7/6/2024 முதல் திரை அரங்குகளில் வெளியாகி மீடியம் ஹிட் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது மூன்று வேவ்வேறு ஜோடிகளின் காதல் கதை தான் இப்படம் . சில நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது .கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிரான படம் என்று சொல்லப்பட்டது படம் வெளியான போது படத்தின் நாயகன் ஆன ஷேன் நிகாம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பாகப்பேசப்பட்டு பின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் .குடும்ப நண்பர்கள் நாயகனுக்கு அம்மா இல்லை . அப்பா மட்டும் தான் .அப்பா ஒரு இன்ஸடாகிராம் பைத்தியம் . எப்போப்பாரு அதில் போஸ்ட் போட்டுக்கொண்டு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் வருது என கணக்குப் போடுபவர் . அவருக்கு திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது .அந்தப்பெண்ணுக்கு ஒரு மகள் உண்டு . அந்த மகளுக்கு இவர்கள் பழக்கம் பிடிக்கவில்லை .அந்த பெண்ணின் கணவன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான் . நாயகனின் அப்பா - அந்தப்பெண் இருவருக்குமான காதல் ,சந்திப்புகள் என ஆரம்பத்தில் காமெடி , கலாட்டாக்களோடு படம் களை கட்டுகிறது
நாயகி நாயகனை விரும்புகிறாள் . அதை நாயகனிடம் வெளிப்படுத்தும்போது நாயகன் பயப்படுகிறான் . உன் அப்பாவும் , என் அப்பாவும் பேமிலி பிரண்ட்ஸ் . நம் காதல் விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என மறுக்கிறான் . ஆனால் நாயகி தன் முடிவில் உறுதியாக இருக்கவே நாயகன் வேறு வழி இல்லாமல் காதலுக்கு ஓகே சொல்கிறான் .நாயகி , நாயகனைத்துரத்தி துரத்தி காதலிப்பது முதல் பாதி திரைக்கதையில் காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது
நாயகியின் அண்ணன் ஒரு நபரைக்காதலிக்கிறான் . அந்த விஷயத்தை தன பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றுத்தரவேண்டும் என நாயகனிடம் கேட்டுக்கொள்கிறான் . சரி என்று சொன்ன நாயகன்
நாயகியின் அண்ணன் காதலிப்பதாகக் காட்டிய நபரைக்கண்டு அதிர்ச்சி அடைகிறான்
இந்த மூன்று காதல்களும் நிறைவேறியதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஷேன் நிகாம் கலகலப்பாக நடித்திருக்கிறார் . கேரளாவில் இவருக்கு ரசிகைகள் அதிகம் , நம்ம ஊரு சித்தார்த் போல முகச்சாயல்
நாயகி ஆக மஹிமா நம்பியார் கண்ணியமான அழகுடன் வந்து போகிறார் .
நாயகனின் அப்பாவாக பாபுராஜ் .காமெடி நடிப்பு இயல்பாக வருகிறது . இவர் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டரும் கூட
இவருக்கு ஜோடியாக ரம்யா சுவி அமர்க்கள மாக நடித்திருக்கிறார் ., ஆனால் டூயட் எல்லாம் இல்லை . மொத்தப்படத்திலும் இந்த ஜோடி தான் நம் கவனத்தை ஈர்க்கிறது
நாயகியின் அண்ணன் ஆக ஷைன் டாம் சாக்கோ .பல படங்களில் வில்லனாக கலக்கியவர் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார் . இவர் காதலிக்கும் நபர் ஆக வருபவர் பரவயில்லை ரகம்
ஜாபர் இடுக்கி ஒரு சிறிய ரோலில் வந்தாலும் பிரமாதாதப்படுத்தி இருக்கிறார்
ரோஸி செபாஸ்டின் நடிப்பு குட் இவர் பேசிக்கலி ஒரு டான்சர்
கைலாஷ் மேனன் இசையில் 6 பாடல்கள் , அவற்றில் 4 குட் . லுக் ஜோஸ் தான் ஒளிப்பதிவு .குளுமையான படப்பிடிப்பு , நாயகிகளுக்கான க்ளோசப் ஷாட்களில் முத்திரை பதிக்கிறது கேமரா .
நோட்டல் அப்துல்லாவின் எடிட்டிங் கச்சிதம் 134 நிமிடங்கள் படம் ஓடுகிறது
கதை + இயக்கம் = ஆண்ட்டோ ஜோஸ் ப்ரேரியா + அபி ட்ரிசா பால்
திரைக்கதை வசனம் ராஜேஷ் பின்நாடன்
சபாஷ் டைரக்டர்
1 லவ் ஸ்டோரியாக இருந்தாலும் குடும்பத்துடன் கலகலப்பாக ரசிக்கும்படி காட்சிகளை அமைத்த விதம்
2 நாயகன் - நாயகி காதல் கதையை விட நாயகனின் அப்பா - அந்தப்பெண் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விதம்
3 நாயகியின் அப்பாவாக வரும் ரஞ்சி பணிக்கரின் இயல்பான நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 எனக்கு மொத்தம் 3 பிரச்சனைகள் இருக்கு
முதல் பிரச்சனை என்ன?என எனக்குத்தெரியும் .இரண்டாவது பிரச்சனை என்ன?
இரண்டாவது பிரச்சனை என்ன? என்பதை வெளில சொல்ல முடியாது என்பதுதான் மூன்றாவது பிரச்சனை
2 உலகில் பெரிய கொடூரம் எது தெரியுமா?தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு ஜோடி செட் ஆன பின்பு மீண்டும் அவன் தனியன் ஆவது
3 உங்களுக்கு வயசு எவ்ளோ?
56
இன்சூரன்ஸ் எடுத்தாச்சா?
இன்னும் இல்லை
எடுத்துடுங்க , யூஸ் ஆகும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் அப்பாவின் காதலி யின் மகள் டீன் ஏஜ் பெண் .அவளுக்கு இவர்களது பழக்கம் பிடிக்கவில்லை .ஆரம்பத்தில் இருந்து வெறுக்கிறாள் . அவளது வெறுப்பு ஓவர் டோஸ் அம்மாவின் நிழலில் வாழ்பவர் அம்மா வை அவ்ளோ எதிர்ப்பது எதனால் ? திடீர் என அவர் மனம் மாறி அம்மாவின் காதலை ஏற்பதும் நம்ப முடியவில்லை
2 நாயகனின் அப்பாவின் காதலி யின் கணவன் திடீர் என என்ட்ரி கொடுக்கும்போது பெரிதாக எதோ நடக்கப்போவதாக நினைத்தால் ஏமாற்றம் .அவர் கேரக்டர் நம்பகத்தன்மை இல்லை
3 காமெடியாகப்போகும் முதல் பாதி திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திடீர் என பின் பாதி திரைக்கதை சீரியஸ் மோடுக்குப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சராசரி ஆன ரொமாண்டிக் காமெடி டிராமா . டைம் பாஸ் கேட்டகிரி . ரேட்டிங் 2. 5 / 5
Little Hearts | |
---|---|
Directed by | Anto Jose Pereira Aby Treesa Paul |
Written by | Rajesh Pinnadan |
Story by | Anto Jose Pereira Aby Treesa Paul |
Produced by | Sandra Thomas Wilson Thomas |
Starring | Shane Nigam Mahima Nambiar Baburaj Aima Rosmy Sebastian Shine Tom Chacko Shammi Thilakan |
Cinematography | Luke Jose |
Edited by | Noufal Abdullah |
Music by | Kailas Menon |
Production company | |
Distributed by | Million Dreams |
Release date |
|
Running time | 134 minutes |
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment