Tuesday, September 24, 2024

கோழிப்பண்ணை செல்லத்துரை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     

   இயக்குனர் சீனு ராமசாமியின் படங்கள் ஒரு சிறுகதை அல்லது நாவலை வாசிப்பது போல மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும் . ஒரு தனி நபரின்  வாழ்க்கைக்கதையாகத்தான் பெரும்பாலான படங்களை இயக்கினார் பரத் நடிப்பில்  வந்த கூடல் நகர் (2007)  அவரது முதல் படம் .. அறிமுக  நாயகன் ஆக விஜய் சேதுபதி நடித்த தென் மேற்குப்பருவக்காற்று (2010)  என்னும் அவரது இரண்டாவது படம் தான் அவருக்கு தமிழக அரசின் விருது பெற்றுத்தந்தது .விஷ்ணுவின்  நடிப்பில்  வந்த  நீர்ப்பறவை (2012) கமர்ஷியலாகவும் , விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப்பெற்றது .விஜய் சேதுபதி +விஷ்ணுவின்  நடிப்பில்  உருவான  இடம் பொருள்: ஏவல் (2013)  சில  பொருளாதார சிக்கல்களால் தயார் ஆகியும் இன்னும்  வெளியாகவில்லை .விஜய் சேதுபதி  நடிப்பில்  உருவான தர்மதுரை (2016)  ஆசியன் விஷனின் சிறந்த இயக்குனர் விருதைப்பெற்றது .உதயநிதி நடிப்பில் வெளிவந்த கண்ணே கலைமானே (2019) ,விஜய் சேதுபதி  நடிப்பில்  உருவான மாமனிதன் (2022)  நல்ல படங்கள்  தான்                


ஸ்பாய்லர்  அலெர்ட்


சின்ன  வயதிலேயே  பெற்றோரால்  கை  விடப்பட்ட  நாயகன்  சிறுவன் ஆக  இருக்கும்போதே  தன 8 வயது  தங்கையையும்  வளர்க்கிறான் ,ஆளாக்குகிறான் . சிரமப்பட்டு உழைத்து  அவளுக்கு ஒரு கல்யாணத்தை யும் பண்ணி வைக்கிறான் . நாயகனையே  சுற்றி சுற்றி வரும் நாயகியை அவன் கண்டு கொள்ளவே இல்லை . ஒரு கட்டத்தில்  அவனது 26 வது  வயதில்  ஓடிப்போன  தன்  அம்மாவை  மன நலம் பாதிக்கப்பட்ட  பிச்சைக்காரியாக ஒரு கோயிலில் காண்கிறான் . அப்பாவை  கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில்  வேறொரு  இடத்தில் , சந்தர்ப்பத்தில்  சந்திக்கிறான் .அவர்களை  அவன் ஏ ஏற்றுக்கொண்டானா?  இல்லையா?என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக ஏகன்  நடித்திருக்கிறார் .இவர் ஏற்கனவே  ஜோ (2023) படத்தில்  நாயகனின் நண்பனாக வளம் வந்தவர் . ஓப்பனிங்கில்  கொஞ்ச்ம சிரமப்படுகிறார் . போகப்போக   சரி ஆகி கடைசி  30 நிமிடங்களில்  நல்ல நடிப்பு 


 நாயகி ஆக பிரிகிடா  சகா  நடித்திருக்கிறார் . நாயகனை துரத்தி துரத்தி   காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி  ரோல் தான்  , ஓகே ரகம் .. நாயகனின் தங்கையாக சத்யா தேவி  ஒப்பனை இல்லாமல் யதார்த்த அழகுடன் நடித்திருக்கிறார் 


  நாயகன் , நாயகனின்  தங்கை  இருவரையும் வளர்க்கும் கார்டியன் ஆக யோகிபாபு  நடித்திருக்கிறார் , குணச்சித்திர  நடிப்பு குட் பவா  செல்லத்துரை  ஒரு சின்ன  ரோலில்  வருகிறார் 

இசை ரகுநந்தன் , பாடல்கள் , பின்னணி இசை  இரண்டும் சுமார் ரகம் தான் ஒளிப்பதிவு  . பரவாயில்லை /. எடிட்டிங்க் ஸ்ரீகர் பிரசாத் .2 மணி நேரம் படம் ஓடுகிறது .  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் சீனு ராமசாமி

சபாஷ்  டைரக்டர்

1   முக்கிய  கேரக்ட்டர்கள்  அனைத்தையும் புதுமுகங்களாக  தேர்வு செய்த தைரியம் , அவர்களுக்கு ஒப்பனை இல்லாமல் பார்த்துக்கொண்டது 


2  படத்தின் ஜீவன் ஆக அமைந்த கடைசி  30 நிமிட உயிரோட்டமான காட்சிகள் 


3  பாசிட்டிவ் ஆன  கருத்தை க்ளைமாக்சில் சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உன்  பேரு  என்ன? 


செல்லத்துரை  


பேரு தான் செல்லத்துரை  , ஆனா  செல்லமா  வளர்க்கலை 


2  என்னதான்  ஆம்பளை  விறைப்பா  இருந்தாலும்  நாக்கு ருசிக்குக்கீழே விழுந்துடுவான் 


3 பரம்பரை பரம்பரையா கறிக்கடை  வெச்சிருக்கறவங்களைப்பார்த்திருக்கியா/ பாதிப்பேருக்கு  பல விரல்கள் இருக்காது . கத்தி பிடிக்கற தொழில்லஜாக்கிரதையா இருக்கணும் 


4  லவ் என்பதும் பேய் பிடிப்பது போல த்தான் , அதுவும்  உன்னை மாதிரி  வசீகரமான பேய்  பிடிச்சுட்டா  அவ்ளோ தான் 


5   24ந்தேதி  கல்யாணமா? அன்னைக்கு சடடமன்றம் இருக்குமே? 


 எதிர்க்கட்சி என்றாலே வெளிநடப்புத்தானே? 


6    கண்டவனையும் வீட்டுக்குள்ளே விடாதே, களவாண்டு ட்டுப்போயிடுவான் 


 களவாட  வீட்டில் என்ன இருக்கு ? தக்காளி கூட இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    கள்ளக்காதலில்  ஈடுபட முடிவெடுக்கும் பெண்  காலை 10 டூ  மாலை 3  இந்த நேரத்தை தேர்ந்தெடுப்பாரா? மாலை  5 மணிக்கு  தன வாரிசுகள்  ஸ்கூலில்  இருந்து  வந்த பின்  வெளியில் போய் விளையாடிட்டு வாங்க என சொல்லி விட்டு  பின் அந்த  5  டூ 6  ல்   ஈடுபடுவாளா? எதில் ரிஸ்க்  குறைவு ? 


2  சின்ன  வயசில் இருந்து  13 வருடங்களாக நாயகன் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை ட்ரங்க் பெட்டியில்  வைத்த்திருப்பது போல்  ஒரு காட்சி .அதை வங்கியில்  சேமித்து  வைத்திருந்தால்  வட்டியாவது  கிடைத்திருக்கும் 


3  காதலுக்கும்  , கள்ளக்காதலுக்கும்  நாயகனுக்கு வித்தியாசம் தெரியவில்லை .தங்கையிடம்   நீயும்  அம்மா மாதிரி  அவிசாரி என பட்டப் பெயர்  வாங்கிக்குவியோன்னு பயந்தேன் , நல்ல வேளை , அப்படி  எதுவம்நடக்கலை   என  டயலாக் பேசுகிறார்  


4  நாயகனின்  அம்மா  மன நிலை சரி இல்லாதது போல  நடிக்கிறாரா? நிஜமாவே  அப்படியா? என்பதை தெளிவாக  சொல்லவில்லை 


5    2மணி  நேரப்படத்தில்  முதல் 20 நிமிடங்கள் , கடைசி  30 நிமிடங்கள்  தான்  மனதைக்கவர்கிறது .,இடைப்பட்ட  70 நிமிடக்காட்சிகள் ஏனோ தானோ  என நகர்கிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . டி வி ல போட்டா பார்க்கலாம்  ஆனந்த விகடன் மார்க் 41 , குமுதம்  ரேட்டிங் - சுமார் .,மாய் ரேட்டிங் 2.25 /  5 .

0 comments: