Saturday, October 05, 2024

ஹிட்லர் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

   

விஜய் யேசுதாஸ்  நடித்த படை வீரன் (2018) , சரத் குமார் நடித்த வானம் கொட்டட்டும் (2020)  ஆகிய  இரண்டு டப்பாப்படங்களை இயக்கிய இயக்குனர் தனா  இயக்கிய மூன்றாவது டப்பாப்படம் தான் இது  .1993ல் ரிலீஸ் ஆன ஷங்கரின்  ஜெண்டில்மேன்  படத்தின் பட்டி டிங்கரிங்க்   அட்லீ வெர்சன் தான் இது என்று சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டாலும்   அந்த அளவு மோசமான படம் இல்லை .  நன்றாகத்தான் போகுது                     


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவும் 1 - வில்லன்  ஒரு அமைச்சர் . ஊழல் வழக்கில் குற்றம்   சாட்டப்பட்டு  பதவி பறி போகும்  நிலையில்  இருப்பவர் .அதனால் வரப்போகும் தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே  ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் . அதனால்  மக்களுக்குப்பணம் கொடுத்து   தேர்தலில்     வெற்றி  பெற நினைக்கிறார் 

தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக  சாலை  வழியாக பணம் கொண்டு   வருவதில்   சிக்கல்கள் இருப்பதால்  ரயில் மூலம்  தனது ஆட்கள் உதவியுடன்  பணத்தைக்கொண்டு வரும்போது  யாரோ வில்லனின் ஆட்களைக்கொன்று  விட்டு  பணத்தை அபேஸ் செய்கின்றனர் 


சம்பவம் 2 -  இந்த கொள்ளைக்ககேஸை  விசாரிக்க  ஓர் போலீஸ்  ஆபீசர் நியமிக்கப்படுகிறார் ..வில்லனான   அமைச்சருக்குத் தன் பணம் கிடைத்தால் போதும், ஆனால்  போலீஸ்  ஆபீசர் கொலையாளியைப்பிடிக்க நினைக்கிறார் 


சம்பவம் 3 - நாயகன்  ஒரு பிரைவேட் பேங்க்கில் ஒர்க் பண்ணுகிறார் இவர்  பணி  முடிந்து வீடு திரும்ப ரயில்வே சுடேஷன் வரும்பொது  நாயகியால்  தடுக்கி  விழுகிறார் . அவர் வாழ்நாளில்  இதுவரை  யாருமே இப்படி  அவரைக்கீழே  விழ  செய்ததில்லை  .அதனால் கண்டதும் காதல் . நாயகியைத்துரத்தி துரத்தி  காதலிக்கிறார் . ஆனால்  நாயகி கண்டுகொள்ளவே இல்லை . ஒரு நாள்  நாயகன்  கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாஸ்ப்பிடலில் உதவி செய்ததைப்பார்த்ததும் நாயகிக்கு காதல் பிறக்கிறது  

முதல்   இரண்டு சம்பவங்களுக்கும்   நாயகன் - நாயகி காதல் போர்சனுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது . முதல் பாதி முழுக்க கமர்ஷியலாக  ,ஜாலியாகப்போகிறது .

இடைவேளையின் போதுதான்  ஒரு பெரிய டிவிஸ்ட் . நாயகன் தான்  அந்தக்கொலைகாரன் என்பது தெரிய வருகிறது .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான்  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக விஜய் ஆண்டனி . வழக்கமாக  உம்மணாம்மூஞ்சியாக  வருபவர்  இதில் சிரித்த முகத்துடன் வருகிறார் . ஆனால் அவர் சிரிப்பில் உயிரோட்டம் இல்லை . அவரது விக் பொருந்தவில்லை . சண்டைக்காட்சிகளில்   ரிஸ்க் எடுத்திருக்கிறார் . இவர் படத்தை நாம் பார்க்க  முயல்வதைப்போல அவ்லோவ் ரிஸ்க் இல்லை 


நாயகி ஆக   ரியா  சுமன் .. ரியா  சுமார்  என  சொல்லலாம் .அழகு ,, நடிப்பு , உடல் மொழி  எல்லாம் சுமார் தான் . நாடகம் பார்ப்பது போல  இருக்கிறது 


 போலீஸ்  ஆபீசர் ஆக  கவுதம் வாசுதேவ மேனன்  நல்ல கம்பீரம் .படத்தில்  உருப்படியானது இவர் நடிப்புதான் .

வில்லன் ஆக ஜெண்டில்மேன் படத்தில்  போலீஸ் ஆபீசர் ஆக வந்த சரண்ராஜ் .31  வருடங்களுக்கு முன்  நான்  நடித்த அதே படக்கதையா?என்ற எள்ளல் படம்  முழுக்க  அவர் முகத்தில் தெரிகிறது 


காமெடிக்கு  ரெடின் கிங்க்ஸ்லீ . சிரிக்க வைக்க சிரமப்படுகிறார் . ஆனால் யோகிபாபு , புரோட்டா  சூரி , ஈரோடு மகேஷ் போல  மொக்கை போடவில்லை 


நவீன் குமாரின் ஒளிப்பதிவு  அட்டகாசம் . பழைய கதை என்றாலும் ரசிக்கமுடிவது ஒளிப்பதிவு தான் விவேக் - மேர்வின்  ஜோடியின் இசை சுமார்  ரகம் . எட்டுப்பாடல்கள் . பிஜிஎம் ஓகே ரகம் சங்கத்தமிழனின் எடிட்டிங்கில் படம் 130 நிமிடங்கள் ஓடுகிறது . போர்  அடிக்காமல் காட்சிகள்  நகர்கின்றன 

சபாஷ்  டைரக்டர்


1   ரயிலில் கொள்ளை அடிக்கும் காட்சிகளும் , அதை சிசிடிவியில் பார்த்து போலீஸ்  நாயகனை சந்தேகிக்கும் காட்சியும்  செம  பரபரப்பு 


2  நாயகன் - நாயகி  ரொமாண்டிக் போர்சன் , போலீசின்  விசாரணை  என மாறி மாறி காட் சிகள்  பரபரப்பாக நகரும் விதம் 



  ரசித்த  வசனங்கள் 


1   என்ன ஆபீசர் ? நைட் ரவுண்ட்ஸா? 


 எஸ்  சார் 


 எத்தனையாவது ரவுண்ட் ? (சரக்கு) 


2   என்னைப்பார்த்தா   அடியாள் மாதிரி   தெரியறேனா? 


இல்லை , அஜித் மாதிரி  தெரியறே 


3   மிஸ் , அடிக்கடி குடிப்பீங்களா?


 நோ நோ , நான் பேமிலி  கேர்ள் 


4  மிஸ் , நான் நல்லவன் , என்னை நம்புங்க 


 ஆனா   நீ  ஆம்பளை 


5    நீங்க   எல்லாரும் சரக்கு அடிச்சிருக்கீங்க , ஆனா   நான்  குடிக்கலை , அடிச்சா  மிஸ் ஆகாது 


6  என் உயிரைக்காப்பாத்துனதுக்கு நன்றி 


தெரியாம   காப்பாத்திட்டேன் 


 வாட் ?


 ஐ மீன் ,நீங்க   ஒரு போலீஸ்   ஆபீசர்னு   தெரியாம   காப்பாத்திட்டேன் 


7  இரண்டாவது   தடவையும்  அதே  மாதிரி   நடந்தா   அது  கோ  இன்சிடென்ட்  இல்லை 


8 ஆம்பளைங்களை   நான் நம்புவது இல்லை , நல்லா   யூஸ்   பண்ணிட்டு பொருள்   நல்லாலை ன்னு வேற ஆப்சனுக்குப்போவானுங்க 


9   சார் , ஒரு வேளை , நாம  தப்பான   ஆளை பாலோ பண்றோமோ ?


 இல்லை , பிரில்லியண்டான ஆளை    பாலோ பண்றோம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓப்பனிங்  சீன்  கிளிப்பிங்க்  படத்தின் சஸ்பென்ஸை  ஓப்பன் செய்து விடுவது பலவீனம் . விஜய் ஆண்டனியின்  சமீப காலப் படங்களில்   இதே  மைனஸ்  ரிப்பீட் ஆகுது 

2   நாயகன் - நாயகி   ரொமாண்டிக்  போர்சன் ஸ்கிரிப்ட் ஆக   சுவராஸ்யமாக இருந்தாலும் எக்சிக்யூட் செய்த விதம் சரி இல்லை .

3  ரயில்வே ஸ்டேசனில்   செக்கிங்கே   இருக்காதா?   அவ்ளோ   பெரிய   சூட்கேசில  பணம் கடத்தும்போது பிடிக்கமாட்டார்களா? 

4  வில்லன் மாங்கா  மடையனா? முதல்  தடவை பணம் பறிபோனதும்   ரூட்டை  மாற்ற மாட்டானா?  அதே  பாணியில் தொடர்ந்து  பணத்தை இழப்பானா? 


5   டைட்டிலுக்கும் ,படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம் என கண்டு பிடித்தால் 1000 பொற்காசுகள் பரிசு ஒரு வேளை  படம் தான் ஹிட் ஆகலை , டைட்டிலிலாவது ஹிட் இருக்கட்டும்னு நினைத்திருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நெட்டிசன்கள்  கழுவி ஊற்றிய   அளவு  மொக்கை எல்லாம் இல்லை .மாமூல் கமர்ஷியல்   ஆக்சன் மசாலா தான் .பார்க்கலாம்  ரேட்டிங்க்  2.25 / 5 .விகடன் மார்க் - 41  .குமுதம் - சுமார் 


Hitler
Theatrical release poster
Directed byDhana
Written byDhana
Produced by
  • T. D. Rajha
  • D. R. Sanjay Kumar
Starring
CinematographyNaveen Kumar I
Edited bySangathamizhan E
Music byVivek–Mervin
Production
company
Chendur Film International
Release date
  • 27 September 2024
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: