ரோஜாக்கூட்டம் (2002) ,ஏப்ரல் மாதத்தில் (2002) , பார்த்திபன் கனவு (2002) போன்ற நல்ல படங்களில் நடித்த ஸ்ரீ காந்த் நடித்த லேட்டஸ்ட் த்ரில்லர் படம் இது . அறிமுக இயக்குனர் ராஜ் தேவ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆண்ட்ரியா பாடிய செம்பரம்பாக்கம் என்னும் பாட்டு ஹிட்டு .1/3/2024 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது , இன்னும் ஓடிடி யில் வரவில்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓப்பனிங் ஷாட்ல நாயகியை முகமூடி போட்ட ஒரு ஆள் துரத்திட்டு வர்றான் . வேகமா ஓடி தப்பிக்க முயற்சிக்கும் நாயகி எதிரே வரும் ஒரு காரில் லிப்ட் கேட்க அந்த கார் டிரைவர் நாயகியை வேண்டுமென்றே மோதி நிற்காமல் போய் விடுகிறான் .அப்போது நாயகன் வந்து நாயகியைக்காப்பாற்றி ஹாஸ்ப்பிடலில் சேர்க்கிறான்
கண் விழித்த நாயகிக்கு தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகள் ஞாபகம் வரவில்லை . நாயகன் நான் தான் உன் கணவன் என்கிறான் . டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அழைத்துசெல்கிறான் . ஆனால் நாயகிக்கு எந்த நினைவும் வரவில்லை
ஹாஸ்ப்பிடலுக்கு போலீஸ் வந்து விசாரிக்கும்போது நாயகன் தந்த அட்ரஸ் போலி என்பது தெரிகிறது .
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து போலீஸ் ஸ் டேஷனுக்கு ஒரு ஆள் வந்து நாயகியின் போட்டோ கொடுத்து இது என் மனைவி , கடந்த ஒரு மாதமாகக்காணவில்லை என்கிறான்
போலீஸ் விசாரிக்கிறது .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஸ்ரீ காந்த் . ஆரம்பத்தில் இருந்தே இவரது கேரக்ட்டர் சஸ்பென்சாக செல்வது சிறப்பு . நடிப்பு குட்
நாயகி ஆக பிரியங்கா திம்மெஸ் கொழுக் மொழுக் மெழுகு பொம்மை . வில்லன் ஆக வியான் புதுமுகம் போல . நடிப்பில் செயற்கை . போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ஆக ஹரீஸ் பெராடி கச்சிதம் . வில்லி ஆக நிகாரிகா பட்ரோ
ஜோபின் நவடியால் தான் இசை .சுமார் தான் . 2 பாட்டு ஹிட்டு . பின்னணி இசை இன்னும் தெறிக்க விட்டிருக்கலாம் ஒளிப்பதிவு எம் யவராஜ் . குட் எடிட்டிங்க் மதன் ஜி . 2 மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் , நாயகி , வில்லன் , வில்லி , போலீஸ் ஆபிசர் என் ஐந்து கேரக்ட்டர்கள் , ஒரு பங்களா என லோ பட்ஜெட்டில் ஒரு படத்தை முடித்த விதம்
2 ஊ சொல்றியா மாமா ஓ சொல்றியா பாட்டு மாதிரி ஒரு எகனை முகனையான பாட்டை ஆண்ட்ரியா குரலில் பதிவு செய்தது
ரசித்த வசனங்கள்
அப்படி ஒன்றும் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தங்க விக்ரகம் மாதிரி அழகுடன் இருக்கும் சொந்த சம்சாரத்தை அதுவும் 600 கோடி ரூபாய் சொத்துள்ளவளை விட்டு விட்டு 500 ரூபாய்க்கு கரகாட்டம் ஆடுவது போல இருக்கும் வில்லியை தேடி நாயகனின் கணவன் போவது நம்பும்படி இல்லை
2 நாயகி வாக்கிங் போய் இருக்கா . ஒரு மணி நேரத்தில் வருவாள் . இது தெரிந்தும் பங்களா மெயின் கேட் , வீட்டு வாசல் கதவு , பெட் ரூம் கதவு எல்லாவற்றையும் பெப்பேரப்பே என திறந்து வைத்து விட்டு எந்த மாங்கா மடையன் ஆவது பட்டப்பகலில் கள்ளக்காதலில் ஈடுபடுவானா?
3 பழைய நினைவு ஞாபகம் வராத நாயகி தன வீட்டில் கல்யாண ஆல்பம் , போட்டோ எதுவம் இல்லையே? என சந்தேகப்பட மாட்டாளா?
4 மனைவி காணாமல் போய் ஒரு மாதம் கழித்து புகார் தரும் கணவன் அதற்கு சொல்லும் காரணம் எடுபடவில்லை
5 நாயகி - வில்லன் இருவரது வெட்டிங்க் டே கொண்டாட்டம் நடக்கும்போது அங்கேயே வரும் வில்லி யுடன் வில்லன் கொட்டம் அடிபப்து ஓவர் . சொந்த சம்சாரம் பக்கத்தில் இருக்கும்போது எந்த முட்டாளும் இப்படி மாட்டிக்க மாட்டான்
6 நாயகி கோடீஸ்வரி .பங்களாவில் ஒரு வாட்ச் மேன் கூட இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - u/a
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம் . ஒர்த் இல்லை . ரேட்டிங் 2 /. 5
சத்தமின்றி முத்தம் தா | |
---|---|
இயக்கியவர் | ராஜ்தேவ் |
எழுதியவர் | ராஜ்தேவ் |
தயாரித்தது | கார்த்திகேயன் எஸ். |
நடிக்கிறார்கள் | |
ஒளிப்பதிவு | யுவராஜ்.எம் |
திருத்தியது | மதன்.ஜி |
இசை | ஜூபின் நௌடியல் |
தயாரிப்பு நிறுவனம் | செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் |
வெளியீட்டு தேதி |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment