Tuesday, September 24, 2024

கோழிப்பண்ணை செல்லத்துரை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     

   இயக்குனர் சீனு ராமசாமியின் படங்கள் ஒரு சிறுகதை அல்லது நாவலை வாசிப்பது போல மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும் . ஒரு தனி நபரின்  வாழ்க்கைக்கதையாகத்தான் பெரும்பாலான படங்களை இயக்கினார் பரத் நடிப்பில்  வந்த கூடல் நகர் (2007)  அவரது முதல் படம் .. அறிமுக  நாயகன் ஆக விஜய் சேதுபதி நடித்த தென் மேற்குப்பருவக்காற்று (2010)  என்னும் அவரது இரண்டாவது படம் தான் அவருக்கு தமிழக அரசின் விருது பெற்றுத்தந்தது .விஷ்ணுவின்  நடிப்பில்  வந்த  நீர்ப்பறவை (2012) கமர்ஷியலாகவும் , விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப்பெற்றது .விஜய் சேதுபதி +விஷ்ணுவின்  நடிப்பில்  உருவான  இடம் பொருள்: ஏவல் (2013)  சில  பொருளாதார சிக்கல்களால் தயார் ஆகியும் இன்னும்  வெளியாகவில்லை .விஜய் சேதுபதி  நடிப்பில்  உருவான தர்மதுரை (2016)  ஆசியன் விஷனின் சிறந்த இயக்குனர் விருதைப்பெற்றது .உதயநிதி நடிப்பில் வெளிவந்த கண்ணே கலைமானே (2019) ,விஜய் சேதுபதி  நடிப்பில்  உருவான மாமனிதன் (2022)  நல்ல படங்கள்  தான்                


ஸ்பாய்லர்  அலெர்ட்


சின்ன  வயதிலேயே  பெற்றோரால்  கை  விடப்பட்ட  நாயகன்  சிறுவன் ஆக  இருக்கும்போதே  தன 8 வயது  தங்கையையும்  வளர்க்கிறான் ,ஆளாக்குகிறான் . சிரமப்பட்டு உழைத்து  அவளுக்கு ஒரு கல்யாணத்தை யும் பண்ணி வைக்கிறான் . நாயகனையே  சுற்றி சுற்றி வரும் நாயகியை அவன் கண்டு கொள்ளவே இல்லை . ஒரு கட்டத்தில்  அவனது 26 வது  வயதில்  ஓடிப்போன  தன்  அம்மாவை  மன நலம் பாதிக்கப்பட்ட  பிச்சைக்காரியாக ஒரு கோயிலில் காண்கிறான் . அப்பாவை  கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில்  வேறொரு  இடத்தில் , சந்தர்ப்பத்தில்  சந்திக்கிறான் .அவர்களை  அவன் ஏ ஏற்றுக்கொண்டானா?  இல்லையா?என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக ஏகன்  நடித்திருக்கிறார் .இவர் ஏற்கனவே  ஜோ (2023) படத்தில்  நாயகனின் நண்பனாக வளம் வந்தவர் . ஓப்பனிங்கில்  கொஞ்ச்ம சிரமப்படுகிறார் . போகப்போக   சரி ஆகி கடைசி  30 நிமிடங்களில்  நல்ல நடிப்பு 


 நாயகி ஆக பிரிகிடா  சகா  நடித்திருக்கிறார் . நாயகனை துரத்தி துரத்தி   காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி  ரோல் தான்  , ஓகே ரகம் .. நாயகனின் தங்கையாக சத்யா தேவி  ஒப்பனை இல்லாமல் யதார்த்த அழகுடன் நடித்திருக்கிறார் 


  நாயகன் , நாயகனின்  தங்கை  இருவரையும் வளர்க்கும் கார்டியன் ஆக யோகிபாபு  நடித்திருக்கிறார் , குணச்சித்திர  நடிப்பு குட் பவா  செல்லத்துரை  ஒரு சின்ன  ரோலில்  வருகிறார் 

இசை ரகுநந்தன் , பாடல்கள் , பின்னணி இசை  இரண்டும் சுமார் ரகம் தான் ஒளிப்பதிவு  . பரவாயில்லை /. எடிட்டிங்க் ஸ்ரீகர் பிரசாத் .2 மணி நேரம் படம் ஓடுகிறது .  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் சீனு ராமசாமி

சபாஷ்  டைரக்டர்

1   முக்கிய  கேரக்ட்டர்கள்  அனைத்தையும் புதுமுகங்களாக  தேர்வு செய்த தைரியம் , அவர்களுக்கு ஒப்பனை இல்லாமல் பார்த்துக்கொண்டது 


2  படத்தின் ஜீவன் ஆக அமைந்த கடைசி  30 நிமிட உயிரோட்டமான காட்சிகள் 


3  பாசிட்டிவ் ஆன  கருத்தை க்ளைமாக்சில் சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உன்  பேரு  என்ன? 


செல்லத்துரை  


பேரு தான் செல்லத்துரை  , ஆனா  செல்லமா  வளர்க்கலை 


2  என்னதான்  ஆம்பளை  விறைப்பா  இருந்தாலும்  நாக்கு ருசிக்குக்கீழே விழுந்துடுவான் 


3 பரம்பரை பரம்பரையா கறிக்கடை  வெச்சிருக்கறவங்களைப்பார்த்திருக்கியா/ பாதிப்பேருக்கு  பல விரல்கள் இருக்காது . கத்தி பிடிக்கற தொழில்லஜாக்கிரதையா இருக்கணும் 


4  லவ் என்பதும் பேய் பிடிப்பது போல த்தான் , அதுவும்  உன்னை மாதிரி  வசீகரமான பேய்  பிடிச்சுட்டா  அவ்ளோ தான் 


5   24ந்தேதி  கல்யாணமா? அன்னைக்கு சடடமன்றம் இருக்குமே? 


 எதிர்க்கட்சி என்றாலே வெளிநடப்புத்தானே? 


6    கண்டவனையும் வீட்டுக்குள்ளே விடாதே, களவாண்டு ட்டுப்போயிடுவான் 


 களவாட  வீட்டில் என்ன இருக்கு ? தக்காளி கூட இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    கள்ளக்காதலில்  ஈடுபட முடிவெடுக்கும் பெண்  காலை 10 டூ  மாலை 3  இந்த நேரத்தை தேர்ந்தெடுப்பாரா? மாலை  5 மணிக்கு  தன வாரிசுகள்  ஸ்கூலில்  இருந்து  வந்த பின்  வெளியில் போய் விளையாடிட்டு வாங்க என சொல்லி விட்டு  பின் அந்த  5  டூ 6  ல்   ஈடுபடுவாளா? எதில் ரிஸ்க்  குறைவு ? 


2  சின்ன  வயசில் இருந்து  13 வருடங்களாக நாயகன் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை ட்ரங்க் பெட்டியில்  வைத்த்திருப்பது போல்  ஒரு காட்சி .அதை வங்கியில்  சேமித்து  வைத்திருந்தால்  வட்டியாவது  கிடைத்திருக்கும் 


3  காதலுக்கும்  , கள்ளக்காதலுக்கும்  நாயகனுக்கு வித்தியாசம் தெரியவில்லை .தங்கையிடம்   நீயும்  அம்மா மாதிரி  அவிசாரி என பட்டப் பெயர்  வாங்கிக்குவியோன்னு பயந்தேன் , நல்ல வேளை , அப்படி  எதுவம்நடக்கலை   என  டயலாக் பேசுகிறார்  


4  நாயகனின்  அம்மா  மன நிலை சரி இல்லாதது போல  நடிக்கிறாரா? நிஜமாவே  அப்படியா? என்பதை தெளிவாக  சொல்லவில்லை 


5    2மணி  நேரப்படத்தில்  முதல் 20 நிமிடங்கள் , கடைசி  30 நிமிடங்கள்  தான்  மனதைக்கவர்கிறது .,இடைப்பட்ட  70 நிமிடக்காட்சிகள் ஏனோ தானோ  என நகர்கிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . டி வி ல போட்டா பார்க்கலாம்  ஆனந்த விகடன் மார்க் 41 , குமுதம்  ரேட்டிங் - சுமார் .,மாய் ரேட்டிங் 2.25 /  5 .

Monday, September 23, 2024

நந்தன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் டிராமா )

                        



ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்-ன்  குடும்பம்   பரம்பரை பரம்பரையாக  ஊரின் பஞ்சாயத்துத்தலைவராக இருப்பவர்  குடும்பம் .இந்த முறை அந்த  ஊரை ரிசர்வ் தொகுதியாக அரசு அறிவிக்கிறது .ஒரு தலித்  வேட்பாளர் தான்  நியமிக்கப்பட வேண்டும் . அதனால்  தன அதிகாரத்துக்கு உட்பட்ட ஆளை  டம்மி வேட்பாளராக  நிறுத்தி  பாலிடிக்ஸ் பண்ண வில்லன் நினைக்கிறார் 


 நாயகன்  வில்லனிடம்  அடியாளாக  வேலை  பார்க்கும்  தலித் நபர் . தேர்தலில்  நின்று  பிரசிடண்ட்  ஆகிறார் பேருக்குத்தான் நாயகன்  பிரசிடண்ட், ஆனால்  அதிகாரம்  வில்லன் கையில் . ஒரு கட்டத்தில்  இருவருக்கும் மோதல் வர  வில்லன் நாயகனை  ராஜினாமா செய்ய வைக்கிறார் .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக எம் சசிக்குமார்  தோற்றத்தில்  ஒரு தலித் நபர் ஆகவே  மாறி இருக்கிறார் . உடல் மொழியில்  அவர் காட்டும் பவ்யம், அடிமைத்தனம், எஜமான் விசுவாசம்  அனைத்தும் அருமை 

வில்லன் ஆக  இயக்குனர் பாலாஜி சக்திவேல் வழக்கமாக யாதார்த்தமான  நடிப்பை வழங்கும்  இவர் இந்தப்படத்தில்  கொஞ்சம்  ஓவர் டோஸ்  ஆக  ஓவர் ஆக்டிங்க் செய்திருக்கிறார் 

நாயகனின்  மனைவி ஆக  சுருதி பெரியசாமி  அதிக காட்சிகள்  இல்லை என்றாலும்  வந்தவரை சிறப்பு 

சில  காட்சிகளே  வந்தாலும்  ஆபீஸராக  வரும் சமுத்திரக்கனி  கம்பீரமான நடிப்பில் கை  தட்டல் பெறுகிறார்  

ஜிப்ரான்  தான் இசை .பாடல்கள்  பெரிதாக எடுபடவில்லை .பின்னணி இசையும் சுமார் ரகமே .,ஒளிப்பதிவு  ஆர் வி சரண் . வில்லன் மட்டும் பளிச்  என தெரிகிறார் .நெல்சன்  ஆண்டட்டனியின்  எடிட்டிங்கில்  படம் 107 நிமிடங்கள்  ஓடுகின்றது கதை  , திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  அனைத்தும்  சகாப்தம் சரவணன் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன் ,வில்லன் என இரு மெயின்  கேரக்டர்களுக்கு  இரு இயக்குனர்களை புக் செய்தது .. நடிப்பு சொல்லித்தரும் வேலை மிச்சம் 


2  பிரமாதமான  வசனங்கள் 


3 ரொம்ப  இழுக்காமல் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்தது 





  ரசித்த  வசனங்கள் 


1  ஆள்வதற்குத்தான் அதிகாரம் தேவைன்னு நினைச்சு  இத்தனை நாட்களா ஒதுங்கி இருந்தே ன் , இப்போதான் வாழ்வதற்கே அதிகாரம் தேவைன்னுபுரிஞ்சுது 


2  போட்டியே இல்லை என்பது பெருமை இல்லை ,போட்டி போட இடம் தருவதுதான் ஜனநாயகம் 


3  ஒரு பிடி நிலத்தை சம்பாதிச்சு வைக்கலைன்னா இப்படித்தான்  ஊர் ஊரா ஓடிட்டு இருக்கணும் 


4  கோழியை  வெட்டுவது  அதன் மேல்  இருக்கும் கோபத்தால் அல்ல , குழம்பு வைக்கத்தான் 


5  அய்யா , அந்த சீட்ல உக்காந்து தப்புதான் , இனி என்  வீட்டில் கூட உக்கார மாட்டேன் 


6   வாழ  வழி இல்லாம போராடலாம், ஆனா நாங்க சாக வழி இல்லாம போராடறோம் 


7  போதும்  என்னும்  மனசுதான்  வசதி , இன்னும்  வேணும் என்னும்  மனசுதான்  வறுமை 


8   முப்பாட்டனா?  சீமான் மாதிரி எதுக்கு பேசறீங்க ? 


9   நம்ம நாட்டுக்கு வேணா பிரஸிடெண்ட்டா  எந்த மதத்தவர்  வேணா  இருக்கலாம், ஆனா  நம்ம ஊருக்கு பிரஸிடெண்ட்டா   நம்ம  ஜாதிக்காரப்பயதான் வரணும்,அதுதானே  நம்ம ஜாதிக்கே   பெருமை ?  




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முதல் 20 நிமிடங்களுக்குப்பின்  அடுத்து  என்ன காட்சி  வரப்போகிறது  என்பது  நமக்கு முன் கூட்டியே எளிதாக யூகிக்க முடிவது  பெரிய பலவீனம் 


2  நாயகனின்  கேரகடர்  மேல் அனுதாபம்  வர  வேண்டும்  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  சோக காட்சி கள் , வில்லனின் கேரகடர்  மேல் வெறுப்பு   வர  வேண்டும்  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  கொடூரக் காட்சி கள்   நாடகம்  பார்ப்பது போல  இருந்தது 


3  இயக்குனர்  பெரிதும்  நம்பிய க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  நம்பகத்தன்மை இல்லை .இரு வேட்பாளர்களும்  ஒன்றாக  வருகிறார்களே  என சந்தேகம் வராதா?  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது பொது மக்கள் அனைவருக்குமான படம் இல்லை . டி வி ல  போட்டா பார்த்துக்கலாம் .தியேட்டரில்  பார்க்கும் அளவு ஒர்த்  இல்லை .ஆனந்த விகடன் மார்க்  42 , குமுதம்  ரேங்க் - ஓகே  . ரேட்டிங்க்  2.25 /5 


நந்தன்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்சகாப்தம். சரவணன்
எழுதியவர்சகாப்தம். சரவணன்
தயாரித்ததுசகாப்தம். சரவணன்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஆர்வி சரண்
திருத்தியதுநெல்சன் ஆண்டனி
இசைஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு
நிறுவனம்
சகாப்த பொழுதுபோக்கு
மூலம் விநியோகிக்கப்பட்டதுடிரைடென்ட் ஆர்ட்ஸ்
வெளியீட்டு தேதி
  • 20 செப்டம்பர் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

 

Sunday, September 22, 2024

லப்பர் பந்து (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் கலக்கல் )

               


  தமிழ் சினிமாக்களில் ஸ்போர்ட்ஸ் டிராமா மூவிஸ்  என ஒரு பட்டியல் எடுத்தால்  சென்னை  28 ( 2007) , வெண்ணிலா கபாடிக்குழு (2009),சென்னை  28 -2  ( 2016)  ப்ளூ ஸ்டார் (2024) இவை  நான்கும்  மனதில் நிற்பவை . .கபடி  .விளையாட்டை  மையமாக  வைத்து , .கிரிக்கெட் விளையாட்டை  மையமாக  வைத்து  வந்த படங்கள் இவை . விமர்சன ரீதியான பாராட்டுக்கள் , வசூல் ரீதியான  வெற்றி ஆகியவற்றை ஒருங்கே  பெற்றவை 


இவை  போக ஸ்போர்ட்ஸ் டிராமா மூவிஸ் அஸ்வினி (1991) தெலுங்கு டப்பிங்க்  தமிழ் , லீலாதரன் என்கிற லீ (2007) .,தோனி (2012)  ஹரிதாஸ் (2013)   ஜீவா (2014) , ஈட்டி (2015) , இறுதி சுற்று (2016) கனா(2018)  ஜடா (2019) ,   ஹரிதாஸ் (2013) , சார்பேட்டா பரம்பரை (2021)   

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  கிரிக்கெட் பிளேயர் ..பிரமாதமான பேட்ஸ்மேன் .லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாலும்  மனைவிக்குப்பயந்துதான்  மேட்ச் விளையாடுவார் . மனைவிக்குத்தெரியாமல்   மேட்ச்  விளையாடி  பின்  மாட்டிக்கொண்ட ;பின் திட்டு வாங்குபவர் 



நாயகன் அட்டகாசமான  பவுலர் .ஆனால் குறிப்பிட்ட  ஒரு டீமில் விளையாடாமல்  அவ்வப்போது  எதோ ஒரு டீமில்  சேர்ந்து விளையாடுபவர் . வில்லனின்   ஆட்ட  நுணுக்கங்கள் இவருக்கு அத்துபடி , அவரை அவுட் ஆக்க எப்படி பவுலிங்க் போடவேண்டும் என்பது அவருக்குத்தெரியும் 



ஒரு நாள் ஒரு மேட்சில்  நாயகன்  வில்லனுக்கு எதிரான டீமில்  விளையாடி  முதல் ஓவரிலேயே  வில்லனை எளிதாக வீழ்த்தி விடுகிறார் . அதுவரை  வில்லன் கட்டிக்காத்த  ஹீரோ பிம்பம் உடைபடுகிறது . அவமானத்தால்  துடிக்கும்  வில்லன்  நாயகனை குரோத மனதுடன்  முறைக்கிறார் 


நாயகன்  ஒரு பெண்ணைக்காதலிக்கிறார் . அவள்  வில்லனின் மகள் என்பது அவருக்கு முதலில் தெரியாது . தெரிய வந்த பிறகும்  இருவரும்  அக்னி நட்சத்திரம்  பிரபு - கார்த்திக் போல  மோதிக்கொண்டு தான் இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில்  இன்னொரு மேட்சில்  நாயகன் - வில்லன்  எதிர்  எதிர் அணியில்  மோதி விளையாட  அப்பொது  நாயகன் -வில்லன்  இருவருக்கும்  கை  கலப்பு  உருவாகிறது .அப்போது  அங்கே வந்த  வில்லனின் மனைவி  இனி உனக்கும் எனக்கும் ஒத்து வராது  என பிரிகிறாள் . வில்லனின்  மகள்  நாயகனிடம்  ஈகோவை  விட்டு விட்டு என் அப்பாவுடன்  இணக்கமாக ஆனால் தான் நம் திருமணம்  என்று சொல்லி விட்டுப்பிரிகிறாள்  . இதற்குப்பின் 

 நிகழு ம் சம்பவங்கள் தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹரீஸ் கல்யாண்  அடக்கி வாசித்திருக்கிறார் . வில்லேஜ்  ரோல் இவருக்குப்புதுசு , ஆனாலும் சமாளிக்கிறார் .மிக பாந்தமான நடிப்பு . வில்லன் ஆக அட்டக்கத்தி தினேஷ் . பேட்டிங்கில்  கெத்து காட்டும் போதும் , மனைவியிடம்  பம்மும்போதும்  மாறுபட்ட குணச்சித்திர  நடிப்பு . நாயகன்  உடனான ஈகோ மோ தலில்  தெனாவெட்டான நடிப்பு 


நாயகி ஆக அறிமுக நாயகி  சஞ்சனா  கிருஷ்ணமூர்த்தி  துள்ளல் , இளமை , கண்ணியம் , குறும்பு  என எல்லா ஏரியாக்களில் சிக்ஸர் அடிக்கிறார் தமிழ் சினிமாவுக்கு அறிமுக நாயகி என்றாலும் ஆல்ரெடி வதந்தி என்ற  வெப் சீரிஸில் நடித்தவர் தான் . இவரது  நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேசின்  நடிப்பு சாயல் உண்டு 


நாயகியின்  அம்மாவாக சுவாசிகா ஆச்சரியப்படுத்தும்  நடிப்பு மலையாளப்படங்கள்  பலவற்றில் நடித்திருந்தாலும் கோரிப்பாளையம் , சாட்டை உட்பட  பல தமிழ்ப்படங்களிலும்  நடித்தவர் தான் .சுகன்யாவின் 

நடிப் பு சாயல் உண்டு 


நாயகனின்  நண்பன் ஆக பாலா சரவணன் , வில்லனின் நண்பன் ஆக ஜென்சர்  திவாகர்  இருவர் நடிப்பும் பிரமாதம் . டீம் கேப்டன் ஆக வரும் காளி  வெங்கட்டின்  குணச்சித்திர  நடிப்பு  அருமை . நாயகனின் அம்மாவாக வரும் தேவதர்ஷினி  பாந்தமான நடிப்பு 


ஷான்  ரோல்டன்  இசையில்  இரு பாடல்கள் செம ஹிட் . பின்னணி  இசையில் பல இடங்களில் கை  தட்டலை அள்ளுகிறார் . ஒளிப்பதிவு  திணேஷ்  புருஷோத்தமன் .கிராமங்களில்  நடக்கும் மேட்சை  கண் முன் கொண்டு வருகிறார் ,மதன் கணேஷின்  எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது . ஒரு  இடம் கூட போர் அடிக்கவில்லை 


விஜய் பிரபாகரன் , செல்ல மம்தா ஆகிய  இருவருடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  தனியாக  இயக்கி  இருப்பவர் தமிழரசன் பச்சமுத்து 

சபாஷ்  டைரக்டர்

1  ஒரு ஸ்போர்ட்ஸ்  டிராமா மூவியில்  சென்ட்டிமென்ட் , காதல் , சோகம்  என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் சரி விகிதத்தில் கலந்து ரசிக்கும்படி கொடுத்த விதம் 


2  பொதுவாக ஒரு படத்தில்  வில்லன் கேரக்ட்டர்  டிசைன் சரி இல்லை , அந்த கேரக்ட்டர் சரியாக வடிவமைக்கப்படவில்லை என விமர்சகர்கள் குறை கூறுவார்கள் , ஆனால் படத்தில் வரும் அனைத்துக்கேரக்ட்டர்களும்  பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு  அனைத்து நடிகர்களிடமும்  நடிப்பை வாங்கிய விதம் 


3 வில்லன் ,வில்லனின் மனைவி  இருவருக்குமான  புரிதல் , காதல் ஆழமாக சொல்லப்பட்ட விதம் , குறிப்பாக  இருவரும் பிரிந்திருக்கையில்  மனைவியின் சேலையை  விரித்துபோட்டு அதில் படுக்கும் வில்லன் , வில்லனின் சட்டையை முகர்ந்து பார்க்கும் மனைவி  என காட்சிகள்  கவிதை 


4  நாயகன் - நாயகி  இருவருக்குமிடையே  ஆன காதல்  பார்வைப்பரிமாறல்களிலேயே சொல்லப்பட்ட விதம் 


5  நாயகனின்  நண்பன் , வில்லனின்  நண்பன்  என இருவருமே  கதையுடன் ஒட்டிய காமெடியில்  சைன் செய்த விதம் 


6  இயக்குனர் கேப்டனின்   தீவிர  ரசிகர் போல .படம் முழுக்க  கேப்டனின் பட பாடல்களை  பொருத்தமான இடங்களில்  உலவ விட்டு  கைதட்டல்களை அள்ளிக்கொள்கிறார் 

7   இது போன்ற ஸ்போர்ட்ஸ்  டிராமா  மூவிகளில் டெம்ப்ளேட்டாக வரும் க்ளைமாக்ஸை வைக்காமல்  மாற்றி யோசித்து  ஒரு ட்விஸ்ட்டை  வைத்த  விதம் 


8 தமிழ் சினிமா வரலாற்றிலேயே  முதல் முறையாக நாயகனின் முதல் காதலி , இரண்டாம் காதலி  இருவரையும்  உறவினர்களாகக்காட்டியதும்  அவர்கள் மூவருக்குமிடையேயான  நட்பைசொன்ன விதமும் புதுசு 


9 உயர்ந்த ஜாதி , ஒடுக்கப்பட்ட  ஜாதி ஏற்றத்தாழ்வுகளை  சில இயக்குநர்களைப்போல  ஜாதி வெறியைத்தூண்டுவது போல சொல்லாமல் நாசூக்காக நுட்பமாக சொன்ன விதம் 


10   டி வி சீரியல்களில்  மாமியார் - மருமகள்   உறவையே  வில்லிகள்  போல  காட்டி வரும் வேளையில்  பாசிட்டிவாக சென்ட்டிமென்ட்  சீனாக  வடிவமைத்த விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  சில்லாஞ்சிறுக்கியே , சொல்லாம  என் மனசைப்புழிஞ்சியே? 


2 என்னை விட்டுப்போவே-என நானும் நினைக்கலை 


  ரசித்த  வசனங்கள் 

1    இவரு பேரு க்கு கெத்து இல்லை , இவரு பேரே  கெத்து தான் 


2   அட அட  என்னா  பாட்டு , என்னதான்  இருந்தாலும் இளையராஜா  மாதிரி  வருமா? 


 ராஜா மாதிரி வராது தான்  , ஆனா இந்தப்பாட்டுக்கு இசை தேவா 


3 பொண்டாட்டி  வராதவரை தான் ஆண்கள் கெத்து 


4  நாம எது பண்ணாலும் கூட்டத்தில்  ஒரு ஆளா  இருக்கக்கூடாது , தனி  ஒருவனா நிற்கணும் 


5  நாயகி  =அழகா  இருக்கான்ல ?அதான் சீன்  போடறான் , நாமும் போடுவோம் 


6  எவ்ளோ  ஆச்சு ? 


 அன்போட ஆள் கிட்டே  காசு வாங்குவோமா? போம்மா பார்த்துக்கலாம் 


 அப்படிப்பார்த்தா நான் தான் அவனோடமுதல் காதலி '


 ஓய் , ஒழுக்கமாக்காசைக்குடு 


7   எனக்காக அதைபண்ணு   இதைபண்ணு   என எப்பவும்  நான் சொல்ல மாட்டேன் 


8  எப்பவும்  அவளை எல்லாம்  ஒரு பதட்டத்துலயே வெச்சிருக்கணும் 


காலம் பூரா அவ பதட்டத்துல தான்  இருக்கப்போறா 



9   எதனால  உனக்கு கிரிக்கெட்  பிடித்திருக்கு ? 


  ரீசன்  எல்லாம்  தெரியாது , பிடிச்சிருக்கு  அவ்ளோ தான் 


10   நம்ம மக ஒருத்தனை லவ் பன்றாளா?  எனக்குத்தெரியாதே?  நீ மட்டும் எப்படி கண்டு பிடிச்சே ? 


 நீ  என்னை லவ் பன்றே-னு  நீ சொல்லியா  நான்  தெரிஞ்சுக்கிட்டேன் ?



11   வாய்ப்பிருந்தும்  அவனை ஏன்  அவுட் ஆக்கலை ?


இந்த விக்கெட்டை எல்லாம் வெத்தா  எடுக்கக்கூடாது  ,  கெத்தா  எடுக்கனும் 


12    தம்பின்னு சொல்லு அல்லது இல்லைனு சொல்லு அதென்ன  தம்பி மாதிரி ?


13  அவர் கிட்டே  பேச  தயக்கமா இருக்கு , நீயம் கூடவாடா 


 நான் எதுக்குப்பா?  உன் குடும்பத்துல 2  பேரும்  மாறி மாறி அசிங்கமா  திட்டிக்குவீங்க 


14    ஒரு பொண்டாட்டி  புருஷன் கிட்டே  கோவிச்சுக்கிட்டு   வீட்டை வீட்டுப்போலாம் , ஆனா  ஒரு அம்மா  மகன் கிட்டே கோவிச்சுக்கிட்டு   வீட்டை விட்டுப்போலாமா? 



15   இந்த  ஷாட் ஆப் சைடுல  அடிச்சமாதிரி  தெரியல , செருப்பைக்கழட்டி அடிச்ச  மாதிரி   தெரியுது 


16   ஊருக்கு  நல்லவனா  இருப்பவன் எல்லாம்  வீட்டுக்கு  நல்லவனா  இருக்கமாட்டான் 


17  தன்னை சுத்தி   எது  நடந்தாலும் அவன் ஆட்டத்துல ஜெயிப்பதை மட்டுமே பார்க்கிறான், ஆனா நீ? 


18   என்ன ? முதல் பந்துலயே  டொக்  வைக்கறான் ? 


என் மாப்பிளை  எப்பவும் முதல் பந்தை சாமிக்கு விட்டுடுவான் , மீதி பந்தை எல்லாம் அவன் எடுத்துக்குவான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின் அப்பா தான்  வில்லன் என்பதை நாயகன் நீண்டநாட்களாக அறியாமல் இருப்பது  நம்பமுடியலை . பொதுவாக லவ்வர்ஸ்  பரஸ்பரம் பெற்றோரை  தெரிஞ்சு  வெச்சுக்குவாங்க , அப்போதான்  ஜாக்கிரதையா லவ் பண்ணமுடியும் 


2   வில்லன் தான்  தன வருங்கால மாமனார் என்று   தெரிந்த  பின்னும்   நாயகன்   ஈகோ  பார்பபதும் ஏற்புடையதாக இல்லை  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கிரிக்கெட்  விளையாட்டே  தெரியாதவர்கள் , அதை விரும்பாதவர்கள்  கூட ரசித்துப்பார்க்கும் வண்ணம்  அமைந்த  நல்ல திரைக்கதை . இந்த ஆண்டின்   சிறந்த  அறிமுக இயக்குனருக்கான விருதைப்பெற்றுத்தரப்போகிறபடம் . கமர்ஷியல்  சக்ஸஸ்  ஆகவும்  கலக்கப்போகும் படம் , ஆனந்த  விகடன் மார்க்  ( யூகம் ) - 50  , குமுதம்  ரேங்க்கிங்க் ( யூகம் )  - நன்று  ,  மை  ரேட்டிங்க்  3.75 / 5 


Lubber Pandhu
Theatrical release poster
Directed byTamizharasan Pachamuthu
Written byTamizharasan Pachamuthu
Vijay Prabhakaran
Chella Mamtha
Produced byS Lakshman Kumar
A. Venkatesh
Starring
CinematographyDinesh Purushothaman
Edited byMadan Ganesh
Music bySean Roldan
Production
company
Prince Pictures
Release date
  • 20 September 2024
CountryIndia
LanguageTamil



Friday, September 20, 2024

KISHKKINDHA KANDAM(2024) -கிஷ்கிந்தா காண்டம் -மலையாளம் - சினிமா விமர்சனம் ( எமோஷனல் டிராமா)

         


          

    ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக  12/9/24  முதல் திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  30 கோடி ரூபாய்  பட்ஜெட்டில் உருவாகி   7 நாட்களிலேயே   32 கோடி  ரூபாய்   வசூல்  செய்த  கமர்ஷியல் சக்ஸஸ்  படம் .மீடியாக்களி ன் பரவலான பாராட்டைப்பெற்ற படம் . சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்  எனவும் , மிஸ்டரி  டிராமா  எனவும்  பிரமோட் செய்யப்பட்டாலும்   இது  மிக மெதுவாக  நகரும்  எமோஷனல்  டிராமா  தான்  இது . பெண்களுக்குப்பிடிக்கும் அல்லது அவர்களைப்போல  பொறுமைசாலிகளுக்குப்பிடிக்கும் .த்ரிஷ்யம்  மாதிரி    பரபரப்பான  படம் அல்ல . 2014ல்  மம்முட்டி நடிப்பில் வெளியான  மிஸ்டரி டிராமா மூவி ஆன 
munnariyippu  படம் போல க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்டை மட்டுமே பிரமாதமாகக்கொடுத்த  ஒரு படம் .அந்தப்படத்தை ரசித்தவர்கள்  இதை ரசிப்பார்கள் .இது இன்னும் ஓடிடி  யில்  ரிலீஸ் ஆகவில்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் உடைய  அப்பா  ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி ஆபீசர் .தேர்தல் நடக்க  இருப்பதால் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது .லைசென்ஸ் பெற்று  துப்பாக்கி  வைத்திருக்கும் அனைவரும்  அதை ஒப்படைக்க வேண்டும் . இந்த  மாதிரி  அறிவிப்பு  வெளியானபின் தான்  நாயகன்  உடைய அப்பாவின்  மிலிட்டரி   துப்பாக்கி  மிஸ் ஆகி விட்டது என்பது  தெரிகிறது . அது குறித்து விசாரணை நடைபெறுகிறது 


 நாயகனின்   முதல் மனைவி  சில வருடங்களுக்கு முன்  இறந்து விட்டாள். அவர்களது  ஒரே  மகன் காணாமல்  போய் விட்டான் . போலீசில்  மிஸ்ஸிங்  கேஸ் பதிவு  செய்யப்பட்டு இருக்கிறது .இப்போது நாயகன்  இரண்டாவது  திருமணம் செய்து கொண்டு நாயகியை தன வீட்டுக்கு அழைத்து  வருகிறான் . நாயகி  தனது  மாமனார்  நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு   கண்காணிக்கிறாள் . சில  விஷயங்களைக்கண்டுபிடிக்கிறாள் 


 நாயகியின் மாமனார் அல்சைமர் என்ற மறதி  நோயால் பாதிக்கப்பட்டவர் .அதாவது  கஜினி  சூர்யா போல பேப்பரில் சம்பவங்களை எழுதி  வைத்துக்கொண்டு தான் நினைவு கூர்பவர் . தனது கணவரின்  முதல் மகனின் மறைவுக்கு மாமனார்தான் காரணமாக  இருப்பாரோ என சந்தேகிக்கிறார் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ஆசிப் அலி பிரமாதமாக நடித்திருக்கிறார் .படம் முழுக்க அண்டர் ப்ளே  ஆக்டிங் செய்யும் அவர் க்ளைமாக்சில் உணர்ச்சிப்பிழம்பாக மாறுவது உருக்கம் . நாயகி ஆக  அபர்ணா பாலமுரளி  பாந்தமாக நடித்திருக்கிறார் . இவர் உணவுக்கட்டுப்பாடு , யோகா  செய்து உடலைப்பராமரித்தால் நல்லது  . நாயகனின் அப்பாவாக விஜயராகவன்  நடிப்பில்  கலக்கி  இருக்கிறார் . தன்னிடம்    இருக்கும் குறையை  தன கோபத்தால் மறைக்க  முயலும் நடிப்பு அட்டகாசம் . நிழல்கள் ரவி  ஒரு முக்கியமான  ரோலில்  கவனத்தை  ஈர்க்கிறார் . இந்த நான்கு முக்கியமான  கேரக்ட்டர்களை  வைத்தே ஒரு முழுப்படத்தை முடித்திருப்பது சிறப்பு 


முஜீப் மஜீதின்  இசை சிறப்பு .பின்னணி இசை பல இடங்களில்  கச்சிதம் . சூரஜின்  எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம்  ஓடுகிறது . படம் மிக மெதுவாக நகர்கிறது . பகுல்  ரமேஷ் தான் ஒளிப்பதிவு . கலர் டோனிலேயே  ஒரு  மிஸ்டரியை செட் பண்ணி விடுகிறார் ஒளிப்பதிவாளர் ஆன  இவரே தான் திரைக்கதையும் . திணிஜித் அய்யதன்    தான் இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்

 1  தன்னுடைய நெருங்கிய நண்பர்  என்று  நிழல்கள்  ரவி போய் சொல்கிறார் என்பதை நாயகனின் அப்பா கண்டு பிடிக்கும் காட்சி செம பரபரப்பு 


2  நாயகனின் அப்பா  எதையோ டாக்குமெண்ட்ஸை  எரிக்கிறார்   என்பதை நாயகி  துப்பறியும்காட்சி  நல்ல விறுவிறுப்பு 


3   நாயகனின்  மகனின் மர்ம மரணம்  குறித்த  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் 

 

  ரசித்த  வசனங்கள் 



1 மற்றவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு கேரக்ட்டர் மாத்திரமே , ஆனா அவர் எனக்கு அப்பா 

2   அவரோட  மற தி அவருக்குக்  கடவுள் கொடுத்த வரம் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவாக  ஒரு க்ரைம் த்ரில்லர்  கதையில்  சந்தேகிக்கப்பட்ட  ஒரு மரணம்  கொலையாக இல்லாமல்  தற்கொலையாகவோ , ஆக்சிடெண்ட்டல்  டெத் ஆகவோ  அமைந்தால்  அது  கதைக்கு பொருத்தமாகஇருந்தாலும்  பார்க்கும் ரசிகனுக்கு  அத்தனை  சுவராஸ்யமாக  இருக்காது 


2  ஒரு காட்சியில்  கூட நாயகியு ம் , நாயகனும்  புதுமணத்தம்பதி போலவே  இல்லை . இன்னும் சொல்ல வேண்டும் எனில் நாயகி முகத்தில்  ஒரு கல்யாணக்களையே இல்லை 


3  துப்பாக்கியை  மறைத்து வைப்பது ஓகே , ஆனால் மிஸ் ஆன துப்பாக்கிக்குண்டுகளுக்கு மாற்றாக    வெளி மார்க்கெட்டில் அதை வாங்கிக்கொள்ளமுடியாதா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  க்ரைம்  த்ரில்லரை எதிர்பார்க்காமல்  ஒரு எமோஷனல்  மிஸ்டரி டிராமா பார்க்கும் மனநிலை இருந்தால் பார்க்கலாம் .ரேட்டிங்க் 3 / 5 


 கே பாக்யராஜின் சுந்தர காண்டம் (1992)  , தியாக ராஜன் குமார ராஜா வின் ஆரண்ய காண்டம் (2010)  , கிஷ்கிந்தா காண்டம் (2024)   ஆகிய மூன்று படங்களும்  கமர்ஷியல் ஹிட் அடித்திருப்பதால்  இனி  நிறைய படங்கள்  இதே டைப் டைட்டில் வைக்க வாய்ப்பு  உண்டு . நம் கோடம்பாக்கம் தான் ஒரு சென்ட்டிமென்ட் செம்மல் ஆச்சே? 


Kishkindha Kaandam
Theatrical release poster
Directed byDinjith Ayyathan
Written byBahul Ramesh
Produced byJoby George Thadathil
StarringVijayaraghavan
Asif Ali
Aparna Balamurali
CinematographyBahul Ramesh
Edited bySooraj E. S.
Music byMujeeb Majeed
Production
company
Goodwill Entertainments
Distributed byPhars Films
Release date
  • 12 September 2024
Running time
125 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹38 crore [1]

Monday, September 16, 2024

BAD NEWSZ(2024) - - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

       


     80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  ரூ 115 கோடி கலெக்சன்    செய்த படம் இது .உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் . இரட்டைக்குழந்தை  என்பதே  அபூர்வம் , அதிலும்  இரு குழந்தை களுக்கும்  இரு   வேறு அப்பா  என்பது அரிதிலும் அரிது . கோடி யில் ஒருவருக்குத்தான் அப்படி அமையும் .அப்படி  நடந்த ஒரு சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைதான் இது .சிக்கலான இந்தக்கதைக்கருவை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள் 19/7/2024 அன்று  திரை அரங்குகளில்  வெளியான  படம் இப்போது 13/9/24 முதல் அமேசான் பிரைம் ஓ டி டி  யில் காணக்கிடைக்கிறது     

1990 ல் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த அவசரப்போலீஸ் 100  படத்தில்  இரு வேடங்களில் வருவார் . அவரது மகன் அடிக்கடி  எனக்கு ரெண்டு அப்பா என காமெடியாக  சொல்வான் . அந்த காட்சியை   வேறு யாராவது படமாக்கி இருந்தால் விரசமாக அமைந்திருக்கும் . ஆனால்  ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படி அந்தக்காட்சியை திரையில்  காண்பித்தார் . அதே போல்  இந்த  இயக்குனரும்  சீரியஸான , சிக்கலான கதையை  காமெடியாக  மேலோட்டமாக சொல்லி இருக்கிறார்        


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு சமையல்காரர் .பைவ் ஸ்டார் ஹோட்டலில்  செப்  ஆக பணியாற்றும் அவருக்கு மேரகி ஸ்டார் ஆக வேண்டும் என்பது லட்சியம் . சினிமாவில் ஆஸ்கார் போல ,இலக்கியத்தில் நோபல் பரிசு போல  சமையல் கலையில் மேரகி ஸ்டார்  என்பது உயர்ந்த  பட்டம் 


நாயகி நாயகனை  ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார் . இருவரும் மனதைப்பறிகொடுக்கிறார்கள் . பெற்றோர்  நிச்சயித்த திருமணமாக அது நடக்கிறது . ஆனால்   திருமணத்திற்குப்பின் நாயகனின் அன்புத்தொல்லை தாங்க முடியவில்லை . அடிக்கடி நாயகி பணியாற்றும் இடத்துக்கே  வந்து அன்புத்தொல்லை  தருகிறார் . ஐஸ்வர்யாராயை  சல்மான்கான்  டார்ச்சர் செய்தது போல  , நயன் தாராவை சிம்பு லவ் டார்ச்சர் செய்தது போல  நாயகன் நாயகியை  டார்ச்சர் செய்கிறார் .இதனால் நாயகிக்கு   ஹோட்டல்  செப் பதவி பறிபோய் விடுகிறது .இதனால்  கடுப்பான  நாயகி நாயகனுக்கு டைவர்ஸ்  நோட்டிஸ் கொடுத்து விட்டு   புதிய  இடத்துக்குச்செல்கிறார் 


 அங்கே  ஒருவருடன் பழக்கம் ஆகிறது நாயகிக்கு  ஒரு நண்பன்  வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்புகிறான் .அதில்  நாயகியின் கணவன்  இன்னொரு பெண்ணுடன்  ஜோடியாக  சுற்றுவது போல  போட்டோ இருக்கிறது . இதைப்பார்த்து செம  கடுப்பான  நாயகி சரக்கு அடித்து விட்டு  ஒரு கோபத்தில் , போதையில்  புதிய நண்பர் உடன் உறவு வைத்துக்கொள்கிறார் . அடுத்த  நாளே  நாயகி இருக்கும் இடத்துக்கே  நாயகன் வந்து அவள்: மனதை  மாற்றி  உறவு வைத்துக்கொள்கிறார் 


 நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார் .இரட்டைக்கரு .இரட்டை அப்பாக்கள் . இந்தப்பிரச்சினையை  நாயகி , நாயகன் , புது நண்பர் . மூவரின் குடும்பங்கள் எப்படி சமாளிக்கிறது  என்பதே மீதி திரைக்கதை 


நாயகி ஆக திருப்தி ட்ரீமரி  நடித்திருக்கிறார் . ஒருவர் அணியும் உடையை வைத்துத்தான் சமூகம் அவரை மதிப்பிடும் . நதியா , ரேவதி , சுஹாசினியை இந்த சமூகம் பார்க்கும் பார்வைக்கும், த்ரிஷா , அனுஸ்கா , நயன் தாரா  இவர்களைப்பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு . நாயகி  ஏற்றிருக்கும் கேரக்ட்டருக்கு அவரது ஆடை அலங்காரங்கள்  பொருந்தவில்லை . கவுரமான பணியில்  இருப்பவர் , குடும்பப்பெண்  இப்படித்தான்  அரை  குறையாக ஆடை அணிவார்களா?  மற்றபடி  நடிப்பு குட் 


நாயகன் ஆக விக்கி கவுசல் கலக்கல் நடிப்பு , இவர் முக சாயலில் சாந்தனு போல்  இருக்கிறார் .காமெடி ,நடனம்  ,சென்ட்டிமென்ட் மூன்றும் நன்றாக   வருகிறது  இன்னொரு  நாயகனாக  நாயகியின் புதுக்காதலன் ஆக அமி விரக  நடித்தருக்கிறார் . ஐயோ பாவம்  எனும் முக பாவம் .கச்சிதமான நடிப்பு 


 நாயகனின் அம்மாவாக வரும்  ஷீபா சத்தா  பிரமாதமான நடிப்பு , மற்ற அனைவருமே சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் 


பாடல்களுக்கான  இசையை  எட்டு பேரும் , பின்னணி இசையை இருவரும்  கவனித்து இருக்கிறார்கள் . பல இடங்களில் காமெடி களை  கட்டஉதவுகிறது .ஒளிப்பகிவு  டோபோஜிக் ரே  .குட் ஒர்க் 


ஷான் ,முகமது  தான் எடிட்டிங்க் . 2 மணி   நேரம் 8 நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகி  ஒரு மன மாற்றத்துக்காக வந்த இடத்தில் இன்னொருவருடன் பழக்கம் ஆவதை யதார்த்தமாக சுவராஸ்யமாக காட்சிப்படுத்திய விதம் 


2   கர்ப்பமாக  இருக்கும்  டைவர்ஸ் ஆன  நாயகியைப்பெண் பார்க்க நிச்சயம் செய்ய நாயகியின் பெற்றோருடன்  ஒருவன்   வருகிறான் , நாயகி கர்ப்பமாக இருப்பது  நாயகியின் பெற்றோருக்குத்  தெரியாது . கணவனுடன்  ராசி ஆன விஷயமும்  தெரியாது . அந்த சிச்சுவேஷனில்  நாயகியின்    தற்காலக்காதலனும்  வர  அப்போது நடக்கும் சமாளிபிகேஷன்கள் காமெடிக்கலக்கல்ஸ் 


3   நாயகிக்கு  திருமணம் ஆன புதிதில்  நாயகனின் அம்மா  அடிக்கடி  அவர்களுக்கு அன்புத்தொல்லை தரும் காட்சிகள்   அதற்கு  நாயகன்   சென்ட்டிமென்ட்  சமாளிப்புகள்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மேரேஜ் என்பது ஒரு ஐ டி ப்ரூப்  அல்ல , மனசுக்கு எப்போத்தோனுதோ அப்போ பண்ணிக்கலாம் 


2  சாரி மிஸ் , நீங்க அழகா  இருந்ததால நீங்க டான்ஸ் ஆடும் ஸ்டெப் சை எல்லாம் கவனிக்கலை  உங்க அழகை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன் 


3    என் ஆர்டினரி  வாழ்க்கை யை எக்ஸ்டரா ஆர்டினரி  வாழ்க்கையா மாற்ற அவன் வந்தான் 


4  என்னது ?உன் இடையில்  டாட்டூ குத்தி இருக்கே? 

 அதனால என்ன? 

டாட்டூ  போட்டிருக்கும்   பெண்கள்  நல்ல மனைவியாக  இருக்க மாட்டார்கள்னு கேள்விப்பட்டிருக்கேனே ?  

 சும்மா  இந்த  வாட்ஸப் பார்வார்டுகளை எல்லாம் நம்பாதீங்க 


5  சார் ,நீங்க  வெர்ஜினா?

ஆமா சின்ன  வயசுல இருந்தே ...


6  எந்தப்பெரிய பிரச்சனை வந்தாலும் முதல்ல என் அப்பா கிட்டே   டிஸ்கஸ்  செய்வேன் 


7  டைவர்ஸ் பேப்பர்ல  நான் சைன் பண்ணிட்டேன் , அதனால லாஜிக்கலி டெக்ணிக்கலி  ஐ ஆம் சிங்கிள் 


8 THIS IS THE CASE OF  HETEROPATERNALSUPERFECUNDATION


9   உங்க  வாழ்க்கைல நடந்தது காமடியா?   டிராஜெடியா? 

நம்ம வாழ்க்கைல  நடந்தா அது டிராஜெடி , அடுத்தவங்க வாழ்க்கைல நடந்தா அது காமெடி 

10 டைவர்ஸுக்குப்பின்  தம்பதிகள் நண்பர்களாக  இருக்கக்கூடாதா?


11       ஒவ்வொரு அம்மாவுக்கும் அவளோட குழந்தை  கிரேட்டஸ்ட்   ஆப்  ஆல்  டைம் தான் 


12  நாம் பசிக்காக மட்டும்  சாப்பிடுவதில்லை , இந்த வாழ்க்கையைக்கொண்டாடவும்  சாப்பிடுகிறோம் 


13  சண்டைல . ஜெயிக்க உன் முட்டியை பயன்படுத்து , ஆனா இதயங்களை  ஜெயிக்க  உன் மூளையை பயன்படுத்து


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகிக்கு  கணவன் , புதுக்காதலன்   என்ற  இரு உறவுகள்  இருக்க  இந்த உண்மையை உணர்ந்தும்  மூன்றாவதாக  ஒரு ஆள்  அவளை மணக்க முன் வருவது  ஜீரணிக்கும்படி   இல்லை  

2   நாயகியைக்கவர   கணவனும் , காதலனும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் அடடகாசங்கள்  கடுப்பு .மானம் கேட்ட குடும்பத்தில் பிறந்தவர்களா  என  எண்ண  வைக்கிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2கே  கிட்ஸ்  தான் இதை ரசிக்க முடியும் . அந்தக்கால ஆசாமிகள்  ஒன்  ஸ்டெ ப்  பேக் . ரேட்டிங்  3 / 5 


மோசமான நியூஸ்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ஆனந்த் திவாரி
எழுதியவர்இஷிதா மொய்த்ரா
தருண் துடேஜா
தயாரித்ததுகரண் ஜோஹர்
ஹிரூ யாஷ் ஜோஹர்
அபூர்வா மேத்தா
அம்ரித்பால் சிங் பிந்த்ரா
ஆனந்த் திவாரி
நடிக்கிறார்கள்விக்கி கௌஷல்
ட்ரிப்டி டிமிரி
அம்மி விர்க்
ஒளிப்பதிவுடெபோஜீத் ரே
திருத்தியதுஷான் முகமது
இசைபாடல்கள்:
ரோசக் கோஹ்லி
விஷால் மிஸ்ரா
டிஜே சேடாஸ்-லிஜோ ஜார்ஜ்
பிரேம்-ஹர்தீப்
கரன் அவுஜ்லா
அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
ஸ்கோர்:
அமர் மொஹிலே
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஏஏ பிலிம்ஸ்
வெளியீட்டு தேதி
  • 19 ஜூலை 2024
இயங்கும் நேரம்
140 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட ₹80 கோடி [ 2 [ 3 ]
பாக்ஸ் ஆபிஸ்மதிப்பிடப்பட்ட ₹115.74 கோடி [ 4 ]

Sunday, September 15, 2024

AJAYANTE RANDAM MOSHANAM (2024) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் அட்வென்ச்சர் )

   

அஜயண்ட்டே  ரெண்டாம் மோசனம்  என்ற டைட்டிலுக்கு  அஜயனின்  இரண்டாம் திருட்டு  என்று பொருள் . இதை சுருக்கமாக   ஏ ஆர் எம்  என டைட்டில் வைத்துள்ளார்கள்     .ஓணம் பண்டிகை வெளியீடாக 12/9/24 முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகி உள்ள பட,ம் இது . 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் வசூலாக 6 கோடி  கலெக்சன் செய்துள்ளது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1  - ஒரு நாட்டு மன்னனிடம் விலை மதிப்பில்லாத    விளக்கு ஒன்று உள்ளது , பூமியில் வந்து விழும் அபூர்வமான விண்கல்லிலிருந்து உருவாக்கப்பட்டது . ஒரு சமயம் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட அரச குல நபரை நாயகனின் கொள்ளுத்தாத்தா காப்பாற்றுகிறார் .பரிசாக எதை வேண்டுமானாலும்  கேள்  என்றதும் அந்த அபூர்வ விளக்கைக்கேட்கிறார் . மன்னரும்  கொடுத்த வாக்கைக்காப்பாற்ற  அதைத்தந்து விடுகிறார் ( ஆனால் அது போலி விளக்கு என்பது பிறகு தெரிகிறது )


சம்பவம் 2 - நாயகனின் தாத்தா  ஒரு திருடர் . அவரது மனைவி  அதாவது நாயகனின் பாட்டி  கோயிலில்; இருக்கும் அபூர்வ விளக்கைப்பார்க்க ஆசைப்படுகிறார் . ஆனால் அவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  என்பதனால்  கோயிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை . இதனால்; நாயகனின் தாத்தா  அந்த அபூர்வ விளக்கை  சாமார்த்தியமாக திருடி மனைவியிடம் கொடுக்கிறார் . ஒரிஜினல் விளக்கு இருந்த இடத்தில் டூப்ளிகேட்  விளக்கை வைக்க செல்கையில் மாட்டிக்கொள்கிறார் . அப்போது அவர் கையில் இருந்த விளக்கை  மீட்டு விட்டதாக நினைத்து அதைக்கோயிலில் வைக்கின்றனர் . ஆனால் கோயிலில்; இருக்கும் விளக்கு ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  நாயகனின் தாத்தா , பாட்டி  இருவருக்கு மட்டுமே தெரியும் 


சம்பவம் 3 - நாயகன்  ஒரு எலக்ட்ரீசியன் . உள்ளூரில்  பெரிய மனிதர் மகளைக்காதலிக்கிறார் நாயகி உயர் குடி  ,இவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  . ஆனாலும் நேர்மையாக  வாழ்பவர் . ஆனால் இவரது தாத்தா  திருடர் என்பதால்  இவரும்  திருடராகத்தான்  இருக்க வேண்டும் என  ஊர் நினைக்கிறது .வில்லன் அந்த ஊர் கோயிலில் இருக்கும்  அபூர்வ விளக்கு  ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  தெரிய  வர  ஒரிஜினலை க்கண்டு பிடிக்க   நாயகனால் தான் முடியும் என நினைத்து அவனை மிரட்டுகிறான் . வில்லன் சொன்னபடி செய்தால்  நாயகனின் காதல் நிறைவேறும்  என வாக்கு தருகிறான் .


 இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக டொவிநோதாமஸ்  3 வேடங்களில்  நடித்திருக்கிறார் . திருடர் ஆக தாத்தா ரோலில் தான்  நடிக்க அதிக வாய்ப்பு . அவருக்குத்தான் காட்சிகள் அதிகம் .மாறுபட்ட நடிப்பு . கமல் , விக்ரம்  படங்களைப்பார்த்த பிறகு ;இந்த நடிகர்களுக்கும் கெட்டப் சேஞ்ச் மேனியா  தொற்றிக்கொண்டிருப்பது கண்கூடு 


நாயகிகள் ஆக கீர்த்தி ஷெட்டி சுரபி லட்சிமி  மூவரும் நடித்திருக்கிறார்கள்: . அதிக வேலை இல்லை . கீர்த்தி ஷெட்டி கண்ணுக்கு அழகு . ரோகிணி ரகுவரன் நாயகனின் அம்மாவாக கவனம் ஈர்க்கிறார் நாயகனின் நண்பனாக பஸீல் ஜோசப் , பாட்டியாக  மாலா பார்வதி  இருவரும் வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் 

நினு நிபன் தாமஸ்  தான் இசை ஒரே ஒரு பாட்டு . திருப்பதி லட்டு .பின்னணி இசை ஓகே ரகம் , ஆனால் காது வலிக்கும் அளவு சத்தம் . ஜெமோன்  டி ஜானின் ஒளிப்பதிவு  3 வெவ் வேறு  கால கட்டங்களை கண் முன் நிறுத்துகின்றது  ஆர்ட் டைரக்ஸன்  குட் . சி ஜி ஒர்க்கும் ஓகே ரகம் 

சபாஷ்  டைரக்டர்


1  கரையெல்லாம் செண்பகப்பூ (1981) , அரவாண் (2012) , ஆயிரத்தில் ஒருவன் (2010) ஆகிய மூன்று படங்களை பட்டி டிங்கரிங்   மன்னன் அட்லீயிடம் தந்து ஒரு படம் உருவாக்கச்சொன்னால் எப்படி  இருக்குமோ அது போல  ஒரு உட்டாலக்கடிக்கதை  ரெடி செய்தது 


2  கமல் , விக்ரம் , சூர்யா ரேஞ்ச்சுக்கு மூன்று  மாறுபட்ட  கெட்டப் என ஆசை காட்டி  டொவிநோதாமஸ் கால்ஷீட்  வாங்கியது 


3  மெயின் கதை  40 நிமிட கண்டடென்ட் தான் என்பதால் பிளாஷ்பேக்  கதையை ஜவ்வாக இழுத்த விதம் 

4    க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும்  அந்த களறி  சண்டை   ஸ்டன்ட்  ,மாஸ்டரின் பெயர் சொல்லும் காட்சி 


  


ரசித்த  வசனங்கள் 


1      மோட்டாரை நீ திருடுனதா அவங்க சந்தேகப்படறாங்க 


 ஆனா நான்  கஷ்டப்பட்டு உழைச்சு வாழ்றவன் 


 திருடுவது கூட கஷ்டமான வேலை தான் 


2  சண்டை நடந்தா அதை வேடிக்கைபா ர்ப்பது ஊர் மக்களோட குணாதிசய,ம் 


3 இந்த உலகத்துல முதல்ல  திருடன்  வந்தானா? போலீஸ் வந்ததா? தெரியுமா?  முதல்ல திருடன் தான்  வந்தான் . அதுக்குப்பின்  தான் அவனைப்பிடிக்க போலீஸ் வந்தது 


4  என்னோட   ஆகாயமும்  நீ தான்  ,என் பூமியும் நீ தான் 


5   ஒரு திருடனுக்கு அதிர்ஷடம்  எப்போதும்  எதிராபாராத இடத்தில் இருந்து தான் வரும் 


6   ஆட்சில  இருக்கும் ராஜா திருட்டுத்தனம் செஞ்சா அதுக்குப்பேரு ராஜதந்திரம் 


7 நான் ஆடும்  இந்த ஆட்டத்தில்; ; நீ  வெறும் ;சிப்பாய் மட்டும்தான் 


8 நீ பாரம்பரியமான  திருட்டுக்கூ;ட்டத்தின் பரம்பரையிலிருந்து வந்தவன் ,; எங்களு க்கு உன் பாரம்பரிய திருட்டுத்தனம் தான் தேவை 


9  இரு நாடுகளுக்கு இடையே போ;ர் வந்தா மக்களுக்கு பயம்  உண்டாகும்,;ஆனா இரு ஊர்களுக்கு இடையே சண்டை; வந்தா  மக்களுக்கு யார் ஜெயிப்பாங்கணு ஆர்வம் வரும்; 

10  அடேங்கப்பா , ரிசர்வ் பேங்க்கையே  கொள்ளை அடிக்கும்   அளவு   சாதனங்கள் இங்கே இருக்கு போலயே? ; 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வயசுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி  எலக்ட்ரீஷியனை  வீட்டுக்கு வரவைத்து அவர்கள் காதலிக்க வழி வகை செய்வது  நம்பும்படி இல்லை 


2  நாயகன் சம்பந்தப்பட்ட  ஒரு வீடியோ காட்சியை வைத்து வில்லன் மிரட்டுவது காதில் பூ 


3 கோயிலில்  இருக்கும் சிலையை  நாயகனின் காத்தா நேரில் பார்த்தது கூட இல்லை ,அவரால் டூப்ளி க்கெட் சிலையை எப்படி  உருவாக்க முடிந்தது ? டீடடெய்லிங்க் இல்லை 


4  ஆக்சன் அட்வென்ச்சர்   என்று சொல்லி விட்டு வெறும் 20 நிமிடங்கள் தான்  அப்படிப்பட்ட காட்சி கள் வருகின்றன . தூக்கம் வருது  

5  வில்லனின் கேரக்டர் டிசைன் வலிமையாகஇல்லை . டம்மி  வில்லன் என்னும்போது நாயகன் எப்படி ஜெயிப்பான்? என்ற ஆர்வம் வராது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரளாவில் இது ஹிட் ஆகலாம் . ஆனா நம்ம ஊர் ஆடியன்ஸுக்கு பிடிக்காது . இது மாதிரி பல படங்கள் பார்த்துட்டோம் .சராசரிக்கும்   கீழே தான் . ரேட்டிங்  2.25 / 5  மலையாளப்படங்கள்  என்றாலே பிரமாதம் தான்  என ஒரு கூட்டம்   சுத்திட்டு  இருக்கு . நம்பி  ஏமாற வேண்டாம் 


ARM
Theatrical release poster
Directed byJithin Laal
Written bySujith Nambiar
Additional screenplayDeepu Pradeep
Produced byListin Stephen
Zachariah Thomas
Starring
Narrated byMohanlal
CinematographyJomon T. John
Edited byShameer Muhammed
Music byDhibu Ninan Thomas
Production
companies
Magic Frames
UGM Entertainment
Distributed byMagic Frames
Release date
  • 12 September 2024
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore[2]
Box officeest. ₹13.50 crore[3]