Friday, September 13, 2024

உழைப்பாளர் தினம் (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

                 

   இது அனைத்து தரப்பினருக்குமான பொதுவான படமோ , ஜனரஞ்சகப்படமோ அல்ல . பிரிந்து வாழும் தம்பதியினர் , குடும்பத்தை விட்டுப்பிரிந்து  வெளிநாடுகளில்  வேலை செய்ப்பவர்களுக்கு மட்டுமே  கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படம்  டூ லெட்  (2018)  , காதலிசம் (2023) , வட்டார வழக்கு  (2023) ஆகிய படங்களில்  நடித்த சந்தோஷ் நம்பிராஜன்  நாயகன் ஆக நடித்து  இயக்கி  தயாரித்திருக்கும் படம் இது     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிங்கப்பூரில்  பணி    புரிகிறான் . இந்தியாவில்  அம்மா, அப்பா , அண்ணன் , அண்ணி  என குடும்பம் உண்டு . சொந்த ஊரில் ஒரு கடை நடத்தவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம்  . அதற்காக பொருள் ஈட்டும்  வேலையில் இருக்கிறான் . இந்த சூழலில்  அவனுக்குப்பெண் பார்க்கிறார்கள் . பெண் பார்க்கும் படலம் , கல்யாணம்,  சந்தோசம் என முதல்  பாதி  போழுது போக்காக நகர்கிறது 

பின் நாயகன்  மீண்டும்  சிங்கப்பூர்  வந்ததும் பிரிவுத்துயர் வாட்டுகிறது . சொந்தஊரிலேயே  இருக்குமாறு மனைவியும்  வற்புறுத்துகிறார் . நாயகன் சிரமப்பட்டு கட்டிய  கடையை  மேம்பாலம்  வர இருக்கிறது , ஹை வே போடப்போறோம்  என எதோ காரணம்  சொல்லி இடிக்க இருக்கிறார்கள் . நாயகன்  இடிந்து விழுகிறான் . இதற்குப்பின்  அவனது முடிவு என்ன? மீண்டும்  சிங்கப்பூருக்கே  சென்றானா?  இங்கேயே தங்கினானா? என்பது க்ளைமாக்ஸ் 

  நாயகன் ஆக  சந்தோஷ் நம்பிராஜன்   இயல்பான நடிப்பு .இயக்குனர் சேரன் நினைவுக்கு வருகிறார் . சோக நடிப்பிலும் , கருத்தாழம் மிக்க வசனம் பேசுவதிலும்  குட் . அறிமுக நாயகி ஆக  குஷி  நடித்திருக்கிறார் . முதல் நான்கு காட்சிகளில்  தடுமாற்றம் , பின் சமாளிப்பு   என  அவர் பங்களிப்பு ஓகே ரகம் . மீதி எல்லாப்பாத்திரங்களுமே  கொடுத்த  வேலையை சரியாகசெய்து  இருக்கிறார்கள்  

 மசூத் சம்சாநின் இசையில்  இரண்டு பாடல்கள்  அருமை . பின்னணி இசை சுமார் ரகம் தான் ஒளிப்பதிவு சதீஷ் துரைக்கண்ணு . பரவாயில்லை ரகம்  தான் .  எடிட்டிங்க் கோட்டீஸ்வரன் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   ராங்க்  நெம்பர் கான்செப்ட்டில் நாயகன்  - நாயகி போனில்  சண்டை போட்டுக்கொள்வது , பெண் பார்க்கும் படலத்தில் ராசி ஆவது  எல்லாம்   கே பாக்யராஜ்  தூறல் நி ன்னுபோச்சு டச் 


2  முதல் இரவில்  பாலுக்குப்பதிலாக  பிளாஸ்க்கில் காபி கொண்டு வருவதும் அதற்கு நாயகி கூறும் காரணமும்  எஸ் ஜெ  சூர்யா  டச் 


3  பின் பாதி  ரொம்ப டிரை ஆன  சப்ஜெக்ட் என்பதால் முதல் பாதியில்  கிளுகிளுப்பு  சேர்த்திருக்கிறார்கள் . கொஞ்சம்  ஓவர் டோஸ் தான் 


4  கருத்தாழம் மிக்க  வசனங்கள் 

5     மகளின்   ஆபரேஷன் செலவுக்காக பண உதவி கேட்கும்போது நாயகனின் நண்பன்  முகத்தை மறைத்துக்கொண்டு  உதவி கேட்பதும் , நன்றி  தெரிவிக்கும்போது  முகத்தை மறைக்காமல்  நன்றி சொல்வதும் நெகிழ்ச்சியான   காட்சி 

6   தீராக்காதலே ,தினம் நீ தான் தேடலே  பாடல்  வரிகள்  அருமை 




ரசித்த  வசனங்கள் 

1   இலவசமா  யாருக்கும், எதுவும் செய்யாதீங்க 


2 சேர்ந்து வாழத்தான் கல்யாணம் , எதுக்கு பிரிஞ்சு வாழனும் ? 


3  நீங்க  இங்கேயும் , மனைவி   அங்கேயும்  இருந்தா  குடும்பம் எப்படி  விளங்கும் ? 


4  பிள்ளைகளை  நேர்ல பார்த்ததை  விட போட்டோவில்  பார்த்ததுதான் அதிகம் 


5   இப்போ  சேர்ந்து வாழணும்னு  தோணுது , ஆனா வெள்ளம் வடிஞ்ச்பின்   தலையில் எண்ணெய் வெச்சு என்ன பிரயோஜனம் ? 


6  பணம்  முக்கியம்  தான் , ஆனால் வாழ்க்கை அதை விட  முக்கியம் 


7   கஸ்ட்மஸ்   க்கும் சேர்த்துத்தான்  நாம சம்பாதிக்க வேண்டி இருக்கு 


8  வெளியூர் போனாதான்  நம்ம ஊரு அருமை தெரியும் , வெளி  நாடு  போனாதான்  நம்ம நாடு அருமை தெரியும் 


9  பில்டி ங்க்  வேலை எல்லாம் தொடங்குன உடனே முடிச்சுடனும் 


10  வீட்டு சாப்பாடு ஆறி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் 



11  சொந்த ஊருல அகதியா வாழ் வது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? 


12 நம்ம கஷ்டத்துல யாரு நமக்கு உதவி பண்றாங்களோ அவங்க தான்  நம்ம சொந்தக்காரங்க 


13  உலகத்துலயே பெரிய பெஸ்ட்  சைடு டிஸ்   எது   தெரியுமா? - கூட இருக்கறவனை கலாய்த்தல் 


14    சிரிக்கற  மாதிரி வாழ்க்கை அமைந்தால் ஓகே 

       அழற  மாதிரி வாழ்க்கை அமைந்தால் ஓகே 


     ஆனா  சிரிச்சுக்கிட்டே  அழற  மாதிரி வாழ்க்கை   அமைந்தால் நரகம் 


15   கஷ் டப்பட்டு  கால் அங்குலம் மேலே  ஏறுனா  40 அங்குலம்  கீழே  இறக்கி விட்டுடுது  விதி 


16 கம்யூனிஸ்ட்  நீங்களே   வலது , இடதுனு பிரிஞ்சு இருக்கீங்க , முதல்ல நீங்க ஒன்னு சேருங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரிஜினல் பத்திரம் , ஜெராக்ஸ் காபி  டாக்குமெண்ட்  இரண்டுக்கும்  வித்தியாசம்   தெரியாதா? 


2   அண்ணன் , தம்பி  என  இரு  வாரிசுகள்  இருக்கும்போது     தம்பியின்    கையெழூத்தோ , சம்மதமோ  இல்லாமல்  வீட்டை  அண்ணன்   பெயரில்   எழுதி  வைக்க முடியாதே? 


3  நாயகனின் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றதும் முதலில் ஜிஹெச் போய்   பார்த்து  விட்டு   அங்கே  சரி ஆகவில்லை எனில் தனியார் ஹாஸ்பிடல் போகலாம் என்பதுதானே சரியன முடிவு ? சிக்கனம்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பொறுமை  தேவை . சில காட்சிகள்  நாடகம் பார்பபது போலிருக்கும் . ரேட்டிங்க்  2.5/ 5 

0 comments: