Saturday, August 03, 2024

LEVEL CROSS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் )

     


   மூன்றே  நடிகர்கள் , ஆளுக்கு தலா ரூ 10  லட்சம் சம்பளம் , காஸ்ட்யூம்  செலவு ரூ  25,000 மொத்தமே படத்தின் மொத்த  பட்ஜெட்டே  10  லட்சம்  ரூபாய் தான் இருக்கும் , ஆனால் பிரமாதமான திரைக்கதை , ரசிகர்களின் அமோக வரவேற்பில்  தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது . 100 கோடி சம்பளம் கொடுத்து  500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம்  டப்பா ஆகும் கால கட்டத்தில்  இது போல திரைக்கதையை நம்பும் படங்கள்  வெற்றி பெறுவது மிக்கமகிழ்ச்சி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஆள் அரவமே இல்லாத பாலைவனம் போன்ற ஒரு  பகுதி . அங்கே  ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங் . அங்கே பனி புரியும்  நாயகன் . அவனுக்குத்துணைக்கு யாரும் இல்லை . அங்கேயே வீடு கட்டி  பணி  செய்து வருகிறான் .தினசரி  3  அலல்து  4  ரயில்கள் அந்த வழியாக வரும் . பச்சைக்கொடியைக்காட்டி  அனுப்பி விட்டால்  வேலை ஓவர் .சமையல் செய்து வாழ்ந்து வருகிறான் 


ஒரு நாள்  ரயில் அந்த வழியே போகும்போது ஒரு பெண்  ரயிலில் இருந்து குதித்து  வீழ்ந்து  மயக்கம் ஆகிக்கிடப்பதைப்பார்க்கிறான் . அவள் தான் நாயகி . அவளைத்தன்  வீட்டுக்குத்தூக்கி வந்து மயக்கம் தெரிவிக்கிறான் . இவனைக்கண்டதும் நாயகி அரண்டு விடுகிறாள் 


ஆரம்பத்தில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்ததாக பொய் சொல்லும் நாயகி பின்  சொல்வது ...  அவள் கணவன் ஒரு சைக்கோ .அவனிடம் இருந்து தப்பிக்க இப்படி ஓடும் ரயிலில் இருந்து குதித்தேன் என்கிறாள் 


நாயகியின் கணவனை  வில்லன் என வைத்துக்கொள்வோம் . நாயகியின்  கோணத்தில் நாயகி சொல்லும்  வில்லனின் கதை இது .வில்லனுக்கு ஆல்ரெடி திருமணம் ஆகி விட்டது ஆனால் மனைவி என்ன காரணத்தாலோ  தற்கொலை செய்து கொள்ள மனநல பாதிப்புக்கு உள்ளாகும்  வில்லன்  மன  நல  நிபுணர்  ஆன நாயகியிடம்  சிகிச்சைக்கு வருகிறான் 


வில்லன் , நாயகி இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் வில்லன் நாயகியிடம் தன காதலைத்தெரிவிக்கிறான் . நாயகி ஓகே சொல்கிறாள் , இருவருக்கும் திருமணம் நடக்கிறது . அதற்குப் பின் தான்  வில்லனின்  நடவடிக்கையில் மாற்றம் .அவன் ஒரு  ட்ரக் அடிக்ட் . நாயகியை அடிக்க ஆரம்பிக்கிறான் . அவனிடம் இருந்து தப்பிக்க பல முறை போராடி இப்போதுதான் வெற்றி பெற்றிருக்கிறாள் .




நீண்ட நாட்களாகத்தனிமையில்  இருக்கும் நாயகனுக்கு நாயகியின் வரவு  மனதுக்கு நிம்மதியை , மகிழ்ச் ச்சியைத்தருகிறது இருவரும் நெருக்கம் ஆக இருக்கும் கட்டத்தில் நாயகிக்கு ஒரு  அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது . நாயகன் ஒரு  சைக்கோ கில்லர் . மனைவி , அவளது கள்ளக்காதலன்  உட்பட நான்கு கொலைகளை செய்தவன் . இது தெரிந்ததும் நாயகனிடம் இருந்து தப்ப்பிக்க  முயற்சிக்கிறாள் , அந்த நேரம்   வில்லன் நாயகியைத்தேடி அங்கே வருகிறான் 


இதற்குப்பின் நிகழும்  திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக ஆசிப் அலி கலக்கி இருக்கிறார் . அவரது ஒப்பனை , உடல் மொழி   எல்லாம்  அருமை . ஆரம்பத்தில் அப்பாவியாகத்தெரியும்  அவர்  பின்பகுதியில் சைக்கோ கில்லர்  என்பது தெரியவரும்போது  அவரது  நடிப்பில் அபார மாற்றம் 


 நாயகி ஆக அமலாபால் . அவருக்கு ஒரு கம் பேக் படமாக இருக்கும் . நடிப்பில் , கிளாமரில்  குறை வைக்கவில்லை 


 வில்லன் ஆக சஹ்ராபுதீன்  .இவருக்கும் இரு விதமான கேரக்டர்  டிசைன் . இரண்டையும் நிறைவாகசெய்து இருக்கிறார் 


 லொக்கேஷன் செலக்சன்  அட்டகாசம்  அந்தப்பாலைவனத்துக்காக  துனிஷியா   என்ற இடத்திருப்போய் ஷூட்டிங்க் பண்ணி இருக்கிறார்கள் . ஒளிப்பதிவு கலக்கல் ரகம் . சில லாங்க் ஷாட்கள்  ஹாலிவுட் படத்துக்கு  நிகரானவை 



எடிட்டிங்க் தீபி ஜோஸப் 116 நிமிடங்கள் டைம் ட்யுரேஷன் .முதல் 40  நிமிடங்கள் டெட் ஸ்லோ . பின்  நல்ல  விறு விறு ப்பு 


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அர்பாஸ் அயூப் 

சபாஷ்  டைரக்டர்


1    விருமாண்டி பாணியில் மூவரும் வெவ்வேறு கோணத்தில் கதை சொல்வதும் யார் சொல்வது  உண்மை என புரியாமல் ஆடியன்ஸை திகைக்க வைப்பதும் 


2   நாயகன் ஒரு  சைக்கோ கில்லர்  என நாயகிக்குத்தெரிய வரும் இண்டர்வ்ல் பிளாக் சீன கலக்கல் ரகம் 


3  வில்லன் , நாயகி , நாயகன் மூவருக்கும் மோதல் வரும்போது நாம் யார் பக்கம்   என்பதை நம்மாலே முடிவு செய்ய இயலாமல்  இருக்க வைத்த விதம்  


4  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  நம்ம மனதில் இருப்பதை 90% சொல்லமாட்டோம் , 10 % தான் வெளில சொல்வோம் , வெளியில்  சொல்லாத அந்த 90% தான்   நம் மனதை  அதிகம் பாதிக்கும் 

2  காதல் ரன்பது  வலிமையான மருந்து 

3   சிங்கிளா இரு  மேரேஜ் பண்ணிக்காதே .உன் சுதந்திரத்தை  இழக்காதே 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்  எல்லாம் 60 கிமீட்டர்  டு  80 கிமீட்டர்  வேகத்தில் செல்லும்  அதில் இருந்து    குதித்த நாயகிக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை . சைக்கிளில் இருந்து கீழே  விழுந்தாலே நமக்குக்காலில் சிராய்ப்பு  வருது 


2    தண்ணீர்  தட்டுப்பாடு . கிணற்றில் போய் தண்ணீர் எடுக்க  ஒரு கி மீட்டர்  நடக்கணும் .ஆனால்  நாயகன் நாயகியிடம்  தண்ணீர்  பற்றிபிராப்ளம்  இல்லை .  குளிங்க  என்கிறான் 



3   மாடர்ன் பெண்கள்  பொதுவாக  இப்போது வேலை எல்லாம் செய்வது இல்லை .கணவன் அல்லது காதலன் அல்லது பாய்பெஸ் டியை வேலைக்காரன் போல  நடத்தி தனக்கு வேண்டிய வேலையை வாங்கிக்கொள்கிறார்கள் . ஆனால்  நாயகி   ஒரு கிமீட்டர்  நடந்து  போய் தண்ணீர் கொண்டு வரப்போவது  நம்ப முடியவில்லை 



4  நாயகன் ஒரு சைக்கோக்கில்லர் .தான் கொலை செய்த நபரின்  போட்டோவை .செய்தி வந்த  நியூஸ் பேப்பரை   எதற்காக   ஆதாரமாக தன்னிடம்  வைத்திருக்கிறான் ? 



5  நாயகன் ஆள் மாறாட்டம் செய்து  வேறு ஒரு ஆளின் ஐடியில் வாழ்கிறான் .டெலிபோனில் குரல் மாற்றம்  ஆபிசரு த்தெரியாதா? 


6   கிட்டத்தட்ட 10 வருடங்களாக  நாயகன் தனிமையில் இருக்கிறான் . ஆனால் நாயகியைக்கண்டதும்   தவறாக    நடக்க முயற்சி கூட செய்யவில்லை . அக்கம் பக்கம் யாருமில்லை . போலீஸ் பயம் , சமூக பயம் இல்லை , ஆனாலும் நல்லவனாக இருப்பது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்  பார்க்கலாம்,ஆனால் பொறுமை அவசியம் .ரொம்ப ஸ்லோ . ரேட்டிங்க்  3 / 5 

0 comments: