Wednesday, October 02, 2024

சட்டம் என் கையில் ( 2024) தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

         

             மொக்கைக்காமெடி  செய்பவர்  சீரியஸ்  கேரக்டரில்  நடித்தால்;  ஜனங்க  ஏத்துக்குவாங்க  என்பதை  நிரூபித்தவர் ””விடுதலை”   புரோட்டா  சூரி .. அவரைத்தொடர்ந்து  இப்போது  சதீஷ். சிக்சர்  படத்தை இயக்கிய   சாச்சி இயக்கத்தில்  உருவாகி  இருக்கும் இந்தப்படத்துக்கும்    இதே   டைட்டிலில்  1978ல்  கமல்  நடிப்பில் வெளியான பழைய  படத்தின்  கதைக்கும்  சம்பந்தம்  இல்லை 


 ஒரே  இரவில்  பெரும்பான்மையான  கதை  ஒரே  லொக்கேஷனில்  அதாவது  போலீஸ்  ஸ்டேஷனில் 80% கதை  நிகழும்   என்பது  தமிழுக்குப்புதுசான  வரவேற்க வேண்டிய  திரை  மாற்றம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம்  1 -   வாடகைக்கார்  ஓட்டும்  டிரைவரான  நாயகன் ஒரு  நாள்  இரவில்  ஏதோ ஒரு  டென்ஷனுடன்  கார்  ஓட்டிக்கொண்டு  இருக்கிறார் . அப்போது  எதிரே  பைக்கில்  ஒரு  ஆள்  வேகமாக  வந்து  மோதி    ஆள்  ஸ்பாட் அவுட். அந்த  டெட்  பாடியை  தன்  காரின் டிக்கியில்  போட்டு   பயணத்தைத்தொடர்கிறார்  நாயகன் . போலீஸ்  செக்கிங்கில்  மாட்டுகிறார். ஸ்டேஷனில்  நாயகன்  இப்போது  இருக்கிறார் 


  சம்பவம்  2  -  அதே  நாளில்  ஒரு  பெண் தங்கச்சங்கிலிக்காக  கொலை  செய்யப்படுகிறார் . முகத்தில்  ஏகப்பட்ட  காயங்கள் . போஸ்ட்  மார்ட்டத்துக்கு  பாடியை  அனுப்பி  விட்டு  ரிப்போர்ட்டுக்காக  காத்திருக்கிறது 


 சம்பவம்  3  . நாயகன்  இப்போது  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனில்  ஒரு  சப் இன்ஸ்பெக்டர் , அவருக்குக்கீழ்  பணீயாற்றும்  ஒரு  உதவி சப் இன்ஸ்பெக்டர்   இருவருக்கும்  ஒரு  ஈகோ  கிளாஸ்  உருவாகிறது 


 சம்பவம்  4   அதே  ஸ்டேஷனில்  ஒரு  மிஸ்சிங்க்  கேஸ்  ஃபைல்  ஆகிறது 


  மேலே  சொன்ன  நான்கு  சம்பவங்களுக்கும்  என்ன  தொடர்பு ?  நாயகன்  போலீசிடம்  சிக்கினாரா? அவருக்கு  என்ன  ஆனது ? என்பதை  எல்லாம்  மீதி திரையில்  காண்க


 நாயகன்  ஆக  சதீஷ்  அண்டர் ப்ளே  ஆக்டிங்  செய்து  இருக்கிறார். இதற்கு  முன்  இவர்  காமெடியன்  ஆக  நடித்த  பல  படங்களில்  சிரிப்பே  வராத  தினத்தந்தி  குடும்ப  மலர்  ரேஞ்சுக்கு  மொக்கைக்காமெடி   செய்து   நம்மைக்கடுப்பில்  ஏற்றியவர்  இதில்  மனம்  கவரும்படி  கச்சிதமாக  நடித்திருக்கிறார் 


சப் இன்ஸ்பெக்டர்  ஆக  ஆஜய்  ராஜ் ,  உதவி  சப் இன்ஸ்பெக்டர்  ஆக  பாவல்  நவநீதன்  இருவரும்  கலக்கலான  நடிப்பு . இருவரும்  மோதிக்கொள்ளூம்  காட்சிகள்  தீப்பொறி 


 போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ் ஆக  வரும்  பவா  செல்லத்துரை , , ரித்திகா , ஈவி ஐ  ராமதாஸ் , கெபிஒய்  சதீஷ்   ஆகியோர்  குறைவான  நேரம்  வந்தாலும் நிறைவான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்கள் 


ஜோன்ஸ்  ரூப்பர்ட்டின்  பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்  படத்துக்குத்தேவையான  இசையை  தந்திருக்கிறது . பிஜி முத்தையாதான்  ஒளிப்பதிவு . போலீஸ்  ஸ்டேஷனிலேயே  பெரும்பான்மையான  காட்சிகள்  அதுவும்  முழுக்கதையும்  ஒரே  இரவில் நடப்பதால் சவாலான  பணி  தான் . கச்சிதமாக  செய்து இருக்கிறார் 





சபாஷ்  டைரக்டர்


1   இரண்டு  மணி  நேரப்படத்தில்  முதல்  ஒன்றே  கால்  மணி  நேரம்  ஒரு  போலீஸ் ஸ்டேஷனிலேயே  கதை  சம்பவங்கள்  நடந்தாலும்   போர்  அடிக்காத  காட்சி  அமைப்புகள்  பலம் 


2   சதீஷின்  கேரக்டர்  டிசைன்  , அவரது  கேரக்டரில்  க்ளைமாஸில்  வெளீயிடும்  ஒரு  மர்ம  முடிச்சு 

3   நாயகியே  இல்லாத  நாயகி  தேவைப்படாத  திரைக்கதை 


4   முதல்  பாதி  திரைக்கதை  முழுக்க  டெம்ப்போ  ஏற்றும்  சஸ்பென்ஸ் 


5    கொலைக்கான  தடயங்களை  மறைக்க   போலீஸ்  ஸ்டேஷனிலேயே  நாயகன்  நடந்து  கொள்ளும்  விதம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பிரமாதமாக  செல்லும்  திரைக்கதையில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக  வலுக்கட்டாயமாக  ஒரு  கதையை  கொண்டு  வந்து   சேர்த்த  விதம் 


2    மீடியாக்கள்  முன்  போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகன்  போடும் டிராமா  எரிச்சல் 


3    மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாவிட்டாலும்  இரு  போலீஸ்  ஆபீசர்களும்  அடித்துக்கொள்ளூம்  விதம் 


4 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எடுபடவில்லை .  அதுவரை  என்ன  கதை  சொல்லப்பட்டதோ  அதையே  தொடர்ந்திருக்கலாம் 


5 பொதுவாக  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  கதையில்  கொலை  என சந்தேகிக்கப்பட்ட   ஒரு  சம்பவம்  ஆக்சிடெண்ட்டல்  டெத்  , அல்லது  தற்கொலை  என  முடிந்தால்  சுவராஸ்யம்  குறைவாக  இருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யு / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு   மிகவும்  பிடித்த  படம் .  விகடன்  மார்க்  4 3  ,  குமுதம்  ரேங்க்கிங்க்  குட் .  மை  ரேட்டிங்க்   3/ 5 

0 comments: