ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக 12/9/24 முதல் திரை அரங்குகளில் வெளியான இப்படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 7 நாட்களிலேயே 32 கோடி ரூபாய் வசூல் செய்த கமர்ஷியல் சக்ஸஸ் படம் .மீடியாக்களி ன் பரவலான பாராட்டைப்பெற்ற படம் . சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் எனவும் , மிஸ்டரி டிராமா எனவும் பிரமோட் செய்யப்பட்டாலும் இது மிக மெதுவாக நகரும் எமோஷனல் டிராமா தான் இது . பெண்களுக்குப்பிடிக்கும் அல்லது அவர்களைப்போல பொறுமைசாலிகளுக்குப்பிடிக்கும் .த்ரிஷ்யம் மாதிரி பரபரப்பான படம் அல்ல . 2014ல் மம்முட்டி நடிப்பில் வெளியான மிஸ்டரி டிராமா மூவி ஆன munnariyippu படம் போல க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டை மட்டுமே பிரமாதமாகக்கொடுத்த ஒரு படம் .அந்தப்படத்தை ரசித்தவர்கள் இதை ரசிப்பார்கள் .இது இன்னும் ஓடிடி யில் ரிலீஸ் ஆகவில்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் உடைய அப்பா ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி ஆபீசர் .தேர்தல் நடக்க இருப்பதால் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது .லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் அதை ஒப்படைக்க வேண்டும் . இந்த மாதிரி அறிவிப்பு வெளியானபின் தான் நாயகன் உடைய அப்பாவின் மிலிட்டரி துப்பாக்கி மிஸ் ஆகி விட்டது என்பது தெரிகிறது . அது குறித்து விசாரணை நடைபெறுகிறது
நாயகனின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள். அவர்களது ஒரே மகன் காணாமல் போய் விட்டான் . போலீசில் மிஸ்ஸிங் கேஸ் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது .இப்போது நாயகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு நாயகியை தன வீட்டுக்கு அழைத்து வருகிறான் . நாயகி தனது மாமனார் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு கண்காணிக்கிறாள் . சில விஷயங்களைக்கண்டுபிடிக்கிறாள்
நாயகியின் மாமனார் அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் .அதாவது கஜினி சூர்யா போல பேப்பரில் சம்பவங்களை எழுதி வைத்துக்கொண்டு தான் நினைவு கூர்பவர் . தனது கணவரின் முதல் மகனின் மறைவுக்கு மாமனார்தான் காரணமாக இருப்பாரோ என சந்தேகிக்கிறார் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஆசிப் அலி பிரமாதமாக நடித்திருக்கிறார் .படம் முழுக்க அண்டர் ப்ளே ஆக்டிங் செய்யும் அவர் க்ளைமாக்சில் உணர்ச்சிப்பிழம்பாக மாறுவது உருக்கம் . நாயகி ஆக அபர்ணா பாலமுரளி பாந்தமாக நடித்திருக்கிறார் . இவர் உணவுக்கட்டுப்பாடு , யோகா செய்து உடலைப்பராமரித்தால் நல்லது . நாயகனின் அப்பாவாக விஜயராகவன் நடிப்பில் கலக்கி இருக்கிறார் . தன்னிடம் இருக்கும் குறையை தன கோபத்தால் மறைக்க முயலும் நடிப்பு அட்டகாசம் . நிழல்கள் ரவி ஒரு முக்கியமான ரோலில் கவனத்தை ஈர்க்கிறார் . இந்த நான்கு முக்கியமான கேரக்ட்டர்களை வைத்தே ஒரு முழுப்படத்தை முடித்திருப்பது சிறப்பு
சபாஷ் டைரக்டர்
1 தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று நிழல்கள் ரவி போய் சொல்கிறார் என்பதை நாயகனின் அப்பா கண்டு பிடிக்கும் காட்சி செம பரபரப்பு
2 நாயகனின் அப்பா எதையோ டாக்குமெண்ட்ஸை எரிக்கிறார் என்பதை நாயகி துப்பறியும்காட்சி நல்ல விறுவிறுப்பு
3 நாயகனின் மகனின் மர்ம மரணம் குறித்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 மற்றவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு கேரக்ட்டர் மாத்திரமே , ஆனா அவர் எனக்கு அப்பா
2 அவரோட மற தி அவருக்குக் கடவுள் கொடுத்த வரம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவாக ஒரு க்ரைம் த்ரில்லர் கதையில் சந்தேகிக்கப்பட்ட ஒரு மரணம் கொலையாக இல்லாமல் தற்கொலையாகவோ , ஆக்சிடெண்ட்டல் டெத் ஆகவோ அமைந்தால் அது கதைக்கு பொருத்தமாகஇருந்தாலும் பார்க்கும் ரசிகனுக்கு அத்தனை சுவராஸ்யமாக இருக்காது
2 ஒரு காட்சியில் கூட நாயகியு ம் , நாயகனும் புதுமணத்தம்பதி போலவே இல்லை . இன்னும் சொல்ல வேண்டும் எனில் நாயகி முகத்தில் ஒரு கல்யாணக்களையே இல்லை
3 துப்பாக்கியை மறைத்து வைப்பது ஓகே , ஆனால் மிஸ் ஆன துப்பாக்கிக்குண்டுகளுக்கு மாற்றாக வெளி மார்க்கெட்டில் அதை வாங்கிக்கொள்ளமுடியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான க்ரைம் த்ரில்லரை எதிர்பார்க்காமல் ஒரு எமோஷனல் மிஸ்டரி டிராமா பார்க்கும் மனநிலை இருந்தால் பார்க்கலாம் .ரேட்டிங்க் 3 / 5
கே பாக்யராஜின் சுந்தர காண்டம் (1992) , தியாக ராஜன் குமார ராஜா வின் ஆரண்ய காண்டம் (2010) , கிஷ்கிந்தா காண்டம் (2024) ஆகிய மூன்று படங்களும் கமர்ஷியல் ஹிட் அடித்திருப்பதால் இனி நிறைய படங்கள் இதே டைப் டைட்டில் வைக்க வாய்ப்பு உண்டு . நம் கோடம்பாக்கம் தான் ஒரு சென்ட்டிமென்ட் செம்மல் ஆச்சே?
Kishkindha Kaandam | |
---|---|
Directed by | Dinjith Ayyathan |
Written by | Bahul Ramesh |
Produced by | Joby George Thadathil |
Starring | Vijayaraghavan Asif Ali Aparna Balamurali |
Cinematography | Bahul Ramesh |
Edited by | Sooraj E. S. |
Music by | Mujeeb Majeed |
Production company | Goodwill Entertainments |
Distributed by | Phars Films |
Release date |
|
Running time | 125 minutes |
Country | India |
Language | Malayalam |
Box office | ₹38 crore [1] |
0 comments:
Post a Comment