Saturday, September 07, 2024

SWAKARYAM SAMBHAVA BAHULAM -ஸ்வகார்யம் சம்பவ பாகூலம் (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

             


         31/5/2024  அன்று திரை அரங்குகளில் வெளியானபோது  " த்ரிஷ்யம்" பாதிப்பில்  உருவான படம் என்ற விமர்சனங்களோடு  படம் சுமாராகத்தான் போனது . ஆனால்  என் பார்வையில் இது நல்ல படம் .முதல்  பாதி    மெலோ  டிராமாவாகவும் , பின் பாதி க்ரைம் டிராமா போலவும் நகரும் ஒரு பீல் குட்  மூவி .இப்போது அமேசான் பிரைம்  ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - நாயகன் 50 வயதான சிங்கிள் டாடி . இவருக்கு ஒரு அம்மா , இரு மகள்கள்  உண்டு . மனநலக்காப் பகத்தில்  பணி புரிகிறார் . அங்கேயே பணி  புரியும்  சக ஊழியரைக்காதலிக்கிறார் . அந்தப்பெண்ணுக்கும் இவர் மீது வெளிப்படுத்தாத காதல் உண்டு .இருவருக்குமான  நட்பு  ஒரு கவிதை போல  சொல்லப்படுகிறது 



சம்பவம் 2  - நாயகனின்  இரண்டாவது மகள் டீன் ஏஜ்  கேர்ள் .பள்ளியில் படிக்கிறார் . அவளை  எப்போதும்  சுற்றி சுற்றி வரும்  ஒரு மாணவன் , அவன் கூட இருக்கும்  அவனது நண்பன் .இவளுக்கு தன்னை சுற்றி வரும் மாணவனை விட அவன் கூட இருக்கும் நண்பனைப்பிடித்து விடுகிறது . இருவரும் காதலிக்கிறார்கள் . வரம்பு மீறாத கண்ணியக் காதலாக வளர்கிறது 



சம்பவம் 3  - நாயகனின்  முதல்  மகள்  திருமணம் ஆனவள் .  காதல் திருமணம் புரிந்தவள் . கணவன் ஒரு வெட்டாபிஸ் , சரக்கு பார்ட்டி . அவ்வப்போது மனைவியை மிரட்டி மாமனார் ,மூலம் காசு வசூலிப்பவன் 


மேலே சொன்ன 3  சம்பவங்களை  வைத்து முதல் பாதி மேலோ டிராமாவாக நகர்கிறது 


 டீன் ஏஜ் கேர்ள்-ன்  ட்யூஷன் மாஸ்டர்  ஒரு நாள் அவளை பாலியல் வன் கொடுமை செய்து விடுகிறான் .விபரம் அறிந்து நாயகன் வில்லனைத்தேடிப்போனபோது ஆள் ஸ்பாட்டிலில்லை எஸ்கேப் 


முதல் மகளை   அவளது புருஷன் பணம் கேட்டு அடித்தபோது அவர்களது மகன் அந்தக்காட்சியை வீடியோ எடுத்து தாத்தாவான   நாயகனுக்கு அனுப்பி விடுகிறான் 


இந்த சம்பவத்துக்குப்பின் மகளின் புருசனைக்காணவில்லை .மகள் போலீசில்  புகார் தருகிறாள் 


நாயகன் தான்  அந்த இருவரையும் கொலை செய்தானா? போலீசில் இருந்து எப்படி  தப்பித்தான்  என்பது மீதி திரைக்கதை 

நாயகன் அக்கா ஜியோ பேபி அருமையான  அண்டர்ப்பிளே   ஆக்டிங்க் .விருதுக்குரிய நடிப்பு . மிக யதார்த்தம். முதல் மகளாக அண்ணு ஆண்டனி  பொலிவான , குடும்பப்பாங்கான தோற்றம் ..இரண்டவது மகளாக ஆர் ஜெ அஞ்சலி அழகிய முகம் பாந்தமான நடிப்பு .  நாயகி ஆக  ஷெல்லி  நல்ல குணச்சித்திர நடிப்பு . முதல் மகளின் கணவன் ஆக சஜின் செருகையில்  சுமாரான நடிப்பு 

நாயகன் அக்கா ஜியோ பேபி அருமையான  அண்டர்ப்பிளே   ஆக்டிங்க் .விருதுக்குரிய நடிப்பு . மிக யதார்த்தம். முதல் மகளாக அண்ணு ஆண்டனி  பொலிவான , குடும்பப்பாங்கான தோற்றம் ..இரண்டவது மகளாக ஆர் ஜெ அஞ்சலி அழகிய முகம் பாந்தமான நடிப்பு .  நாயகி ஆக  ஷெல்லி  நல்ல குணச்சித்திர நடிப்பு . முதல் மகளின் கணவன் ஆக சஜின் செருகையில்  சுமாரான நடிப்பு 


 நசீர்  பதருதீன்   என்பவர்தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  தயாரித்து  இருக்கிறார் 


சித்தார்த்தா பிரதீப் தான் இசை . ஒரு பாடல் செம மெலோடி . பின்னணி இசை கச்சிதம் ராகேஷ் தரேன் தான் ஒளிப்பதிவு . இரு நாயகிகளை அழகாக காட்டிய விதம் குட்  நீரஜ் குமார் டிட்டிங்கில் 2  மணி  நேரம் படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1  முதல் காட்சியிலேயே நாயகனை போலீஸ்  விசாரிப்பது போல  தொடங்கி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விதம் 


2  படத்தில் வரும் மூன்று  பெண் கதாபாத்திரங்களை கண்ணியமான உடையில் , குடும்பப்பாங்காகக்காட்டிய விதம்  


3  நாயகனின்  வீட்டு நிலவறையில்  அடைத்து வைத்திருப்பது  ட்யூஷன்   மாஸ்ட்ரையா?  மாப்பிள்ளையையா?  என்ற சஸ்பென்ஸை  காப்பாற்றியது 


4 கத்தியின்றி , ரத்தம் இன்றி  வன்முறை இன்றி இப்படத்தின்  திரைக்கதையை அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஒரு காதலனுக்கு வேண்டிய முக்கியமான  இரண்டாவது தகுதி என்ன தெரியுமா? தைரியம் 


ஓஹோ , அப்போ  முக்கியமான  முதலாவது தகுதி என்ன?


அதான் உன் ஆள் வர ரூட்ல பல்லு  கூட  துலக்காம  காலங்காத்தால வந்து நிக்கறியே , , இதுதான் 

  2  ஒரு பொண்ணு  தன அப்பா கிட்டே அல்லாது வேற யா கிட்டே ஆறுதல்  வார்த்தை கேட்டுக்க முடியும் ? 


3   எல்லாருக்கும் கஷ்டம் வரும்,ஆனா  எனக்கு மட்டும் லாரி பிடிச்சு  ஒரு லோடு  நிறைய வரும் 


4   போலீஸ் ஜீப் ல ஏ சி இல்லையா?  பிணம் கொண்டு போகும் ம் அமரர் ஊர்தி ல கூட ஏ சி இருக்கு 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 போலீஸ் ஸ்டேஷனில் யார் புகார் கொடுத்தாலும்   FIR பதிவு செய்யும் போது  அவங்க போன் நெம்பர் வாங்கிக்குவாங்க , ஆனால் போலீஸ் புகார் கொடுத்த பெண்ணின் அப்பாவிடம் வந்து விசாரித்து வாங்கிசெல்கின்றனர் 


2  ட்யூஷன் மாஸ்டரின்  கேரக்டர்  டிசைன் சரி இல்லை .மாணவிகளிடம்  எரிந்து விழுகின்ற கோபக்காரராகக்காட்டி விட்டு பெண் சபலம் உ ள்ளவராகவும் காட்டி இருப்பது எதனால் ? அப்படிப்பட்ட  சபல உள்ளவன்  பெண்களிடம் சிரித்துப்பேசும்  கேரக்ட்டராகத்தானே  இருப்பான் ? 


3  காணாமல் போன  ட்யூஷன் மாஸ்டரை  நாயகன் கண்டுபிடித்தது எப்படி? வீட்டின் நிலவறை  வரை கொண்டு வந்தது எப்படி? என்பது விஷூவலாகக்காட்டப்படவில்லை 


4   நாயகன்  நாயகியை  சிஸ்டர் ,சிஸ்டர்   என்று தான் படம் முழுக்க அழைக்கிறார் ( நர்ஸ்)  பெயர் சொல்லி ஒரு காட்சி யில் கூட  அழைக்கவில்லை . ஆனால் காதலிக்கிறார் .முரண்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எல்லோருக்கும் படம் பிடிக்காது . மிக மெதுவாககாட்சிகள் நகரும் . பெண்கள் ,பொறுமைசாலிகள்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  2. 75 / 5

0 comments: