2021 ஆம் ஆண்டு மேஸ்ட்ரோ என்ற டைட்டிலில் நிதின் + தமனா காம்ப்போவில் தெலுங்கில் ரீமேக் ஆகி ஹிட் ஆனது . அதே ஆண்டில் மலையாளத்தில் பிருத்விராஜ் + மம்தா மோகன் தாஸ் காம்ப்போவில் பிரம்மம் என்ற டைட்டிலில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது
தமிழில் இதன் உரிமம் வாங்கிய தியாகராஜன் தபு ரோலில் தபுவையே நடிக்க வைக்க முயற்சி செய்தார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை . பின் அந்த ரோலில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க முயற்சித்தார். அதுவும் செட் ஆகவில்லை /பின் கோவிட் காரணம் ஆக படப்பிடிப்பு தாமதம் ஆகி 2022 ல் படம் ரெடி ஆகி விட்டது . பல பொருளாதாரப்பிரச்சனைகளால் தாமதம் ஆன படம் இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது
ராமராஜனுக்கு ஒரு கம் பேக் படமாக எதிர்பார்க்கப்பட்ட சாமான்யன் , மோகனுக்கு ஒரு கம் பேக் படமாக எதிர்பார்க்கப்பட்ட ஹரா இரண்டுமே பெரிய அலவில் ஹிட் ஆகவில்லை . ஆனால் பிரசாந்த்துக்கு இது நிச்சயம் ஒரு கம் பேக் படம் தான் .கமர்ஷியலாகவும் படம் ஹிட் , விமர்சன ரீதியாகவும் பல நேர்மறை விமர்சனங்கள் வருகின்றன
ஸ்பாய்லர் அலெர்ட்
ஃபேஸ்புக்கில் ஆண்கள் போடும் கருத்தாழம் மிக்க நல்ல பதிவுகளுக்கு 10 லைக்ஸ் கூட வருவது இல்லை , ஆனால் பெண்கள் போடும் மொக்கையான டம்மி பதிவுகளுக்கு, செல்ஃபிகளுக்கு 1000 லைக்ஸ் , 2000 கமெண்ட்ஸ் வருகின்றன. இதனால் ஒரு அங்கீகாரத்துக்கு வேண்டி சில ஆண்கள் ஃபேக் ஐடி ஓப்பன் பண்ணி பெண் பெயரில் பதிவுகள் இட்டு லைக்ஸ் பெறுகிறார்கள் / அந்த மாதிரி தான் படத்தின் நாயகனும் மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்க ஒரு திட்டம் போடுகிறான்
நாயகன் ஒரு பியானோ இசைக்கலைஞன் . லண்டன் போய் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். விழி ஒளி இழந்தவனாக நடித்தால் தனக்கு மக்களிடையே கூடுதல் வரவேற்புக்கிடைக்கும் என்பதாக நினைத்து அதை செயல்படுத்துகிறான், அவன் நினைப்பும் சரியாக நடக்கிறது
ஒரு சாலை விபத்தில் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது . நாயகியிடமும் நாயகன் கண் பார்வை அற்றவராகவே நடிக்கிறான். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது
நாயகனுக்கு ஒரு பிரபல நடிகரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஒரு கால கட்டத்தில் மிகப்பிரபலம் ஆக இருந்த நடிகர் . இப்போது மார்க்கெட் இல்லை .அவர் இரண்டாம் திருமணம் ஆக ஒரு இளவயதுப்பெண்ணைக்கல்யாணம் செய்து கொண்டார் .
அவரது திருமண நாள் அன்று தன் மனைவியை சர்ப்பரைஸ் செய்ய நாயகனை நியமிக்கிறார். அவரது திருமண நாள் அன்று அவர் வீட்டுக்கு வந்து பியானோ வாசிக்க வேண்டும் ., இது தான் டீல்
பிரபல நடிகர் வெளியூர் போவதாக மனைவியிடம் சொல்லி விட்டுச்சென்றவர் பின் ஷாக் சர்ப்பரைஸ் ஆக திரும்பி வந்த போது தன் மனைவி கள்ளக்காதலனுடன் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார். இவர் பார்த்ததால் ஆபத்து என்று உணர்ந்து கள்ளக்காதலன் நடிகரை ஷூட் செய்து கொன்று விடுகிறான்
அந்த தருணத்தில் நாயகன் பியானோ வாசிக்க நடிகரின் வீட்டுக்கு வருகிறான். நாயகனுக்குக்கண் தெரியாது என்று நினைத்து நடிகரின் மனைவி ஆன வில்லியும், கள்ளக்காதலன் ஆன வில்லனும் சேர்ந்து நடிகரின் பிணத்தை டிஸ்போஸ் செய்கிறார்கள்
நாயகன் இந்த சம்பவத்தை போலீசில் புகார் அளிக்க ஸ்டேஷன் போனவர் அதிர்ச்சி அடைகிறார். அங்கே இன்ஸ்பெக்டர் ஆக இருப்பவர் தான் கொலையாளி . கொலையாளி ஆன வில்லனும் நாயகனைக்கண்டு அதிர்கிறார்
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக பிரசாந்த் கச்சிதமாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி , கொலையை நேரில் கண்டு அதிர்ச்சி பெறும்போதும் சரி துல்லியமான உணர்வுகளைப்பிரதிபலிக்கிறார் . ஒரிஜினல் வெர்சனில் நாயகனுக்கு 30 வயது . இதில் 50 வயது . அந்தக்குறை தெரியாதவாறு சமாளிக்கிறார்
நாயகி ஆக பிரியா ஆனந்த் . கிளாமர் காட்சிகள் அதிகம், ஆனால் அவர் வரும் காட்சிகள் குறைவு
வில்லி ஆக சிம்ரன் . ஒரிஜினல் வெர்சன் தபு அளவுக்கு இளமை , நடிப்பு இரண்டுமே மிஸ்சிங் என்றாலும் சோடை போகாத நடிப்பு
வில்லன் ஆக சமுத்திரக்கனி பாத்திரத்துக்கு மெருகூட்டுகிறார். வழக்கமாக இவரை அட்வைஸ் அம்புஜம் ஆக , ஹான்ஸ்ட் ராஜ் ஆக பார்த்துப்பழக்கப்பட்ட கண்களுக்கு வில்லன் ஆக மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்
கிட்னி திருடும் டாக்டர் ஆக கே எஸ் ரவிக்குமார் , அவரது அசிஸ்டெண்ட் போல செய்லபடும் ஆட்களாக யோகிபாபு , ஊர்வசி இருவரும் காமெடி நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
இசை சந்தோஷ் நாராயணன். பியானோ இசை தான் மெயின் கதையின் அங்கம் என்பதால் அதை வைத்தே இசை அமைத்திருக்கிறார். பிஜிஎம் ஓக்கே ரகம்
ரவியாதவ் ஒளிப்பதிவு அட்டகாசம் . ஷீஸ் சூர்யாவின் எடிட்டிங்க் கச்சிதம் . இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது . முதல் பாதி ஒர்ஜினல் வெர்சன் போலவே செம விறுவிறுப்பு . இடைவேளை வந்ததே தெரியவில்லை
பின் பாதி திரைக்கதை ஒரிஜினல் வெர்சன் போலவே கொஞ்சம் ஸ்லோ , பிளாக் ஹியூமர் காட்சிகள் த்ரில்லிங்க் மோடைக்குறைக்கிறது
வசனம் பிரபல நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் . இயக்கி இருப்பவர் தியாக ராஜன் . 95% ஒரிஜினல் வெர்சனை சிதைக்காமல் கொடுத்திருப்பது பலம்
சபாஷ் டைரக்டர்
1 முதல் கொலையை நாயகன் பார்க்கும்போது காட்டும் அதிர்ச்சி . இரண்டாவது கொலையை எதிர்பாராத நேரத்தில் வில்லி அரங்கேற்றும் விதம் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்
2 முதல் பாதியை த்ரில்லிங்காக தந்து விட்டாலும் பின் பாதி கதையை இழுக்க கிட்னி திருடும் டாக்டர் கும்பலை இணைத்தது சாமார்த்தியம்
3 நாயகனுக்கு நிஜமாகவே கண் பார்வை தெரியு8மா? தெரியாதா? என்பதை செக் பண்ண வில்லி நாயகன் கண் எதிரே விஷம் கலந்த பானத்தைத்தருவது அதைத்தொடர்ந்து நடக்கும் காட்சிகள் செம
4 ஓப்பனிங் ஷாட்டில் முயலைக்காட்டுபவர்கள் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த முயலை கச்சிதமாக பயன்படுத்திய விதம்
5 வில்லி நாயகனுடன் இருக்கும்போது நாயகி வந்து விட அதைத்தொடர்ந்து எழும் சந்தேகங்கள் கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 எல்லா கலைஞர்களுமே போதைக்கு அடிமை , அதாவது அப்ளாஸ் ம் அங்கீகாரம் போன்ற போதைகளுக்கு....
2 சில விஷயங்களை கம்ப்ளீட் பண்ணாமல் இருந்தால் தான் நல்லாருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் அறிமுகத்துக்குப்பின் நாயகன் எங்கே போனாலும் நாயகியுடன் தான் போகிறான் , ஆனால் நடிகரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குப்போகும்போது ஏன் தனியாகப்போகிறான் ? இத்தனைக்கும் நாயகிக்கும் , நடிகருக்கும் ஏற்கனவே அறிமுகம், உண்டு , தாராளமாக உடன் அழைத்துச்சென்றிருக்கலாம், அல்லது நாயகி வராமல் இருக்க ஒரு காரணம் காட்டி இருக்கலாம்
2 பல கோடி ரூபாய்களுக்கு அதிபர் ஆக இருக்கும் பிரபல நடிகர் தனி பங்களாவில் இருப்பாரா? அபார்ட்மெண்ட்டில் பல குடும்பங்களுக்கு மத்தியில் வசிப்பாரா?
3 பிரபல நடிகரின் மனைவியாக இருப்பவர் கள்ளக்காதலனை சந்திக்க தன் வீட்டுக்கே வர வைப்பாரா? அபார்ட்மெண்ட் வாசிகள் பார்த்தால் கணவனிடம் சொல்லி விட மாட்டார்களா?
4 ஒரு போலீஸ் ஆஃபிசர் தன் கள்ளக்காதலியை சந்திக்க சிசிடிவி கேமரா இருக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு வருவாரா?
5 வில்லி செய்த கொலையை நேரில் கண்ட் சாட்சி ஆன நாயகன் தனக்கு வில்லி தந்த பிரசாதத்தை எந்த சந்தேகமும் படாமல் சாப்பிடுவது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஹிந்தி வெர்சன் ஆன அந்தாதூன் பார்க்காதவர்கள் இந்தப்படத்தைப்பார்க்கலாம் . ரேட்டிங் 3 / 5
ஆனந்த விகடன் மார்க் 43 குமுதம் ரேங்கிங் = குட்
அந்தகன் | |
---|---|
இயக்கியவர் | தியாகராஜன் |
மூலம் திரைக்கதை | தியாகராஜன் பட்டுக்கோட்டை பிரபாகர் (உரையாடல்) |
அடிப்படையில் | ஸ்ரீராம் ராகவனின் அந்தாதுன் |
தயாரித்தது | சாந்தி தியாகராஜன் ப்ரீத்தி தியாகராஜன் |
நடித்துள்ளார் | |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
திருத்தியது | சதீஷ் சூர்யா |
இசை | சந்தோஷ் நாராயணன் |
தயாரிப்பு நிறுவனம் | ஸ்டார் திரைப்படங்கள் |
மூலம் விநியோகிக்கப்பட்டது | வி கிரியேஷன்ஸ் |
வெளியீட்டு தேதி |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment