாலி ( 1999)   போன்ற படங்களில்  வெளி வந்த பல காட்சிகளை கோர்வையாக சொன்ன விதம் 

2   முதல் பாதி ரொமாண்டிக் த்ரில்லர் , பின்பாதி  கோர்ட்  ரூம் டிராமா என பிரித்துக்கொண்டு  திரைக்கதை அமைத்த விதம் 

3  டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றி அழுத்தமாகப்பே சிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 ரூல்ஸை பாலோ பண்றே , ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கறே , ஆனா பிரமோஷன் எதிர்பார்க்கறே . எப்படி நடக்கும் ?


2   சூஸ் பண்றதுல எதுவும்  தப்பு பண்ணலையே? ஐ மீன்  ஜூஸ் ..


 3  லைப்ல  நாம சந்தோஷமா  இருக்க நமக்கு என்ன எல்லாம் தேவையோ  அவை எல்லாமே நம் கண் எதிரே தான் இருக்கும் 


4   லைப்லஅட்வென்ச்சர்  இருந்தா அது நமக்கு ஹார்ட் அட்டாக்கைத்தான் வர வைக்கும் 


5   இருவருக்கு இடையில் உருவாவதுதான் காதல் .மூவர் வந்து விட்டால் அது போர்


6   என்  அப்பா யார் என  உனக்குத்தெரியுமா? 


உன்  அப்பா யார் என  உனக்குத்தெரியுதே , சந்தோசம் 


7  ஒரு வீட்டில் டொமஸ்ட்டிக்  வயலன்ஸ்  நடக்கும்போது யார்  எல்லாம் அதைப்பார்த்துட்டு  அமைதியா  இருக்காங்களோ  அவங்களும்  தப்பு நடக்கக்காரணம் 

8 நமக்காகப்பேச  உரிய தருணம்  வரும்வரை காத்திருக்கணும் 

9 ஒரு பெண்ணைக்கை நீட்டி  ஒருத்தன் அடிச்சா  அது மொத்தக்குடும்பத்துக்கும் விழும் அடி 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இரட்டை  சகோதரிகளின்  அத்தையாக நடித்தவர் நடிப்பு ரொம்ப செயற்கை 


2  ஒரு புருஷன் மனைவியை கை நீட்டி  அடிப்பது 

பெரும்பாலும்  ஹாலில் , கிச்சன்  ரூமில் .. ஆனால் அத்தை பெட்ரூமில்  சிரமப்பட்டு  அதைப்படம்  பிடிக்கிறார் 


3  இயக்குனருக்கு  இப்படத்தை டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றிப்பேசுவது போல எடுக்கலாமா? கிளுகிளுப்புக்கதையாக  எடுக்கலாமா?   என ஒரு டைலமோ  


4  கோர்ட்   காட்சிகள்  எடுபடவில்லை .நாடகத்தனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமாக வந்திருக்க வேண்டிய நல்ல படம் . இயக்குனரின் அனுபவக்குறைவால்  சுமாராக  வந்துள்ளது . ரேட்டிங்க்  2.25 / 5 


Do Patti
release poster
Directed byShashank Chaturvedi
Written byKanika Dhillon
Produced by
Starring
CinematographyMart Ratassepp
Edited byNaman Arora
Hemal Kothari
Music byScore:
Anurag Saikia
Songs:
Sachet–Parampara
Tanishk Bagchi
Production
companies
  • Kathha Pictures
  • Blue Butterfly Films
  • Vipin Agnihotri Films
Distributed byNetflix
Release date
  • 25 October 2024
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageHindi

Wednesday, October 30, 2024

BOUGAINVILLEA (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் )@டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

           


   11 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்  நடிகை ஜோதிர்மயி க்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்துள்ளது .2019ஆம் ஆண்டு ஜோஸ் எழுதிய  ருத்திண்டே லோகம்  என்ற நாவலைத்தழுவி  திரைக்கதை  அமைக்கப்பட்ட  படம் இது . 20 கோடி  ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரிலீஸ் ஆன  முதல் வாரத்திலேயே  27 கோடி ரூபாய் வசூல்  செய்துள்ளது ஸ்துதி  என்ற ஒரு பிரமோ சாங்குக்கு எதிராக  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .கிறித்துவ மதத்தினரைப்புண்படுத்ததும் விதமாக உள்ளது எனக் கேஸ்  பைல் செய்யப்பட்டுள்ளது .17/10/2024  அன்று    திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம்   14/11/2024  முதல்  டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார்  ஓடிடி யில் ரிலீஸ் ஆக உள்ளது          


பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த  வரதன்(2018)  டிரான்ஸ் (2020) ஆகிய  இரு  படங்களின்  இயக்குனர் ஆகவும்  , மம்முட்டி  நடிப்பில் வெளிவந்த  பீஸ்மா பர்வம் (2022)  இயக்குனர் ஆகவும்   தமிழ்  ஆடியன்ஸுக்கு அறியப்பட்டாலும் இயக்குனர் அமல் நீரத் தின் முதல் படம்  மம்முட்டி நடிப்பில்  பிக் பி  என்ற படம் தான் .பெரும்பாலும் ஆக்சன் த்ரில்லர் ,கிரைம் திரில்லர் தான்  இவரது சாய்ஸ் . பட  ரிலீஸ்  டைமில்  இது வரதன் படத்தின் பாகம் 2 ஆக இருக்கலாம் என ரசிகர்களிடையே பரபரப்பாகப்   பேசப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு டாக்டர் . ஓப்பனிங்க்  ஷாட்டிலேயே  ஒரு  கார் விபத்தில்  நாயகனும் , அவர்  மனைவியும்  மாட்டிக்கொள்கிறார்கள் , மனைவிக்கு  தலையில்  அடிபட்டதால்  பழைய நினைவுகள்  அவ்வப்போது தான்  நினைவு வரும் .அது போக  தனக்கு  இரு குழந்தைகள்  இருப்பதாக  கற்பனை உலகில்  அவர்  வாழ்ந்து வருபவர் . தன மனைவியைப்பார்த்துக்கொள்ள  நாயகன்  ஒரு பெண்ணை நியமித்து  இருக்கிறார் . ஹாஸ்பிடல்  டியூட்டி  முடிந்ததும்  இவரும்  மனைவியை  கவனித்துக்கொள்கிறார் 


நாயகியைப்பார்க்க  ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார் . கேரளாவில்  பல  டூர் ஸ்பாட்களில்  பெண்கள் காணாமல் போன கேஸ்களில்  நாயகிக்கு  எதோ  ஒரு தொடர்பு உண்டு என அவர் சந்தேகிக்கிறார் . சில சி சி டிவி  புட்டேஜ்களில்  காணாமல் போன  பெண்  நாயகியுடன்  இருப்பது  தெரியவருகிறது  ,ஆனால்  நாயகிக்கு நினைவு  வரவில்லை 



உடல் நிலை , மற்றும் மனநிலை  சரி  இல்லாத    நிலையில்  நாயகி    இருந்தும் போலீஸ்  தொந்தரவு செய்வது நாயகனுக்குப்பிடிக்கவில்லை , இருந்தும்  வேறு  வழி இல்லாமல்  ஒத்துழைக்கிறார் 


 இந்த கேஸ்  என்ன ஆனது என்பது மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக குஞ்சாக்க போபன்  கச்சிதமாக நடித்திருக்கிறார் . பொறுமை யாக  அவர் தன மனைவியை , போலீசை டீல் செய்வது செம . நாயகி ஆக  ஜோதிர்மயி  அருமையான கேரக்டர் . நாயகனை விட  அதிக காட்சிகள்  இவருக்குத்தான் , நடிக்க  அதிக முக்கியத்துவமும் இவருக்குத்தான், உணர்ந்து  நடித்திருக்கிறார் . இவர் அஜித் ரசிகையோ என தெரியவில்லை . சால்ட்  அண்ட் பேப்பர்  ஹேர்  ஸ்டைலில்  வருகிறார் 


போலீஸ்  ஆபீசர் ஆக பகத் பாசில்  அதிக  காட்சிகள்  இல்லை .கொலையாளியை  இவர் துப்பறிந்து கண்டுபிடிப்பது போல  காட்சிகள் இல்லாதது பலவீனம் .


கிரிமனாலஜிஸ்ட்  ஆக  வரும்  வீணா  நந்தகுமார்  செம நடிப்பு ., க்ளைமாக்சில்  இவரது ஆக்சன் ஸீக்வன்ஸ்   அருமை 


சுசின்  ஷியாமின்  இசை கச்சிதம் .பின்னணி இசை பெரிய பிளஸ் . விவேக்  ஹாசன்  எடிட்டிங்கில்  படம் 144 நிமிடங்கள்  ஓடுகிறது . சி சந்திரன்  ஒளிப்பதிவில்  சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் படத்துக்கான கலர் டோன்  செட் செய்த விதம் அருமை 



மூலக்கதை ஆன  நாவல் ஆசிரியர் ஜோஸ்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் இயக்குனர் அமல் நீரத்



சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  ஷாட்டில்  இருந்து நாயகியா?  வில்லியா? என்ற  சந்தேகத்தைக்கிளப்பும் நாயகியின்  உடல் மொழி , அபாரமான  நடிப்பு


2  இடைவேளை முடிந்து  கொஞ்ச  நேரத்தில் கொலைகாரன்  யார் என்பது  தெரிந்தாலும் க்ளைமாக்ஸ்  வரை நீடிக்கும் சஸ்பென்ஸ்  அருமை 


3   வில்லனின் பிளாஸ்பேக்  காட் சிகளில் நடுநிசி  நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள்  போலஅடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகள்  வைக்காமல்  கண்ணியமான காட்ச்சிகளைக்காட்டிய விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   டியர் , உங்களுக்கு வயசாகிடுச்சு , தாடில நரை 


 அப்டியா? வயசாகலைனு நிரூபிக்கவா? 


2   இந்த வீட்டுக்குக்குடி  வந்து  எத்தனை  வருஷங்கள் ஆகுது ?


 அஞ்சாறு வருஷங்கள்  இருக்கலாம் சார் 


அஞ்சா? ஆறா ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நிஜ  வாழ்வில்  47 வயதான நாயகன் குஞ்சாக்கா போபன்   படத்தில்  மேக்கப் போட்டு  ஹேர்  டை  அடித்து  30 வயது ஆள் போல  உள்ளார் , நிஜ  வாழ்வில்  41 வயதான நாயகி ஜோதிர்மயி  நரைத்த   தலைமுடியுடன்  48  வயசு ஆள் போல  இருக்கிறார் . கணவன் , மனைவி போலவே இல்லை . . நாயகனின்  பெரியம்மா மகள் போல நாயகி இருக்கிறார் 

2     ஓப்பனிங்  ஷாட்டில்  வரும்  கார்   விபத்து    காட்சி  2012ல்  ரிலீஸ் ஆன தலாஸ்  ஹிந்திப்படத்தில்  வந்த அதே காட் சி   


3  வில்லனின்  பிளாஸ் பேக்  காட்சிகள் , க்ளைமாக்ஸ்  செட்டப் , ஆர்ட் டைரக்ஸன்  எல்லாம்   நடுநிசி  நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள்  போலவே  இருக்கிறது 


4  கத்தியால்  ஒருவரை த்தாக்குபோது  கொலைகாரனை கைப்பிடி காப்பாற்றும் ,ஆனால்  உடைந்த கண்ணாடித்துண்டால் ஒருவரைத்தாக்கும்போது  கொலைகாரனுக்கும்  கையில்  காயம்  உண்டாகும் , எனவே தாக்க  அது சிறந்த ஆயுதம் அல்ல ,கிளைமாக்சில் கொலைகாரன் கிரிமினாலஜிஸ்டை  உடைந்த கண்ணாடித்துண்டால்  தாக்கி காயப்படுத்துவது போல  ஒரு காட்சி இருக்கு

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம் மிக மெதுவாகத்தான் நகர்கிறது , பொறுமையாகப்பார்க்கும்  க்ரைம் திரில்லர் ரசிகர்கள்  பார்க்கலாம் , ரேட்டிங்க்  2.75 / 5 

 THANX  -ANICHAM  DIWALI SPL 

Bougainvillea
Theatrical Release Poster
Directed byAmal Neerad
Written byLajo Jose
Amal Neerad
Based onRuthinte Lokam
by Lajo Jose
Produced byJyothirmayi
Kunchacko Boban
Starring
CinematographyAnend C. Chandran
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
companies
Distributed byA & A Release
Release date
  • 17 October 2024
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹20 crore[2]
Box office₹33 crore[3]

Monday, October 21, 2024

பிளாக் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன். ஹாரர். திரில்லர்)

 


பிளாக் (2024) - தமிழ்- சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ஹாரர் த்ரில்லர்)



டைம் டிராவல் படங்கள் /டைம் லூப் மூவிஸ் அல்லது சயின்ஸ் பிக்சன் படஙகள் தமிழில் வந்தவை எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால். 12பி (2001) ,இன்று நேற்று நாளை (2015),ஓ மை கடவுளே(2020),மாநாடு (2021) என வெகு சில படங்கள் தேறுகின்றன.


Coherence(2013) ஹாலிவுட் படத்தின் அபிசியல் ரீ மேக் என சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்குப்புரியும்படி எளிதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.ஒரிஜினல் வெர்சனில் பல கேரக்டர்கள்.அப்படியே தமிழில் எடுத்தால் குழப்பம் வரும் என்பதால். ஒரே ஒரு ஜோடி மட்டும் 80% படத்தில் வருவது போலக்காட்சிகள்


இது போக படத்தின் சில காட்சிகள்  Vivarium (2019) படக்காட்சிகள் போல இருக்கின்றன என பலர்  சொல்கிறார்கள்.குறிப்பிட்ட அந்த இரு படங்களை யும் நான் பார்க்கவில்லை


ஸ்பாய்லர் அலெர்ட்


சம்பவம் 1 - வில்லனின் காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகிறது.காரில் தம்பதி பயணிக்க கார் டிரைவராக வில்லன்.என்னை விட்டுட்டு வேற ஒருத்தனைக்கட்டிக்கிட்டியா?என கருவிக்கொண்டே வருகிறான்.வில்லன் தம்பதியைக்கொல்ல முயலும்போது ஏற்கனவே யாரோ கொன்றதைக்கண்டு திடுக்கிடுகிறான்.கொன்ற உருவம் திரும்பிப்பார்க்கும்போது முகத்தைபார்க்கிறான்.அது வேறு யாரும் அல்ல.வில்லனே தான்.வில்லனுக்குக்குழப்பம்.



சம்பவம் 2.  நாயகன்,நாயகி. இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டவர்கள்.ஒரு நாள் ஜாலி ட்ரிப்பாக இவர்கள் வாங்கி வைத்திருக்கும் வில்லாவுக்குப்போகிறார்கள்.அங்கே வேறு யாருமே இல்லை என சொல்லப்பட்டாலும் எதிர் வீட்டில் விளக்கு எரிவதைபார்த்துக்குழப்பம் அடைகிறார்கள்


அந்த வீட்டில் அவர்கள் தங்களைத்தாஙகளே கண்ணாடியில் பார்த்துக்கொண்டதைப்போல்  அதே சாயலில் பார்த்துக்குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்

சம்பவம் 3. நாயகி ஒருகட்டத்தில் போலீசுக்குக்கால் பண்ணி அபாயம், உடனே வரவும் என சொல்ல போலீஸ் அங்கே ஆஜர்.அங்கே நாயகன் மட்டும்.நாயகி இல்லை.சந்தேகக்கேசில் போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் ,மேலே சொன்ன 3 சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஜீவா அருமையான நடிப்பு.முன் கோபம் கொண்ட இளைஞன் ஆக அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டர்.தன்னைப்போலவே இன்னொரு ஆளைப்பார்த்துக்குழம்புவது அருமை


நாயகி ஆக பிரியா பவானி சங்கர்.ராசி இல்லாத நடிகை என்ற அவப்பெயரை இப்படத்தின் வெற்றி மூலம் போக்கி விடுவார்.தன் காதல் கணவன் முரடன் என்பதில் காட்டும் எரிச்சல் ,தன் தோழியுடன் தொடர்பு இருக்குமோ? என சந்தேகப்பட்டுப்பிரிவது என அழுத்தமான பாத்திரம்.உணர்ந்து நடித்திருக்கிறார்

வில்லன் ஆக  விவேக் பிரசன்னா கச்சிதம்.போலீஸ் ஆபீசர் ஆக யோக் ஜேபி எகத்தாளமான பார்வை ,தெனாவெட்டான உடல் மொழியுடன் நன்றாக நடித்திருக்கிறார்


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பாலசுப்ரமணி.

பின்னணி இசை சாம் சி எஸ்.திரில்லர் படஙகளுக்கே உரித்தான பி ஜி எம் செம.ஒளிப்பதிவு ஒரு திகில் படத்துக்கு எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது

பிலோமின் ராஜின் எடிட்டிஙகில்  படம் 2 மணி நேரம் விறுவிறுப்பாகப்போகிறது

சபாஷ். டைரக்டர்

1 கதை இன்ன மாதிரிதான் போகும் என்பதை விளக்க ஓப்பனிங சீனிலேயே ஒரு முன் கதையை சொன்ன விதம்

2. குவாண்ட்டம் பிசிக்ஸ் , பேரலல் ரியாலிட்டி , பெர்முடா ட்ரை ஆங்கிள் ,என சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரியாத சமாச்சாரங்களை முடிந்தவரை எளிமையாகச்சொன்ன விதம்

3. பூமிக்கு அருகே நிலா வரும் ஒரு அபூர்வமான பவுர்ணமி இரவில் முழுக்கதையும் நடப்பதாக சித்தரிப்பது


ரசித்த வசனங்கள்

1.  என் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் தோல்வி நீ தான்

2. எல்லாக்காதல் கதைகளும் கலர்புல்லா ,ஸ்வீட்டாதான் ஆரம்பிக்கும்


3. மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்து பயந்து நாம் நமக்கான. வாழ்வைத்தொலைத்து விடக்கூடாது

4.  மேரேஜ் ஆகி 7 வருடங்களுக்குள். மனைவிக்கு ஏதாவது நடந்தாலோ,மனைவி காணாமல் போனாலோ கணவன் தான் முதல் சஸ்பெக்ட்

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டில்  ஏதோ சத்தம் வருது,என்ன? எனப்பாருங்க என சொன்னதும் அனைத்து கான்ஸ்டபிள்களும் கைதியாகபிடித்து வைத்த நாயகனை அம்போ என விட்டு விட்டு அப்படியா  செம்மறி ஆட்டுக்கூட்டம் போல கிளம்புவாஙக?2 பேராவது ஸ்பாட்டில் கைதி கூட இருக்க வேண்டாமா?

2. நாயகனின் முன்னாள் காதலி/ தோழி ஒரு எதிர்பாராத சந்திப்பில் நாயகனை அணைத்து முத்தமிட முயலும்போது நாயகன் காட்டும் அதீத எதிர்ப்பு நம்பும்படி இல்லை.அப்படி எல்லாம் யோக்கிய சிகாமணிகள் இருக்கிறார்களா? என்ன?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்.  - யு


சி பி எஸ். பைனல் கமெண்ட் - மாறுபட்ட திரில்லர் மூவியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.விகடன் மார்க். 44. குமுதம் ரேங்க்கிங் - நன்று.

மை ரேட்டிங். 3/5

Saturday, October 19, 2024

MILLER'S GIRL (2024) ஆங்கிலம் / தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)@ அமேசான் பிரைம் 18+

 MILLER'S GIRL(2024)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா)@அமேசான் பிரைம்

திரைக்கதை மன்னன். கே பாக்யராஜ் 1991ல் சார் ஐ லவ் யூ என்ற டைட்டிலில் ஒரு படம் இயக்க இருப்பதாக அறிவித்தார்.டைட்டிலுக்கு கடும் எதிர்ப்பு.பின் அது சுந்தர காண்டம் என்று டைட்டில் மாற்றி 1992ல் வெளியானது.


படிக்கும் மாணவி தன் வகுப்பு ஆசிரியரைக்காதலிக்கிறார்.தன் ஒருதலைக்காதலை வெளிப்படுத்துகிறார்.அது தவறு என்று ஆசிரியர் மாணவிக்குப்புரிய வைப்பதே கதை

மைக்கேல் டக்ளஸ் + டெமி மூர் காம்போவில் 1994 ல் டிஸ்க்ளோசர் என்ற ஹாலிவுட் படம் வந்தது.கதைப்படி நாயகன் தன் கம்பெனி ஓனரால்  மயக்கப்படுகிறான்.ஆரம்பத்தில் அவனும் அவளுக்கு ஈடு கொடுக்க ஒரு கட்டத்தில் திடீர் நல்லவன் ஆகி விலகுகிறான்.பின் வீட்டுக்கு வந்து தனது சொந்த சம்சாரத்திடம் நான் எவ்ளோ நல்லவன். பார்த்தியா என பில்டப் கொடுத்து பின். தன் ஓனர் மேல் கோர்ட்டில்  கேஸ் போடுகிறான்.தீர்ப்பு அவன் பக்கம் வருவதுதான் க்ளைமாக்ஸ்


இந்த் இரண்டு படங்களையும். பட்டி டிங்கரிங் செய்து அட்லீ ஒர்க் பண்ணினால் புதுப்படக்கதை. ரெடி


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகி ஒரு. டீன் ஏஜ் செல்வச்சீமாட்டி.பெற்றோர் உடன் இல்லை.தனிமையில் இருக்கிறாள்

நாயகன் திருமணம் ஆன ஒரு ரைட்டர்.இப்போது ஆசிரியர் ஆகப்பணி புரிகிறான்

இருவருக்கும் நெருக்கம் உருவாகிறது.ஒரு கட்டத்தில் நாயகன் உஷார் ஆகி விலக முயற்சிக்க நாயகி ஸ்கூல் நிர்வாகத்திடம் புகார் தருகிறார்.இறுதியில் என்ன ஆனது? என்பதைத்திரையில் காண்க

நாயகன் ஆக ரைட்டர் சாருநிவேதிதா சாயலில்  மார்ட்டின் ப்ரீமேன் அருமையான நடிப்பு.கேப்மாரி + மொள்ளமாரி என்பது அப்பட்டமாய்த்தெரிகிறது

நாயகி ஆக. ஜென் ஆர்ட்டேஜ்.அழகிய அப்பாவி முகம்


இருவருக்குமான நெருக்கம் இயக்குநர் பாலுமகேந்திரா- ஷோபா போல தோன்றுகிறது

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜேட் ஹாலி பார்ட்லெட்

ஒளிப்பதிவு டேனியல் பிரதர்ஸ்

இசை எலீசா சாம்செல்

சபாஷ் டைரக்டர்

1 நாயகி தன் வரலாறு கூறுவது போல் கதையை ஆரம்பித்து பின் சாமார்த்தியமாக இயக்குநர் பார்வையில் கதை சொல்வதாக மாற்றிய விதம்

2 கண்ணக்கவரும் ஒளிப்பதிவில். இயற்கைக்காட்சிகள், நாயகி ,நாயகியின் தோழி ,நாயகனின் மனைவி போன்ற மூன்று அழகிகளையும்  படம் பிடித்த விதம்

3 எடிட்டிங் கச்சிதம்.137 நிமிடங்களில் முடித்த விதம்
,  



ரசித்த வசனங்கள்

1. என் பெற்றோர் சாகலை,ஆனா நான். செத்துட்டதா நினைச்சாங்க

2 புத்தகம் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள்  பசங்க ள்

3. கருப்பு வெள்ளை. டி வி. காலத்தில் இருந்து. முதன். முதலா. கலர் டிவி பார்ப்பது போல். நான் உன்னைப்பார்க்கிறேன்


4.  டியர் ,அவ அழகா இருப்பாளா?

இல்லை,ஆனா டேலண்ட் ஆனவ

ஓ,அது அதை விட டேஞ்சர் ஆச்சே?


5 இதுவரை. எதுவுமே சாதிக்காம இருப்பது தான் என் சாதனை

6. பொதுவா ரைட்டர்ஸ் வெக்கேசன் போய் அங்கே என்ன செய்வாங்க?

ஏதாவது எழுதுவது போல நடிப்பாங்க

7. காண்ட்-ரவர்சியா எழுதுனாதான் சுவராஸ்யம்

8. சினிமாக்காதல் போல பரபரப்பா நிஜக்காதல் இருக்காது.அது அமைதியா இருக்கும்

9.  உன் எதிரியை. அகற்று,ஆனா எதிரியால் அகற்றப்பட்டு விடாதே

10. டீன் ஏஜ் காரஙக  மிக அபாயகரமானவர்கள்.ரொம்ப வயலண்ட்டா இருப்பாஙக

11. பார்த்துட்டு அதை டெலீட் பண்ணிட்டா அதைப்பார்க்காததா ஆகிடுமா?

12. நீ ஒரு வைத்து வேட்டு,அதை அடிக்கடி நினைவுபடுத்தனுமா?

13. தினம் தினம் நீ சொல்ற பொய்யை சகிச்சுக்க முடியாம நான் செத்திடுவேனோ?என பயமா இருக்கு

14. அவர் என்னை  அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டார்.நான் அவரை ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டேன்

15. க்ராஸ் பண்ணக்கூடாத பார்டர் லைனை நான் கிராஸ் பண்ணிட்டேன்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  நாயகி டீன் ஏஜ் கேர்ள்.தனிமையில் எப்போதும் இருக்கிறார்.ஸ்கூல் டூவீடு. வீடு டூ ஸ்கூல். என வழியில் யாருமே அவரைத்தொந்தரவு செய்யவில்லை.பெற்றோர் தன் மகளைக்கவனிக்க ஒரு பணிபெண்ணைக்கூட நியமிக்க மாட்டார்களா?

2. மெயின் கதைக்கு சம்பந்தமில்லாமல்.  நாயகி+ தோழி நெருக்கம், நாயகனின் நண்பன் + நாயகியின் தோழி. சைடு லவ் டிராக். போவது. திரைக்கதை வேகத்தடை


அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். 18+


சிபி எஸ். பைனல் கமெண்ட் - பெண்கள் பார்க்கத்தேவை இல்லை.ஆண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2/5

Wednesday, October 16, 2024

Lonely planet(2024)- English - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)@ நெட்பிளிக்ஸ்

 


LONELY PLÀNET (2024)- English- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @நெட் பிளிக்ஸ். 18+

11/10/2024 முதல் நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.

நாயகி 50 வயதான புகழ் பெற்ற ரைட்டர்.இவர் ஒரு தனிமை விரும்பி.ஒரு நாவலை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.எழுத்தாளர்கள் பங்கு பெறும் ஒரு மீட்டப்பில் கலந்து. கொள்ள வந்திருக்கிறார்.


நாயகன் ஒரு கம்பெனியில் ஒர்க் செய்பவன்.நாயகனின் காதலி யும் ஒரு ரைட்டர்.இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.காதலிக்குத்
துணையாக   உடன் வந்து இருக்கிறாரே தவிர நாயகனுக்கு இலக்கியத்தில் ,எழுத்தில் பெரிய ஆர்வம் இல்லை.நாயகனுக்கு 25 வயது.காதலிக்கு 22வயது.



மீட்டப்பில் ரைட்டர்கள் எல்லாம் சேர்ந்து இலக்கியப்புதிர் போட்டி விளையாடுகிறார்கள்.நாயகனால் அதில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள முடியவில்லை.கம்பராமாயணத்தை எழுதியது   சேக்கிழார் என்ற அளவில் தான் அவருக்கு இலக்கிய அறிவு இருக்கிறது.அதனால் மற்ற ரைட்டர்கள் நாயகனை கிண்டல் செய்ய நாயகன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்


நாயகனுக்கு நாயகியுடன் அறிமுகம் உண்டாகிறது.இருவருக்கும் எந்த விதமான ஒத்த விருப்பமும் இல்லை எனினும்  எப்படி நெருக்கம் உண்டாகிறது?அது எந்த அளவு  வளர்கிறது?முதல் காதலிக்கு இந்த விஷயம். தெரிந்ததா? என்பது மீதி திரைக்கதை

நாயகி ஆக  லாரா டெர்ன் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பில் மனம். கவர்கிறார்.


நாயகன் ஆக லியாம் ஹெம்ஸ் ஒர்த் இளமைத்துடுக்குடன் நடித்திருக்கிறார்


நாயகனின் காதலி ஆக.  டயானா சில்வர்ஸ் அழகுப்பதுமையாக வந்து போகிறார்

ஒரு சிறுகதை படிப்பது போல சம்பவங்கள் கவிதையாக நகர்கின்றன

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். சுசன்னாகிராண்ட்

பென்ஸ் மித்தர்டு தான் ஒளிப்பதிவு.ஓவியம் போலகாட்சிகள்.

கெவின். டெர்ட்டின் எடிட்டிங்கில் படம். 96 நிமிடஙகள் ஓடுகின்றன


பினர் டோப்ரக் தான் இசை.துள்ளலான பின்னணி இசை.


ரசித்த வசனங்கள்


1 பயணஙகள்  மனிதனைப்புதுப்பிக்கிறது. என பலர். சொல்றாங்க.ஆனா எவ்ளோ பெரிய பயணமா இருந்தாலும் நீங்க நீங்களாத்தான் இருக்கீஙக.மாற்றம் ஏதும் இல்லை

2.  நீலக்கலரை விரும்பாதவர்கள் யார்?

3  சரக்கு அடிச்சுட்டா ஜனஙக தங்களைப்பற்றித்தான் பேசுவார்கள்

4. வாரன் பபட்டையே மீட் பண்ணி இருந்தாலும். பெருசா ஏதும் பேசி இருக்க மாட்டேன்.அது என் சுபாவம்


5  நாவலுக்கு டைட்டிலே. இன்னும் வைக்கலைன்னா  எழுத இன்னும் விஷயம் இல்லைனு அர்த்தம்

6  நீ என்னை பாலோ பண்ணிட்டு வந்தியா?

ச்சே ச்சே நீ சேப்டியா இருக்கியா?னு. பார்க்க வந்தேன்

7. கடின உழைப்பு  இல்லைன்னா நீ எதுக்கும் ஒர்த் இல்லை


8 அபாயத்தை விட்டோ ,ஆபத்தை விட்டோ நீ ஒரு நாளும் ஓடமுடியாது

9 எப்பவாவது ஸ்டக் ஆகி இருக்கியா?

அந்த வார்த்தையையே யூஸ் பண்ணதில்லை


சபாஷ் டைரக்டர்

1. நாயகன்,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி 

2. நாயகனின் காதலியாக வருபவரின் அழகு,முக வசீகரம்

3 பாலுமகேந்திரா ப்டங்களில் வருவது போல கவிதையான சில காட்சிகள்

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 ஒன்றரை வருட உழைப்பில் தயாரான 90% பணி முடிந்த நாவலின் பிரதியை தயார் செய்யாமல் இருந்தது

2. அஜாக்கிரதையாக இருந்து அந்த நாவலைப்பறி கொடுத்தது

3 நாயகன் ,நாயகி இருவருக்கும் எந்த விதமான  ஒத்த ரசனையும் இல்லாமல் நெருக்கம் வருவது

4. காதலியை விட்டு விலக காரணமே சொல்லப்படவில்லை


5. இளமையான ,அழகான காதலி இருக்கையில் ,50 வயதான,வெகு சுமாரான நாயகியுடன் நெருக்கம் ஆவது நம்பும்படி இல்லை


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+


சிபி எஸ் பைனல் கமெண்ட் - பாலுமகேந்திரா ரசிகர்கள் பார்க்கலாம்,ரேட்டிங் 2.25/5



Monday, October 14, 2024

Mathu vadalara 2(2024)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி டிராமா) @நெட் பிளிக்ஸ்

 


Mathu vadalara (2024)- தெலுங்கு/தமிழ்- சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி டிராமா)@ நெட்பிளிக்ஸ்


2019ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியாகி செம ஹிட் அடித்தது.அதைப்பார்க்காதவர்களுக்கும் இப்படம் புரியும்.தனிக்கதை. தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள் பிடிக்கும் எனில் ,கிரேசி மோகனின் வார்த்தை ஜாலக்காமெடி வசனங்களை நீங்கள் ரசிப்பீர்கள் எனில் இப்படத்தை ரசிப்பீர்கள்


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன்,காமெடியன் இருவரும்  ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.ஆள் கடத்தல் கேஸ்களில் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டும்போது சம்பந்தப்பட்ட ஆட்களை மீட்டு ,பணத்தையும் மீட்பது இவர்கள் பணி


ஒரு கேசில் கடத்தப்பட்ட ஆளை உயிருடன்  பத்திரமாக மீட்டாலும். பணம் இருந்த சூட்கேஸ் நெருப்பில் விழுந்து வீணாகிறது.என்ன திட்டுக்கிடைக்குமோ என இவர்கள் பயத்துடன் இருந்த போது நிறுவன எம் டி அசால்ட்டாக "பணம் போனால் என்ன?நமக்கு ஆளின் உயிர் தான்முக்கியம்   என்கிறார்.இந்த டயலாக்கைக்கேட்டு நாயகனுக்கு மூளையில் ஒரு ஐடியா பிளாஸ் ஆகிறது


அதன் பின். ஒவ்வொரு கேசிலும். பணத்தில் 10% ஆட்டையைப்போட்டு விடுவதை வழக்கமாக்கி விடுகிறார்கள்


அப்போது ஒரு செல்வந்தரின் மகள் கடத்தப்பட்ட கேஸ் வருகிறது.2கோடி ரூபாய். கேட்டு மிரட்டல்.இதை நிறுவனத்துக்குத்தெரியாமல் டீல் செய்து ஒரு பெரிய தொகையை கபளீகரம் செய்ய பிளான் போடுகிறார்கள்


ஆனால் ஒரு ட்விஸ்ட்.கடத்தப்பட்டபெண் கொலையாகி நாயகனின் காரில் பிணமாக இருக்க அந்த கேசில்மாட்டிக்கொள்கிறார்கள்

அந்தக்கேசிலிருந்து தப்பிக்க முற்படும்போதுதான் பல திருப்பஙகள் நடக்கின்றன.எப்படி மீண்டார்கள் என்பது மீதி திரைக்க
தை

நாயகன் ஆக. சிம்ஹா கொடூரி நடித்திருக்கிறார்.குட்.நண்பன் ஆக சத்யா .இவருக்கு டைட்டில் கார்டில் செம பில்டப்.நம்ம் ஊர் சந்தானம் போல் செல்வாக்குமிக்கவர் போல


சுனில். காமெடி செய்யும் ஆபீசர்.வெண்ணிலா கிஷோர் காமெடி வில்லன்.

ரோகினி ரகுவரன் தான் அந்த நிறுவன தலைவர்.கம்பீரமான நடிப்பு 



ரிதேஷ் ரானா தான். இயக்கம்

சுரேஷ் சாரங்க் தான் ஒளிப்பதிவு.குட்.
கார்த்திக் சீனிவாசின் எடிட்டிங் கில் படம். 139 நிமிடஙகள் ஓடுகின்றன.


ரசித்த வசனஙகள்

1 பத்துக்கோடி ரூபா தந்தை ஆளை விட்டுடறேன்

இ.எம்.ஐ ஆப்சன் இருக்கா?

யோவ்.இது என்ன லோனா?


2.  ஐ லைக் எவரி கேர்ள்

3.  அவஙக உனக்கு எவ்ளோ கொடுத்தாங்க?

1000 ரூபா

இந்த ,டேக் திஸ் 150 ரூபா.இப்போ மொத்தம் எவ்ளோ ஆச்சு?

ரூ 1150

இப்போ சொல்.1000 ரூபா பெருசா?1150ரூபா பெருசா?

1150

4. நீ எதுக்காக ஷூட் செய்தே?


நான் Gun shoot தான் செஞ்சேன்.அதை ஏன் வீடியோ ஷூட் செய்தாய்?

5. ஒரு க்ளூ மட்டும் கொடுத்தா கண்டுபிடிப்பது கஷ்டம்னுதான்  அந்த அளவு நீ புத்திசாலி இல்லைன்னுதான் 5 க்ளூ கொடுத்தேன்

அய்யய்யோ.4 க்ளூதான் கண்டுபிடிச்சேன்


6.  இதை எல்லாம் எதுக்காக செஞ்சே? என நான் கேட்கும் வரை நீ பதில் சொல்ல மாட்டே?

7.  ரியா எங்கே?

ரியாவா?அது யாரு?

யாமினியோட பொண்ணு

யாமினி யாரு?

ரியாவோட அம்மா

ரியா,யாமினி இவஙக. ரெண்டு பேரும் யாரு?

அம்மா,மகள்

8. லேக் வியூ லாட்ஜ் இதானா?

எஸ்,வெளில போர்டு இருக்கே? கண் தெரியல?

போர்டு தெரிஞ்சுது,ஆனா  லேக் தெரியல

அந்த லேக்கை ( ஏரியை) மூடிட்டுதான் இதை கட்டுனோம்

9  அடிக்கடி ரேட்டை மாத்த. இது சென்செக்சா?சென்ஸ்லெஸ் பெலோஸ்

10. அதென்ன டி வி ரிமோட்டா? தட்டினா வேலை செய்ய? டைம் பாம்


11. What is the official process?

Unofficial ஆக இந்தக்கேசை எடுத்துக்கறோம்


12.அப்பா.உங்க வருங்கால மாப்ளை. எப்படி இருக்கார்?

மொக்கையா

13. நம்ம வாழ்க்கைக்கதையை வெச்சு அவஙக படம் எடுத்துட்டு அவஙக வசதியா இருக்காஙக



14. வாவ்..ஜெம்ஸ்

நோ .ஜெர்ம்ஸ்

15. வயசுல மட்டும் தான் பெரியவன்னு நினைச்சேன்.மரியாதை தருவதிலும் பெரிய ஆள் தான்


சபாஷ். டைரக்டர்


1 மொக்கைக்காமெடியாக இருந்தாலும் சீரியஸ் க்ரைம் திரில்லர் மூவி போலவே ஏகப்பட்ட ட்விஸ்ட் அண்ட். டர்ன்ஸ்

2.  நான்கு முக்கியக்கேரக்டர்கள் ஆங்காங்கே மாறி மாறி காமெடி செய்வது

3. ரத்தம். வன்முறை ,ஆபாசம் இல்லாத க்ரைம் திரில்லர்


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்.  யு


சி பி கமெண்ட்.  மொக்கைக்காமெடி. ரசிகர்கள் , க்ரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங். 3 /5

Friday, October 11, 2024

வேட்டையன் (2024)-சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)

 



வேட்டையன் (2024)- சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன். ஆக்சன் மசாலா)

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் ,என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்.கொடூரமான குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை  ஆன் த ஸ்பாட் போட்டுத்தள்ளுவதில் மன்னன்.

நாயகி ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை.கஞ்சா கேஸ் சம்பந்தமாக ஒரு புகார் தந்ததால்   அவர் மீது ஒரு கொலை முயற்சி நடக்கிறது.ஆனால் அதில் இருந்து அவர் தப்பி விடுகிறார்.அதன் பின் அவரை பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்கிறார்கள்


இந்த கேசை நாயகன் துப்பு துலக்குகிறார்.குற்றவாளியைக்கண்டுபிடித்து ஷூட் செய்கிறார்.ஆனால் அவர் வில்லனால்  தவறாக சித்தரிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்த பின் உண்மையான குற்றவாளியை நாயகன் தன் டீம் உடன் இணைந்து சட்டத்தின் பிடியில் தண்டனை வாங்கித்தருவதே மீதி திரைக்கதை

நாயகன் ஆக சூப்பர் ஸ்டார் ரஜினி.இந்த வயதிலும் அவரது வேகம் ,ஸ்டைல் என ரசிக்க வைத்தாலும் சில காட்சிகளில் பரிதாபமாய் இருக்கிறார்.ஜெயிலர் கெட்டப்பை அப்படியே  பின்பற்றி இருப்பது பின்னடவு.புது கெட்டப்பில் காட்டி இருக்கலாம்.

சாதா கண்ணாடியில் கூலிங் கிளாஸ் வந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும
 காட்சி செம ஸ்டைலிஷ்.ஆனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை அந்தக்காட்சி பெறவில்லை


மனித உரிமைக்கமிஷன்  ஆபீசர் ஆக அமிதாப் பச்சன்.ட்ரெய்லரில் ,போஸ்டர் டிசைனில் ப்ரமோ கொடுத்த அளவுக்கு படத்தில்முக்கியத்துவம் இல்லை.6 காட்சிகளில் மட்டும் வருகிறார்.


அமரர் சுஜாதா கதைகளில். வரும் வசந்த் கேரக்டர் போல் நாயகனின் உதவியாளராக பகத் பாசில் வருகிறார்.கலகலப்பான அவரது வசனங்கள் அருமை

நாயகி ஆக துஷாரா விஜயன் கச்சிதம்.

வில்லன் ஆக ராணா பவர்புல் வில்லன் இல்லை.

நாயகனின். கூடவே வரும் லேடி போலீஸ் ஆபீசர் ஆக ரித்திகா காட்டும் கம்பீரம் கெத்து.அவரது ஆடை வடிவமைப்பு ,உடல் மொழி. இரண்டும் மிடுக்கு


நாயகனுக்கு ஜோடி மஞ்சு வாரியர்.அதிக காட்சிகள் இல்லை.


இசை அனிரூத்.2 பாடல்கள் குட்.ரஜினி வரும்போதெல்லாம் ஒலிககும். பிஜி எம் குட்

ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்


சபாஷ்  டைரக்டர்


1  அண்ணாமலை ரிலீஸ் கால கட்டங்களில் எல்லாம் ரஜினிக்கு ஓப்பனிங். சீன் பாட்டாக இருக்கும்.அது முடிந்ததும் ஒரு பைட் வரும்.நீண்ட இடைவெளிக்குப்பின் இதில் ஓபனிங்கில் ரஜினிக்கு பைட் சீன்.அதைத்தொடர்ந்து. பாட்டு அதுவும் குத்தாட்ட ஹிட் பாட்டு

2. முதல் 15 நிமிடங்கள் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தி விட்டு அதற்குப்பின் ஜெய் பீம். பாணியில். கதைக்குள் போன விதம்

3.  காமெடிக்கு பகத் பாசில் ,ஸ்டைலுக்கு  ரஜினி ,ஆக்சனுக்கு ரித்விகா என பிரித்த விதம்

4. ஹீரோ செய்தது தவறு என்பதை ஹீரோவே ஒத்துக்கொள்வதாகக்காட்சி வைத்தது

5 என்கவுண்ட்டரை ஆதரித்தும்,எதிர்த்தும்  பேசும் வசனங்கள்

ரசித்த வசனங்கள்

1 புலியை நேரில் பார்க்கனும்னு அவசியம் இல்லை.அது என்ன செய்யும்னு தெரிஞ்சுக்கிட்டாலே பயம் வந்துடும்

2 திருடன்னா முகமூடி போட்டுக்கனும்னு அவசியம் இல்லை.மூளையைக்கொஞ்சம் யூஸ் பண்ணினாப்போதும்

3  பெத்தவங்க செய்யும் பாவ,புண்ணியங்கள் குழந்தைகளை பாதிக்கும் என அவ நினைப்பதால் நாங்க குழந்தையே பெத்துக்கலை

4.  உன்னை எல்லாம் சார் எப்படி நம்பறார்?

ஏன்னா நான் ஒரு திறமையான திருடன்


5.  குறி வெச்சா இரை விழனும்

6.  என்கவுண்ட்டர். என்பது. குற்றவாளிக்கான தண்டனை மட்டுமல்ல.இனி வர இருக்கும் குற்றவாளிகளுக்கான எச்சரிக்கையும் கூட

7.   48 மணி நேரத்துல குற்றவாளியை போலீஸ் பிடிச்சு என்கவுண்ட்டர் பண்ணிட்டா பின் கோர்ட் எதுக்கு?

அப்போ 48 வருசம் கேஸ் இழுத்துட்டு இருக்கனுமா?

8. அவசர அவசரமாகத். தரப்படும் நீதி. புதைக்கப்பட்ட நீதி


9. சட்டம் கொடுப்பது நீதியா?
 இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? 


 10. விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி
11. வெயிட் லாஸ்க்கு நான் ஒரு வழி சொல்லட்டா? ஓசி சோறு சாப்பிடாம காசு கொடுத்து சாப்பிடனும்

12. துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை

13. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல முட்டாள்கள் தான் இருக்காங்கன்னு இப்போ நம்ம 5 பேருக்கு  மட்டும் தான் தெரியும்.இவரு ஊருக்கே பரப்பிடுவார் போல


14. குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?


15. போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது"

16.  மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் "

17.  சார் டீ கேட்டாரு

உள்ளே அவருக்கு தண்ணி காட்டிட்டு இருக்காங்க.தண்ணி குடிச்ட்டு இருக்காரு


18.  நேர்மையோட விலை சாவு தான் போல. 

19. நமக்குத்தேவை. தரமான கல்வி மட்டும் இல்லை.சமமான கல்வியும் கூட

20. நாட்டுக்குத்தேவை. நிறைவான நீதி தான்,அவசர அவசரமான நீதி அல்ல

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கொலைக்குற்றவாளியை கை விலங்கு. இடாமல். ,போதிய போலீஸ் பாதுகாப்புத்தராமலா ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வார்கள்?


2. நாயகனுக்கான தண்டனை தரப்படவே இல்லை.ரமணா க்ளைமாக்ஸ் போல் மரண தண்டனை தர விட்டாலும் அட்லீஸ்ட் 10 ஆண்டு தண்டனையாவது தரனுமே?

3.  ஒரு போலீஸ் ஆபீசர் வீட்டில். போலீஸ் பாதுகாப்போ ,வாட்ச்மேனோ இருக்க மாட்டார்களா?



 சி பி எஸ். பைனல் கமெண்ட் -  வேட்டையன் (2024)-பரபரப்பான ஸ்டைலிஷ் முன் பாதி ,மலையாள சினிமா  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் மெதுவான பின் பாதி ,விகடன் மார்க் 43 ,குமுதம் - ஓகே.அனிருத் பி ஜி எம் குட்.குறி வெச்சா இரை பஞ்ச் ராக்ஸ்.பகத் பாசில் ஒன் லைனர்ஸ் அப்ளாஸ் அள்ளுது.ரேட்டிங் 2.75 / 5

Tuesday, October 08, 2024

ஆரகன்(2024)-தமிழ்-சினிமா விமர்சனம் (திரில்லர்)

 


ஆரகன்  (2024) - தமிழ் - சினிமா விமர்சனம்  ( பேண்ட்டசி த்ரில்லர்) 


இந்திரா சவுந்திரராஜன் ,நாஞ்சில் பி டி சாமி போன்றவர்கள் எழுதிய  திகில் கதைகளை ரசித்தவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட. ,அதிக கவனம் ஈர்க்காத,விளம்பரம். அதிகம். செய்யப்படாத  நல்ல படங்களில் இதுவும் ஒன்று

                     

ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - பல ஆண்டுகளுக்கு முன். ஒரு துறவியின் உயிரைக்காப்பாற்றிய  வில்லன். அதற்குப் பிரதி உபகாரமாக சாகா வரம் பெறுகிறான்.ஆனால் ஒரு கண்டிஷன் உண்டு.அது சஸ்பென்ஸ்


சம்பவம் 2- ஒரு வயசான பெண் சங்கிலியால் கட்டப்பட்டு ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறாள்.மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் அடிக்கடி எதையோ நினைத்து அழுகிறார்.அவருக்கும் ,வில்லனுக்கும் என்ன தொடர்பு என்பது சி


சம்பவம் 3 -  நாயகன் ,நாயகி. இருவரும். அனாதைகள்.காதலர்கள்.நாயகனிடம் ரூ 6 லட்சம் இருக்கிறது.இன்னும் ரூ 4 லட்சம் சம்பாதித்தால் சொந்தமாக ஒரு தொழில் தொடஙகி லைப்ல செட்டில் ஆகி விடலாம் என நினைக்கிறான்


நாயகிக்கு ஒரு ஜாப் ஆபர் வருகிறது.ஒரு செல்வந்தன் தன் வயதான அம்மாவை கவனித்துக்கொள்ள 6 மாதஙகளுக்கு மட்டும் ஒரு நல்ல தொகை கொடுக்க முன் வருகிறான்.அந்தப்பணம் வந்தால்  நாயகனுக்கு உதவியாக இருக்குமே?என நாயகி நினைக்கிறாள்.ஆனால் நாயகன்க்கு அதில் விருப்பம் இல்லை.இவ்ளோ பெரிய தொகையை யாராவது சும்மா தருவார்களா? என சந்தேகப்படுகிறான்.ஆனால் நாயகி அவனை கன்வின்ஸ் செய்து  கிள்ம்புகிறாள்


ஆறு மாதங்கள்   பிரிந்திருக்க வேண்டுமே என்ற தவிப்பில். திருமணம் ஆகாமலேயே இருவரும் இணைகிறார்கள்.இதில் நாயகி. கர்ப்பம் ஆகிறார்


நாயகி கேர் டேக்கர் ஆக அந்த செல்வந்தனின் அம்மாவை நன்கு கவனித்துக்கொள்கிறார்


ஆனால் நாயகிக்கு அடிக்கடி கெட்ட கனா வருகிறது. சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன.இறுதியில். மேலே சொன்ன. 3 சம்பவங்களும் எப்படி ஒரே நேர் கோட்டில் இணைகின்றன என்பதுதான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக மைக்கேல் தங்கதுரை இயல்பாக நடித்துள்ளார்.இயக்குனர் மு களஞசியம் நடிப்பின் சாயல் இவரிடம் உண்டு


நாயகி ஆக. கவிப்ரியா கச்சிதம்.கண்ணியம்.நடிப்பும் அருமை



செல்வந்தனின் அம்மாவாக.  ஸ்ரீ ரஞ்சனி பாந்தமான நடிப்பு.ஒரு திகில் காட்சி மிரட்டல் நடிப்பு


வில்லனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக கலைவாணி.கொஞ்சம் ஓவர் ஆக்டிஙக்


பிரமாதமாக. திரைக்கதை எழுதி. இயக்கி இருப்பவர். அருண்


97 நிமிடங்களில முடியும் படம் என்பதால் குயிக் வாட்ச் ஆகவே பார்க்கலாம்


எடிட்டிங்.  ஒளிப்பதிவு. இசை போன்ற. டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு


சிஜி ஒர்க் மட்டும் பக்காவாக அமைந்து பட்ஜெட்டும்   கூடுதலாக அமைந்திருந்தால் படம்   வேற லெவலுக்குபோய் இருக்கும்




சபாஷ்  டைரக்டர்


1. வில்லனின் போர்சன் ஆன அந்தக்கால கதையை மோஷன் பிக்சர் ஆக காட்டிய சாமார்த்தியம்


2 மொத்தம்  ஐந்தே கேரக்டர்கள். ஒரே ஒரு பங்களா வில் மொத்தப்படத்தையும் முடித்த விதம்




  ரசித்த  வசனங்கள் 


1. உலகிலேயே பெரிய ஆயுதம். நம் மனசுதான்


2. தனிமையில் வாழ்பவர்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.அவர்களுக்கு மனோ பலம் அதிகம்


3 எண்ணங்கள் நல்லதா இருந்தா கனவு  கூட பாசிட்டிவ் ஆகத் தான் வரும்


4. நான் நிறைய தப்புப்பண்றவன் தான்.ஆனா ஒரே தப்பைத்திரும்பபண்ண மாட்டேன்

5 மரணம் ,முதுமை இரண்டையும் விரட்ட மனிதன். போராடிட்டே. இருக்கான்.ஆனால் அவனால ஜெயிக்க முடியல

6  தப்பு பண்றவங்க எல்லோரும் அவஙக தரப்பு நியாயம் ஒண்ணு வெச்சிருப்பாங்க


 7 கெட்டவர்களால்தான் இந்த உலகம் சம நிலைல இருக்கு

8 சகஸ்ட்டபிளா இருப்பவர்களை சீக்கிரம் ஏமாத்திடலாம்


9. குறிஞ்சிப்பூ கொடுத்து அவன் எனக்கு பிரப்போஸ் செஞ்சான்.என். அம்மாவுக்கு என் அப்பா அப்படித்தான் பிராப்போஸ் செஞ்சாராம்

10. தியேட்டர்ல அவளையே பாத்துட்டு இருந்தே .எனக்குத்தெரியும்


சத்தியமா அவ முகத்தைக்கூட நான் பார்க்கலை


முகத்தை மட்டும்தான் பார்க்கலை




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமேக்சில் வில்லனின் வீக்னெஸ் ,சீக்ரெட்ஸ் நாயகிக்கு எப்படித்தெரிகிறது?

2  நாயகியின் செயினை வழிப்பறித்திருடர்கள் பறிப்பது. அப்போது நாயகன் பேசும் வசனம் போலீஸ் ஸ்டேசனுக்குப்போகாதது. இவை மெயின் கதைக்கு என்ன சம்பந்தம்?




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - u/a



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட சில பெரிய பத்திரிக்கைகளில் இப்படம் புரிவது சிரமம் என விமர்சித்து இருக்கிறார்கள்.ஆனால் குழந்தைக்குக்கூடப்புரியும்.கவர் கிடைக்கலை போல.நல்ல படம்.ஓ டி டி யில் இன்னும் வரவில்லை.விகடன் மார்க் 45 ,குமுதம் -நன்று   .  ரேட்டிங்  3 /. 5 


--
 சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,


Monday, October 07, 2024

CTRL(2024)-ஹிந்தி/தமிழ்- சினிமா விமர்சனம். ( சைபர். க்ரைம். டிராமா)@ நெட்பிளிக்ஸ்

 


CTRL (2024)-ஹிந்தி/தமிழ்- - சினிமா விமர்சனம் ( சைபர் க்ரைம் டிராமா). @நெட்பிளிக்ஸ்

நாயகி ஒரு. சமூக வலைத்தள ஆர்வலர்.இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் ,ட்விட்டர் என தீவிரமாக இயங்கும் நபர்.தன் வாழ்வில். எது நடந்தாலும் அதை சோசியல் மீடியாவில் அப்டேட்டுபவர்.


இவர். ஒரு முறை ஒரு பார்ட்டியில் நாயகனை சந்திக்கிறார்.பழகுகிறார்.காதலிக்கிறார்.திருமணமும் நடக்கிறது.


ஐந்து வருடங்கள் ஜாலியாக வாழ்க்கை போகிறது.ஆறாவது வருட துவக்கத்தில் நாயகனை ஷாக் சர்ப்பரைசில் ஆழ்த்த திடீர் விசிட் அடிக்கிறார்.அப்போதுதான் நாயகன். வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப்பார்க்கிறார்.பிரேக்கப் ஆகிறது


இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி. இதுவரை கடந்த 5 வருடங்களாக நாயகனுடன். எடுத்துக்கொண்ட போட்டோக்கள் ,வீடியோக்கள் அனைத்தையும். அழிக்க முற்படுகிறார்


இதற்காக தன். மொபைலில் ஒரு புதிய ஆப் பை டவுன் லோடு செய்கிறார்

அந்த ஆப் நாயகியின் அனைத்து பாஸ்வோர்டுகள் ,ரகசியங்களை சேமித்து வைத்துக்கொள்கிறது


நாயகன். நாயகியிடம் எதோ ஒரு ரகசியத்தை சொல்ல வரும்போது நாயகி அவனைக்கண்டு கொள்ளவில்லை.


நாயகன் திடீர் என கொலை செய்யப்படுகிறான்.அந்தப்பழி நாயகி மீது விழுகிறது.நாயகி அதிலிருந்து. தப்பித்தாளா?இல்லையா? யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது மீதி திரைக்கதை

நாயகியாக அனன் யா பாண்டே அழகாக இயல்பாக நடித்திருக்கிறார்.நாயகனுக்கு அதிக வாய்ப்பில்லை

டெக்நிக்கலாக இது ஒரு தரமான படைப்பு

ரசித்த வசனஙகள்


1.  அவ இவளோட காதலனை லைக் பண்ணி. ஷேர் பண்ணிக்கிட்டா போல

2.  என்னால ஒரே வேலையை செய்ய முடியாது.ஒரே பெண்ணுடன் வாழ முடியாது

3.  என்னை சர்ப்பரைஸ் பண்ண திடீர்னு வந்தியா?லைக்ஸ்,கமெண்ட்ஸ்க்கு ஆசைப்பட்டு வந்தியா?


4. பசஙகளுக்கு தங்கள் உணர்வுகளை. சரியா வெளிப்படுத்தத்தெரியாது

5.  உன் இமை மேல் எனக்குப்பொறாமை.இரவுமுழுக்க உன் கூடவே இருக்குதே?


சபாஷ். டைரக்டர்


1.  ஆன் லைன் அடிமைகளாக நாம் இருந்து எப்படி. பல ஆப்களை நம்பி. நம் பிரைவசியை. இழக்கிறோம் என்பதை விழிப்புணர்வு ப்படமாகத்தந்த விதம்

2. லோ பட்ஜெட்டில். செல் போன் ஸ்க்ரீன் மூலமே முழுக்கதையும் சொன்னது

3. ஒளிப்பதிவு. ,எடிட்டிங். போன்ற டெக்னிக்கல் அம்சங்கள். தரம்

4.    97. நிமிடங்களில் ஷார்ப் ஆக கட் செய்த எடிட்டிங்


லாஜிக். மிஸ்டேக்ஸ்


1. நாயகனின் இமேஜை. எரேஸ் பண்ணும் காட்சிகள். ரிப்பீட். ஆவது எரிச்சல்

2. நாயகனை. ப்ளேபாய் போல காட்டி விட்டு. கதை வேறு ஒரு தளத்தில் ஷிப்ட். ஆகும்போது. நாயகன் போடும் தன்னிலை விளக்க சீரியஸ் வீடியோ எடுபடவில்லை


3. வில்லன். மிகபெரிய கம்பெனி. ஓனர், நாயகி  சாமான் யமானவள். என்பதால். எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்து விடுகிறது


அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். U/A



CPS. Final comment. - 2k கிட்ஸ்களால் ரசிக்க முடியும்.பேசிக் மாடல் போன் மட்டுமே யூஸ் பண்ணத்தெரிந்தவர்களுக்குப்புரியாது.பிடிக்காது.ரேட்டிங். 3/5

Sunday, October 06, 2024

சத்தமின்றி முத்தம் தா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

     





 


                  

ரோஜாக்கூட்டம் (2002)  ,ஏப்ரல் மாதத்தில் (2002) , பார்த்திபன் கனவு (2002) போன்ற நல்ல படங்களில் நடித்த   ஸ்ரீ காந்த் நடித்த  லேட்டஸ்ட்  த்ரில்லர் படம் இது . அறிமுக இயக்குனர் ராஜ் தேவ் இயக்கத்தில்  வெளியான இப்படத்தில்  ஆண்ட்ரியா பாடிய செம்பரம்பாக்கம்   என்னும்  பாட்டு ஹிட்டு .1/3/2024   அன்று   திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது , இன்னும் ஓடிடி யில் வரவில்லை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஓப்பனிங்  ஷாட்ல  நாயகியை  முகமூடி போட்ட  ஒரு ஆள் துரத்திட்டு  வர்றான் . வேகமா ஓடி தப்பிக்க முயற்சிக்கும் நாயகி  எதிரே வரும்   ஒரு காரில்   லிப்ட்  கேட்க  அந்த கார் டிரைவர்  நாயகியை வேண்டுமென்றே  மோதி  நிற்காமல்  போய் விடுகிறான்  .அப்போது நாயகன்   வந்து  நாயகியைக்காப்பாற்றி ஹாஸ்ப்பிடலில் சேர்க்கிறான் 



கண்  விழித்த  நாயகிக்கு  தலையில்  அடிபட்டதால் பழைய நினைவுகள்  ஞாபகம்   வரவில்லை . நாயகன்  நான் தான் உன் கணவன்   என்கிறான் . டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அழைத்துசெல்கிறான் . ஆனால்   நாயகிக்கு  எந்த  நினைவும் வரவில்லை 



ஹாஸ்ப்பிடலுக்கு போலீஸ்   வந்து  விசாரிக்கும்போது  நாயகன் தந்த அட்ரஸ்  போலி என்பது   தெரிகிறது . 

 இந்த  சம்பவம்  நடந்து  ஒரு மாதம் கழித்து  போலீஸ்  ஸ் டேஷனுக்கு   ஒரு ஆள்   வந்து  நாயகியின் போட்டோ  கொடுத்து இது என் மனைவி , கடந்த ஒரு மாதமாகக்காணவில்லை என்கிறான்  



போலீஸ்   விசாரிக்கிறது .இதற்குப்பின்  நிகழும்   திருப்பங்கள்   தான்    மீதி  திரைக்கதை 

நாயகன் ஆக ஸ்ரீ காந்த் . ஆரம்பத்தில்  இருந்தே  இவரது கேரக்ட்டர்   சஸ்பென்சாக செல்வது சிறப்பு . நடிப்பு குட் 

நாயகி ஆக பிரியங்கா  திம்மெஸ்   கொழுக் மொழுக்  மெழுகு  பொம்மை . வில்லன் ஆக  வியான்  புதுமுகம் போல . நடிப்பில் செயற்கை . போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்   ஆக  ஹரீஸ்   பெராடி  கச்சிதம் . வில்லி ஆக  நிகாரிகா பட்ரோ 


ஜோபின்  நவடியால் தான் இசை .சுமார் தான் . 2  பாட்டு ஹிட்டு . பின்னணி   இசை  இன்னும்   தெறிக்க விட்டிருக்கலாம் ஒளிப்பதிவு எம் யவராஜ் . குட்  எடிட்டிங்க் மதன் ஜி . 2  மணி  நேரம் படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன் , நாயகி , வில்லன் , வில்லி , போலீஸ் ஆபிசர்   என்  ஐந்து கேரக்ட்டர்கள்  , ஒரு பங்களா   என லோ பட்ஜெட்டில் ஒரு படத்தை முடித்த  விதம் 


2   ஊ  சொல்றியா மாமா  ஓ  சொல்றியா  பாட்டு மாதிரி  ஒரு எகனை முகனையான  பாட்டை ஆண்ட்ரியா குரலில்  பதிவு   செய்தது 



  ரசித்த  வசனங்கள் 


அப்படி ஒன்றும் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தங்க  விக்ரகம் மாதிரி  அழகுடன்  இருக்கும்  சொந்த சம்சாரத்தை  அதுவும்  600 கோடி ரூபாய் சொத்துள்ளவளை   விட்டு விட்டு  500 ரூபாய்க்கு  கரகாட்டம் ஆடுவது போல  இருக்கும்  வில்லியை தேடி  நாயகனின்  கணவன் போவது நம்பும்படி இல்லை 


2  நாயகி  வாக்கிங் போய் இருக்கா . ஒரு மணி  நேரத்தில் வருவாள் . இது   தெரிந்தும்  பங்களா  மெயின் கேட் , வீட்டு வாசல் கதவு ,  பெட் ரூம்   கதவு   எல்லாவற்றையும் பெப்பேரப்பே   என   திறந்து   வைத்து   விட்டு எந்த மாங்கா  மடையன் ஆவது  பட்டப்பகலில் கள்ளக்காதலில் ஈடுபடுவானா? 


3  பழைய  நினைவு  ஞாபகம்  வராத  நாயகி  தன வீட்டில் கல்யாண ஆல்பம் , போட்டோ  எதுவம்  இல்லையே? என சந்தேகப்பட மாட்டாளா? 


4   மனைவி காணாமல் போய்  ஒரு மாதம் கழித்து  புகார்   தரும் கணவன்  அதற்கு சொல்லும் காரணம்  எடுபடவில்லை 


5   நாயகி - வில்லன்   இருவரது  வெட்டிங்க்  டே   கொண்டாட்டம் நடக்கும்போது  அங்கேயே   வரும் வில்லி யுடன்   வில்லன்  கொட்டம்   அடிபப்து  ஓவர் .  சொந்த சம்சாரம்  பக்கத்தில்   இருக்கும்போது  எந்த முட்டாளும் இப்படி மாட்டிக்க மாட்டான் 


6  நாயகி  கோடீஸ்வரி .பங்களாவில்  ஒரு வாட்ச் மேன் கூட இல்லை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - u/a



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டி வி  ல  போட்டா  பார்க்கலாம் . ஒர்த் இல்லை .  ரேட்டிங்  2 /. 5 



சத்தமின்றி முத்தம் தா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ராஜ்தேவ்
எழுதியவர்ராஜ்தேவ்
தயாரித்ததுகார்த்திகேயன் எஸ்.
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுயுவராஜ்.எம்
திருத்தியதுமதன்.ஜி
இசைஜூபின் நௌடியல்
தயாரிப்பு
நிறுவனம்
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்
வெளியீட்டு தேதி
  • 1 மார்ச் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்