Tuesday, October 01, 2024

மெய்யழகன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி )

               


        விஜய் சேதுபதி - த்ரிஷா  நடிப்பில் 2018ஆம்  ஆண்டு தனிப்பெரும் காதல் கதையாக உருவான  96 படத்தின் இயக்குனர்  சி பிரேம்குமாரின் இரண்டாவது  படமாக உருவாகி இருக்கும் இது முதல் படமான 96 படத்தை விட தரமான படம் என்றாலும்  96 அளவு ஜனரஞ்சகமான படம் இல்லை . இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா - ஜோதிகா என்பது ஒரு கூடுதல் தகவல் 


அன்பே சிவம் (2003) ADIYOS AMIGO ந் மலையாளம்  (2024)   ஆகிய படங்களை ரசித்துப்பார்த்தவர்களால் மட்டுமே   இப்படத்தை ரசிக்க முடியும் . காரனம்  இதிலும்  இரு  கதாபாத்திரங்கள்  மட்டுமே  பேசிக்கொண்டிருக்கும்  காட்சிகள்  அதிகம் 


35  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  ரிலீஸ்  ஆன  முதல்  இரு  நாட்களிலேயே  20  கோடி  ரூபாய்  வசூல்  செய்துள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  சிறுவன்  ஆக  இருக்கும்போதே  ஒருசொத்துத்தகறாரு  காரணமாக  தன்  வீட்டை  இழந்த  நாயகனின்  அப்பா  குடும்பத்துடன்  சொந்த  ஊரை  விட்டு  பட்டணம்  வருகிறார் . 20  வருடங்களாக  சொந்த  ஊர்  போகாத  நாயகன்  தன் தங்கையின்  திருமண நிகழ்விற்காக  ஒரே  ஒரு  நாள்  அங்கே  போக  முடிவு  ஏடுக்கிறார் 


   சொந்த  ஊருக்கு  வந்த  அவரை  அவருக்கு  அறீமுகம்  இல்லாத  ஆனால்  அவரை  நன்கு  அறிந்த  ஒருவன் மிக  அன்பாக  அத்தான்  என  அழைத்து   அன்பைக்  கொட்டுகிறான் . நாயகனுக்கும்  அவனுக்கும் இடையே   நிக்ழும்  உரையாடல்கள் தான்  மீதி திரைக்கதை . ஒரே    இரவில்  நடக்கும்  கதை 


நாயகன்  ஆக  அர்விந்த் சாமி . தனி  ஒருவன்  படத்தில்  தனது  செகண்ட்  இன்னிங்க்சை   வில்லன்  அவதாரம்  கொண்டு  பிரமாதமாக  ஆரம்பித்த  இவர்  இப்போது  தனது  மூன்றாம்  இன்னிங்க்சை  ஆரம்பித்து  இருக்கிறார். பிரமாதமான  நுணுக்கமான  நடிப்பு 


 நாயகன்  மீது  அன்பு  செலுத்தும்,  நபராக   கார்த்தி    கலக்கி  இருக்கிறார் . பருத்தி  வீரன், பையா  படங்களூக்குப்பின்  இவருக்குப்பெயர்  சொல்ல  ஒரு  படம் 


 கார்த்தியின்  மனைவியாக  ஸ்ரீ  திவ்யா  சில காட்சிகளே  வந்தாலும் இதமான  நடிப்பு 


 ராஜ்கிரண்  , தேவதர்ஷினி , கருணாகரன் , ஜெயப்பிரகாஷ் , இளவரசு  என   பல வித  கதாபாத்திரங்களில்  அருமையான  நடிப்பை   அனைவரும்  வெளிப்படுத்தி இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தாவின்  இசையில்   6  பாடல்கள்  இருந்தாலும்  கமல் பாடிய  யாரோ இவர்  யாரோ  செம  ஹிட்  பாட்டு . பின்னணி  இசையும்  கச்சிதம் , மகேந்திரன் , ஜெயராஜூ   ஆகியோர்  ஒளிப்பதிவில்  படத்தின்   75%  காட்சிகள்  ஒரே  இரவில்  நடப்பதால்  சவாலான  வேலை தன்  .. ஆர்  கோவிந்த ராஜின்  எடிட்டிங்கில் படம்   3  மணி  நேரம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   கல்யணத்துக்கு கிஃப்ட்  வாங்கி வந்த நாயகன்  கல்யாணப்பெண்ணான தன்  தங்கைக்கு மேடையிலேயே  அவற்றை அணிவித்து விடும் செண்ட்டிமெண்ட்  காட்சி 


2   தேவதர்சினியிடம்  கார்த்தி  ஃபோனில்  பேசும்  காட்சியும் பேசி முடித்த பின்  அவர்  நாயகனிடம்  யார் அவன் ? என  வியக்கும்  காட்சியும் 


3  நாயகனுடன்  சேர்ந்து  கொண்டு  தண்ணி அடிக்கும்  தன்  கணவன் பாட்டுப்பாடும்  விதத்தை ரசிக்கும் ஸ்ரீதிவ்யாவின்  நடிப்பு 

4  நாயகனின்  முன்னாள்  காதலியை  நலம்  விசாரிக்கும்  காட்சியும் , நாயகனை  ரசிக்கும்  காதலியும் 


5   யாரோ  இவன்  யாரோ  பாடலை  உருக்கமான  குரலில் பாடி இருப்பவர்  கமல் . நாயகன் படத்தில்  தென்பாண்டிச்சீமையிலே பாடலைப்போல  காலம்  கடந்தும்  பேசப்படும்  பாடலாக  இது நின்று பேசும், 


6   அவன்  உயரத்தில்  எங்கேயோ  இருக்கான், நான்  இங்கே  இருக்கேன், ஃபோன்  பண்ணி சாரி  கேட்கனும்   என  நாயகன்  ஃபீல்  பண்ணும்  காட்சி



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  யாரோ  இவர்  யாரோ  சொந்தம் யார் தான்  இவரோ ?


  ரசித்த  வசனங்கள் 


1  சொந்த ஊர்லயே  லாட்ஜ்ல  ரூம்  போட்ட  முத ஆள்  நாமாத்தான்  இருப்போம் 


2  நம்ம ஊர்ல மட்டும் தான்  நல்லவனை  இளிச்சவாயன் என சொல்லி ஏமாத்துவோம், கெட்டவனை சாமார்த்தியசாலி என தலைல தூக்கி வெச்சு ஆடுவோம் 


3   செல் ஃபோனுக்கு சார்ஜ் போடனும், பத்திரம் 


 பக்கத்துலதான்  போலீஸ்  ஸ்டேஷன்  இருக்கு . அங்கே  போய் போட்டுட்டு  வரவா? 


4  குடிச்சுட்டு யாராவது  பொய்  சொல்வாங்களா? 


5  எல்லாரும்  நல்லவங்க தான் , யாரையும்  குத்தம்  சொல்ல  முடியாது , எல்லாம்  அந்தப்பணம்  பண்ணும்  வேலை 


6   தங்கராசு ... 


 ம் 


 தூங்கிட்டியா? 


ஆமா \


 சரி  முழிச்சுக்கோ , போர்க்கால அடிப்படைல உடனே  2  பீர்  வேணும்


7   பிறக்கப்போற  குழந்தை  ஆணோ பெண்ணோ ஒரே பேர்தான் ...கெஸ்? 


தங்கம்?


 நோ 


 மது ?


 ம்ஹூம்.. நீயே  சொல்லிடு 


 அருள் மொழி 


8  வடக்கிருந்து   உயிர்  துறத்தல்  என்பது   புற  முதுகில்  காயம்  பட்ட  மன்னன்  வடக்கு  நோக்கி  தவம்  இருந்து  அன்னம்  , தண்ணீர்  இல்லாமல்  உயிர்  நீப்பது 


9  அது  எப்படி  உங்க  ஃபோன்  நெம்பரை  நீங்களே  மாத்தி  சொல்வீங்க?  நான்  தான்  மப்புல  மாத்தி  எழுதி  இருப்பேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கேரளாவில் இருப்பது போல  தமிழ் நாட்டில் பஸ் கண்டக்டர்களுக்கு என தனி சீட்  பஸ்சில் கிடையாது . ஆனால் ஒரு அரசாங்க டவுன் பஸ்சில் கண்டக்டர் சீட்  என தனியாக இருப்பது போல காட்சி இருக்கு ( சென்னை  போன்ற நகரங்களில் ஓடும் பஸ்களில்  அப்படி உண்டு , ஆனா நீடா மங்கலம் மாதிரி கிராமங்களில் ஓடும் டவுன் பஸ்களில் அப்படி இல்லை )


2  கண்டக்டர் சீட்  என்பது தெரியாது  என  நாயகன்  சொல்றார். பஸ்சில் எல்லா சீட்டுகளூம் சோபா போல இருக்கு . கண்டக்டர் சீட்  மட்டும்  வெறும் ஒயர் கூடை போல பின்னப்பட்ட சீட். வித்தியாசம்  தெரியாதா? 


3  ஆண்ட்ராய்டு ஃபோன் சார்ஜ்  ஏற  ஒன்றரை மணி நேரம்  ஆகும், ஆனால் நாயகன்  சாப்பிடும் 10 நிமிட   நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஏறி விடுகிறது 


3  கைவசம்  சரக்கு இல்லாத  டப்பாப்பட  டைரக்டர்கள்  தான்  கற்பனை  வறட்சி காரணமாக  நாயகன்  சரக்கு அடிப்பது  போல  காட்சிகள்  அதிகம்  வைத்து படத்தை இழுப்பார்கள் ..  இவருமா? 


4   படம்   போட்டு  2  மணி நேரம்  ஆனதும்  ஒரு சலிப்பு வந்து விடுகிறது . ஒரே  நபர்  பேசிக்கொண்டே  இருப்பது   போர்.  அதற்குப்பதிலாக  நாயகன் , தோழன்  இருவரது  ஃபிளாஸ்பேக்  லவ்  ஸ்டோரிகளைக்கொஞ்சம்  காட்டி  இருக்கலாம்


5  நாயகன்  வீடு  வாங்க  தன்  சேமிப்புப்பணம் +  நகையை  அடமானம்  வைத்த  பணம்  என  25  லட்சம் ரூபா  கொடுக்க  முன்  வருவது  எல்லாம்  ஓவர்  


6  கார்த்தி  யார்  என்பதை  அறீயாமல்  தடுமாறும்  நாயகன்  கார்த்தி மப்பில்  மட்டை  ஆகிக்கிடக்கும்போது  அவர்  மனைவி ஸ்ரீ திவ்யாவிடமே  விசாரித்து  இருக்கலாமே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சொந்த  ஊரை  விட்டு  வெளியூரில்  நீண்ட  நாட்களாக  வாழ்பவர்களூக்கு ஒரு  நாஸ்டாலஜி  அனுபவம்  தரும் . தெலுங்கு  டப்பிங்க்   டப்பா  மசாலாப்படங்கள்  மட்டுமே  ரசிப்பவர்களுக்குப்படம்  பிடிக்காது .  விகடன்  மார்க்   50   குமுதம்  ரேங்க்கிங்க்  நன்று  , மை  ரேட்டிங்  3/5


நன்றி  - அனிச்சம் மின்னிதழ்  1/10/2024