கேட்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கேபிள் கனெக்சன் இல்லாமலேயே கே டி வி தெரியும்னு சொன்ன கதையா திரை உலக பிரபலங்கள் இந்தப்படத்துக்குக்கொடுத்த பிரமோஷன்கள் ஓவர் ஆக்டிங் ஓமனா வகையறா . பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு இணையான திரை உலக அனுபவம் மிக்க சாய் வித் சித்ரா எம் டி சித்ரா லட்சுமணன் சாரே இப்படத்தை சிலாகித்ததும் , கதையே கேட்காம படத்தை தயாரிக்க முன் வந்த சிவகார்த்திகேயன் பிராண்ட் ஆகியவை தான் இப்படத்தைக்காண வைத்த காரணிகள்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஓரூ கிராமத்தான் .பட்டிக்"காட்டான்" . வில்லனின் முறைப்பெண்ணான நாயகி கல்லூரி மாணவி . வேறு ஒரு சாதிக்காரனை லவ் பண்ணுவதால் அவள் மனசை மயக்கி இருப்பதாக சொந்தக்காரர்கள் எண்ணுகிறார்கள் .அந்த ஊர் வழக்கப்படி ஊர் எல்லையில் இருக்கும் பூசாரியிடம் அழைத்து சென்று பேய் ஓட்டி விட்டால் அவள் மனசு மாறும் என மடத்தனமாக எண்ணுகிறார்கள் .வில்லன் , நாயகி , நாயகியின் பெற்றோர் , சொந்தபந்தங்கள் சிலர் இவர்கள் அனைவரும் மேற்கொள்ளும் பயணம் தான் மொத்தக்கதை யுமே
வில்லன் ஆக புரோட்டா சூரி , கச்சிதம் .மொக்கைக்காமெடி நடிகராக இருந்தவர் சமீபகால விடுதலை , கருடன் படங்கள்
மூலமாக கதையின் நாயகன் ஆக மாறுபட்ட நடிப்பைத்தந்தவர் இந்தப் படத்தில் வில்லன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்
நாயகி ஆக அன்னா பென் . முழுப்படத்திலும் ஒரே ஒரு வரி டயலாக் தான் . பார்வை மட்டுமே பேசுகிறது .
மற்ற அனைவரும் புது முகங்கள் . அனைவரின் நடிப்பும் கச்சிதம்
படத்தில் இசை , பின்னணி இசை இல்லை . வாகனங்களின் ஒலி மட்டுமே ஓசை . புதுமைதான்
டைட்டிலுக்கான அர்த்தம் அடங்காப்பிடாரி + அடமண்ட் கேர்ள்
சபாஷ் டைரக்டர்
1 பல விருதுகளை வென்ற தன முதல் படமான கூழாங்கல் என்ற விஸிட்டிங்க் கார்டை வைத்து சிவகார்த்திகேயன் மனதை கலைத்து தயாரிப்பாளர் ஆக்கிய சாமர்த்திய,ம்
2 படம் வெளியாகும் முன்பே அனைத்து மீடியாக்கள் , விஐபிக்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க வைத்தது
3 இசை அமைப்பாளர் , திரைக்கதை ஆசிரியர் இருவர் சம்பளத்தை மிச்சம் செய்ய படத்தில் இரண்டையும் ஆப்சென்ட் ஆக்கியது
4 முக்கியமான இடத்தில் படத்தை நிறுத்தி க்ளைமாக்ஸை உங்கள் யூகத்துக்கே விடுகிறோம் என எஸ்கேப் ஆன விதம்
5 விடுதலை , கருடன் இரண்டு படங்களின் ஹிட்டால் சூரி மார்க்கெட் உயர்ந்திருப்பதை உணர்ந்து சாமார்த்தியமாக அவரை வில்லனாக புக் செய்தது
ரசித்த வசனங்கள்
1 எருக்கம்பாலை வெச்சா எந்த விஷமா இருந்தாலும் முறிந்துவிடும்
2 நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் நாம் பேசவே கூடாது
3 கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது
4 லவ் பண்ணுனவனையே நீ யாரு? என அவளையே கேட்க வெச்சிடும் சாமி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மனசாட்சியே இல்லாம 15 நிமிட குறும்படத்துக்கான கண்டடெண்டடை ஒன்றே முக்கால் மணி நேர படமாக எடுத்தது எதனால் ?
2 திரைக்கதை சுவராஸ்யமாக எழுத வரவில்லை என்பதற்காக பயணத்தின் போது சிறுவன் பாத்ரூம் போவதை , பெண்ணுக்கு மென்சஸ் ஆனதால் ஒதுங்கி காட்டின் மறைவில் கேர்ப்ரீ வைப்பதை . குடிகாரர்கள் சரக்கு அடிக்க முயல்வதை என நம் பொறுமையை சோதித்தது எதனால் ?
3 அனைவரும் சேலை அணிந்திருக்கும்போது நாயகியை மட்டும் சுடிதார் அணிய விட்டது எப்படி? வில்லன் தான் கட்டுப்பட்டி ஆச்சே? ?
4 வில்லன் கண்ணில் காற்றில் தூசியுடன் முடி வந்து ஒட்டிக்கொள்ளும்போது சொந்தக்காரப்பெண் தன் நாக்கால் எடுப்பது ஓகே . எதுக்கு அவ்ளோ கஷ்டம் ? ஒரு பாக்கெட்டில் தண்ணீரில் கண்ணை திறந்தபடி முகத்தை முங்கினால் வந்துடும்
5 மிக மிக ஸ்லோ மூவியான இதில் ஓப்பனிங் டயலாக் - சீக்கிரம் வாப்பா. என்ன கொடுமை சார் இது ?
6 வில்லன் நாயகி ஒரு பாட்டு முணுமுணுத்தாள் என்பதற்காக அவளை , குடும்பத்தை அடித்து நொறுக்குவது ஓவர் . இப்படிப்பட்ட முரடனுக்கு எந்தப்பெற்றோர் தன் மகளை கல்யாணம் பண்ணி வைப்பார்கள் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட்ட முயற்சிதான் , ஆனால் விருதுக்கான படம் . இந்தப்படத்துக்கு பொய்யான ;பாசிட்டிவ் ரிவ்யூஸ் கொடுத்து மக்கள் பணத்தை தண்டம் ஆக செலவு செய்ய வைப்பது குற்றம், பாவம் , இப்படி எல்லாம் ஏமாற்றி சம்பாதித்தால் அந்தப்பணம் ஒட்டாது . நாசமாபோகும் .
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் 41
குமுதம் ரேங்கிங்க் - ஓகே
ரேட்டிங் 2 / 5
0 comments:
Post a Comment