Sunday, September 08, 2024

ORU YATHRAMOZHI ( 1997) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

         

              மோகன் லால் நடித்த படங்களில் அண்டர் ரேட்டட் மூவி என  இதை சொல்லலாம் . சிவாஜி கணேசன் , திலகன்  காம்ப்போ வில் வந்த   படம் தமிழில் 2017 ல்  பயணத்தின் மொழி   என்ற  டைட்டிலில்  டப்   செய்யப்பட்டது . தமிழ் வெர்சன் யு டியூபில் கிடைக்கவில்லை இயக்குனர் பிரதாப் போத்தன் + இளையராஜா  காம்பினேஷனில்  இப்படி ஒரு படம் வந்தது  பலருக்கும்  தெரியாது .  .கதை  - பிரியதர்சன . திரைக்கதை , வசனம்  ஜான் பால் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்   தன அம்மாவுடன்  வசித்து வருபவன் . அப்பா எங்கேயோ ஓடிப்போய் விட்டார் . சின்ன வயதில் இருந்தே  அப்பா  இல்லாதவன் அப்பா பெயர்  தெரியாதவன் என எல்லாரும் கிண்டல் செய்ததால் அப்பா மீது செமக்கடுப்பாக இருக்கிறான் . அப்பாவைத் தேடிக்கண்டுபிடித்து கொலை செய்வதே அவனது லட்சியமாக இருக்கிறது 


அப்போது அந்த ஊருக்கு ஒரு கவர்மெண்ட் காண்ட்ராக்டர்  வருகிறார் . அவருடன் நாயகனுக்கு ஒரு நெருக்கமான நட்பு உருவாகிறது .ஒரு கட்டத்தில்  அவர் தான் நாயகனின் அப்பா என்பது நமக்குத்தெரிய வருகிறது , ஆனால் நாயகனுக்கு  அது தெரியாது . நாயகனின் அம்மா  நீண்ட வருட இடைவெளிக்குப்பின்  தன கணவனைப்பார்க்கிறாள் . பார்த்த சந்தோஷத்தை விட  இவர் தான் அப்பா என்பது  தன மகனுக்குத்தெரிய  வந்தால்  கொலை நடக்கும் , மகன் ஜெயிலுக்குப்போவான்.இந்தக்கவலையாலேயே  அம்மா  உயிர் இழக்கிறாள் 


க்ளைமாக்சில்  நாயகனுக்கு உண்மை  தெரிய  வரும்போது  என்ன முடிவு எடுத்தான் என்பதே மீதிக்கதை  


நாயகன் ஆக மோகன் லால் . வழக்கம் போல அமைதியான நடிப்பு .அவருக்கு ஜோடியாக ரஞ்சிதா . ஆச்சரியம் ஊட்டும்  விதமாக கிளாமர் இல்லாத கண்ணிய ரஞ்சிதா . அப்பாவாக சிவாஜி. பூப்பறிக்க வருகிறோம்  கெட்டப்பில்  வருகிறார் . ஓவர் ஆக்டிங்க் இல்லாமல் கச்சிதமான நடிப்பு நாயகனின் அம்மாவின் காதலன் ஆக  நெடுமுடி வேணு  அருமையான நடிப்பு .

நாயகனின் அம்மா   ஆக  பாரதி விஷ்ணுவர்தன் சரோஜா தேவி சாயலில்  இருக்கிறார் . உருக்கமான நடிப்பு . வில்லன் வேண்டுமே  என்பதற்காக பிரகாஷ் ராஜ் . ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அப்லாஸ்  வாங்கும் நடிப்பு திலகன் உடையது 

இசை இளையராஜா  6  பாடல்களில்  3  ஹிட்டு . பின்னணி இசை வழக்கம் போல அருமை முத்துக்குமாரின் ஒளிப்பதிவில்  காட்சிகள் கண்ணுக்குக்குளுமை  எடிட்டிங்க் பி லெனின் , வி டி  விஜயன் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் கதைக்கு ஜீவன் சேர்க்கிறது . குறிப்பாக நெடுமுடி வேணு - சிவாஜி சந்திப்பின்போது  போட்ட பிஜிஎம் அடிபொலி 


2  மோகன் லால் , ரஞ்சிதா , சிவாஜி , நெடுமுடி வேணு  நால்வரின் நடிப்பும் பிரமாதம் 

3  க்ளைமாக்ஸ்   காட்சியில் திலகன் - சிவாஜி சந்திப்புக்காட்சியும் , அதில் வரும் டிவிஸ்ட்டும் .. அந்தக்காட்சில் திலகனின் நடிப்பு அட்டகாசம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 மஞ்சோழும்  ராத்திரி  மாஞ்ச்சு  ( டைட்டில்சாங்க் )


2    தை  மாவின்  தணலில்  ( டூயட் சாங்க் ) 

3  காக்காலக்கண்ணம்மா கண் விழிச்சுப்பாரம்மா  கன்னி மனம் (சிவாஜி + மோகன் லால் காம்போ சாங்க் )


  ரசித்த  வசனங்கள் 


1  நான்  அந்த வழியாத்தான் வண்டில போறேன் , நீ  வந்தா  உன்னை அங்கே இறக்கி விட்டுடறேன் 


 இறக்கி   விட  நான் என்ன சரக்கா? 


2   சிவாஜி பஞ்ச் -  இந்த உலக மேப்பில்  எத்தனை இடம் உண்டோ அங்கே எல்லாம்  தடம் பதிச்சவன் நான் , என் கிட்டே  உன் வேலையை வெச்சுக்காத 


3   எனக்கு எதிரிகள்  மட்டும் தான் இருக்காங்க, அதனால என்னைப்பற்றிக்கவலைபபடாதீங்க. நீங்க தான் அசலூர்க்காரர். நீங்க தான் ஜாக்கிரதையாயிருக்கணும் 


 நான் உனக்குக்கவசம் மாட்டலாம்னு பார்த்தா  அதே  கவசத்தை எனக்கு மாட்ட நினைக்கறே? சபாஷ் 


4  வித்தை இல்லாத மனுஷன் செத்த பொணத்துக்கு சமம் 

5  பெற்ற அப்பாவை கொன்ற மகனை பிரசவித்த  மகாபாவி என்ற பெயர் எனக்குக்கிடைக்கணுமா? 


6  நான்  செஞ்ச  பாவம் சிறுகதையா முடிஞ்சுடும்  என நினைச்சேன் , ஆனா தொடர்கதையா தொடரும்னு நினைக்கலை 

7  உண்மை தெரியும்போது அதை தைரியமா நேரில் சந்திக்க துணிவு வேண்டும் 

8காரியத்தை நாம செய்யறோ ம் , காரணத்தை ஆண்டவன்   தீர்மானிக்கிறான் , சில காரியங்கள் நன்மையில் முடியும் , சில காரியங்கள் தீமையில் முடியும் 3

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன் பிரகாஷ் ராஜ் ஒரு பெண்ணை  ரேப் செய்ய அவள் தனிமையில் இருக்கும்போது அவள் வீட்டுக்குள் நுழைகிறான் . அருகில் அபயக்குரல் கேட்டு நாயகன் அங்கே  வந்து பெண்ணைக்காப்பாற்ற  முயலாமல்  உள்  பக்கம் தாழ் போட்ட ரூம் கதவின் வெளிப்பக்க தாழ்  போடுகிறான் . இது எதுக்கு ?  ஊர் மக்களை வர வைத்து வில்லனை மாட்ட வைக்கவா? அதுக்குள்ளே  அவன்  ரேப் பண்ணிடமாட்டானா? ஆனா  வில்லன் அப்படி செய்யல . அவ கிட்டே  மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பறான் . என்ன விதமான காட்சி இது ? 

2   நாயகனின் அம்மா    தன கணவனின் போட்டோ வைத் தன் மகனிடம் காட்டி  இவர் தான் உன் அப்பா என அடையாளம் காட்ட மாட்டாரா?  அல்லது நாயகன் தான்  தன அப்பா  போட்டோ  காட்டு என அம்மாவிடம் கேட்க மாட்டாரா? இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்திருந்தால்  இரண்டு மணி  நேரம் மிச்சம் ஆகி இருக்கும் 


3   இன்னொருவரின் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத போது  நாயகன் அங்கே வந்து அவருக்கு கசாயம் வைத்துத்தருவது ஓகே , அதற்கு கதவை எதுக்கு சாத்தி வைக்கணும் ? அந்தப்பெண்ணின் கணவன்  போலீஸ் கூட்டத்துடன் வந்து நாயகன் மீது  பழி சுமத்துகிறார் , அந்தக்காட்சி  டிராமா சீன போல இருக்கு 

4  நாயகனின் அம்மா  தன கணவன் கூட ஜோடியாக இருக்கும் போட்டோவை  தன வீட்டில் பெட்டியில் தான் வைத்திருக்கிறார் . அதைக்கூடநாயகனால் கண்டுபிடிக்க முடியவில்லை? 

5  வாய்ப்பிருந்தும் சிவாஜி  தன்  மனைவியை சந்திக்க , பாவ மன்னிப்புக்கேட்க வீட்டுக்குப்போகாதது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 30 நிமிடம்தான் மொத்தக்கதையின் சாராம்சம் . ஆனால்  இரண்டேகால் மணி நேரம் பொறுமை தேவை . பெண்களுக்குப்பிடிக்கும், ரேட்டிங் 2.75 / 5 


Oru Yathramozhi
Poster
Directed byPrathap Pothan
Screenplay byJohn Paul
Story byPriyadarshan
Produced byV. B. K. Menon
StarringMohanlal
Sivaji Ganeshan
CinematographyMuthukumar
Edited byB. Lenin
V. T. Vijayan
Music byIlaiyaraaja
Production
company
Anugraha Cine Arts
Distributed byAnugraha Release
Release date
  • 13 September 1997
CountryIndia
LanguageMalayalam

0 comments: