சமீப காலமாக மலையாளப்படங்களை சிலாகித்து , அவற்றை வெற்றி பெற செய்வது பல மொழி ரசிகர்களின் போக்காக இருக்கிறது .காரணம் அவர்கள்: எடுத்துக்கொள்ளும் கதைக்கரு சாதாவாகவும், திரைக்கதை ஸ்பெஷல் ஆகவும் இருப்பதே .அவர்கள் ஹீரோவுக்கு கோடிக்கணக்கில் தண்டமாக சம்பளம் தருவதில்லை .திரைக்கதை ஆசிரியர்களை மதிக்கிறார்கள் .ஸ்க்ரிப்ட் தான் ஜெயிக்கும் என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்
பெரிய நட்சத்திரப்பட்டாளம் எதுவும் இல்லாமல் ஸ்க்ரிப்ட்டை நம்பி வெளியான இன்னொரு வெற்றிப்படம் இது .7/6/2024 அன்று திரைக்கு வந்த இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது . தமிழ் டப்பிங்க் இல்லை . கோளம் என்பது டைட்டில் . விக்கி பீடியா உட்பட பல தளங்களில் கோலம் என்று தவறாக உச்சரிக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் இரு கம்பெனிகளின் எம் டி . பார்ட்னர் ஒரு ஆள் உண்டு . ஒரு கம்பெனியில் 15 பேர் வேலை செய்கிறார்கள் . இன்னொரு கம்பெனி ஒரு மெடிக்கல் கம்பெனி .வில்லன் எம் டி ஆக இருக்கும் முதல் கம்பெனியில் சிசிடி வி கேமராக்கள் உண்டு . கம்பெனியில் பாத்ரூமில் வில்லன் ஒரு நாள் தலையில் அடிபட்டு இறந்து கிடக்கிறான் .இது விபத்தா? கொலையா?என ஆராய நாயகன் ஆன போலீஸ் ஆபீசர் வருகிறார் .
வில்லனுக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை .அதனால் வில்லனின் மறைவுக்குப்பின் சொத்துக்கள் எல்லாம் பார்ட்னருக்குத்தான் .அதனால் சந்தேக வளையத்தில் பார்ட்னர்தான் விழுகிறான் . எம் டி உடன் பணியாட்கள் யாராவது தகராறு செய்தார்களா ? என இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறது . அதில் அதிர்ச்சி அளிக்கும் சில உண்மைகளை நாயகன் கண்டுபிடிக்கிறான் . இதற்குப்பின் நாயகன் எடுக்கும் முடிவுகள் ,திட்டங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ரஞ்சித் ராஜீவ் பக்காவான ஜிம் பாடியுடன் , சிக்ஸ் பேக் கட்டழகுடன் அண்டர்ப்பிளே ஆக்டிங் செய்திருக்கிறார் . நம்ம தமிழ் நாட்டில் பல ஹீரோக்கள் தொப்பை உடம்பை வைத்துக்கொண்டு தரும் பில்டப்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது
வில்லன் ஆக திலீஷ் போத்தன் சிறப்பாக நடித்திருக்கிறார் , ஆனால் அவருக்கான காட்சிகள் குறைவு . கம்பெனியில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு ,. கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்
அபி செல்வின் தாமஸ் தான் இசை .ஒரே ஒரு பாடல் .ஓகே ரகம், பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவு விஜய் .பாராட்டும் தரம் .எடிட்டிங் மகேஷ் புவனேநந் .இரண்டு மணி நேரம் டைம் டியூரேஷன் வரும்படி கச்சிதமாக ட்ரிம் செய்து இருக்கிறார் பிரவீன் விஷ்வநாத் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சம்ஜத்
சபாஷ் டைரக்டர்
1 சி சி டிவி யை ஏமாற்றி கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது என்று காட்டிய விதம் அருமை
2 கொலை நடந்தது எப்படி என்பதை விலாவாரியாகக்காட்ட வேண்டி இருப்பதால் கொலையாளி யார் என்ற டிவிஸ்ட்டை இடைவேளைக்கு முன்பே ஓப்பன் செய்தாலும் சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 ஒரு கம்பெனிக்கு காலைல லேட்டா வருவதற்கான காரணமா முந்தின நாள் லேட்டா வீட்டுக்குப் போனதை சொல்லக்கூடாது . வேலையை ஒழுங்கா செய்யாததால்தானே ஓ. டி பார்க்க நேரிடுது ?
2 அனுபவம் தான் பேசும் , டிகிரி சர்ட்டிபிகேட் இல்ல
3 இது சாதா கேஸ் , பொண்ணுங்களுக்கு முன்னால ஜேம்ஸ்பாண்ட் ஆக காட்டிக்க ஆசைப்படறாரு
4 பிஸ்னஸ் ல சக போட்டியாளர்கள் எல்லாரும் எதிரிகள் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு கம்பெனி எம் டி கோடீஸ்வரர் ஆக இருப்பவர் கம்பெனியில் தன அறைக்கு உள்ளே அட்டாச்டு பாத்ரூம் வெச்சிருக்க மாட்டாரா?
2 கோடீஸ்வரர் காபி வேண்டும் எனில் பணிப்பெண்ணை அழைக்க மாட்டாரா ?தானே போயா காபி கலக்குவார் ?
3 ஆபிஸ் ல பனி புரியும் ஒரு பெண் தன கைப்பையில் தூக்க மாத்திரை ஒரு டப்பா நிறைய வைத்திருக்கிறார் , அதைக்கண்டுபிடித்த நாயகனுக்கு கொலைக்கான க்ளூ கிடைக்கிறது . வீட்டில் தூங்க வீட்டில் தானே தூக்க மாத்திரை வைப்பாங்க ? கம்பெனிக்கு அதை எதனால் கொண்டு வந்து மாட்டிக்கணும் ?
4 வாக்கும் கிளீனர் கொண்டு பணிப்பெண் சுத்தப்படுத்தியதால் எழுந்த சத்தத்தால் வில்லன் எழுப்பிய அபயக்குரல் கேட்கவில்லை என போலீசில் சொல்கிறார்கள. வழக்கமாக அந்த சுத்தப்படுத்தும் வேலையை காலை 8 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு செய்வார்களா? ஆபிஸ் ரன்னிங் டைமில் 11 மணிக்கு செய்வார்களா?
5 வில்லன் கம்பெனி சார்பாக ஒரு டாக்டரை எதனால் வைத்துக்கொள்ளவில்லை ? யாருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் அவர் பார்த்து தக்க பதில் சொல்லி சமாளித்திருப்பாரே? வெளி ஹாஸ்பிடல் போனால்,தான் மாட்டிக்கொள்வோம் என்பது வில்லனுக்குத்தெரியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - CLEAN U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட்ட க்ரைம் த்ரில்லர் திரைக்கதை . ரசிக்கலாம் . ரேட்டிங் 3 / 5
Golam | |
---|---|
Directed by | Samjad |
Written by | Praveen Viswanath & Samjad |
Produced by | Anne Sajeev & Sajeev P K |
Starring |
|
Cinematography | Vijay |
Edited by | Mahesh Bhuvanend |
Music by | Aby Salvin Thomas |
Production company | Fragrant Nature Film Creations |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment