ஆந்தாலஜி என்பது தமிழ் ஆடியன்ஸுக்கு ஒத்து வராது . கலவை சாதம் சாப்பிடுவதை விட முழு சாப்பாடு சாப்பிட்டால் தான் தமிழனுக்கு திருப்தி . இதில் இயக்குனர் நான்கு குறும்படங்களை 2 மணி நேரத்தில் கொடுத்திருக்கிறார் .
ஸ்பாய்லர் அலெர்ட்
1 பழி வாங்குவது ஒரு கலை
வில்லன் ஒரு மோசமான ரவுடி . ஓப்பனிங்க் ஷாட்லயே அவனை ஒரு கும்பல் கொலை பண்ண துரத்துது . படு காயங்களுடன் ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறான் . அவனோட கெட்ட குணங்கள் அறிந்து மற்ற நர்ஸ்கள் எல்லாம் சிகிச்சை செய்ய தயங்கும்போது நாயகி அதை ஒரு கடமையாக நினைத்து சாதாரணமாக அவனுக்குப்பணி விடை செய்கிறாள் ..
வில்லனைத்துரத்திய கேங்க் நாயகியின் வீட்டுக்கு வந்து ஒரு கோரிக்கை வைக்கிறார்கள் . வில்லன் ஹாஸ்பிடலில் இருக்கும்போதே நைசாக அவனை போட்டுத்தள்ள நாயகி உதவ வேண்டும் . அதற்கு பணம் தர தயார் . ஆனால் நாயகி அவர்களை துரத்தி விடுகிறாள்
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் மீதி திரைக்கதை
நாயகி ஆக அம்மு அபிராமி கச்சிதமாக நடித்திருக்கிறார் . 23 நிமிடக்குறும்படம் இது
2 தன்னைத்தானே பழி வாங்குதல் தவறானது
நாயகன், நாயகி இருவரும் காதலித்துக்கல்யாணம் செய்து கொண்டவர்கள் . ஒரு குழந்தை உண்டு . நாயகனுக்கு ஆன் லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் , ஏராளமான பணத்தை இழக்கிறான். பலரிடம் கடன் வாங்கி சிக்கலில் மாட்டுகிறான் . கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரு பணக்கார வீட்டுக்குழந்தையை கடத்தி பிளாக்மெயில் செய்கிறான். ரூ 50 லட்சம் பணம் வர இருக்கிறது . இந்த சந்தர்ப்பத்தில் நாயகிக்கு விஷயம் தெரிகிறது
நாயகி நாயகனைக்கண்டிக்கிறாள் . இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட நாயகி தலையில் அடிபட்டு இறக்கிறாள் , ஆக்சிடெண்டல் டெத் . இதற்குப்பின் நாயகன் எடுக்கும் முடிவு தான் க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக வெற்றி நடித்திருக்கிறார் . வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் வெற்றிக்கு இது அதிக ஸ்கோப் இல்லாத கதை தான் . வந்தவரை ஓகே ரகம் . நாயகி ஆக சாக்ஷி அகர்வால் இளமைத்துடிப்புடன் , கிளாமருடன் வந்து போகிறார் . காதல் கொண்டாட்டத்தில் கலக்குபவர் கோபமாக வசனம் பேசும் காட்சியில் தடுமாறுகிறார்
34 நிமிடக்கதை இது
3 பழி வாங்குவதை மற்றவர்களுக்காகச்செய்வதும் ஒரு வகையான தர்மமே
நாயகன் சுனாமியில் தன குடும்பத்தை இழந்த பெரியவர் . பீச்சில் பலூன்களை துப்பாக்கியால் சுடும் விளையாட்டுக்கடை நடத்தி வருகிறார் . அங்கே 3 ரவுடிகள் பொது மக்களுக்குத்தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். போலீசில் புகார் கொடுத்தால் பெரிய இடத்துப்பொல்லாப்பு நமக்கு எதுக்கு என போலீஸ் ஒதுங்கி விடுகிறது . அவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லாமல் போனாலும் சமூக நலன் கருதி அவர்களை போட்டுத்தள்ளுகிறார் நாயகன் .
நாயகனாக பூ ராமு அமைதியாக நடித்திருக்கிறார் . ராஜ்கிரண் சாயல் நடிப்பில் தெரிகிறது
4 மன்னித்தலே மிகப்பெரிய பழி வாங்கல்
நாயகி ஒரு துணிக்கடையில் பணி புரியும் ஏழை . அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செலவு இருக்கு . இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவளுக்கு ஒரு காதலும் இருக்கு . ஒரு நாள் அவள் வீடு தேடி ஒரு பணக்காரக்குடும்பத்தைச்சேர்ந்த தம்பதி வருகிறார்கள் .
அந்த தம்பதியில் கணவன் நகைக்கடை அதிபர் . மனைவி கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர் . இதனால் நாயகியை வாடகைத்தாயாக இருந்து அவர்கள் குழந்தையை பெற்றுத்தர சொல்கிறார்கள் . கணவனின் உயிர் அணு + மனைவியின் கரு முட்டை இரண்டும் நாயகியின் வயிற்றில் கர்ப்பப்பையில் பொருத்தப்படும் . குழந்தை பெற்றுத்தர ரூ 10 லட்சம் சன்மானம் .
ஆரம்பத்தில் மறுக்கும் நாயகி தன வறுமை நிலையை எண்ணி பின் சம்மதிக்கிறாள் . அட்வான்ஸாக ரூ 2 லட்சமும் மாதா மாதம் ரூ 25,000 தந்து பேலன்ஸ் குழந்தை பிறந்த பின் செட்டில்மென்ட் என பேச்சு
நிறை மாத கர்ப்பிணி ஆக நாயகி இருக்கும்போது நாயகிக்கு ஒரு பிரச்சனை , அந்த தம்பதி பிரிந்து விடுகிறார்கள் . பேசிய பணத்தை தர மறுக்கிறார்கள்
நாயகி போலீசில் புகார் தருகிறார் , மீடியாவில் பரபரப்பாக இந்த செய்தி பரவுகிறது வில்லனின் பெயர் கெடுகிறது . இதனால் வில்லன் நாயகியைத்தீர்த்துக்கட்ட முடிவு எடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகி ஆக திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது அம்மா கேரக்டர் கூட சிறப்பு
ஏ ஆர் ரெஹானா எஸ் என் அருணகிரி ,ஹரிஷ் அர்ஜூன் ,சரண்குமார் ஆகிய நால்வரும் இசை . பாடல்கள் ஓகே ரகம் . பின்னணி இசை சுமார் ரகமே பரணி , ராஜீவ ராஜேந்தர் , ஜெபின் ரெஜினால்டுக்கு ஒளிப்பதிவாளர்கள் . கச்சிதம் . கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் காமராஜ் வேல்
எடிட்டிங்க் கச்சிதம் . 2 மணி நேரம் 5 நிமிடம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 மூன்று சுமாரான கதைகள் , ஒரு நல்ல கதை என்ற பார்முலாவில் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் .
2 லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக நடிகையரிடம் நடிப்பை வாங்கிய விதம் குட்
ரசித்த வசனங்கள்
1
பொண்டாட்டியைக்கட்டிப்பிடிக்கணும்னா அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்துட்டே இருக்கணும் போலயே?
2 பணக்காரங்க புத்தி அப்படித்தான் , காரியம் ஆகும் வரை காலைப்பிடிப்பாங்க , காரியம் முடிஞ்சதும் கழுத்தைப்பிடிப்பாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனின் அடியாட்கள் தண்டமாய் ஹாஸ்பிடல் வெளியே நிற்கிறார்கள் . பாதுகாப்புக்கு உள்ளே இருவராவது வேண்டாமா? மீண்டும் கொலை முயற்சி நடக்கும் என்பது தெரியாதா?
2 ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத பொது காம எண்ணங்கள் எழாது என்பது மருத்துவ உண்மை . வில்லன் சீரியஸ் கண்டிஷனில் உயிருக்கு போராடுகிறான் . அப்போது அவனுக்கு எப்படி காமம் வரும் ?
3 வில்லனை கொலை செய்ய முடிவு எடுத்த நாயகி அந்த கோஷ்டி கொடுத்த ஆபரை ஏற்றிருக்கலாமே? ஒரே கல்லில் 2 மாங்கா
--------------------------------
4 சாலையில் அனைவரும் ஹெல்மெட்டுடன் பயணிக்கும்போது நாயகன், நாயகி மட்டும் ஹெல்மெட் போடாம டூ வீலரில் சுற்றுவது எதனால் ?
===============
5 பொது வெளியில் , பீ ச்சில் ரவுடிகள் அட்டகாசம் செய்யும்போது போலீசும் , பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள் , மீடியாக்கள் என்ன செய்யு து ?
============
6 வாடகைத்தாய் அமர்த்த சட்டப்படியே அணுகி இருக்கலாம் . திருமணம் ஆன ஆல்ரெடி ஒரு குழந்தை பெற்ற எத்தனையோ ஏழைப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள்
7 வாடகைத்தாய் ஆக தான் ஆகப்போவதை நாயகி தன காதலனிடம் எதனால் சொல்லவில்லை ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை , டி வி யில் போட்டால் நான்காம் கதையை மட்டும் பார்க்கலாம், ரேட்டிங்க் 2 / 5
0 comments:
Post a Comment