Wednesday, August 21, 2024

LITTLE HEARTS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

   


     7/6/2024 முதல் திரை அரங்குகளில்  வெளியாகி மீடியம் ஹிட் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம்  ஓடிடி யில் காணக்கிடைக்கிறது மூன்று வேவ்வேறு ஜோடிகளின் காதல் கதை தான் இப்படம் . சில நாடுகளில் இப்படத்துக்கு   தடை விதிக்கப்பட்டது .கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிரான படம் என்று சொல்லப்பட்டது படம் வெளியான போது படத்தின் நாயகன் ஆன ஷேன் நிகாம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பாகப்பேசப்பட்டு பின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் .குடும்ப நண்பர்கள் நாயகனுக்கு அம்மா இல்லை . அப்பா மட்டும் தான் .அப்பா ஒரு இன்ஸடாகிராம் பைத்தியம் . எப்போப்பாரு அதில் போஸ்ட் போட்டுக்கொண்டு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் வருது என கணக்குப் போடுபவர் . அவருக்கு திருமணம் ஆன ஒரு  பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது .அந்தப்பெண்ணுக்கு ஒரு மகள் உண்டு . அந்த மகளுக்கு இவர்கள் பழக்கம் பிடிக்கவில்லை .அந்த பெண்ணின்  கணவன்  எங்கேயோ ஓடிப்போய்விட்டான் . நாயகனின் அப்பா - அந்தப்பெண் இருவருக்குமான காதல் ,சந்திப்புகள் என ஆரம்பத்தில் காமெடி , கலாட்டாக்களோடு படம் களை  கட்டுகிறது 



நாயகி நாயகனை  விரும்புகிறாள் . அதை நாயகனிடம் வெளிப்படுத்தும்போது நாயகன் பயப்படுகிறான் . உன் அப்பாவும் , என் அப்பாவும் பேமிலி  பிரண்ட்ஸ் . நம் காதல் விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என மறுக்கிறான் . ஆனால் நாயகி தன்  முடிவில்  உறுதியாக இருக்கவே நாயகன்  வேறு வழி இல்லாமல் காதலுக்கு ஓகே சொல்கிறான் .நாயகி , நாயகனைத்துரத்தி துரத்தி  காதலிப்பது முதல் பாதி திரைக்கதையில் காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது 


நாயகியின் அண்ணன்  ஒரு நபரைக்காதலிக்கிறான் . அந்த விஷயத்தை  தன பெற்றோரிடம் சொல்லி சம்மதம்  பெற்றுத்தரவேண்டும் என நாயகனிடம் கேட்டுக்கொள்கிறான் . சரி என்று சொன்ன நாயகன் 

நாயகியின் அண்ணன்   காதலிப்பதாகக் காட்டிய  நபரைக்கண்டு  அதிர்ச்சி அடைகிறான் 



 இந்த மூன்று காதல்களும் நிறைவேறியதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  ஷேன் நிகாம்  கலகலப்பாக நடித்திருக்கிறார் . கேரளாவில் இவருக்கு ரசிகைகள் அதிகம் , நம்ம ஊரு சித்தார்த் போல  முகச்சாயல் 


 நாயகி ஆக மஹிமா நம்பியார் கண்ணியமான  அழகுடன் வந்து போகிறார் . 


நாயகனின் அப்பாவாக  பாபுராஜ் .காமெடி நடிப்பு  இயல்பாக வருகிறது . இவர் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டரும் கூட 


இவருக்கு ஜோடியாக ரம்யா  சுவி  அமர்க்கள மாக நடித்திருக்கிறார் ., ஆனால் டூயட் எல்லாம்  இல்லை . மொத்தப்படத்திலும்  இந்த ஜோடி தான் நம் கவனத்தை ஈர்க்கிறது 


நாயகியின் அண்ணன் ஆக  ஷைன் டாம் சாக்கோ .பல படங்களில்  வில்லனாக கலக்கியவர் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார் . இவர் காதலிக்கும்  நபர்  ஆக வருபவர் பரவயில்லை ரகம் 


 ஜாபர்  இடுக்கி ஒரு  சிறிய ரோலில் வந்தாலும் பிரமாதாதப்படுத்தி இருக்கிறார் 


ரோஸி செபாஸ்டின்  நடிப்பு குட் இவர் பேசிக்கலி ஒரு டான்சர் 



கைலாஷ் மேனன் இசையில் 6 பாடல்கள் , அவற்றில் 4  குட் . லுக் ஜோஸ் தான் ஒளிப்பதிவு .குளுமையான படப்பிடிப்பு , நாயகிகளுக்கான க்ளோசப் ஷாட்களில் முத்திரை பதிக்கிறது கேமரா . 


 நோட்டல் அப்துல்லாவின்  எடிட்டிங் கச்சிதம் 134 நிமிடங்கள் படம் ஓடுகிறது 


கதை + இயக்கம் = ஆண்ட்டோ  ஜோஸ் ப்ரேரியா + அபி   ட்ரிசா பால் 


திரைக்கதை வசனம் ராஜேஷ் பின்நாடன் 



சபாஷ்  டைரக்டர்

1  லவ் ஸ்டோரியாக  இருந்தாலும் குடும்பத்துடன் கலகலப்பாக ரசிக்கும்படி காட்சிகளை அமைத்த விதம் 


2  நாயகன் - நாயகி காதல் கதையை விட நாயகனின் அப்பா - அந்தப்பெண் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விதம் 


3  நாயகியின் அப்பாவாக வரும் ரஞ்சி பணிக்கரின் இயல்பான நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு மொத்தம் 3 பிரச்சனைகள் இருக்கு 


 முதல் பிரச்சனை என்ன?என எனக்குத்தெரியும் .இரண்டாவது பிரச்சனை என்ன? 


இரண்டாவது பிரச்சனை என்ன?   என்பதை   வெளில சொல்ல முடியாது என்பதுதான் மூன்றாவது பிரச்சனை 


2   உலகில் பெரிய கொடூரம் எது தெரியுமா?தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு ஜோடி செட் ஆன பின்பு மீண்டும் அவன் தனியன் ஆவது 


3  உங்களுக்கு வயசு எவ்ளோ? 


56 


இன்சூரன்ஸ்  எடுத்தாச்சா? 


இன்னும் இல்லை 


 எடுத்துடுங்க , யூஸ் ஆகும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  நாயகனின் அப்பாவின் காதலி யின் மகள் டீன் ஏஜ் பெண் .அவளுக்கு இவர்களது  பழக்கம் பிடிக்கவில்லை .ஆரம்பத்தில் இருந்து வெறுக்கிறாள் . அவளது  வெறுப்பு ஓவர் டோஸ் அம்மாவின் நிழலில் வாழ்பவர்  அம்மா வை அவ்ளோ எதிர்ப்பது எதனால் ? திடீர் என அவர் மனம் மாறி அம்மாவின் காதலை ஏற்பதும்  நம்ப முடியவில்லை 

2 நாயகனின் அப்பாவின் காதலி யின்  கணவன் திடீர் என  என்ட்ரி கொடுக்கும்போது   பெரிதாக எதோ நடக்கப்போவதாக நினைத்தால்  ஏமாற்றம் .அவர்   கேரக்டர்  நம்பகத்தன்மை இல்லை  

3   காமெடியாகப்போகும் முதல் பாதி திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திடீர் என பின் பாதி திரைக்கதை  சீரியஸ் மோடுக்குப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி ஆன ரொமாண்டிக் காமெடி டிராமா . டைம் பாஸ் கேட்டகிரி . ரேட்டிங்  2. 5 / 5 


Little Hearts
Directed byAnto Jose Pereira
Aby Treesa Paul
Written byRajesh Pinnadan
Story byAnto Jose Pereira
Aby Treesa Paul
Produced bySandra Thomas
Wilson Thomas
StarringShane Nigam
Mahima Nambiar
Baburaj
Aima Rosmy Sebastian
Shine Tom Chacko
Shammi Thilakan
CinematographyLuke Jose
Edited byNoufal Abdullah
Music byKailas Menon
Production
company
Distributed byMillion Dreams
Release date
  • 7 June 2024
Running time
134 minutes
CountryIndia
LanguageMalayalam

0 comments: