Friday, October 11, 2024

வேட்டையன் (2024)-சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)

 



வேட்டையன் (2024)- சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன். ஆக்சன் மசாலா)

நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் ,என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்.கொடூரமான குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை  ஆன் த ஸ்பாட் போட்டுத்தள்ளுவதில் மன்னன்.

நாயகி ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை.கஞ்சா கேஸ் சம்பந்தமாக ஒரு புகார் தந்ததால்   அவர் மீது ஒரு கொலை முயற்சி நடக்கிறது.ஆனால் அதில் இருந்து அவர் தப்பி விடுகிறார்.அதன் பின் அவரை பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்கிறார்கள்


இந்த கேசை நாயகன் துப்பு துலக்குகிறார்.குற்றவாளியைக்கண்டுபிடித்து ஷூட் செய்கிறார்.ஆனால் அவர் வில்லனால்  தவறாக சித்தரிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்த பின் உண்மையான குற்றவாளியை நாயகன் தன் டீம் உடன் இணைந்து சட்டத்தின் பிடியில் தண்டனை வாங்கித்தருவதே மீதி திரைக்கதை

நாயகன் ஆக சூப்பர் ஸ்டார் ரஜினி.இந்த வயதிலும் அவரது வேகம் ,ஸ்டைல் என ரசிக்க வைத்தாலும் சில காட்சிகளில் பரிதாபமாய் இருக்கிறார்.ஜெயிலர் கெட்டப்பை அப்படியே  பின்பற்றி இருப்பது பின்னடவு.புது கெட்டப்பில் காட்டி இருக்கலாம்.

சாதா கண்ணாடியில் கூலிங் கிளாஸ் வந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும
 காட்சி செம ஸ்டைலிஷ்.ஆனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை அந்தக்காட்சி பெறவில்லை


மனித உரிமைக்கமிஷன்  ஆபீசர் ஆக அமிதாப் பச்சன்.ட்ரெய்லரில் ,போஸ்டர் டிசைனில் ப்ரமோ கொடுத்த அளவுக்கு படத்தில்முக்கியத்துவம் இல்லை.6 காட்சிகளில் மட்டும் வருகிறார்.


அமரர் சுஜாதா கதைகளில். வரும் வசந்த் கேரக்டர் போல் நாயகனின் உதவியாளராக பகத் பாசில் வருகிறார்.கலகலப்பான அவரது வசனங்கள் அருமை

நாயகி ஆக துஷாரா விஜயன் கச்சிதம்.

வில்லன் ஆக ராணா பவர்புல் வில்லன் இல்லை.

நாயகனின். கூடவே வரும் லேடி போலீஸ் ஆபீசர் ஆக ரித்திகா காட்டும் கம்பீரம் கெத்து.அவரது ஆடை வடிவமைப்பு ,உடல் மொழி. இரண்டும் மிடுக்கு


நாயகனுக்கு ஜோடி மஞ்சு வாரியர்.அதிக காட்சிகள் இல்லை.


இசை அனிரூத்.2 பாடல்கள் குட்.ரஜினி வரும்போதெல்லாம் ஒலிககும். பிஜி எம் குட்

ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்


சபாஷ்  டைரக்டர்


1  அண்ணாமலை ரிலீஸ் கால கட்டங்களில் எல்லாம் ரஜினிக்கு ஓப்பனிங். சீன் பாட்டாக இருக்கும்.அது முடிந்ததும் ஒரு பைட் வரும்.நீண்ட இடைவெளிக்குப்பின் இதில் ஓபனிங்கில் ரஜினிக்கு பைட் சீன்.அதைத்தொடர்ந்து. பாட்டு அதுவும் குத்தாட்ட ஹிட் பாட்டு

2. முதல் 15 நிமிடங்கள் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தி விட்டு அதற்குப்பின் ஜெய் பீம். பாணியில். கதைக்குள் போன விதம்

3.  காமெடிக்கு பகத் பாசில் ,ஸ்டைலுக்கு  ரஜினி ,ஆக்சனுக்கு ரித்விகா என பிரித்த விதம்

4. ஹீரோ செய்தது தவறு என்பதை ஹீரோவே ஒத்துக்கொள்வதாகக்காட்சி வைத்தது

5 என்கவுண்ட்டரை ஆதரித்தும்,எதிர்த்தும்  பேசும் வசனங்கள்

ரசித்த வசனங்கள்

1 புலியை நேரில் பார்க்கனும்னு அவசியம் இல்லை.அது என்ன செய்யும்னு தெரிஞ்சுக்கிட்டாலே பயம் வந்துடும்

2 திருடன்னா முகமூடி போட்டுக்கனும்னு அவசியம் இல்லை.மூளையைக்கொஞ்சம் யூஸ் பண்ணினாப்போதும்

3  பெத்தவங்க செய்யும் பாவ,புண்ணியங்கள் குழந்தைகளை பாதிக்கும் என அவ நினைப்பதால் நாங்க குழந்தையே பெத்துக்கலை

4.  உன்னை எல்லாம் சார் எப்படி நம்பறார்?

ஏன்னா நான் ஒரு திறமையான திருடன்


5.  குறி வெச்சா இரை விழனும்

6.  என்கவுண்ட்டர். என்பது. குற்றவாளிக்கான தண்டனை மட்டுமல்ல.இனி வர இருக்கும் குற்றவாளிகளுக்கான எச்சரிக்கையும் கூட

7.   48 மணி நேரத்துல குற்றவாளியை போலீஸ் பிடிச்சு என்கவுண்ட்டர் பண்ணிட்டா பின் கோர்ட் எதுக்கு?

அப்போ 48 வருசம் கேஸ் இழுத்துட்டு இருக்கனுமா?

8. அவசர அவசரமாகத். தரப்படும் நீதி. புதைக்கப்பட்ட நீதி


9. சட்டம் கொடுப்பது நீதியா?
 இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? 


 10. விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி
11. வெயிட் லாஸ்க்கு நான் ஒரு வழி சொல்லட்டா? ஓசி சோறு சாப்பிடாம காசு கொடுத்து சாப்பிடனும்

12. துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை

13. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல முட்டாள்கள் தான் இருக்காங்கன்னு இப்போ நம்ம 5 பேருக்கு  மட்டும் தான் தெரியும்.இவரு ஊருக்கே பரப்பிடுவார் போல


14. குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?


15. போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது"

16.  மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் "

17.  சார் டீ கேட்டாரு

உள்ளே அவருக்கு தண்ணி காட்டிட்டு இருக்காங்க.தண்ணி குடிச்ட்டு இருக்காரு


18.  நேர்மையோட விலை சாவு தான் போல. 

19. நமக்குத்தேவை. தரமான கல்வி மட்டும் இல்லை.சமமான கல்வியும் கூட

20. நாட்டுக்குத்தேவை. நிறைவான நீதி தான்,அவசர அவசரமான நீதி அல்ல

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கொலைக்குற்றவாளியை கை விலங்கு. இடாமல். ,போதிய போலீஸ் பாதுகாப்புத்தராமலா ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வார்கள்?


2. நாயகனுக்கான தண்டனை தரப்படவே இல்லை.ரமணா க்ளைமாக்ஸ் போல் மரண தண்டனை தர விட்டாலும் அட்லீஸ்ட் 10 ஆண்டு தண்டனையாவது தரனுமே?

3.  ஒரு போலீஸ் ஆபீசர் வீட்டில். போலீஸ் பாதுகாப்போ ,வாட்ச்மேனோ இருக்க மாட்டார்களா?



 சி பி எஸ். பைனல் கமெண்ட் -  வேட்டையன் (2024)-பரபரப்பான ஸ்டைலிஷ் முன் பாதி ,மலையாள சினிமா  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் மெதுவான பின் பாதி ,விகடன் மார்க் 43 ,குமுதம் - ஓகே.அனிருத் பி ஜி எம் குட்.குறி வெச்சா இரை பஞ்ச் ராக்ஸ்.பகத் பாசில் ஒன் லைனர்ஸ் அப்ளாஸ் அள்ளுது.ரேட்டிங் 2.75 / 5

0 comments: