Saturday, August 17, 2024

தங்கலான் (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     


         இயக்குனர் பா ரஞ்சித்தின் முதல் படமான அட் டக்கத்தி (2012)  அவரது படைப்புகளில்   நெம்பர் 1 தரம் .அவரது  ஐந்தாவது படமான சார்ப்பேட்டா பரம்பரை (2021) இரண்டாவது நல்ல படம் .அவரது இரண்டாவது படமான மெட்ராஸ் (2014)  மூன்றாவது  நல்ல படம் .இந்த மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்ட ஜனரஞ்ச்க வெற்றியைப்பெற்ற படங்கள்  


இவரது மூன்றாவது  படமான  கபாலி (2016)   ரஜினியின் திரை  உலக வாழ்வில் முதல் நாள் முதல் காட்சி  டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு  கவுண்ட்டரிலேயே விற்கும் அளவுக்கு பிராண்ட் வேல்யூ ஏற்றிய படம் . இவரது  நான்காவது படமான காலா (2018) ரஜினி ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியாத  படம் .இவரது ஆறாவது படைப்பான விக்டிம் (2022) வெப் சீரிஸ்     எப்படி என தெரியவில்லை .இவரது ஏழாவது படைப்பான நட்சத்திரம் நகர்கிறது (2022)  இவருக்கு ஏழரையைக்கூட்டிய படம் ..ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோவிலேயே கூட்டம் வராமல் ஷோ கேன்சல் ஆன டப்பாப்படம் 

இவரது எட்டாவது  படம் தான் தங்கலான் .கோல்டு போல கொண்டாடப்பட வேண்டிய படமா? அஷ்டமத்துல சனியா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

1850  ம்   ஆண்டு கதை நடக்கிறது .நாயகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன் . அவனும் , அவனது ஊர்  மக்களும் அடிமைகளாக பண்ணையாரிடம் வேலை செய்து வருகிறார்கள் வில்லன் ஆங்கிலேயன் .ஒரு  தங்கச்சுரங்கத்தில்  வேலை செய்ய அடிமைகள் தேவை என்பதால் ஆசை வார்த்தை கூறி  நாயகனையும் , ஊர்  மக்களையும்  அழைத்துச்செல்கிறான்   வில்லன்  சொன்னபடி தங்கத்தில்  நாயகனுக்கும், ஊர் மக்களுக்கும் பங்கு தந்தானா? அல்வா  கொடுத்தானா?   என்பது  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  சீயான்  விக்ரம் .சேது ,  பிதா மகன் , காசி உட்பட பல படங்களில் பிரமாதமான நடிப்பைத்தந்தவர் .நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக தன உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் கமலுக்கே  சவால் விடுபவர் . இந்தப்படத்திலும் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர் 


  நாயகி  ஆக பார்வதி திருவோத்து. செம ஆக்டிங்க் ,சூனியக்காரி  ஆக  மாளவிகா மோகனன் ,குட் ஆக்டிங் பசுபதியின் பங்களிப்பும் அருமை   


 இசை ஜி வி பிரகாஷ் . 2 பாடல்கள் அருமை . பின்னணி இசை அட்டகாசம்  ஒளிப்பதிவு  கிஷோர் குமார் . நல்ல உழைப்பு . ஒப்பனை , ஆர்ட் டைரக்சன்  இரண்டும்   சவாலான பணி 


சபாஷ்  டைரக்டர்


1   பாலா இயக்கிய  பரதேசி (2013)  60%  ,செல்வராகவன் இயக்கிய  ஆயிரத்தில் ஒருவன் = 20% மெக்கன்னாஸ் கோல்டு  உட்பட ஹாலிவுட் படங்கள் 10 % , சொந்த சரக்கு 10%  என கலந்து கட்டி கதை சொல்லி தயாரிப்பு தரப்பை திருப்திப்படுத்தியது 


2  ஷங்கர் இயக்கிய ஐ படத்தால்  உங்க உழைப்பே வீணாச்சு , இந்த  படத்துக்கு உங்களுக்கு ஆஸ்கார் நிச்சயம் என ஆசை வார்த்தை சொல்லி விக்ரம் கால்ஷீ ட் வாங்கியது 


3   அந்தக்காலக்கதை என்பதால்     காஸ்ட்யும் செலவை மிச்சம் செய்தது 


4   இந்த டப்பா  படத்துக்கு  150 கோடி பட்ஜெட் செலவு என தைரியமாக  எல்லாரையும் நம்ப வைத்தது 


5  முதன் முதலாக ஜாக்கெட் அணியும் பெண்களின் குதூகலத்தை அழகாக  பதிவு செய்தது 



6    விக்ரம், பசுபதி , பார்வதி , மாளவிகா  உட்பட அனைவரிடமும்  நல்ல நடிப்பை வெளிக்கொணர்ந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1   யாருக்கு தேவை இருக்கோ அவங்க தேடி எடுத்துக்கிடட்டும் 


2  மின்னுவதெல்லாம் பொன்னல்ல , பேரழிவு 


3 ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் ரோஷத்தோட வாழ்ந்து செத்துப்போகணும் 


4 வயித்துக்கு இல்லைன்னாலும் வைராக்கியம் தான் சோறு 


5  சாவுக்குத்துணிஞ்சசவங்களுக்கு மட்டும் தான் இங்கே வாழ்க்கை 


6  எங்களுக்குக்கிடைக்காத உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது ? 


7  தன்னை உணராதவன் தானே அழிவான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  படம் முழுக்க ஒரே இரைச்சல் . இரிட்டே ட்டிங்க் ஆக இருந்தது . வசனமே புரியலை 


2  உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பது போல , 10 வருடங்கள் குடி இருந்தால் வாடகை வீடு சொந்தம் என்பது போல  தங்க சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் தங்கம் அந்த கூலித்தொழிலாளிகளுக்கு சொந்தம்   என கண்டு பிடித்த விதம் 


3  முதல் பாதி திரைக்கதை கூட சுமாராக இருந்தது . பின் பாதி திரைக்கதை  ஒரே குழப்பம் , பிளேடு 


4  பாம்பு பொதுவாக மனிதர்களைக்கண்டால்  பயந்து ஓடும் . நாமாக தெரியாமல் அதை மிதித்தால் நம்மைக்கொத்தும் , இதுதான் பாம்பின் சுபாவம் . ஆனால் பல பாம்புகள் காரணமே இல்லாமல் மனிதர்களைத்துரத்துவது போல் காட்சி 


5   வில்லனை பாம்பு கொத்தியதும்  நாயகன் பதட்டமடைந்து அவனை  காப்பாற்றுவது எதனால் ? சாகட்டும்னு விட வேண்டியதுதானே? 


6 கூலி வேலை  செய்யும் நாயகனும் , ஊர் மக்களும்  தங்கம் எடுத்தால்  நமக்கும் பங்கு உண்டு என  எப்படி நம்புகிறார்கள் ? பேராசைதானே ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    இயக்குனர் பா ரஞ்சித்தின்  ஏழாவது படைப்பான நட்சத்திரம் நகர்கிறது (2022)  தான் இவரது படைப்புகளிலேயே  மோசமான தோல்வியை சந்தித்த படம் .  அதைக்கூட டி வி ல போட்டா  பார்க்கலாம் . இந்தக்குப்பையை  டி வி ல கூட பார்க்க முடியாது .200 ரூபா தண்ட க்கடன் . விகடன் மார்க் 39 , குமுதம் ரேங்க் சுமார் . ரேட்டிங் 1.75 / 5 


 எச்சரிக்கை - பல வாட்சப் பார்வர்டு களில் , பேஸ்புக் பதிவுகளில் இது அவார்டு படம் , அட்டகாசம் என்றெல்லாம் அளந்து விடுவார்கள் , நம்பாதீர்கள் , மகா குப்பை   



0 comments: