ஆரகன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேண்ட்டசி த்ரில்லர்)
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - பல ஆண்டுகளுக்கு முன். ஒரு துறவியின் உயிரைக்காப்பாற்றிய வில்லன். அதற்குப் பிரதி உபகாரமாக சாகா வரம் பெறுகிறான்.ஆனால் ஒரு கண்டிஷன் உண்டு.அது சஸ்பென்ஸ்
சம்பவம் 2- ஒரு வயசான பெண் சங்கிலியால் கட்டப்பட்டு ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கிறாள்.மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் அடிக்கடி எதையோ நினைத்து அழுகிறார்.அவருக்கும் ,வில்லனுக்கும் என்ன தொடர்பு என்பது சி
சம்பவம் 3 - நாயகன் ,நாயகி. இருவரும். அனாதைகள்.காதலர்கள்.நாயகனிடம் ரூ 6 லட்சம் இருக்கிறது.இன்னும் ரூ 4 லட்சம் சம்பாதித்தால் சொந்தமாக ஒரு தொழில் தொடஙகி லைப்ல செட்டில் ஆகி விடலாம் என நினைக்கிறான்
நாயகிக்கு ஒரு ஜாப் ஆபர் வருகிறது.ஒரு செல்வந்தன் தன் வயதான அம்மாவை கவனித்துக்கொள்ள 6 மாதஙகளுக்கு மட்டும் ஒரு நல்ல தொகை கொடுக்க முன் வருகிறான்.அந்தப்பணம் வந்தால் நாயகனுக்கு உதவியாக இருக்குமே?என நாயகி நினைக்கிறாள்.ஆனால் நாயகன்க்கு அதில் விருப்பம் இல்லை.இவ்ளோ பெரிய தொகையை யாராவது சும்மா தருவார்களா? என சந்தேகப்படுகிறான்.ஆனால் நாயகி அவனை கன்வின்ஸ் செய்து கிள்ம்புகிறாள்
ஆறு மாதங்கள் பிரிந்திருக்க வேண்டுமே என்ற தவிப்பில். திருமணம் ஆகாமலேயே இருவரும் இணைகிறார்கள்.இதில் நாயகி. கர்ப்பம் ஆகிறார்
நாயகி கேர் டேக்கர் ஆக அந்த செல்வந்தனின் அம்மாவை நன்கு கவனித்துக்கொள்கிறார்
ஆனால் நாயகிக்கு அடிக்கடி கெட்ட கனா வருகிறது. சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன.இறுதியில். மேலே சொன்ன. 3 சம்பவங்களும் எப்படி ஒரே நேர் கோட்டில் இணைகின்றன என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக மைக்கேல் தங்கதுரை இயல்பாக நடித்துள்ளார்.இயக்குனர் மு களஞசியம் நடிப்பின் சாயல் இவரிடம் உண்டு
நாயகி ஆக. கவிப்ரியா கச்சிதம்.கண்ணியம்.நடிப்பும் அருமை
செல்வந்தனின் அம்மாவாக. ஸ்ரீ ரஞ்சனி பாந்தமான நடிப்பு.ஒரு திகில் காட்சி மிரட்டல் நடிப்பு
வில்லனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக கலைவாணி.கொஞ்சம் ஓவர் ஆக்டிஙக்
பிரமாதமாக. திரைக்கதை எழுதி. இயக்கி இருப்பவர். அருண்
97 நிமிடங்களில முடியும் படம் என்பதால் குயிக் வாட்ச் ஆகவே பார்க்கலாம்
எடிட்டிங். ஒளிப்பதிவு. இசை போன்ற. டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு
சிஜி ஒர்க் மட்டும் பக்காவாக அமைந்து பட்ஜெட்டும் கூடுதலாக அமைந்திருந்தால் படம் வேற லெவலுக்குபோய் இருக்கும்
சபாஷ் டைரக்டர்
1. வில்லனின் போர்சன் ஆன அந்தக்கால கதையை மோஷன் பிக்சர் ஆக காட்டிய சாமார்த்தியம்
2 மொத்தம் ஐந்தே கேரக்டர்கள். ஒரே ஒரு பங்களா வில் மொத்தப்படத்தையும் முடித்த விதம்
ரசித்த வசனங்கள்
1. உலகிலேயே பெரிய ஆயுதம். நம் மனசுதான்
2. தனிமையில் வாழ்பவர்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.அவர்களுக்கு மனோ பலம் அதிகம்
3 எண்ணங்கள் நல்லதா இருந்தா கனவு கூட பாசிட்டிவ் ஆகத் தான் வரும்
4. நான் நிறைய தப்புப்பண்றவன் தான்.ஆனா ஒரே தப்பைத்திரும்பபண்ண மாட்டேன்
5 மரணம் ,முதுமை இரண்டையும் விரட்ட மனிதன். போராடிட்டே. இருக்கான்.ஆனால் அவனால ஜெயிக்க முடியல
6 தப்பு பண்றவங்க எல்லோரும் அவஙக தரப்பு நியாயம் ஒண்ணு வெச்சிருப்பாங்க
7 கெட்டவர்களால்தான் இந்த உலகம் சம நிலைல இருக்கு
8 சகஸ்ட்டபிளா இருப்பவர்களை சீக்கிரம் ஏமாத்திடலாம்
9. குறிஞ்சிப்பூ கொடுத்து அவன் எனக்கு பிரப்போஸ் செஞ்சான்.என். அம்மாவுக்கு என் அப்பா அப்படித்தான் பிராப்போஸ் செஞ்சாராம்
10. தியேட்டர்ல அவளையே பாத்துட்டு இருந்தே .எனக்குத்தெரியும்
சத்தியமா அவ முகத்தைக்கூட நான் பார்க்கலை
முகத்தை மட்டும்தான் பார்க்கலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமேக்சில் வில்லனின் வீக்னெஸ் ,சீக்ரெட்ஸ் நாயகிக்கு எப்படித்தெரிகிறது?
2 நாயகியின் செயினை வழிப்பறித்திருடர்கள் பறிப்பது. அப்போது நாயகன் பேசும் வசனம் போலீஸ் ஸ்டேசனுக்குப்போகாதது. இவை மெயின் கதைக்கு என்ன சம்பந்தம்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - u/a
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட சில பெரிய பத்திரிக்கைகளில் இப்படம் புரிவது சிரமம் என விமர்சித்து இருக்கிறார்கள்.ஆனால் குழந்தைக்குக்கூடப்புரியும்.
0 comments:
Post a Comment