Monday, September 02, 2024

SARIPODHAA SANIVAARAM (தெலுங்கு) SURYA'S SATURDAY (2024) -தமிழ் -- சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

         


   90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன முதல் 2 நாட்களிலேயே 50 கோடிரூபாய்  வசூல் செய்து  மெகா ஹிட் ஆன மசாலா படம் இது .ஹீரோவை விட வில்லனுக்கு  அதிக கை தட்டல்கள் கிடைத்த  படம் . நான் ஈ  புகழ் நானியின் திரை  உலக வாழ்க்கையில்  அதிக செலவில் தயாரான படம் இது 


2022 ம் ஆண்டு  வெளியான  ANTE SUNDARANIKI  ( அடடே சுந்தரேஷா ) படம் பெரிய  வெற்றி அடையாத போது அதே இயக்குனருடன் இணைந்து ஒரு வெற்றிப்படம் கொடுப்பேன்  என சவால் விட்ட நானி அதில்  வெற்றி பெற்றிருக்கிறார் . இயக்குனர்  விவேக் ஆத்ரேயா + நானி  + எஸ் ஜெ   சூர்யா   கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ் மசாலா  ஆக்சன் படம் இது       


SARIPODHAA SANIVAARAM   என்ற டைட்டிலுக்கு   சனிக்கிழமை  மட்டும்  போதுமா?  என்று அர்த்தம் 



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சிறுவனாக இருக்கும்போதே முரடன் ஆக இருக்கிறான் , இதனால் அவனது அம்மா அவனிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார் . எப்போதும் கோபமாகவே இருக்காதே . வாரம் ஆறு நாட்கள்   அமைதியாக இரு . யாருடனாவது பிரச்சனை ஏற்பட்டால்   அதை   எழுதி வைத்துக்கொள் , வாரம் ஒரு நாள்  அடிதடியில் இறங்கு   என்கிறாள் , சுருக்கமா சொல்லனும்னா  நாயகன் ஞாயிறு முதல் வெள்ளி வரை மாணிக்கம் ஆகவும்,   சனிக்கிழமை  மட்டும்  மாணிக் பாட்சா ஆகவும் இருப்பான் 


வில்லன் ஒரு சைக்கோ .போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவனுக்கு  பர்சனல் ஆக ஏதாவது பிரச்சனை என்றால் லாக்கப்பில் இருப்பவனை போட்டு அடி  நொறுக்குவது , அவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது அவன் வழக்கம் 


நாயகி  வில்லன் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்  ஆக   இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில்  சாதா கான்ஸடபிள் 


ஒரு கட்டத்தில் நாயகன்  முகமூடி போட்டு வில்லனை அடித்து விடுகிறான் . வில்லன் தன்னை அடித்தவன் யார் என தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் . நாயகனுக்கு , வில்லனுக்கும்  நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான்  மீதி திரைக்கதை  


எந்த மொழியில்   எடுத்தாலும்  ஹிட் ஆக வாய்ப்புள்ள  மசாலா ஃபார்முலா  கதை   இது 


 நாயகன் ஆக  நானி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது  ஹேர் ஸ்டைல் , பாடி லேங்க்வேஜ்  கச்சிதம் 


 நாயகி ஆக  பிரியங்கா மோகன் பாந்தமான தோற்றம் . பால் அல்வா மாதிரி   மாசு மரு இல்லாத  மொசைக்  முகம் . ஆனால்  நடிப்பில் ஓக்கே  ரகம்  தான் . பிரமாதம் என சொல்ல முடியாது 


  வில்லன் ஆக அதகளப்படுத்தி இருப்பவர் நடிப்பு  அரக்கன் எஸ்  ஜே சூர்யா . நாயகனை  விட   வில்லன் கேரக்டர்  வலிமையாக எழுதப்பட்டிருப்பது பெரிய பிளஸ் . ஆக்சுவலாக  இவர் செய்வது ஓவர் ஆக்டிங் தான் , ஆனால்  ஆடியன்ஸ்  ரசிக்கிறார்கள் . இவர் நடிக்கும் காட்சிகளில் மற்ற அனைவருமே   டம்மி  ஆகத்தெரிவது  இவருக்குப்பெரிய பிளஸ் 


1985 ஆம் ஆண்டு வெளியான  காக்கிச்சட்டை படத்தில் வில்லன் ஆன சத்யராஜ்  தகடு தகடு   என்ற  டயலாக்கை  பேசும்போது  அரங்கம்  அதிரும் . அதே  பாணியில்   க்ளைமாக்சில்  கமல்  போலீஸ்  போலீஸ்  என சத்யராஜ்  பாணியில்  சதயராஜைக்கலாய்க்கும்போது  கமல்  ரசிகர்கள்   கூட   கை தட்டவில்லை . அதே  போல  இந்தப்படத்திலும்  ஹிஸ்டரி  ரிப்பீட்  ஆகி இருக்கிறது 


  வில்லன்  ஆன எஸ்  ஜே  சூர்யா  ஒரு பாணியில்  வசனம்  பேசி    கை  தட்டல்  வாங்குவார் . க்ளைமாக்சில்  நானி  அதே  பாணியில்  நான்கு  வரி  டயலாக்  பேசுவார் , ஆனால்  அது  எடுபடவில்லை 

  இவர்கள் போக   முரளி சர்மா , அதிதி பாலன் ,   அபிராமி ஆகியோர்  நடிப்பும் குட் 


 ஜேக்ஸ்  ஜோ இசையில்  12 பாடல்கள் . அவற்றில் 3  பாட்டு ஹிட்டு . பின்னணி  இசை தெறிக்கிறது 


முரளி  யின் ஒளீப்பதிவு பிரமாதம் . சனிக்கிழமை மட்டும் ரெட் ஷேடோ  மற்ற  நாட்களில்   சாதா  கலர்   என  எடுத்த ஐடியா  அட்டகாசம்


 கார்த்திகா  ஸ்ரீனிவாஸ்  எடிட்டிங்கில்  படம் 175  நிமிடங்கள்  ஓடுகின்றன 


 நாயகன் , வில்லன் , நாயகி இவர்களைப்பற்றி  அறிமுகப்படுத்துவதற்கே  முதல் ஒரு  மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள் , கொஞ்சம்  நீளம் தான் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  விவேக்  ஆத்ரேயா 




சபாஷ்  டைரக்டர்


1   வாரா வாரம்  ஒரு  நாள்  ஆக்சன்  அவதாரம்  மற்ற    நாட்களில்  அமைதி  என்ற  கான்செப்ட்    நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


2  நாயகன் , நாயகி  இருவரும்  பால்ய கால  தோழர்கள் , ஆனால்  இப்பொது  பரஸ்பரம்  ஒருவரை ஒருவர்  அடையாளம்  தெரியாது  என்ற  கான்செப்ட்  ரசிக்கும்படி  இருந்தது 


3  வில்லனின்  எண்ட்ரி   சீன்  ரொம்ப  லேட்  என்றாலும்   டோட்டலி ஸ்டீல் த ஷோ   அல்லது  டேக்கன்  த    மூவி  அண்டர்  கண்ட்ரோல்  என்று   சொல்லும்  அளவுக்கு  ஆர்ப்பாட்டமான எஸ்  ஜே  சூர்யா  நடிப்பு 


4   நாயகனின்  சனிக்கிழமை  அவதாரம்  நாயகிக்குத்தெரியாது . அப்போ  நாயகன்  நாயகி  உடன்   இருக்கும் போது  சனிக்கிழமை   அன்னைக்கு  அடிக்கனும்  என  இன்னொரு  வில்லனின்  அடியாட்களுக்கு கட்டளை  பிறப்பதும்   அந்த   ஆக்சன்  சீனும்  அதகளம் 


5   வில்லனை  நாயகன்  முதன்  முதலாக  அடிக்க  வரும்போது  சனிக்கிழமை  மிட்  நைட்  12  மணி  ஆவதும் , நாயகன்  வில்லனை  அடிக்காமல்  பின்  வாங்குவதும்  , அந்த   கடிகாரம்  10  நிமிசம்  ஃபாஸ்ட்  என்பதை  அறிந்து  திரும்பி   வந்து  அடிப்பதும்  செம  சீன் 


6   வில்லன்  நாயகன்  ஒரு  சனிக்கிழமை  சனியன்  என்பதை  கண்டு பிடிக்க  முற்படும்  காட்சிகள்  கலக்கல்  காமெடி 


7  வில்லனின்  அண்ணனை  வில்லனே  போட்டுத்தள்ள  முயல்வதும் . ஆனால்  அண்ணன்  வில்லனை  தன்  உயிரைக்காப்பாற்றியவன்  என தவறாக நினைத்து  பாசத்தில் உருகுவதும் செம காமெடி  காட்சிகள்


8  வில்லனின்  சந்தேக  வளையத்தில்   இருந்து   தப்பிக்க   நாயகன்  வில்லனிடமே  போய்   என்னை  ஒருத்தன்  சனிகிழமை அடிச்சுட்டான்  என கேஸ்  கொடுப்பதும் , அதைத்தொடர்ந்து   வில்லன்  நாயகனை  சாட்சியாக  வைத்துக்கொள்வதும்  காமெடிக்கலக்கல்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1 நமக்குப்பிடிச்சவங்களை ,பிடிச்சவங்களோட தான் சந்திப்போம் .


2 நீ  அம்பி  இல்லை .,அந்நியன் என்பது அவளுக்குத்தெரிஞ்சா நீ ரோமியோ ஆக முடியாது 


3 அவனை  அடிச்சதும் ,உன்னை  அடிச்சதும் , என்னை  அடிச்சதும்  ஒரே ஆள் 


 சார் , உங்களை எப்படி ... ?


 நீ எவ்ளோ ஷாக் ஆனாலும் அதான் நிஜம் 



4  இந்தப்பாவிப்பையன் கூட இருந்துக்கிட்டே  என்னை அப்பாவி ஆக்கி இருக்கான் 


5  கூப்பிட்டியா? சமந்தா? 

 இல்லையே? 


 கூப்பிடாமயே கூப்பிட்ட மாதிரி  இருந்தா ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  ஒரு  சாதா இன்ஸ்பெக்டர் . அவர்  பண்ணும்  அட்டூழியங்கள்  ஓவர்  ரகங்கள் . இதெல்லாம் 1980  கால  கட்டத்துக்கு  ஓக்கே , ஆனால்  சமூக  வலைத்தளங்கள்  இருக்கும்  இப்போதைய  கால  கட்டத்தில்  வீடியோ  எடுத்து  வெளியிட்டு  அவரை  நாஸ்தி  பண்ணி  விட  மாட்டாரகளா? 


2  நாயகன்  தான்  தன்  அம்மாவுக்கு  வாரத்தில் ஆறு  நாட்கள்  அமைதியாக  இருப்பேன்  என  சத்தியம்  செய்து கொடுத்திருக்கிறான். வில்லனின்  அடியாட்களுக்கு  என்ன  கேடு?   ஞாயிறு  டூ  வெள்ளி  வரை  நாயகனைப்போட்டு  பொளந்து  கட்டி  இருக்கலாமே?  அவர்களும்  சனிக்கிழமை   ஏன் சண்டைக்குப்போக  வேண்டும் ? 


3  நாயகன் - நாயகி  இருவரும்  தாங்கள்  இன்னார்தான்  என்பதை  உணர்ந்து   அதற்குப்பின்  காதலை வெளிப்படுத்தி இருந்தால்  இன்னும்   கவித்துவமாய்  இருந்திருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  கமர்ஷியல்  ஆக்சன் மசாலாப்படம்  பார்க்க விருப்பம் உள்ளவர்கள்  , எஸ் ஜெ  சூர்யாவின்  ஓவர் ஆக்ட்டிங்கை ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ஆனந்த  விகடன்  மார்க் 44  , குமுதம் - நன்று. அட்ரா சக்க ரேட்டிங்  3 / 5 


Saripodhaa Sanivaaram
Theatrical release poster
Directed byVivek Athreya
Written byVivek Athreya
Produced byD. V. V. Danayya
Starring
CinematographyMurali G.
Edited byKarthika Srinivas
Music byJakes Bejoy
Production
company
Distributed bySri Venkateswara Creations
Release date
  • 29 August 2024
Running time
175 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹90 crore[2][3]
Box office41 crore[4]

0 comments: